Wednesday, April 04, 2007

CRIME-- 1.

Hai friends,

இங்க அடிக்கற வெயில்ல .ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பா நல்லா
ஜில்ல்ல்லுனு ஒரு நாலு கப் தர்பூஸ் ஜூஸு குடிச்சா
எப்படி இருக்கும்...ஆஹா அது மாதிரி இருந்தது நான்
எழுதின கதயை நீங்கள்லாம் படிச்சுட்டு புகழ்ந்தது.(ஆமா
மனசுக்குள்ள இதுல்ல்லாம் ஒரு கத...இத வேற நாம
படிக்கனும்.ஹும் சே இதல்லாம் ஒரு பொழைப்பா னு
சொல்ல்றது காதுல கேக்குது) என்ன பன்றது.. ஒரு டுபுக்கு
மாதிரியோ இல்ல நாட்டாம மாதிரியோ அம்பி மாதிரியோ
ம்ஹூம் தல கீழ நின்னு ஒரு MH கூட அடிச்சு பாத்துடேன்.
(அதாங்க,ஓசில கிடைச்சுது) வருவனாங்கறது. ஒருவேள
நான் நினைக்கிறேன் பக்கார்டி அடிச்சா தான் இப்படிலாம்
தோனுமோ? அட ராமா... இப்ப எதுக்குடா இந்த பில்டப்புனு
கேக்கறீங்களா? ஹி..ஹி..ஹி.. வேற ஒன்னுமில்ல.....
அடுத்து நான் எழுதப் போற ஒரு 'க்ரைம் கதை"க்கு தான்
இவ்வளவும்.O.K. ready... shot -1, take- 1.


அதாவது கதையோட நாயகி ப்ரியா. பெரிய்ய பணக்கார
வீட்டு பொண்னு. எக்கச் சக்க சக்கமா சொத்து.அவளுக்கு
ரெண்டு முறை பையன்கள். ரெண்டு பேருமே போலீஸ்
ட்ரெயினிங் முடிச்சுட்டு வெயிட்டிங் ஃபார் போஸ்டிங்.
கிஷோர், விவேக் ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ரெடி.
இதுல ப்ரியாவுக்கு விவேக் மேலத்தான் காதல்.ஆனா
விவேக்கோட அம்மா வேற ஜாதிக்காரன் ஒருவனை
கல்யாணம் பண்ணிகிட்டதால கொஞ்சம் பிரச்சனை.
ஆனா ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல இருந்து ஆசை.
ஒரு நாள் ப்ரியா தன்னோட அண்ணன் கிட்ட போன்ல
அவசரமா வரச் சொல்றா.

"அண்ணா, நான் உன்னை உடனே பாக்கனும்."

"என்னம்மா விஷயம்? இப்ப நான் வர முடியாதே"

"அண்ணா, எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா?"

"சரி சொல்லு,என்ன விஷயம்? "

"எனக்கு கிஷோர கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை"

"ஏய் என்ன இது, இது ஏற்கெனவே முடிவானது தானே.
இப்ப வந்து சொன்னா? அப்பாவப் பத்தி உனக்குத் தான்
தெரியுமே. நான் என்ன பண்ணுவேன்?"

"அண்ணா, விவேக்கும் நானும் சின்ன வயசுலருந்து
இஷ்டப்பட்டுருக்கோம்.எனக்கு கிஷோர பிடிக்கலை.
நீ தான் எப்படியாவது இத தடுத்து நிறுத்தனும்."

"சரி கொஞ்சம் டைம் குடு, பேசிப் பாக்கறேன்."

அப்ப ரஞ்சித் தன்னோட ஒரு தனி பங்களாவுக்கு
போய்கொண்டு இருக்கும் போது தன்னை யாரோ
பின்தொடர்ந்து வருவது போல திரும்பி திரும்பி
பாத்துக் கொண்டே போகிறான். அப்போ ஒரு ஆள்
இவனை தொடர்ந்து கொண்டே தன்னோட பாக்கட்ல
இருந்து எதையோ எடுக்கிறான். அப்போ ஒரு சின்ன
பிளாஸ்டிக் பீஸ் துண்டு ஒன்னு கீழ விழுந்தது.உடனே
ரஞ்சித் அதப் பாத்து எடுத்து தன்னோட பாக்கட்ல
பத்திரப்படுத்திக் கொண்டான். அங்க அவனைப் பாக்க
ஒரு வயதானவர் தன்னோட மகனுடன் வந்திருந்தார்.
அப்ப ரஞ்சித் ஒரு செக் குடுத்து "இத வச்சிகோங்க,
இப்போ என்னால இவ்வளவு தான் முடியும்", சொல்லி
ஒரு செக் குடுக்கறான்."அய்யா, நீங்க நல்லா இருக்கனும்
நீடூழி வாழனும்"ட்டு போகிறார்கள். ரஞ்சித் அங்க எடுத்த
அந்த பீஸ ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பவுல போட்டு
எடுத்துகிட்டு தன் வீட்டுக்கு போறான். அங்க தன்
தங்கைகிட்ட அத கான்பிச்சு ஏதோ சொல்லுறான்.
கொஞ்ச நேரம் ப்ரியாவோட திருமணத்தப் பத்தி பேசி
விட்டு திரும்பி கெஸ்ட் ஹவுஸுக்கு போறான்.

ப்ரியா விவேக்கு போன் பண்ணி ராத்திரி தன்னோட
அண்ணாகிட்ட பேசச் சொல்றா. அப்போ கிஷோருக்கு
கோல்டு மெடல் அவார்டு விழா நடந்துகிட்டு இருக்கு.
கிஷோரும் மெடல் வாங்கிட்டு விவேக்க பாக்க வரான்.
அப்போ விவேக் ப்ரியாவோட அண்ணனுக்கு போன்
பண்ணினா எங்கேஜ்டாவே இருக்கு.ரொம்ப நேரமா ட்ரை
பண்ணி பாக்கறான் திரும்ப திரும்ப எங்கேஜ்டா இருக்கு.
அப்ப தான் கிஷோரும் வரவே ரெண்டு பேரும் வீட்டுக்கு
கிளம்பத் தயாராகிறார்கள்.இவங்க ரெண்டு பேரும் நல்ல
நண்பர்கள்.ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல Understanding
இருக்கு. கிஷோருக்கு நல்லாத் தெரியும் விவேக்கும்
ப்ரியாவும் விரும்பறாங்கன்னு. ஆனாலும் பெரியவங்க
பாத்து முடிச்சதால இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கறான்.
அதுவும் பிரியாவும் ஒத்துகிட்டதால்.அவங்க வீட்டுக்கு
வந்தப்பறம் தான் தெரிஞ்சது முதல் நாள் ராத்திரி
ரஞ்சித் இறந்துபோன(கொலை செய்யப் பட்ட)விஷயம்.

தொடரும்.....

4 comments:

Syam said...

கதை சூப்பரா போகுது...நீங்க பிரபல எழுத்தாளர் ஆகிட்டு வரீங்க :-)

Syam said...

ஆனா என்ன பர்ஸ்ட் எபிசோட்லயே எல்லா பேரயும் இண்ட்ரோ பண்ணிட்டீங்க...படிச்சு முடிக்கும் போது...யார் எந்த கேரக்டர்னு மறந்து போச்சு :-)

dubukudisciple said...

//இங்க அடிக்கற வெயில்ல .ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பா நல்லா
ஜில்ல்ல்லுனு ஒரு நாலு கப் தர்பூஸ் ஜூஸு குடிச்சா
எப்படி இருக்கும்...//
nalla thaan irukum.. engaluku kudukama kudicha vayatha thaan valikum.. seri tharboos joose illanalum oru moru kudunga engaluku

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Who killed Ranjit ?

May God Bless Ranjit and give a place in the Heaven.