Monday, April 02, 2007

நீயா..நானா?!?!!

Haay friends,

நான் பள்ளிக் கூடம் படிக்கும் போது இந்த ஏப்ரல் 1ம் தேதி
யாரடா முதல்ல ஏமாத்தலாம்னு அலைவோம். ஆமாம்
அப்படியொரு சந்தோஷம் மத்தவங்களை ஏமாத்தறதுல..
அப்ப மட்டும் தான் அப்படியெல்லாம்,இப்ப எல்லாரும்
என்னை தான் ஏமாத்துறாங்க...ஹும் என்ன பண்றது...
என் நேரம் அப்படி. ஆனா பாருங்க இப்ப இருக்கற பசங்க
நம்மலை மாதிரியெல்லாம் அனுபவிச்சிருப்பாங்களா?னு
கேட்டா இல்லைனு தான் சொல்வேன். இந்த ஏப்ரல் 1ம்
தேதி தான் எங்க வீட்டுல டீ.வி வந்தது. அது ஒரு பெரிய்ய
கதை.

அதாவது நான் அப்ப ஸ்கூல் படிச்சிட்டு இருந்தேன்.எங்க
ஏரியாவுல அப்பல்லாம் டீ.வியெல்லாம்(1977) ரொம்ப பேர்
வீட்டுல இல்லை. ஏதோ பக்கத்து வீட்டுல இருந்தது. அப்ப
நானும் என் இன்னொரு பக்கத்து வீட்டு பொண்ணும்
சினிமா பாக்க எப்பவாவது போவோம். அப்ப பாத்து அவங்க
வீட்டுல நான் என்ன்மோ அவங்க பையனை சைட் அடிக்க
வந்த மாதிரி நினைச்சுகிட்டு என்னை மட்டும் விட
மாட்டெனுட்டாங்க.நானும் போடீ நீயும் உன் டீவியும்னுட்டு
சொல்லிட்டு ரொம்ப ரோஷமா வீட்டுக்கு வந்துட்டேன்.
ஆனாலும் மனசுல ஏதோ ஒரு கோவம் இருந்தது. உடனே
எங்க அப்பாகிட்ட சொல்லி நம்ம வீட்டுக்கும் இப்ப இப்ப
இப்பவே உடனே ஒரு டீவி வரணும் னு சொல்லி ஒரே
அமக்களம் பண்ணிட்டேன்.நான் வேற ஒரே பொண்ணாச்சா.....
நான் அதிகம் எதயும் வாய தொறந்து கேக்கவே மாட்டேனா......
அதுவே காரணமா போயி எங்கப்பா உடனே அதுக்கு ரெடி
பண்ணீட்டாரு. காலையில அதாவது ஏப்ரல் 1ம் தேதி
அன்பா என்னைக் கூப்பிட்டு "கண்ணு, நம்ம வீட்டுக்கு
சாயங்காலம் டீவி வரும். நீ பக்கத்துல இருந்து
(என் மேலத் தான் எங்கப்பாவுக்கு ஒரே பாசமாச்சே)எங்க
ஆண்டனாவெல்லாம் அடிக்கனும்,அப்பறம் டீவிய எங்க
வைக்கனும்ட்டு எல்லாம் சொல்லிட்டு போனாரு. நானும்
ரொம்ம்ப ஆசையா அதாவது அன்னைக்கு 1ம் தேதிங்கற
நினைவே இல்லாம என் அண்ணன், தம்பிகிட்ட போயி
(பாசமலர்களாச்சே...) ரொம்ம்ப ஜம்பமா பீத்திகிட்ட்டேன்.
உடனே என் ஃப்ரெண்டு கிட்டல்லாம்,ஒரு ஆள் பாக்கி
விடலயே...ஒரே பொலம்பல் தான்... அப்படி இப்படி ஒரு
வழியா சாயங்காலமும் வந்தது. நானும் என் சின்ன பாச
மலரும் வாசல்லயே பாத்துகிட்டு இருந்தோம்.எல்லாரும்
எங்களை பாத்து சிரிச்சுகிட்டே இருந்தாங்க. "என்ன ஆச்சு,
வந்துதா?" னு எங்களை கேலி பண்ண ஆரம்பிக்க, ஏன்னா
அப்ப மணி 6க்கும் மேல ஆச்சு.இருட்டியும் போச்சு.நானும்
என் தம்பியும் வீட்டுக்குள்ள வந்துட்டோம். ஒரே கஷ்டமா
போச்சு. என் தம்பி போடீன்னுட்டு மேயறத்துக்கு போயிட்டான்.


நான் வேற சோகமா என் ஃப்ரெண்டு வீட்டுக்கு கிளம்பி
போக வாசலுக்கு வந்தா, "ஆஹா, எங்க வீட்டு அட்ரஸ
கேட்டு கிட்டு ஒரு ஆளூ, பின்னாடியே ஒரு பெரிய்ய
பட்டாளத்தோட ஒரு பெரிய்ய பொட்டிய தூக்கி கிட்டு
வந்தாரா... அவ்வளவு தான் என்னை பாக்கனுமே
(என்னா திமிர்!!)சும்மா சர் சர்னு என்ன பண்ணனும்
எப்படி பண்ணனும்னு ஒரே instructions தான் பொங்க.
பாத்தவங்க எல்லாரும் அப்படியே அசந்துட்டாங்க
அப்ப எல்லாரயும் பாத்து நான் வுட்டஒரு லுக்கு...ஆஹா..
இப்ப நினைச்சாலும் ..... மறக்கவே முடியாது. இத இப்ப ஏன்
சொல்றேன்னா, இப்ப எங்கப்பா இல்லை. ஆனா ஒவ்வொரு
ஏப்ரல் 1ச்டுக்கும் நான் இத நினைச்சுப்பேன். அவர் என்
மேல வச்சிருந்த பாசம் அப்பிடி. நான் கேட்ட எதையும்
அவர் மறுத்ததே இல்லை.


இந்த ஞாயிற்றுக் கிழமை (1-4-07) காலைல 10மணிக்கு
இந்த வாரம் விஜய்ல ஒரு நல்ல நிகழ்ச்சி.. அதாவது
மாணவர்கள் ஸ்கூல்ல உட்கார தேர்ந்தெடுப்பது முதல்
பெஞ்சா இல்லை கடைசி பெஞ்சா? இது தாங்க. ஆனா
நம்ம பசங்க சும்மா என்னமா அசத்திட்டாங்க...
மொதல்ல கடைசி பெஞ்சப் பத்தி ஆரம்பிச்சாங்க. ஒரு
மானவன் சொல்றான், காலைல வீட்டுலருந்து கிளம்பி
ரொம்ப டயர்டா ஸ்கூலுக்கு வராராம். அதனால தூக்கம்
வருமாம்.அதுக்கு தோதா தூங்கறத்துக்கு கடைசி பெஞ்சுதான்
சரியாம். இன்னொன்ரு கேசு, கடைசி பெஞ்சுல உக்காந்தா
க்ளாசுல இருக்கற எல்லா பையன்களையும் வித்தியாசம்
இல்லாம "சைட் அடிக்கலாமாம்". இது எப்படி இருக்கு?
அப்பறமா இன்னொரு கேசு, வேற ஹோம் வ்ர்க் பாக்கி
இருந்தா அதயெல்லாம் கடைசி பெஞ்சுல இருந்து முடிக்கலாம்.
சிலது ரொம்ப பசிச்சா அப்படியே பொண்ணுங்க டிபன்
பாக்ஸ திறந்து சாப்பிடலாம்.பொண்ணுங்க்கலை கலாய்க்கலாம்.
சிலது சும்மா எல்லாருக்கும் SMS அடிக்கலாமாம். அப்பப்பா
இதுங்க பேசினத பாத்தா, சேஏஏஏஎ...நாமல்லாம் எதுக்கு?
வேஸ்டுன்னு தோனுது. ஆனாலும் இதுல்லாம் ரொம்ம்ப
ஓவராத்தான் இருக்கு. பாவம் முதல் பெஞ்சு பசங்க, ரொம்ப
நல்லவங்களா படிப்பாளியா, அறிவாளியா...நாட்டுக்கும்
வீட்டுக்கும் நல்லவங்களா....இதுல வேற ஒன்னு சொல்லுது
அதாவது, முன்னாடி பெஞ்சுல உக்காந்தா, டீச்சர் இவங்கல்லாம்
நல்லவங்க,வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்கனு(நம்ம
நாட்டாம மாதிரினு கூட சொல்லலாம்) விட்டுடுவாங்களாம்.
ஆஹா என்னா கண்டுபிடிப்பு.....மொத்தத்தில பாக்க
நல்ல விறுவிறுப்பா இருந்தது.

ஒரு நாள் நான் யாஹூ தமிழ் பாத்து கிட்டு இருந்தேன்.
அதுல ஒரு டிப்ஸ் குடுத்திருந்தாங்க. நீங்களும் அத யூஸ்
பண்ணி பாத்துட்டு சொல்லுங்க... அப்பறமா நான் யோசனை
பண்றேன். ஹி..ஹி..ஹி...!!!!!


இனி உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் முடி உதிர்வதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யவும் தேவையில்லை. முடி உதிர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வெந்தயப் பவுடர், கடுங்காய்த்தூள், டீத்தூள், மருதாணி, தயிர், ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதோடு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு ஊற்றி கலக்க வேண்டும்.இரவில் இந்தக் கலவையைத் தயார்படுத்தி, மறு நாள் இதனை தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், குளியல் பொடியைத் தேய்துக் குளித்தால், கொத்து கொத்தாக முடி உதிர்வது டக்கென்று நின்று விடும். மேலும் முடி கருகருவென்று அடர்ந்து வளர ஆரம்பிக்கும், இளநரையும் மறைந்து போகும்.

இது தாங்க மேட்டரு...

20 comments:

SENTHIL EG IYAPPAN said...

Hi,

Mudi - Treatment - Enakkum nattukkum romba thevai.

Enakku Neenga Puliyodharai Parcel seiya vendaam.

If OK, I will give my address. Mudi vaidhyam medicine Parcel anuppa mudiyumaa ? May God Bless.

ambi said...

adadaa post ore aviyal maathiri aayiduche!
nalla irukku!nu solla vanthen.

tv matter superrrrr. i could imagine the moment thru your words.

antha pgm naanum paathen, athula sila figures (esp that back bench goshti)superraaa irunthathu, he hee...
naama ennikum kariyathula kanna irupom illa! ;p

mudi treatment super. but kadukai thool na enna?
intha bnglre vanthu konjam mudi kotuthu.
apdiye, poorikattai adikku thavittu othadam nallathu!nu oru post podunga, syamuku helpfulla irukkum. :p
(dhurai englees ellam pesuthu!nu nakkal vuda vendaam)

My days(Gops) said...

attendance...

My days(Gops) said...

//இப்ப எங்கப்பா இல்லை. ஆனா ஒவ்வொரு
ஏப்ரல் 1ச்டுக்கும் நான் இத நினைச்சுப்பேன். அவர் என்
மேல வச்சிருந்த பாசம் அப்பிடி. நான் கேட்ட எதையும்
அவர் மறுத்ததே இல்லை.
//

remba touching'a irukunga...

My days(Gops) said...

aaaama கேசு கேசு கேசு nu solli irukeengaley? police கேசு a?

My days(Gops) said...

//இனி உங்களுக்கு கவலை வேண்டாம். நீங்கள் முடி உதிர்வதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்யவும் தேவையில்லை. முடி உதிர்வதற்கு முற்றுப்புள்ளி வைக்க வெந்தயப் பவுடர், கடுங்காய்த்தூள், டீத்தூள், மருதாணி, தயிர், ஆகியவற்றை தலா ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டு, அதோடு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு ஊற்றி கலக்க வேண்டும்.இரவில் இந்தக் கலவையைத் தயார்படுத்தி, மறு நாள் இதனை தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், குளியல் பொடியைத் தேய்துக் குளித்தால், கொத்து கொத்தாக முடி உதிர்வது டக்கென்று நின்று விடும். மேலும் முடி கருகருவென்று அடர்ந்து வளர ஆரம்பிக்கும், இளநரையும் மறைந்து போகும்.
////

sapaaadi, april fool thaaaney idhu.. ai enakku theriumey.....

ACE said...

ennanga neenga.. april 1 emaruveengannu paatha, naan emaaralainnu engalai emaathareenga.. :((

ACE said...

என்றைக்குமே சாலச் சிறந்தது கடைசி பென்ச் தான்.. என்ன அப்பப்ப "கெட் அவுட்"னு வெளி நடப்பு செய்ய வேண்டி வரும்.. எவன் என்ன தப்பு பண்ணாலும் அது கடைசி பென்ச் மேல தான் விடியும்.. இந்த மாதிரி வகுப்புக்காக இன்னல் எல்லாத்தையும் தாங்கற தியாகிகள் தான் கடைசி பென்ச் மக்கள் என்று என் வாதத்தை முடித்து கொள்(ல்)கிறேன்.. :) :)

Sumathi said...

ஹாய் அம்பி,

//adadaa post ore aviyal maathiri aayiduche!
nalla irukku!nu solla vanthen.//

தாங்ஸ்....

//naama ennikum kariyathula kanna irupom illa! ;p//

தங்கமணி எப்போ வராங்க?

//but kadukai thool na enna?//
கடுக்காய் தூள்னா கடுக்காய் தூள்...

ஆமாம், அது என்ன பஞ்சாப் மேட்டர்? எனக்கு மட்டும் சொல்லிடுங்க..யார் கிட்டயும் சொல்ல மாட்டேன்.

Sumathi said...

ஹாய் கோப்ஸ்,


//sapaaadi, april fool thaaaney idhu.. ai enakku theriumey//

அட நிஜம் தான் கோப்ஸ்,யாகு தமிழ்ல பாருங்க இருக்கும்.

Sumathi said...

ஹாய் ACE,

//ennanga neenga.. april 1 emaruveengannu paatha, naan emaaralainnu engalai emaathareenga.. :((//

hey its true..இது எங்க வீட்டு முதல் டிவி வாங்கின நாள்.இப்ப கூட நாங்க அதை நினைச்சுப்போம்.

Sumathi said...

ஹாய் ACE,

//என்றைக்குமே சாலச் சிறந்தது கடைசி பென்ச் தான்..//

பழைய்ய அனுபவம் எப்படியெல்லாம் பேச வைக்குது.

//இந்த மாதிரி வகுப்புக்காக இன்னல் எல்லாத்தையும் தாங்கற தியாகிகள் தான் கடைசி பென்ச் மக்கள் என்று என் வாதத்தை முடித்து கொள்(ல்)கிறேன்.. :) :)//

அடாடா...அரசாங்த்து கிட்ட சொல்லி உங்களூக்கு "தியாகி பென்சன்" ஏற்பாடு பண்றேன்...

Sumathi said...

ஹாய் செந்தில்,

இந்த மாதிரி ரிஸ்கு எல்லாம் உங்களுக்கு தான் எனக்கு இல்லை..

Sumathi said...

ஹாய் கொப்ஸ்,

//aaaama கேசு கேசு கேசு nu solli irukeengaley? police கேசு a?//

அடடா..கேசுன்னு நான் சொன்னது அந்த பசங்களைப்பா....

dubukudisciple said...

நான் பள்ளிக் கூடம் படிக்கும் போது இந்த ஏப்ரல் 1ம் தேதி
யாரடா முதல்ல ஏமாத்தலாம்னு அலைவோம். ஆமாம்
அப்படியொரு சந்தோஷம் மத்தவங்களை ஏமாத்தறதுல..
அப்ப மட்டும் தான் அப்படியெல்லாம்,இப்ப எல்லாரும்
என்னை தான் ஏமாத்துறாங்க...ஹும் என்ன பண்றது...//
ammanga.. ink ellam adipaanga aduvum white shirta paarthu.. idula poti vera yaar shirtla yaar adikarthunu.. yaar manusula yaar mathiri...ippo ellam yaru ink pen use panranga

Syam said...

//அவ்வளவு தான் என்னை பாக்கனுமே
(என்னா திமிர்!!)சும்மா சர் சர்னு என்ன பண்ணனும்
எப்படி பண்ணனும்னு ஒரே instructions தான் பொங்க//

திமிர் படத்துல வர ஷ்ரேயா ரெட்டிய நினைச்சு பாத்துக்கிட்டேன் :-)

Syam said...

//இத இப்ப ஏன்
சொல்றேன்னா, இப்ப எங்கப்பா இல்லை. ஆனா ஒவ்வொரு
ஏப்ரல் 1ச்டுக்கும் நான் இத நினைச்சுப்பேன். அவர் என்
மேல வச்சிருந்த பாசம் அப்பிடி. நான் கேட்ட எதையும்
அவர் மறுத்ததே இல்லை//

இங்கயும் சேம் பிளட்டுங்க :-)

Syam said...

//இதுல வேற ஒன்னு சொல்லுது
அதாவது, முன்னாடி பெஞ்சுல உக்காந்தா, டீச்சர் இவங்கல்லாம்
நல்லவங்க,வல்லவங்க, நாலும் தெரிஞ்சவங்கனு(நம்ம
நாட்டாம மாதிரினு கூட சொல்லலாம்) விட்டுடுவாங்களாம்//

அவன் அறிவாளிக்கு பொறந்த அறிவாளி போல இருக்கு :-)

Syam said...

//அதோடு ஒரு எலுமிச்சம் பழத்தின் சாறு ஊற்றி கலக்க வேண்டும்.இரவில் இந்தக் கலவையைத் தயார்படுத்தி, மறு நாள் இதனை தலையில் தேய்த்து அரைமணி நேரம் ஊறவைக்க வேண்டும். பின்னர், குளியல் பொடியைத் தேய்துக் குளித்தால், கொத்து கொத்தாக முடி உதிர்வது டக்கென்று நின்று விடும்//

மொத்தமா விழுந்துடும் அப்புறம் முடி பத்தி கவல பட வேண்டாம்னு சொல்றாங்களா :-)

Syam said...

//poorikattai adikku thavittu othadam nallathu!nu oru post podunga, syamuku helpfulla irukkum//

@ambi,

இருடி...இங்க பூரிகட்டை பெரிய சைஸ்ல கிடைக்குது அம்மணி கிட்ட ரெண்டு வாங்கி குடுத்து விடறேன் :-)