Thursday, March 29, 2007

மனம் விரும்புதே உன்னை...2

Hai friends,


மனம் விரும்புதே உன்னை...2

பூஜா வேலைக்கு சேர்ந்த 2 மாசத்துலயே அங்க இருக்கற
எல்லார்கிட்டயும் நல்ல பேரு வாங்கிட்டா. பாஸுக்கும்
கூட ஒரு நல்ல impression. அதனால பூஜாவுக்கும் ஒரு
நல்ல அனுபவம் கிடைச்சுது.ஆனா பூஜாவுக்கும் இதுலயே
தொடர்ந்து இருக்க இஷ்டமில்லை.
ஒரு நாள் பூஜா Bank exam எழுதறத்துக்கு ஒரு மூணு
போட்டோ வச்சிருந்தா.ஆபீசுல லன்ச் டைம்ல
அப்ளிகேஷன் ஃபில் பண்ணி முடிச்சுட்டு பேக்ல இருந்த
போட்டோவ தேடினப்ப 2 போட்டோ மிஸ்ஸிங். உடனே
ஆபீசு முழுதும் தேடி பாத்தும் கிடைக்கல. உடனே ஜான்
மேல தான் சந்தேகம் வந்தது. நேரடியாவே கேட்டுட்டா

"ஜான் நீங்க என் போட்டோவ எடுத்தீங்களா?"

"எனக்கென்ன வேற வேலயே இல்லைன்னு நினைச்சியா?"

"ஆமாமாம், இதுவும் உங்க வேலைல ஒன்னு தான்னு
எனக்கு தெரியும்.நீங்க என்ன தான் மறைச்சாலும் உங்க
பார்வையும் செயலுமே காட்டி குடுத்துடும்.போதும்
உங்க நடிப்பு, என்னோட பர்மிஷன் இல்லாம என்
போட்டோ உங்ககிட்ட எதுக்கு இருக்கனும்?"

ஜானுக்கு புரிஞ்சுபோச்சு. "So, you know very well, That Im
in love with you. Then why do you pretend as if you don't know
anything?"

"hey, how can u expect me to love u?you can love anybody,
but why should I?You cannot force me o.k. இந்த காதல்
எல்லாம் தானா வரனும். நீ கேட்டு வராது.நீ என்ன
பெரிய்ய ஆளா? உன்கிட்ட அப்படி என்ன இருக்கு?
உன்ன பாக்கறப்போ எனக்கு ஒன்னும் பெருஸ்சா
எதுவும் தோனல."

"இங்க பாரு, எனக்கு வாழ்க்கையை நிம்மதியா வாழனும்.
அதுக்கு தேவை ஒரு நல்ல வேலை, கைநிறய்ய பணம்,
முக்கியமா மனசுல ஒருத்தர் மேல ஒருத்தர் அளவில்லாத
அன்பு வேணும். நீ என்னயும் நான் உன்னயும் புரிஞ்சுக்கனும்.
உனக்கு என்ன பாத்த உடனே வந்த மாதிரி எனக்கும்
உன்ன பாக்கும் போது மனசுக்குள்ள ஒரு மாற்றம்
வரனும்.அப்போ தான் நாம ஜெயிக்க முடியும்.நல்ல
வாழ்க்கை வாழ முடியும்.புரியுதா. So try to accept the
truth. practical life is entirely different from what u think.
இனிமே இந்த மாதிரி எண்ணத்தோட என் கிட்ட பேசாதே."

"ஹேய், உனக்கு என்ன பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு
சொல்லு. அத விட்டுட்டு பிராக்டிகல் லைப் அது இதுன்னு
கதையெல்லாம் வேண்டாம்.நீ ஆசப் படற வாழ்க்கையை
என்னால குடுக்க முடியாதுன்னு எத வச்சு சொல்லறே?

"இங்க பாரு, எனக்கு இந்த காதல் மேலயெல்லாம்
நம்பிக்கை கிடையாது. சரி,நான் நீ சொன்ன மாதிரியே
வச்சுகிட்டாலும் முதல்ல உனக்கும் எனக்கும்
எப்படி ஒத்து வரும். உன் கல்ச்சர் வேற என் கல்ச்சர் வேற.
நிச்சயமா என்னால உன் கல்ச்சருக்கு மாற முடியாது.
அங்கயிருந்து பிரச்சனை ஆரம்பிக்கும்.பின்னாடி அதுவே
பெரிசாகி வாழ்க்கையே தொலைஞ்சு போகும். So,please
இதெல்லாம் வேண்டாமே."

"ஓஓ...இது தான் உனக்குள்ள இருக்குற பயமா? சரி அப்ப
நான் உன்க்காக விட்டு குடுக்கறேன் போதுமா? அப்ப
ஒ.கேயா?பாரு நீ என்ன சொன்னாலும் அதுக்கு நான்
என்னை மாத்திக்கறேன்."

"சரி, இதுல்லாம் எத்தனை நாளுக்கு? பின்னாடி நீயே
மாற மாட்டேன்னு என்ன நிச்சயம்? "

"இங்க பாரு, எனக்குனு ஒரு நல்ல குடும்பம் இருக்கு.
அவங்க நிச்சயமா என்னை விட்டுட மாட்டாங்க.ஒ.கே.
என்னாலயும் என் குடும்பத்தை மீறீ உன்கூட வரமுடியாது."

"அப்போ நீ என்ன தான் சொல்ல வற?"

"என்னை விட்டுடு."எனக்கு இதெல்லாம் வேண்டாம்.

ஜான் நிஜமாவே உடைஞ்சு தான் போனான்.ஏன்னா
அவனுக்குனு சொல்லிக்குற மாதிரி யாரும் இல்லை.
அவனுக்கு அப்பா அம்மா இல்லை. அக்கால்லாம்
அந்த அளவுக்கு கேர் பண்றதில்லை. இந்த நிலமையில
பாவம் அவனோட காதலும் போச்சு. அப்ப தான் ஜானுக்கு
மனசுல ஒரு வேகம் வந்தது. இவ கண்ணு முன்னாடியே
ஒரு பெரிய்ய பணக்காரனா வந்து காட்டனும். இவள விட
அழகான ஒருத்திய சொந்தமாக்கி வாழ்ந்து காட்டனும்.
ஆனாலும் பூஜாவ மறக்கல. இந்த விஷயத்துக்கு அப்பறம்
பூஜா அந்த வேலயை விட்டுட்டு வேற வேலைக்கு
மாறிட்டாலும் ஜானை ஒரு நல்ல நண்பனாவே
நினைச்சு பழகினாள்.அவனுக்கு நிறய்ய அட்வைஸ்
பண்ணாள்.கஷ்டப் பட்டு அவனை நினைச்ச மாதிரி கொஞ்ச
நாள்லயே (2 வருஷத்தில்) ஜான் ஒரு கம்பனி ஆரம்பிச்சு
வேகமா ஒரு நல்ல நிலமைக்கு வந்தான்.பூஜா அத
பாத்து ரொம்ப சந்தோஷப் பட்டாள். அப்ப தான் ஒரு நாள்
பூஜா ஜான்கிட்ட," ஜானி உன்ன இந்த நிலைல பாக்கதான்
நான் உன்ன வேண்டாம்னு சொன்னேன். ஏன்னா அந்த
பாஸ் என்ன மேல வர முடியாதபடி தனக்கு சாதகமா
யூஸ் பன்னிகிட்டு இருந்தான். ஆனா நீ இப்ப ஒரு நல்ல
நிலமைக்கு வந்துட்ட.சீக்கரமே ஒரு நல்ல பொண்ண
கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருக்கனும்."

"உங்க அட்வைசுக்கு ரொம்ப தேங்ஸ் மேடம்".

அதுக்கு அப்பரம் ரெண்டு பேரும் பிரிஞ்சு போனாலும்
ஒரு நல்ல நண்பர்களேவே அடிக்கடி சந்திச்சுகிட்டு தான்
இருந்தாங்க.ரெண்டு பேரும் தனித் தனி வாழ்க்கயை
அமைச்சுகிட்டு நட்பையும் விடாம ஒரு நல்ல
நண்பர்களாவே இருந்தார்கள்.

இந்த கதை பெருஸ்சா போனதால சீக்கரமாவே
முடிச்சுட்டேன். எப்படியும் வந்துட்டீங்க..
படிச்சுட்டீங்க.. அப்படியே உங்க யோசனையும்
சொல்லிட்டு போனா என்ன குறைஞ்சுடுவீங்க?

Sunday, March 25, 2007

மனம் விரும்புதே உன்னை...

Hai Friends,

இது ஒரு கதை.. காதல் கதை... கொஞ்ச நாளாவே
எழுதனும்னுநினைச்சு கிட்டு இருந்தேன், ஆனா ஏனோ
தெரியல சரியான டைம் கிடைக்கல.. இன்னைக்கு
ஒரு முடிவோட ஆரம்பிச்சுட்டேன். இது என்னோட
முதல் முயற்சி. படிச்சுட்டு எப்பவும் போல உங்க
கருத்துக்களை சொல்லுங்க.Sugestions too..

பூஜா ஒரு இண்டர்வியுவுக்கு ரெடியாயிட்டு கிளம்பிக்
கொண்டு இருந்தாள். அதுவும் அது அவளுக்கு ரெண்டாவது இண்டர்வியு.அதனால கொஞ்சம் நெர்வசாவே இருந்தது.
என்னதான் சீக்கரமா கிளம்பி டைமுக்கு போனாலும்
மனசுக்குள்ள இந்த வேல கிடைக்கனுமேனு ஒரு ஏக்கம்.
இருக்கத் தானே செய்யும். ஏன்னா அந்த அபீசோட
லுக்கு அந்த மாதிரி. அழகா எல்லா இடத்திலயும்
க்ளீனா துடைச்ச கண்ணாடியும்,அழகழகா அங்கங்கே
சொருகியிருந்த புதுசா பூத்த பூக்களும், கம்முனு
காத்துல வர்ர வாசனையும்.. பூஜாவுக்கு ரொம்பவே
பிடிச்சு போனது.அங்க வேலை செய்யற ரெண்டொருத்தரும்
அவங்க பாட்டுக்கு வேலையில மூழ்கிட்டாங்க.பாவம் இந்த
டேமேஜர் மட்டும் ஒரு கண்ண பூஜாகிட்டயும் இன்னொரு
கண்ண பாஸ் எப்படா கூப்பிடுவாருன்னு பொருமை
இல்லாம தவிச்சுகிட்டு இருந்தாரு.ஏன்னா அந்த
டேமேஜருக்கு பூஜாவ பாத்த உடனே ஒரு கெமிஸ்ட்ரி
ஸ்டார்ட் ஆயிடுச்சு.அப்ப பாஸ்கிட்டயிருந்து ஒரு கால்.
"ஜான், அந்த பொண்ண உள்ள அனுப்பு".

"மேடம் பாஸ் உங்கள கூப்பிடுறாரு, நீங்க இந்த
பக்கம் போங்க," "தேங்க் யூ,". பூஜா உடனே மெதுவா
எந்த பரபரப்பும் இல்லாம நிதானமா உள்ள போனாள்.
ஜான் பூஜா நடந்து போர அழகையே ரசிச்சு பாத்துகிட்டு
இருந்தாரு. மனசுல என்னவோ தெரியல ஏதோ ஒரு சின்ன
'சந்தோஷம் மட்டும் இருந்தது.ஜான் ஒரு மலயாளி.ஒரு
பாட்டு மலயாளதில" அருகில் நீ உண்டாயிருந்தெங்கில்
என்னு நான், ஒரு மாத்ரம் வெருதே நினைச்சு போயி,
ஒரு மாத்ரம் வெருதே நினைச்சு போயி..." இங்க ஜானப்
பத்தி சொல்லறேன். ஜான் சின்ன வயசு தான் ஒரு 26.
ஆள் பாக்க நல்ல கறுப்பு.தொட்டு பொட்டு வச்சுக்கலாம்.
ஆனாலும் அந்த முகத்தில, கண்ணுல ஏதோ ஒரு
வசீகரம் இருந்தது.கொஞ்சம் ஒல்லி தான்.எப்பவும் கையுல
சிகரெட் இருக்கும். ஒரு டிகிரி படிச்சுட்டு நல்ல வேலைய
தேடிக்க அக்கா வீட்டுக்கு வந்தான். அப்ப அவசரத்துக்கு
இந்த வேலைக்கு வந்துட்டான். பரவாயில்ல ஒரு சுமாரான
கம்பனிதான்.ஏதோ தன்னோடசெலவுக்கு பஞ்சமில்ல.
ஆனா என்னவோ இங்கயே நிரந்தரமாயிட்டான்.பாஸும்
கொஞ்சம் பர்சனலாவே பழக்கமாயிட்டாரு. ரெண்டு பேரும்
ஒரே ஜாதி. ஒன்னா சிகரெட் பிடிச்சுட்டும் ஒன்னா ஊர்
சுத்திட்டும் ஒரே ஜாலிதான். இவன நம்பி பாஸும் எல்லா
பொறுப்பையும் விட்டுட்டாரு.ஏதோ வாழ்க்கை ஒரு
வழியா ஜாலிய போயிகிட்டு இருந்தப்போ தான் இந்த
பூஜா எண்டரி. ஜானும் ஜாலியா ஹம் பண்ணிகிட்டு
இருந்தப்போ பூஜா வெளியே வந்தா. ஜான் உள்ளே
போனான். பாஸ் ரூமுக்குள்ளங்க.
"ஜான், நீ இந்த பொண்ணப் பத்தி என்ன நினைக்கறே",

"பரவாயில்ல சார், பாத்தா ரொம்ம சுட்டியா தெரியுது.
எந்த வேலயும் சட்டுனு பிடிச்சுக்கும்னு நினைக்கிறேன்".

"கரெக்ட். நான் கூட அதான் நினைச்சேன். அப்ப சரி,
நீ ஒரு வேல பண்ணு, அந்த பொண்ணு கிட்ட ஏதாவது
பேசி பாரு. உனக்கு பிடிச்சிருந்தா, உடனே உனக்கு
அசிஸ்டெண்டா அப்பாயிண்ட் பண்ணிக்கோ,சரியா".

"சார் எனக்கு அஸிஸ்டெண்டா? எதுக்கு சார்," நானே
பாதிநேரம் வெளில இருக்கேன்.

"அதனால தான், ஆபீஸ பொறுப்பா பாத்துக்கவும்,தேடி
வரவங்களுக்கு பொறுப்பா பதில் சொல்லவும் தான்."

"அப்ப சரி சார்.பாத்துட்டு வந்து சொல்றேன்."

ஜான் பூஜாகிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு "சரி,
நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, உங்களுக்கு ஆர்டர்
தர்றேன்".

பூஜாவுக்கு ஒரே சந்தோஷம் தாங்க முடியல. ஆனா எதயும்
வெளிக்காட்டிக்காம இருந்தா. அப்பப்போ இந்த டேமேஜர
மட்டும் ஒரு லுக்கு விட்டுகிடே இருந்தா. கொஞ்ச
நேரத்துல கைக்கு ஆர்டர் வந்ததும் பூஜா தேங்ஸ்
சொல்லிட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தா. வீட்டுல வேல கிடச்சத
பத்தி சொல்லிட்டு ஃப்ரெண்டு வீட்டுக்கு போயிட்டா.
ஃப்ரெண்ட் கிட்ட பூஜா அந்த டேமஜரப் பத்தி சொல்லி
கிட்டு இருந்தா.
"அந்த டேமேஜர் சரியான ஜொல்லு பார்ட்டி, நீ வேனா பாரு
ஒரு நாள் அது என்கிட்ட வந்து ஐ லவ் யூ னு சொல்றதா
இல்லயான்னு,"சொல்லி ரெண்டு பேரும் பயங்கர நக்கல்
பண்ணிகிட்டுருந்தாங்க.இங்க பூஜாவ பத்தி ஒரு சிறு
குறிப்பு. பூஜா காலேஜ் படிச்சுட்டு ஜாலியா கொஞ்ச நாள்
ஊர சுத்திட்டு இருந்தப்போ அவளும் அவ ஃப்ரெண்டும்
சேந்து வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணாங்க.
ரெண்டு பேரும் சின்ன வயசுலயிருந்து ஒன்னா
படிச்சவங்க.வீட்டபொறுத்த வரையில ரொம்ப சாது.
அதுலயும் பூஜா வீட்டுக்கு ஒரே பொண்ணூ.ரொம்பவே
சாது.ஆனா வெளியத் தான் அவங்க சுய ரூபமே தெரியும்
பூஜா வந்து நடுராத்திரி கூப்பிட்டாக் கூட அவ ஃப்ரெண்ட
கூட அனுப்புவாங்க.ஆனா தனியாவோ அல்லது வேற
யார் வந்து கூப்பிட்டாலும் ஃப்ரெண்ட் வர மாட்டாங்க.
அந்த அளவுக்கு பயந்தாங்கொள்ளி.பூஜாவோ பயங்கர
ரெளடி. அவள நம்பி தைரியமா யார வேனாலும்
அனுப்பலாம். அவ்வளவு நல்ல பேரு.இப்படியே ரெண்டு
பேரும் வேலைக்கு போக முடிவு பண்ணி ரெண்டு பேரும்
ஒரே கம்பனிக்கு அப்ளை பண்ணி ஆனா இதுல பூஜா
மட்டும் தான் சேர முடிஞ்சுது.

தொடரும்.......

Saturday, March 17, 2007

சோதனை மேல் சோதனை...

ஹாய் Friends,

எப்படி இருக்கீங்க? இத ஏன் கேக்கறேன்னா அட அது ஒரு
பெரிய்ய வயித்தெரிச்சல்ங்க....பின்ன என்னங்க ஏதோ
மனுசன் கொஞ்ச நேரம் நிம்மதியா ஊர்வம்ப தெரிஞ்சுக்
கலாம்னா அதுக்கு கூட பொறாம படறாங்க... பாருங்க...
ஏதோ என் ரங்கமணி(அவஙக)ஆபீசுல நெட்டு சும்மா
இருக்குனு சொல்லி வேல மெனக்கிட்டு ஒரு கம்பூட்டரும்
வாங்கி குடுத்து வீட்டுல உக்காச்சிண்டு "இப்ப நீ எவனோட
வேணும்னாலும் சண்டை போட்டுக்கோ, ஆனா வெளில
போயி மட்டும் வம்ப கொண்டு வந்துடாதே ஆத்தா"ன்னு
சொல்லி எல்லாம் ரெடி பண்ணி குடுத்தாரு. ஹும் இது
மக்களுக்கு...பொறுக்கல எவ்வளவு நல்ல மனசு.....
உடனேயே" ஆஹா..இம்பூபூபூபூட்டு நல்லவனாடா
நீயி"ன்னுட்டு டக்குனு நெட்ட வச்சி விளயாட ஆரம்பிச்சுட்டானுங்க...எல்லாம் நம்மள பாத்து பொறாம
"ஆஹா பாருடா இவங்கள, அதுக்குள்ள ஒரு ப்ளாக்
ஆரம்பிச்சு பெரிய ஆளாயுடுவாங்களோ"ன்னு தான்.

"நாங்க விடுவோமா? சிங்கம்ல... உடனே சீக்கிரமா
போயி BSNL ல போயி ஒரு நெட் கனெக்க்ஷன்
வேணும்னு கேட்டா... இத பாருய்யா... அவிங்க நேரம்
என்னன்னு சொல்ல.. ஒரு நாலஞ்சு மாசம் ஆகும்ங்கோ
னு சர்வ சாதாரணமா சொல்றாங்கோ.அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்
நான் என்ன சொல்றது......
அதான் கொஞ்ச நாளாவே அப்பப்ப ஆப்செண்ட்......

நான் நேத்து(16th) விஜய் டிவி பாத்துட்டு இருந்தேன்.இப்ப
எல்லாம் விஜய் டிவில கூட நல்ல நல்ல programmes
குடுக்க ஆரம்பிச்சுட்டாங்க.. அதுலயும் இந்த லொல்லு
சபாவ இன்னைக்கு தான் மொத தடவையா பாத்தேன்.
ஆத்தீ என்னமா பிச்சியிருக்காங்க இளைய தளபதிய..
அதே ஸ்டைலு பாச்சு...அதே மாதிரி டான்ஸு...நிஜமாவே
ரொம்பவே ரசிக்கும்படி இருந்தது.. சும்மா விஜய கிழி கிழினு
கிழிச்சுட்டாங்க....estraordinary. அதுக்கப்புறம் கலக்கப்
பாவது யாரு-3. ஆஹா இது பொண்ணுங்களோட காலம்னு
தான் சொல்லனும். பொண்ணுங்க சும்மா என்னமா பின்னி
பெடலெடுத்துட்டாங்க... அதுலயும் ஒரு பொண்ணு
காலேஜு ப்ரொபசராம்.. M.A., M.Phill.,B.Ed.,இப்படி போகுது
அவங்க படிப்பு. அதுலயும் நடுவர் S.Vee.சேகர் இத
கேட்டுட்டு அது ரொம்ப பெரிய்ய இடம்ங்கனு சொல்லி
சிரிக்கிறாரு.அந்தம்மா சொன்னாங்க..அதாவது நாம
கனவில அல்வா பாத்தா நாம பைனான்ஸ் கம்பனி
ஆரம்பிப்போனு... அம்பி நீங்க எப்படி?சும்மா சொல்லக்
கூடாது இப்பல்லாம் பொண்ணுங்க கூட ரொம்ப வெவரமா
தான் இருக்காங்க....அதே மாதிரி ஞாயிற்றுக் கிழமையில
காலைல 10 மணிக்கு விஜயில நீயா நானான்னு ஒரு
நிகழ்ச்சி. அது கூட ரொம்பவே நல்லாயிருக்கு.

ஆனா நான் கேரளாவில பாத்தது ஒரு Busy areaல கூட
மக்கள் நட மாட்டமே இல்லாம இருக்கு. அதாவது
நம்ம ஊரூல எல்லாம் சென்னையிலும் சரி (மவுண்ட்
ரோடு,தி.நகர்) இந்த பெங்களூரிலும் சரி (M.G.Road,
Brigade Road) சாதாரணமா என்ன கூட்டம், ஆனா
கேரளாவுல M G ரோட்ல கூட எந்த ஒரு பரபரப்பும்
இல்லாம ரொம்பவே சாதாரணமாவே இருக்கு.மக்கள்
அந்த அளவுக்கு வெளியில வந்து ஊரச் சுத்தரதுல்லாம்
கிடையாது.ரொம்பவே பழமைவாதிகளாவே இருக்காங்க.
புது மாற்றங்களை பாக்க முடியல.

சரி, இப்போ ஏதோ ஒரு டைம்..நெட் கிடைச்சுது.
உடனே போட்டுட்டேன். இதேமாதிரி நேரம் கிடைக்கும்
போதெல்லாம் உங்கள பாக்க வருவேன்...
so plz dont mitake me.... hi hi hi hi hi ......

Wednesday, March 14, 2007

போக்கிரி சண்டை..

ஹாய் Friends,

தேடிப்பார்க்க நான் உன்னை
தொலைக்கவும் இல்லை
விலாசம் கேட்க நான் உன்னை
மறக்கவும் இல்லை
நலம் விசாரிக்க காலம் நம்மை
பிரிக்கவும் இல்லை
என்றென்றும் உன்
காதல் நினைவுகளோடு வாழும்
உன்...
இது இந்த வாரம் அ.வி லருந்து சுட்டது.சரி நான் இப்போ ஒரு கதை சொல்லப் பேறேன்.
அதாவது நானும் என் நண்பரும் (திருவனந்தபுரத்தில)
தமிழ் சினிமா பார்க்க போனோம். அந்த ஊர்ல
இருக்கறதிலயே ஒரு கேவலமான மகா மட்டமான
தியேட்டர்ல போயி படம் பாக்க வேண்டிய விதி.
சரின்னு நாங்க கிளம்பி போனாமா.. தியேட்டர்க்கு
போயி அது ஒரு Multiplex theatre.அதனால ஏதோ
எனக்கு தெரிஞ்ச மலயாள அறிவ வச்சு தியேட்டர்
பேர படிச்சுட்டேன். சினிமா பேரயும் தான்.

நான்: நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?

அவர்: சினிமா டிக்கெட் வாங்கிட்டு வரச் சொன்னே.

நான்: என்ன சினிமாவுக்கு?

அவர்; தமிழ் சினிமாவுக்கு.

நான்: நீ கேட்டியா? குடுத்தாங்களா?

அவர்: ஆமாம், குடுத்தாங்க.

நான்: என்ன குடுத்தாங்க?

அவர்; சினிமா டிக்கெட்டு.

நான்: என்ன படத்துக்கு?

அவர்: தமிழ் படத்துக்கு.

நான்: அப்ப இது என்ன படம்?

அவர்: அட அது தான்மா...

அதாவது நண்பர் நான் சொன்னத கேட்டுட்டு
கவுண்டர்ல போயி தியேட்டர் பேரச் சொல்லி
டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டாரு. நாங்களும்
உள்ள போயி உக்காந்துட்டோம்.முதலில் சின்ன
சின்னதா விளம்பரப் படம் போயிட்டு இருந்தது.
அப்பறமா மெயின் படம் ஆரம்பிச்சுது. எல்லாம்
மலயாளத்துல எழுதியிருந்தது.எனக்கு ஒரே அதிர்ச்சி.
நாம என்ன படம் பாக்க வந்தோம்? தமிழா இல்ல
மலயாளமானு கேட்டேன். அவருக்கும் ஒன்னுமே
புரியல. அவருக்கோ சுத்தமா மலயாளப் படம்
பிடிக்காது.ஹாஹாஹா எனக்கோ ரொம்ம்ப பிடிக்கும்.
நான் எப்போழுதும் பாக்கறதே அது தான்.நான்
வீட்டுல சாதாரணமா மல்ஸ் சேனல் பாத்தாலே
அய்யா கோவப்படுவாரு.இப்போ தியேட்டருக்கு
வந்து தமிழ்னு நினைச்சு மல்லு படம்.எனக்கு சிரிப்பு
அடங்க ரொம்ப நேரமாச்சு.அதாவது கீழ விழுந்தாலும்
மீசைல மண் ஒட்டலைனு சொல்லுவாங்களே அது
மாதிரி அய்யா படம் பாத்துட்டு ஆஹா..ஒஹோ ன்னு
சொல்லிட்டாரு.வேற வழி எல்லாம் விதி..


அதாவது படத்தோட பேரு DETECTIVE.
சுரேஷ் கோபியோட படம். சாதாரணமா அவரு
மலயாள கேப்டன்னு சொல்லலாம் (விஜயகாந்த்)
அவரும் இவரை போலவே அரசியலோட தான்
மோதுவாரு. ஆனா இந்த படத்துல வித்தியாசமா
ரொம்ப நல்லா பண்ணீயிருக்காரு. அவரோட entryயே
சும்மா நச்சுன்னு இருக்கு. மொதல்ல அவரு நடந்து
வரர்த காமிப்பாங்க சட்டுனு பாத்தா மோகன்லால்
மாதிரியே இருக்கும்.


படம் பாருங்க நம்ம ப.கோ.பி. ஸ்டைலில் ஆரம்பமே
ஒரு மரணம். அது கொலையா அல்லது தற்கொலையானு
கண்டு பிடிக்கனும். அதுலயும் எப்பவும் போல போலீஸ்
அவங்க பங்குக்கு சொதப்பல். ஒரு பெரிய்ய மனுஷர்
உடனே அத தனக்கு வேண்டிய CBIக்கு மாற்றச் சொல்லி
சி.எம் கிட்ட புகார். அவங்களும் உடனே அத ஹீரோகிட்ட
குடுத்து கண்டு பிடிக்க சொல்றாரு.ஒரு வழியா ஹீரோவும்
மொதல்ல அத தற்கொலைன்னு சொல்லிட்டு அப்பறமா
அது கொலைனு கண்டுபிடிக்கறாரு. சும்மாசொல்ல கூடாது
ஒவ்வொரு மூவும் நச்சுனு இருக்கு.பரவாயில்ல ஒரு
வித்தியாசமான திரைக்கதை. பாட்டும் இல்லாம
நல்லாதான் எடுத்துருக்காங்க விறுவிறுப்போட.
சாதாரணமா இந்த மாதிரி கதையெல்லாம்
மோகன்லாலுக்கு தான் நல்ல சக்சஸ் தரும்.
ஆனா இப்போ சுரேஷ் கோபிக்கு அடிச்சிருக்கு
சான்ஸ். பரவாயில்ல நல்லா தான் போகுது இதுவும்.

ஆனா எனக்கு ஒரு மனக்குறை என்னன்னா இந்த படம்
போட்டிருந்த தியேட்டர்ல dts soundல சும்மா என்னமா
இருந்தது.ஆனா நாங்க மறுபடியும் போக்கிரி பாக்க
வந்ததும் இதே காம்ளெக்ஸ்ல தான், ஆனா
தியேட்டரோ படு மோசம். சவுண்டும் சரியில்லை.
ஸ்கிரீனும் சரியில்ல, தண்டமா இருந்தது.
ஏனோ தெரியல தமிழ்நாட்ட தவிர தமிழ்
படங்கள் மத்த ஊரில அவ்வளவா எடுபடறதில்ல.

Tuesday, March 13, 2007

கல்யாணந்தான் கட்டிகிட்டு.....

ஹாய் FRIENDS,

எப்படி இருக்கீங்க? ஹி ஹி ஹி ஹி... நான் கொஞ்ச நாள்
ஜாலியா ஊர சுத்துட்டு வந்தேன். நல்லா மூக்கு பிடிக்க 3
வேளயும் துன்னுபுட்டு கேரளாவுல இருக்கிற எல்லா பீச்சயும்

சுத்திபுட்டு வந்தேன். ஆஹா கேரளா பீச்சு என்னமா இருக்கு..
அதுவும் அந்த கோவளம் இருக்கே.... சும்மா சொல்லக் கூடாது
அந்த பீச்சுல வெளி நாட்டு பிகருங்களை டூ பீஸுல பாக்க 2

கண்ணூ போதாது..அதுக்காக நாம அதையெல்லாம் பாத்து
ஜொள்ளூ விடுவோமா என்னா? நம்ம ஸ்டேட்டஸ் என்னாவும்?
அதுக்காக பாக்காம வருவமா? சும்மா அப்படியே ஓரக்கண்ணால

ஒரு லுக்கு விட்டுகிட்டே ஒரு கையில ஐசையும் நக்கிகிட்டே
சும்ம பந்தாவா ஒரு ரவுண்டு வந்தோம்ல...

அப்பரமா ஒரு மூனு சினிமா பாத்துட்டு அதுவும் நம்ம
தமிழுக்காக
சண்டையெல்லாம் போட்டு ...ம்ம் ஒரு வழியா சினிமா
பாத்துட்டு வந்தோம். எங்கே போனாலும் நம்ம
அருணயும் ஷ்யாமயும் மட்டும் மறக்கவே முடியலைங்க.
ஏன்னா அங்க கிடைக்கற ஆப்பமும் கடலக்
கறியும் அருண ஞாபகப் படுத்தியது. அப்பறமா நம்ம

தோஸ்துக்கு (செந்தில்IAF தான்)கிடைக்கும் (தண்ணிதான்)
ஷ்யாம ஞாபகப் படுத்தியது.
அப்ப ஒரு நாள் நாங்க போக்கிரி படம் பார்க்க
போன கதய நினைச்சாலே... அத ஒரு போஸ்டாவே
போடலாம்.


சரி இப்ப எனக்கு ஒரு மெயிலில் வந்த படம் தான் இது.


WHAT IS MARRIAGE MEANS......?
ஷ்யாம் இத பாக்கும் போது உங்க ஞாபகம் வருது ...
நீங்க எப்பவும் பூரி கட்ட ஞாபகமாவே இருபீங்க இல்ல?
அப்ப சரி தான்....


அது சரி இதுல எனக்கு ஒன்னுமே புரியல.. உங்களுக்கு?

புரிஞ்சா மட்டும் நீங்க ஒத்துக்கப் போறீங்களா என்ன?