Tuesday, May 15, 2007

சூப்பர் ஸ்டாராக ஆசை..


திருப்பதி உண்டியலைத் திறந்தபோது உருண்ட சில்லறை மாதிரி கலகலவென வார்த்தைகள் உதிர, அஜித்தின் மௌனம் அன்றோடு கலைந்தது. ‘‘முன்பெல்லாம் நான் பேசும்போது எல்லாத்துக்கும் எமோஷனலாகி விடுவேன். அதனால் எனக்கு எவ்வளவோ பிரச்னைகள். இப்போது அப்படிப் பேசுவதில்லை. காரணம். என் வயசு. இன்னிக்கு என்னோட 36வது பிறந்த நாள். இந்த வயதிலும் எனக்குப் பக்குவம் வரலேன்னா எப்படி? இந்தப் பக்குவத்தை வரவழைத்ததில் என் நேசத்துக்குரிய மனைவி ஷாலினிக்கு பெரும் பங்குண்டு.
அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கள்தானா?’ என்று மீடியாக்கள் கேட்டபோது, ‘ஆமாம் எனக்கு அந்த நாற்காலி வேணும்’னு நான் சொன்னதை தவறாகப் புரிந்துகொண்டனர். ஏதோ திமிரில் நான் சொல்வதாக என் கன்னத்தில் அறைந்த மாதிரி எழுதினார்கள்.
யார மாதிரி வரணும்னு ஆசைப்படறே?’னு கேட்டால், ஒரு குழந்தை ‘சச்சின் மாதிரி வரணும்னு சொல்லும். இன்னொரு குழந்தை அப்துல்கலாம் மாதிரி வரணும்’னு சொல்லும். குழந்தைகள் மனதில் யாரைப் பிடிச்சிருக்கோ அப்படி வரணும்னு சொல்லும். என்னைப் போன்ற நடிகர்களுக்கு ரஜினி சார்தான் ரோல் சொல்லப் போனால், அது ஒரு தன்னம்பிக்கை. குழந்தைகளிடம் ‘நீ யார் மாடல். எல்லோருக்கும் அவரைப்போல் சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை இருக்கும் போது நான் அந்த இடத்துக்கு ஆசைப்பட்டுச் சொல்றது எந்த விதத்தில் தப்புன்னு புரியலை. சிலர் அதை நாற்காலியாகப் பார்க்கலாம். நான் அதை லட்சியமாகப் பார்க்கிறேன். மொத்தத்தில் அது ஒரு முயற்சிதானே’’ என்றார்.

Sunday, May 13, 2007

லண்டன் வற்றல் குழம்பு

ஹாய் லேடீஸ் & ஜெண்டில்மென்,

ஒரு புது விதமான குழம்பு ஒன்னு பாத்தேன். உடனே
நம்ம ம்க்கள்ஸுக்கு சொல்லலைன்னா எப்படி?
முக்கியமா நம்ம அருணோட குருப்ஸுக்கு(ஹி ஹி அது
வேற ஒன்னும் இல்லை.. பாச்சிலர்ஸுக்கு ம்ட்டும்)
நாட்ஸ், நீங்க ட்ரைப் பண்ணாக் கூட தப்பேயில்லை,
ஆனா ரிசல்டு மட்டும் சொல்லிடுங்க...


தேவையானப் பொருட்கள்

பீன்ஸ் - 8
சின்ன கத்தரிக்காய் - 5
பெரிய வெங்காயம் - 3
வாழைக்காய் - 1
செளசெள - ஒன்று
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
புளி தண்ணீர் - 2 கப்
கசகசா - 3 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
கல் உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

காய்ச்சிய பால் - ஒரு கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி.பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ளவும். பெரிய எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் கரைத்து, 2 கப்அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும

இந்தக் குழம்பிற்கு கத்தரிக்காய், வாழைக்காய், சௌசௌ போன்றவை பொருத்தமாக இருக்கும். கூடவே தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சில
காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கத்தரிக்காய், பீன்ஸை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காய், செளசெள இரண்டையும் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


வெறும் வாணலியில் கசகசாவை 30 நொடி வதக்கவும். தேங்காய் துருவலையும் அதை போல்
வதக்கிக் கொள்ளவும். முதலில் மிக்ஸியில் கசகசாவை
போட்டு ஒரு முறை அரைத்து பிறகு அதில் அரை
டம்ளர் தண்ணீர் ஊற்றி தேங்காய் துருவல் போட்டு
விழுதாக அரைக்கவும்.


வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெடித்ததும், வெந்தயம் போட்டு அதனுடன் கறிவேப்பிலை, பூண்டு, நறுக்கின வெங்காயம் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய், செளசெள,
வாழைக்காய், பீன்ஸ் போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட்டு 30
விநாடிகள் வேகவிடவும். காஷ்மீர் மிளகாய்த் தூள்
சேர்த்தால் நல்ல நிறம் கிடைக்கும்.
(எனக்கு ஒரு சந்தேகம்.. குங்குமப் பூலயும் காஷ்மீர்,
மிளகாயிலும் காஷ்மீர்.. இப்ப வரவர எல்லாத்துலயும்
காஷ்மீர் வர ஆரம்பிச்சுடுத்து..)

பிறகு புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
புளி கரைசல் நன்கு கொதித்து வர வேண்டும்.
சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து காய்கள் வெந்து, கொதித்ததும்
தேங்காய் கசகசா விழுது சேர்க்கவும். மேலும் 30
விநாடிகள் கொதிக்க விடவும்.


பிறகு அதில் பால் ஊற்றி ஒரு நிமிடம் கலக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் இறக்கி
விடவும்.
இப்போது லண்டன் வற்றல் குழம்பு தயார்,
அசத்தல் சுவையில்.
இது வந்து இந்த குழம்பை சாப்பிட்டவர் சொன்ன
ஒரு கமெண்ட்..ஹி ஹி ஹி ஹி...
(சென்னையில் நடந்த ஒரு திருமண விருந்தில் இந்த லண்டன் வற்றக்குழம்பை சாப்பிட்டு இருக்கிறேன். சமைத்தது இந்த குறிப்பை கொடுத்த சீனுவாசனா என்று தெரியாது. குழம்பு நன்றாக இருக்கின்றதே என்று பெயர் கேட்ட போது லண்டன் வற்றகுழம்பு என்று சொன்னார்கள். ஆத்துக்காரிக்கும் மிகவும் பிடித்து போயிற்று. நம்ம ஆத்துல நாளைக்கு இந்தக் குழம்புதான்)

Friday, May 04, 2007

"காரணம் விஜய், நமீதா நச்"

ஹாய் மக்கள்ஸ்,


இந்த நமீதா ஏதேதோ சொல்றாங்கப்பா?"வெயிட் குறையனுமா? அசைவத்துக்கு குட்பை
சொல்லுங்க..." (மொத பாயிண்டே
அடி வாங்குதே...நாட்டாம முடியுமா?)

சரியான நேரத்துக்கு சாப்பிடுங்க,

நிறைய்ய காய்கறிகள்,பழங்கள்
உடம்புக்கு நல்லது.(தோடா..)

அரிசியைக் குறைச்சுக்குங்க,

இரவு உணவுக்கும் தூங்க போறதுக்கும் ஒரு 3 மணி நேரம்
இடைவெளி குடுங்க..(அது ஒ.கே..டெய்லி groups la
poi எங்களோடல்லாம் பேசினா சரியாயிடும்)

இதையெல்லாம் செஞ்சா வெயிட் குறைஞ்சிடும்.
(இத பாருய்யா... இது நமக்கு தெரியாதாக்கும்.. இத
சொல்லத் தான் இவங்க வந்தாங்களாக்கும்...)

நான் வெயிட் குறைஞ்சதுக்கு விஜய் தான் காரணம்,
(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்..
இது நாட்டாமயோட சவுண்டு)

அவரோட 'அழகிய தமிழ்மகன்' படத்துல நடிக்க ஜோடியாக
நடிக்க சான்ஸ் வந்துச்சு.விஜய் 'யூத்ஃபுல்லான ஹீரோ,
அவரோட ஜோடியாக நடிக்க வந்த சான்ஸ நான் மிஸ்
பண்ண விரும்பல..அதனால அவருக்கேத்த மாதிரி
என்னையும் தயார்படுத்திக்க நினைச்சேன்.முதல்ல
என்னோட எடையை குறைச்சேன். இப்போ என்னோட
எடை 57 கிலோ தான். விஜைக்கு தேங்க்ஸ்.

வழக்கமா ஜூனியர் ஹீரோக்களோட நடிச்ச பிறகு தான்
சீனியர்களோட நடிக்க சான்ஸ் கிடைக்கும். என் விஷயத்தில்
இது கொஞ்சம் உல்டா. இப்போ விஜய், அஜித் சிம்புனு
எல்லாருமே இளம் ஹீரோஸ்.இதுக்கு காரணம் என்னோட
கடின உழைப்பு தான்.( நாட்டாம நீங்களும் இது மாதிரி
கடினமா உழைச்சா இவங்களோட நடிக்க சான்ஸ் கிட்டும்)

"ரொம்ப முக்கியம், தினமும் ஒரு 2 மணி நேரமாவது
உடம்புக்கு நல்ல பயிற்சி கொடுக்கனும். வாக்கிங்,
ஜாகிங் எல்லாம் செய்ஞ்சு உடம்பை ஃபிட்டா வச்சிக்கனும்.
அப்புறம் ரொம்ப முக்கியம் நண்பர்களுடம் நிறைய்ய்ய்ய
ஜோக்கடிச்சு சிரிக்கனும்".(ஹும்.. அதுக்கு ஒன்னும்
குறைச்சல் இல்ல. அது தான் வழக்கமா நடக்குதே....)


ஒரு பிட்டு:

எந்த நடிகையின் கண்கள் அழகு என்று சரித்திரப் புகழ்
வாய்ந்த மேக்கப் மேன் கோ தண்டத்திடம் கேட்டப் போது
கிடைத்த பதி இது:

மீரா ஜாஸ்மின் -- குறுகுறு கண்கள்.

நயன்தாரா--- புண்ணகை விழிகள் (நாட்டாம நோட் திஸ்)

அசின்- சிறிய ஆனால் கூர்மையான கண்.

த்ரிஷா(3ஷா) -- காதல் கண்கள்.

ஷ்ரேயா---செக்ஸி

சினேகா--உற்சாக கண்கள்.

மக்கள்ஸ் இது எல்லாமே இந்த வாரம் குமுதத்தில் வந்ததுங்கோ.

Wednesday, May 02, 2007

சிவாஜி.. by விவேக்...

ஹாய்..ஹாய்..ஹாய்ய்...


தமிழ் சினிமா இது வரை காணாத இறுக்கத்தில் இருக்கிறது.
காரணம் சிவாஜி.

வரலாற்றை கி.மு..கி.பி. என்று பிரித்தார்கள். ஆனால் இப்போது
சினிமாவை சி.மு..சிபி. என்று பிரிக்கிறார்கள். அதாவது
"சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின்" என்று.. சிவாஜி முடிவடைந்த
நிலையில் சிவாஜி யூனிட் பற்றி நான் ஏதேதோ எண்ணூகிறேன்..

நான் கீழ்காணும் வகையில் எழுதுவது ஹைக்கூவா..இல்லை
கவிதையா..இல்லை உரைநடையா..இல்லை "மப்பில் எழுதும்
உளர நடையா" என்றெல்லாம் எழும் சந்தேகங்களை வைரமுத்து
சுஜாதா இவர்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.


ரஜினிஅது ஒரு ரகசியம்!!
ஆசியாவின் அதிசயம்!!!
குழந்தைகளின் 5 ஸ்டார்!!
குடும்பங்களின் சூப்பர் ஸ்டார்!!!
ஸ்டைல்களின் சுரங்கம்!!
சாகசங்களின் அரங்கம்!!!


மெகாதகப் பங்சுவாலிட்டி!!
எண்ணத்தில் வழியும் ஸ்பிரிச்சுவாலிடி!!!
தனக்குத் தானே குடை பிடிக்கிறார்!!
தாங்குவது இந்த மெட்ராஸ் சிட்டி!!!
எல்லாம் இவருக்கு ஒரே லொக்காலிட்டி!!
அப்படி ஒரு சிம்லிசிட்டி!!!
ஆனாலும் இது அநியாயமான அட்ராசிட்டி!!!


இவரை 20 வருடம் rewind செய்தது யார்?
மீண்டும் நாம் காலேஜ் போலாமா? சார்?

குப்பன் சுப்பன் முதன்
ஜப்பான் நிப்பான் வரை க்யூ கட்டி நிப்பான்!!
"சிவாஜி" .... வாய் பிளக்க வைப்பான்!!!!!

எல்லாருக்கும் சிவாஜி ஆக ஆசை..!!
ஆனால் இந்த சிவாஜிக்கோ
மீண்டும் சிவாஜி ராவ் ஆக ஆசை.!!!

இரண்டுமே நடக்காது..
எழுந்த பாம்பு மீண்டும் படுக்காது!!
(இது அவருக்கு மட்டும் புரியும்)

ஷ்ரேயா.கிண்டல் கேலி நாட்டி..!!
பண்டல் ஆஃப் லூட்டி.!!

இது தான் 'ஷ்ரெயா' எனும் ப்யூட்டி!!

அறிவுக்கும் அழகுக்கும் பொதுவாக
கைகலப்பு..
ஆனால்..ஷ்ரேயா இதற்கு விதிவிலக்கு.!!!

கண்களில் கிக்கு..கைகளில் புக்கு..
இதழை திறந்தால் வார்த்தைகள் பூக்கு..
வளைவுகள் சிக்கு..விழுந்தவன் சீக்கு..
ஈசனின் உடுக்கு இடையினில் கிடக்கு..!!

அருகில் வந்ததும் அஸ்திவாரம் ஆடாதவன்
மக்கிலும் மக்கு..சிவாஜிக்கு பிறகு
வருதப்பா ஒரு பீக்கு..!!!ஏ.ஆர். ரஹ்மான்.


தீப்பிடிக்குது சீ.டி. அதில் பத்தவைக்கலாம் பீடீ..
ஏ.ஆரின் சுரம்..இளைஞர்களின் ஜுரம்..!!
இது ஸ்லோ பாய்ஸன் பாயசம்
பொங்கி வழியுது ஆகாசம்!!!
எல்லா புகழும் இறைவனுக்கே!! ஆனால்
அவனின் ஆசி இவனுக்கே..!!


விவேக்

அன்று நான்......
இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலா?

இன்று நான்...
ஷங்கர் கொளுத்திய தெளசண்ட் வாலா!!
வெடித்து சிதறுவதை வெள்ளித் திரையில் காண்க!!

பேசப் படுவேன் பின்னர் ஒரு நாள்...
அது சிவாஜியின் வெற்றித் திரு நாள்!!


நண்பர்களே இது என்னன்னு தானே நினைக்கிறீகள்.
அது வேற ஒன்னுமில்லை..சென்னையில கொஞ்சம்
வெயில் அதிகம்ல..அது தான் விவேக் கொஞ்சம்
தடுமாறிட்டாரு..இல்ல இல்ல இல்ல..தண்ணியில
தடுமாறிட்டாரு... இது குமுதம்ல வந்த ஒரு மேட்டர்.