Monday, September 29, 2008

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ சில டிப்ஸ்....

இதோ சில டிப்ஸ் உங்கள் உபயோகத்திற்கு:

1. சின்னதா ஒரு டிடெக்டிவ்
ஏஜென்ஸியை உங்கள்
அலுவலகத்திற்குள்ளாவே உருவாக்கி அடுத்தது யார்
வேலையிலிருந்து விடுபட போகின்றார் என்பதை
கண்டறியுங்கள்.

2. உங்க பாஸுக்கு சும்மா சும்மா BLANK CALL பண்ணுங்க.

3. உங்கள் யாகூ ID யிலிருந்து Gmailக்கு ஒரு மெயில்
அனுப்புங்க, உடனே அதை திறந்து பாருங்க. மெயில் வர
எவ்வளவு நேரம் ஆகுதுன்னு செக் பண்ணுங்க.இந்த முறையை
அப்படியே ரிவர்சில் பண்ணுங்க.

4. மற்றவர்கள் பயன் படுத்தும் நாற்காலி,பிரிண்டர் ஆகியவற்றை
அடிக்கடி இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் வரச்
செய்யுங்கள்.

5. உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள்.இன்னுமும் போர்
அடித்தால் கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள்.

6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர்களின் முக
பாவனையை பாருங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும்.
உங்கள் முக பாவனைகளையும் அவ்வபோதுமாற்றுங்கள்.
அப்போது தான் நீங்கள் வேலை செய்வது போல தோன்றும்.

7. இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக் கொள்ளூங்கள்.
சமுதாயப் பிரச்சனைகளை அலசுங்கள்.

8. விசில் அடிக்க பழகி கொள்ளுங்கள்.

9. போன மாதம் அல்லது போன வாரம் நாளிதழை படியுங்கள்.

10. தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து குப்பைத்தொட்டியில்
எறிய பயிற்சி எடுங்கள்.

11. தொலைபேசியை எடுத்து தற்போது உபயோகத்தில் இல்லாத
எண்களுக்கு போன் போடுங்கள்.

12. உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை
அப்ளிகேஷசனை திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.

13. கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள்.பிறகு
ரிசைக்கிள் பின்னிலிருந்து ரீ-ஸ்டோர் செய்து விளையாடுங்கள்.
திரும்ப திரும்ப இதையே செய்யுங்கள்.

14.உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள நாற்காலியில் எவ்வளவு
தூரம்
சாய முடியுமோ அவ்வளவு சாய்ந்து பாருங்கள்.

இதுக்கும் மேல போர் அடிச்சா இதயே திரும்ப திரும்ப செய்து
பாருங்க.

Tuesday, September 02, 2008

காய்கறிகளில் என்ன இருக்கிறது?

வாழைக்காய் உண்ணத்தக்க பகுதி - 58%

ஈரம் - 83.2 கிராம்
புரதம் - 1.4 கிராம்
தாது உப்புகள் - 0.5 கிராம்
நார் - 0.7 கிராம்
சர்க்கரைச் சத்து - 14.0கிராம்
எனர்ஜி -64 கிராம் கலோரி
கால்சியம் - 19 மி.கி.
பாஸ்பரஸ் - 20 மி.கி.
இரும்பு - 0.6 மி.கி.
தையமின் - 0.5 மி.கி.
ரிபோபிளேவின் - 0.1 மி.கி.
நியாசின் - 0.3 மி.கி.
வைட்டமின் சி - 24 மி.கி.

பலன் பித்தம் குறைக்கும், தலைச்சுற்று நீக்கும், பித்த வாந்தியைக் குறைக்கும், உடற்சூடு தணிக்கும், சூட்டு இருமல் தணிக்கும், உமிழ்நீர் சுரக்கும்.

முருங்கைக்காய் உண்ணத்தக்கது - 83%
ஈரம் - 86.9 கிராம்
புரதம் - 2.5 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
தாதுஉப்புகள் -2.0 கிராம்
நார் - 4.8 கிராம்
சர்க்கரை - 3.7 கிராம்
எனர்ஜி - 26 கி.கலோரி
கால்சியம் - 30 மி.கி.
பாஸ்பரஸ் - 110 மி.கி.
இரும்பு -5.3 மி.கி
தையமின் - 0.05மி.கி.
ரிபோபிளேவின் -0.07 மி.கி.
நியாசின் - 0.2 மி.கி.
வைட்டமின் சி - 120 மி.கி.

பலன் சளியைப் போக்கும், ஆண்மை மிகுவிக்கும், ஊளைச்சதை நீக்கும், எலும்பு வலுவாகும், பல் ஆட்டத்தை நிறுத்தும், காயங்களைக் குணமாக்கும், சோகை தீர்க்கும், ஈறுகளுக்கு உறுதி அளிக்கும்.

காலி ஃபிளவர் உண்ணத்தக்கது - 70%
ஈரம் - 90.8 கிராம்
புரோட்டின் - 2.6 கிராம்
கொழுப்பு - 0.4 கிராம்
தாது உப்புகள் - 1.0 கிராம்
நார் - 1.2 கிராம்
சர்க்கரை - 4.0 கிராம்
எனர்ஜி - 30 கி.கலோரி
கால்சியம் - 33 மி.கி.
பாஸ்பரஸ் - 57 மி.கி.
இரும்பு - 1.5 மி.கி.
தையமின் - 0.04 மி.கி.
ரிபோபிளேவின் - 0.10 மி.கி.
நியாசின் - 1.0 மி.கி.
வைட்டமின் சி - 56 மி.கி.

பலன் சூட்டைத் தணிக்கும், சளி குறைக்கும், உடல் வறட்சியைப் போக்கும், இருமல் குறைக்கும், வாய் துர்நாற்றம் நீங்கும், இளைப்பு நீங்கும், மேனியை மினுமினுப்பாக்கும்.

தக்காளிப் பழம் உண்ணத்தக்கது - 100%
ஈரம் - 94.0 கிராம்
புரோட்டின் - 0.9 கிராம்
கொழுப்பு - 0.2 கிராம்
தாதுஉப்புகள் - 0.5 கிராம்
நார் - 0.8 கிராம்
சர்க்கரை -3.6 கிராம்
எனர்ஜி - 20 கி.கலோரி
கால்சியம் -48 மி.கி.
பாஸ்பரஸ் - 20 மி.கி.
இரும்பு - 0.4 மி.கி.
தையமின் - 0.12 மி.கி.
ரிபோபிளேவின் - 0.06 மி.கி.
நியாசின் - 0.4 மி.கி.
வைட்டமின் சி - 27 மி.கி.

பலன் மேனியை மினுமினுப்பாக்கும், வறட்சியைப் போக்கும், தாகம் தணிக்கும், உமிழ்நீரைச் சுரக்க வைக்கும்.

முட்டைக்கோஸ் உண்ணத்தக்கது - 88%

ஈரம் - 91.9 கிராம்
புரோட்டின் - 1.8 கிராம்
கொழுப்பு - 0.1. கிராம்
தாது உப்புகள் -0.6 கிராம்
சர்க்கரை - 4.6 கிராம்
எனர்ஜி - 27 கி கலோரி
கால்சியம் - 39 மி.கி.
பாஸ்பரஸ் - 44 மி.கி.
இரும்பு - 0.8 மி.கி.
தையமின் - 0.06 மி.கி.
ரிபோபிளேவின் - 0.09 மி.கி.
நியாசின் - 0.4 மி.கி.
வைட்டமின் சி - 124 மி.கி.

பலன் உடல் வளரச் செய்யும், கண் பார்வை மிகும், தோல் அழகாகும், பற்கள் உறுதியாகும், நரம்புகள் பலமாகும், தொற்று நோய்களைத் தடுக்கும், கருவுற்ற பெண்களுக்கு நல்லது, எலும்புக்கு உறுதி ஏற்படுத்தும், முடி கொட்டாது.

வெங்காயம் உண்ணத்தக்கது -84%
ஈரம் - 89.1 கிராம்
புரதம் - 1.9 கிராம்
கொழுப்பு - 0.2 கிராம்
தாது உப்புகள் - 0.7 கிராம்
நார் - 1.2 கிராம்
சர்க்கரை - 6.4 கிராம்
எனர்ஜி - 35 கி
கலோரி
கால்சியம் - 66 மி.கி.
பாஸ்பரஸ் - 50 மி.கி.
இரும்பு - 1.5 மி.கி.
தையமின் - 0.10 மி.கி.
நியாசின் - 0.6 மி.கி.
வைட்டமின் சி - 13 மி.கி.

பலன் வாய் துர்நாற்றம் போக்கும், மலப்பிரச்னைகள் தீரும், உடம்பில் மினுமினுப்பு உண்டாக்கும், வறட்சி நீக்கும், வாதம், பித்தம், கபம் இவைகளைச் சமப்படுத்தும்.


பீட்ரூட் உண்ணத்தக்கது - 85%

புரோட்டின் - 1.7 கிராம்
கொழுப்பு - 0.1 கிராம்
தாது உப்புகள் - 0.8 கிராம்
நார் - 0.6 கிராம்
சர்க்கரை - 8.8 கிராம்
எனர்ஜி - 43 கி
கலோரி
கால்சியம் - 18 மி.கி.
பாஸ்பரஸ் - 55 மி.கி.
இரும்பு - 1.0 மி.கி.
தையமின் - 0.04 மி.கி.
ரிபோபிளேவின் - 0.09 மி.கி.
நியாசின் - 0.4 மி.கி.
வைட்டமின் சி - 10 மி.கி.

பலன் இரத்தம் சுத்தமாகும், மலப்பிரச்னைகள் தீரும், சூடு தணிக்கும், முகம் அழகாகும், தோல்வறட்சி நீங்கும், இரத்த சோகை போக்கும், கை கால் சோர்வைப் போக்கும், உடம்பு நிறம் கூடும்.

பச்சைப் பட்டாணி உண்ணத்தக்கது - 100%
ஈரம் - 16 கிராம்
புரதம் - 19.7 கிராம்
கொழுப்பு - 1.1 கிராம்
தாதுஉப்புகள் - 2.2 கிராம்
நார் - 4.5 கிராம்
சர்க்கரை - 56.5 கிராம்
எனர்ஜி - 315 கி கலோரி
கால்சியம் - 75 மி.கி.
பாஸ்பரஸ் - 288 மி.கி.
இரும்பு - 5.1 மி.கி.
தையமின் - 0.47 மி.கி.
ரிபோபிளேவின் - 0.19 மி.கி.
நியாசின் - 3.4 மி.கி.
வைட்டமின் சி - 140 மி.கி.

பலன் பசியைப் போக்கும், உடம்புக்கு சக்தி கொடுக்கும், குடல்புண்களை ஆற்றும், மூளைக்குத் தேவைப்படும் சக்தியைக் கொடுக்கும்.

நன்றி: குமுதம் ஹெல்த்.