Monday, April 30, 2007

AGAIN MONDAY....

Hai friends,

again MONDAY to relax..he he he he .....



idu eppadi irukku?

Friday, April 27, 2007

பரட்டை (எ) அழகு சுந்தரம்....

ஹாய்,

மாமனாரோட படம் ரிலீசாகும் போது மாப்போட படம்
போட்டி போட்டா எப்படி? அப்பறம் மாப்புக்கு கோவம்
வந்து எசகு பிசகா ஆயிடுச்சுன்னா....? அதுவும் இந்த
நியூச படிங்க அப்ப தெரியும் என்ன மேட்டருன்னு...











பரட்டை என்கிற அழகு சுந்தரம்



நடிகர்கள்???: தனுஷ், மீரா ஜாஸ்மின், அர்ச்சனா, சந்தானம், மோனிஷா,

தயாரிப்பு???: ராம் பிரசாத் இயக்கம் ???: சுரேஷ் கிருஷ்ணா
இசை????: யுவன் ஷங்கர் ராஜா
திரைக்கதை???: பிரேம்


அடுத்தடுத்து தொடர்ந்த மசாலா படங்களிலிருந்து கொஞ்சம் சவாலான அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிற திரைப்படம் பரட்டை என்கிற அழகு சுந்தரம். இந்த திரைப்படம் ஜோகி என்ற கன்னட வெற்றி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஜோகி திரைப்படத்தால் மிகவும் கவரப்பட்ட ரஜினிகாந்த், அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க மிகவும் விருப்பப்பட்டாராம். ஆனால் ரஜினிக்கு நேரமில்லாததால் தனுஷுக்கு அடித்திருக்கிறது அதிர்ஷ்டம்.



நாடோடியாக சுற்றித் திரியும் பரட்டை என்கிற பிச்சைக்காரனுக்கு மகனான அழகுசுந்தரத்தின் கதைதான் இந்த திரைப்படம். ஏழ்மை, பட்டினி, வேலைச்சுமை ஆகியவற்றால் அழகுசுந்தரத்தின் அப்பா பரட்டை நோய்வாய்பட்டு இறந்துவிடுகிறார். நண்பர்கள் விவரிக்கும் நகர வாழ்க்கைக் கதைகளில் மயங்கிய பரட்டை, தன் அம்மாவை (தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா) விட்டு விட்டு நிறைய பணம் சம்பாதித்து பெரிய ஆளாகும் ஆசையில் நகரத்தை நோக்கி வருகிறான்.


நகரத்தில் ஒரு டீக்கடை வைக்கிறான் அழகு சுந்தரம். எல்லா சமூக விரோதிகளுடனும் நட்பாகிறான். கடைசியில் ஒரு பயங்கரமான தாதாவை அழித்ததால் ஜெயிலுக்கு போகிறான் அழகுசுந்தரம். அந்த தாதாவின் அடியாட்கள் அழகுவை தங்களின் தலைவராக இருக்குச் சொல்லி கேட்கிறார்கள். அனால் அழகு மறுத்துவிடுகிறான். ஜெயிலிலிருந்து விடுதலையாகிற அழகு மீண்டும் தன் டீக்கடைக்கே திரும்பிவிடுகிறான்.
படத்தில் நடித்திருக்கும் இன்னொரு தேசிய விருது பெற்ற நடிகையான மீரா ஜாஸ்மின், தனுஷின் காதலியாக வருகிறார். ஜெயில் பறவையான அழகுவின் வாழ்க்கை ரகசியங்க்ளை தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஒரு துறுதுறு பத்திரிக்கையாளராக வருகிறார் மீரா ஜாஸ்மின்.
தன் மகன் அழகுசுந்தரத்தைத் தேடி நகரத்துக்கு வருகிற அவன் அம்மா மீரா ஜாஸ்மினை சந்திக்கிறார். மகனை கண்டுபிடித்து தருவதாக

அம்மாவுக்கு வாக்கு கொடுக்கிறார் மீரா ஜாஸ்மின்.

அம்மா மகனை சந்தித்தாரா? எந்த சூழ்நிலையில் சந்தித்தார்? இறுதியில் கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்தார்களா? கன்னட திரைப்படத்தை போல தமிழ் ரீமேக்கிலும் முடிவு சோகம்தானா? காத்திருந்து பாருங்கள் பரட்டை என்கிற அழகு சுந்தரத்தை!

Thursday, April 26, 2007

When Niagara Frozen ( rare photos)

Hai friends,

have u seen this picturs before?









ஆஹா..இது மேல நடந்தால் எப்படி இருக்கும்?
வாவ்.... superb...

Wednesday, April 25, 2007

சினி செய்திகள்...

Hai friends,


நடிப்பில் புகழ் பெற தன் உடலமைப்பில் உடையில் தலையலங்காரத்தில் என மாற்றிக் கொள்ளும் நடிகர்கள் மத்தியில் என்றும் ஒரே மாதிரியாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் அசத்தும் ரஜினியின் புதிய படம் சிவாஜி.


மே 17 ந் தேதி ரீலிசாகும் இப்படத்தில் பிரமாண்டத்திற்கு பெயர் போன ஷங்கர் இயக்குனர்,பழமையான ஏவிஎம் தயாரிப்பு,ராகத்திற்கு தன்னிகரில்லாத ரஹ்மான் இசையென பல முத்துக்கள் இருப்பது தெரிந்த விஷயம்.


இப்படத்தின் தயாரிப்பிலும் சில சாதனைகள் உங்களுக்குத் தெரியுமா? அதைப் பற்றி.அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.



ஷங்கரின் படங்களிலேயே அதிகளவில் தயாரிப்புக்கு செலவு செய்யப்பட்டுள்ளது. 68% -படப்பிடிப்பு இடங்கள், ஆச்சிரியதக்க வகையில் 12%-கிராப்பிக்ஸ், 8%-உடைகள், 8%-சம்பளம் (ரஜினியை தவிர), 2%-ரஹ்மான், மற்ற டெக்னீசியன்களுக்கு, 2%-வேஸ்ட்


முதல் முறையாக அமிதாப் பச்சன் ரஜினியுடன் இணைந்து நடிக்கிறார்.அமிதாப்பின் வசதிக்காக 2 நாட்கள் புனேயில் படப்பிடிப்பு நடத்தப்பட்டுள்ளது.


மலையாள சூப்பர் ஸ்டார் மமுட்டி ஒரு சீனில் நடிக்கிறார்.

கேரளாவில் படத்தை வெளியிட நடிகர் வினித் 6 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளார். ஆந்திராவில் 17 கோடி ரூபாய்க்கும்,கர்நாடகாவில் 9 கோடி ரூபாய்க்கு நடிகர் ரவிசந்தரால் வாங்கப்பட்டுள்ளது.


தமிழ்நாட்டில் sun tv,reliance க்கும் இடையில் கடும் போட்டி 80 கோடிக்கு (satelite,DVD,audio) நிலவுகிறது.


உலகளவில் 9 நாடுகளில் (DVD உட்பட)இப்படத்தை வெளியிட அயன்ஙரன் வீடியோ (கனடா), பிரமிட் வீடியோ(இந்தியா) இரண்டுக்குமிடையே 100 US MILLION டாலர்களுக்கு போட்டி நிலவுகிறது.


படம் வெள்ளிவிழா கண்டால் 25% சிவாஜி அறகட்டளைக்குத் தருவதாக ஏவிஎம் நிறுவனம் அறிவித்துள்ளது.


முதல் முறையாக ரஜினி இப்படம் மிகப்பெரும் வெற்றியடையுமென டைம்ஸ் பத்திரிக்கையில் பேட்டி அளித்துள்ளார்.


இப்படம் HOLLYWOOD படமான casinoroyale விட அதிக பரபரப்பை ஏற்படுத்துமென ஜாப்பான் பத்திரிக்கை டொஷொ செய்தி வெளியிட்டுள்ளது.


படம் 50 நாட்களுக்கு மேல் தென்னிந்தியாவில் ஓடினால் 430 கோடி ரூபாய் ஏவிஎம் நிறுவனத்துக்குக் கிடைக்கும்.


முதல் முறையாக தென்னாப்பிரிக்கா,அர்சென்டினா நாடுகளின் வழக்கு மொழிகளில் டப்பிங் செய்யப்பட்டுள்ளது.


இப்படத்தில் இடம் பெற்றுள்ள வாஜி..வாஜி சிவாஜி பாடல் ஹைதராபாத்தில் ராமோஜி ராவ் படப்பிடிப்பு நிலயத்தில் 2.75 கோடி ரூபாய் செலவில் படமாக்கப்பட்டுள்ளது.



Nila : If given an opportunity, whom would you like to interview and why?

Madhavan : It would be Mel Gibson. I have always wondered how he has been the most good looking man for years and married to the only lady for 20 long years, without any gossips, when living in a place like Hollywood.

இப்படி சொல்லியிருக்கிறது நடிகர் மாதவன்.

Tuesday, April 24, 2007

என்ன படிக்கலாம்....?

Hai friends,
நம்மூருல இந்த மாதிரி படிப்பெல்லாம் உண்டா?னு கேட்டா
இந்த மாதிரி படிப்பெல்லம் தேவையா? னு தான் கேப்போம்.
ஆனா இது தான் படிப்போம்னு நம்ம பக்கத்து நாட்டுல
ஐய்யோ...பேர் சொன்னாலே என் வீட்டு மேலே கரெக்ட்டா
ஒரு மிசைய்யில் வந்து விழும்.இது எனக்கு இப்போ
மெயிலில் வந்தது.
Careers in Pakistan


If we were in Pakistan , our options for
professional courses after Std. XII
would be as follows :
JEE - Jehadic Entrance Examination
IIT - Islamic Institute of Terrorism
IIM - Institute of Infiltration Management
CAT - Career in Alqaida & Taliban
IAS - Iraq after Saddam
M Tech - Masters in Terror Technology
GATE - General Aptitude in Terror and Extremism
TOEFL - Test of Extremist Foreign Languages
GRE - Graduate in Relocation Extremism
MBBS - Master of Bomb Blasting Strategies
MBA - Master of Bombing Administration
நபர் : ஜோசியரே, நம்ம ஜாதகத்துல ஏதும் தோஷம் இருக்கா பாருங்க.
ஜோசியர் : தம்பி, உனக்கு ஒரு தோஷம் இருக்குப்பா.
கல்யாணம் பண்ணா தோஷம் போயிடும்
நபர் : என்ன தோஷம்?
ஜோசியர் : சந்தோஷம்

Monday, April 23, 2007

PROMOTION வேனுமா?

Hai friends,
நீங்கள்லாம் பாவம், விழுந்து விழுந்து என்னாதான்
கஷ்டப் பட்டு ரொம்ம்ம்ப க்ரெக்டா நீட்டா ஆணி
புடிங்கினாலும், ம்ம்ம் அதெல்லாம் உங்க ஜாதக ராசி
உங்களுக்கெல்லாம் ப்ரமோஷன் கிடைகாது.வெறும் மோ...
தான் கிடைக்கும். பக்கத்துல ஒரு பஞ்சாப்போ இல்லை
ஒரு கேரளாவோ இல்லை ஏதோ ஒரு ஜொல்லு இருக்கும்
அதுக்கு உடனே குடுப்பானுங்க...ஜொள்லனுங்க...
அதுக்கு தான் நான் இங்கே ஒரு நல்ல ஐடியா குடுத்து
இருக்கேன். நண்பர்களே, அதை அப்படியே கரெக்டா பாலோ
பண்ணீங்கன்னா உங்களுக்கும் கண்டிப்பா ப்ரமோஷன் உண்டு
உண்டு...உண்டு...உண்டு....ஹி..ஹி..ஹி..ஹி..


People who do lots of work...
make lots of mistakes
People who do less work...
make less mistakes
People who do no work...
make no mistakes
People who make no mistakes...
gets promoted
That's why I spend most of my time
sending e-mails & do blogging at work
so,
.
.
.
.






ப்ரொபஸர் : உலகம் ஒரு நாடக மேடை;
அதில் நாமெல்லாம் நடிகர்கள்...
மாணவன் : சார், அப்படினா..எனக்கு.. எனக்கு..
ப்ரொபஸர் : ம்..சொல்லுப்பா ஏன் தயங்கறே?
மாணவன் : எனக்கு நமீதாவ ஹீரோயினாப் போடுங்க சார்

Friday, April 20, 2007

CHOOO CUTE.!!!!!!!

Hai friends,


Success lies not in the result but in the effort...
"Being" the Best is not at al important,
"Doing" the Best is all that matters....



A BIT OF EGO WE MAY HAVE ..





AND A LOT OF FIGHTS TOO ...





BUT WE WILL BE TOGETHER........

I knocked at heavens door today. God asked:
"What can I do for you?"
I said: "Please love, protect & bless
the one who's reading this "
He smiled & replied:
" I already did!" Have A Nice Day Ahead!!

HAVE A NICE WEEKEND...
ஃப்ளாஷ் நியூஸ் : பிரபல அமெரிக்க டான்ஸர் திடீரென
நெஞ்சுவலி ஏற்பட்டு இறந்து விட்டார். அவரது
குடும்பத்தாரிடம், நெஞ்சுவலி ஏற்பட்டபோது அவர் என்ன செய்துகொண்டிருந்தார் எனக் கேட்டபோது அவர்கள்
சொன்ன பதில் இது :
"கடைசியாக வீராசாமி பட சிடியைப் போட்டு
விஜய டி.ஆர். ஆடிய ஆட்டத்தைப் பார்த்துக்கொண்டிருந்தார்".

Wednesday, April 18, 2007

புரிந்து கொள்ளுங்களேன் நண்பர்களே....

நண்பர்களே,

நாம் எப்போதும் ஒரு சில விஷயங்களை ஏன் தவறான
கண்ணோட்டத்துடன் பார்க்க வேண்டும்?.

நான் என்னுடைய முன் பதிவில் ஒரு நல்ல நாளைப் பத்தி
நான் அறிந்த சில விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து
கொள்ள தான் விரும்பினேன், அல்லாது நான் உங்களை
தங்கமோ வைரமோ தான் வாங்க வேண்டும் என்றோ
விலை உயர்ந்த ஆபரணங்களை வாங்கத்தான் வேண்டும்
எந்த இடத்திலயாவது சொல்லியிருக்கேனா?

என்னுடைய சிறு வயதில் இது போல நாட்கள் ஒன்றும்
கொண்டாடியதை போல் நினைவில்லையே..!!! ஆனால்
இப்போது MOTHERS DAY, FATHERS DAY, INTERNATIONAL
WOMENS DAY FRIENDSHIP DAY...ETC ஏன் இது போல பல
திணங்கள் கொண்டாடப் படுகிறது என்றால் சொல்லத்
தெரியாது எனக்கு. இது எங்கு எப்போது எப்படி இத்தனை
ஆர்பாட்டத்தோடு ஆரம்பித்தது? அதுவும் எனக்கு தெரியாது.

அது போலத் தான் இந்த அட்சயத் த்ரிதியை நாளும்.
சமீப காலமாத் தான் இத்தனை ஆர்பாட்டங்களும்.
எங்கள் வீட்டில் நாங்கள் இந்த நாளில் எப்போதும்
ஏதாவது ஒரு நல்ல விஷயங்களுக்கு தான் ஆரம்பிப்போம்.
அந்த ஒரு நல்ல நோக்கோடு தான் நான் இந்த நாளைப்
பத்தி எழுதினேன். மக்கள் இந்த நாளில் என்ன வாங்க
வேணும் என்றோ அல்லது இதை தான் வாங்க வேண்டும்
என்றோ நான் சொல்லவே யில்லை. மேலும் நான்
இந்த நாளில் செய்யும் எந்த நல்ல காரியமும் பல நல்ல
நன்மைகளைத் தான் தரும் என்று தானே சொன்னேன்.

நான் எந்த தவறான மூட நம்பிக்கையும் நான் இதன்
மூலமாக சொல்லவேயில்லை. இப்போது எல்லாவற்றிக்கும்
கொண்டாட ஒரு நாள் தேவை படுகிறது. அது போலத்
தான் இந்த நாளும்.உங்களுக்கு எப்படி விருப்பமோ
அப்படி நீங்கள் கொண்டாடலாமே.. அதில் எந்த தவறும்
இல்லையே...

கொண்டாட ஒரு நாள்...அதை கொண்டாடுவது உங்கள்
விருப்பமே அன்றி அதில் எந்த ஒரு கட்டுப் பாடோ
அல்லது இப்படி தான் என்ற எந்த ஒரு கட்டாயமோ
இல்லவே இல்லை.

மேலும் நான் என் வீட்டில் இந்த நாளில் ஒரு ரூபாய்
கூட தங்கத்திலோ அல்லது விலையுயர்ந்த பொருளுக்கோ
செலவு செய்வதும் இல்லை.

Tuesday, April 17, 2007

ஏன்..எதற்கு..?

Hai friends,

நம்மள்ல பல பேருக்கு சில விஷயங்கள் அவ்வளவு
கரெக்டா தெரியாது. அதுல ஒன்னு இந்த "அட்சய த்ரிதியை"
சமீப காலமாவே இந்த நாள் ரொம்ப அமர்க்களமாக
கொண்டாடப் படுகிறது. ஆனா இதுக்கு பின்னனியில்
உள்ள காரணம் மிக மிக சுவாரஸ்யமானது.

புரான காலத்துல ஒரு நாள் கோபத்துக்கு பேர் போன
ஒரு முனிவர் அதாங்க தூர்வாசர் த்ன்னோட சீடர்களுடன்
பஞ்ச பாண்டவர்கள் தங்கியிருந்த காட்டு வழியா வரும்
போது அவர்களை பாக்க நினைத்து ஒரு ஆள் மூலமாக
திரெளபதியிடம் தனக்கும் தன் சீடர்களுக்கும் உணவு
தயாரித்து வைக்க சொன்னார். ஆனால் அந்த நேரத்தில்
திரெளபதி பாண்டவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறி
விட்டு அந்த அட்சய பாத்திரத்தை கழுவி வைத்திருந்தாள்.
ஒரு முறை கழுவி விட்டால் மறு நாள் தான் அந்த
பாத்திரத்தில் உணவு திரும்பக் கிடைக்கும். இப்போதும்
அது தான்(கழுவி வைத்து விட்டாள்) நடந்தது. இந்த
சமயத்தில் தான் முனிவரிடம் இருந்து சேதி வந்தது.
முனிவரின் கோவம் தான் மிகப் பிரசித்தமாயிற்றே.
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த திரெளபதிக்கு
தீர்வு ஏதும் கிடைக்காத பட்சத்தில் திரெளபதி பகவான்
கிருஷ்ணனை வேண்டினாள்..

உடனே அங்கே வந்த கிருஷ்ண பரமாத்மா திரெளபதி
கழுவி வைத்திருந்த அந்த பாத்திரத்தில் ஓரத்தில்
ஒட்டியிருந்த ஒரு பருக்கையை எடுத்து சாப்பிட்டார்.
உடனே முனிவருக்கும் அவரது சீடர்களுக்கும் வயிறு
நிரம்பி விட்டது. (இது தான் எங்க எல்லாருக்கும்
தெரியுமே னு தானே சொல்றீங்க)
ஆனா உங்களுக்கு தெரியுமா இது எப்போனு?
அதாவது இந்த நிகழ்ச்சி நடந்தது இது போல ஒரு அட்சய
த்ரிதியை தினத்தில் தான்.அதனால் தான் அந்த பாத்திரத்
திற்கே அந்த பெயர் அட்சயப் பாத்திரம் என்று பெயர்
வந்ததாம்.

மேலும் இந்த நாளில் தான் விஷ்ணுவின் ஆறாவது அவதார
மான பரசுராமர் பிறந்தார் என்றும் கூறப் படுகிறது.மேலும்
செல்வத்திற்கு அதிபதியான லக்ஷ்மிதேவியே கூட இந்த
நாளை தேர்ந்தெடுத்து "குபேரனை" வழிபட்டு குபேர
சம்பத்து பெற்றாள் என்னும் கூறப் படுகிறது.

சரி, இதை ஏன் கொண்டாடுகிறோம்?

இந்த திதியில் தான் "திரேதா யுகம்" தோன்றியது என்று இதிகாசங்களும் கூறுகின்றன.இந்த அட்சய த்ரிதியை
திதியில் தொடங்கும் ஒரு யுகம் கோடிக் கணக்கான
ஆண்டுகள் நீடிக்கிறதோ அதுபோலவே இந்த நாளில்
தொடங்கப் படும் எந்த நற்காரியங்களும் யுகம் யுகமா
நீடிக்கும் என்பது ஐதீகம்.


எதையும் வாங்குவது என்ற விஷயத்தில் மட்டும் அல்ல
நம் மனசு சந்தோஷப் படும்படியான எந்த ஒரு நல்ல
காரியங்களையுமே நாம் செய்யலாம்.இதனால் நற்பலன்
தான் கிட்டும்.

இந்த நாளை எப்படி கண்டு பிடிப்பது?

தமிழில் வரும் சித்திரை மாதத்தில் வரும் அமாவசைக்கு
அப்பறம் வரும் த்ரிதியை திதியை தான் இந்த அட்சய
த்ரிதியை நாளாக் கொண்டாடப் படுகிறது.

நண்பர்களே நீங்கள் செய்ய விரும்பும் எந்த ஒரு நல்ல
காரியமானாலும் இந்த நாளில் செய்து பல மடங்கு
நற்பலன்களை பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

Monday, April 16, 2007

AGAIN MONDAY....


அழகே அழகு......

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

நம்ம டாக்டர் அக்கா அவங்க அழகா சொல்லிட்டு
என்ன இதுல இழுத்துட்டாங்க... ம்ம்...சரி இப்போ
என்னோட் அழகு..நான் ரசிச்ச அழகை சில போட்டோ
வழியா சொல்லிக்கறேன்....


மொதல்ல வெள்ளை மழை... இந்த பனி ரொம்ம்ப அழகு.





அப்பறம்.. காட்டுல வாழற இந்த கலர் கலரான பறவை அழகு




இயற்கையா பூத்து குலுங்கற இந்த பூக்கள் அழகு.
கலர் கலரான பூக்கள்...


மொட்டுலருந்து இதழ் இதழா பூக்கும் இந்த ரோஜா அழகு...




இன்னும் பாக்க விரும்புற (முடியாத) இந்த மாளிகை.....
அழகான தண்ணிக்கு நடுவில இருக்கர மாளிகை.




ராத்திரியில தூக்கம் வராம இருக்கும் போது நான் ரொம்ப
ரசிச்சு பாக்கற (தூக்கத்தை தொலைச்சிட்டு) இந்த வானரங்க
ளோட லூட்டியும் ரொம்பவே அழகு...





என்ன ஸ்டையிலா போஸ் குடுக்கறான் பாருங்க.....







ஆஹா...இப்போ நான் வம்புக்கு இழுக்கப் போற 4 பேரு..
1. பஞ்சாப் ஸ்பெஷல் அம்பி.
2. அரட்டை ராணி G3.
3. நாட்டாமை ல்லாம் சீசீசீ..ஷ்யாம்...
4.வான் மழை செந்தில்.
தொடரட்டும் உங்கள் பணி.....

Friday, April 13, 2007

BCCI - New Rules for team India! (Visual Joke)

Hai friends,

as usual there is a joke from funtoosh:


As we know according to the new agenda from now BCCI is going
to give salary to players according to the player's performance





OMG.. These people show this all the time and keep insulting us..




Brother, you are not going to get your salary for this match!





Hey buddy, for gods sake please try and take this catch or else
our salary is gone..











Friends, I am going to resign from this captaincy post...

Even if I lose the toss they are frightening me that they

won't give me my salary...


Now BCCI says a player cannot endorse more than 3 sponsors/

products.... What the hell is our future?

Wednesday, April 11, 2007

CRIME-- 4.

Haai friends,

உங்களை ரொம்பக் கொழப்பிட்டேனா? சரி சரி இப்போ
கதயை சரியா முடிச்சுடறேன்.

ப்ரியாவோட அண்ணன் ரஞ்சித். இன்னொரு அண்ணன்
கிருஷ்ன குமார். (he is illegal) இவனை சொந்தம்ன்னு சொல்ல
முடியாத சூழ்நிலை. அதனால ரஞ்சித் கொலை செய்யப்
பட்ட உடனே எல்லாருக்கும் இவன் மீது சந்தேகம் வருது.
ஆனா இவனுக்கும் கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கொலைகாரன் புத்திசாலியா இவனை மாட்டி விட்டுட்டான்.
ஏன்னா அவனோட தங்கச்சியை ரஞ்சித் நாசம் பண்ணிணதால
அதுக்கு பழி வாங்கவே இந்த கொலை.

ரஞ்சித்துக்கு ஊருல ரொம்ப நல்ல பேரு. எல்லாருக்கும்
நிறைய்ய நல்லது செய்வான். அதனால யாருக்கும் அவனை
பிடிக்கும். ஆனா அவனோட ஒரு மறுபக்கம் தெரிஞ்சவங்க
அவன் அப்பாவும் இந்த கிருஷ்ண குமாரும் தான். அதனால
எல்லாருக்கும் எங்கே கி.குமார் எல்லா சொத்துக்கும் அதிபதி
ஆயிடுவானோ னு ஒரு பயம். அதனால அவனை சம்பந்தப்
படுத்திவிட்டன்ர்.


ரஞ்சித்க்கு நிறைய்ய பெண் சகவாசம் உண்டு. அதற்கு சாட்சி
நீனா ன்ற ஒரு பெண். அவள் தான் ரஞ்சித்துக்கு எப்பவும்
பெண்கள் சப்ளை செய்வது. ஒரு முறை இவனிடம் காசு
வாங்க வந்தவனுடைய தங்கை அவனிடம் அறிமுகப்
படுத்தப் பட்டாள். அதிலிருந்து ரஞ்சித் அவளை அடிக்கடி
தொந்திரவு செய்து கொண்டிருந்தான். ஒரு நாள் அவன்
அவளை வரவைத்து நாசமும் செய்து விட்டதால் அவ்ளுடைய
அண்ணன் இந்த கொலைக்கு ப்ளான் செய்தான். த்ன்னோட ஒரு
நண்பனை மிலிட்டரியிலிருந்து அழைத்து இதற்கு ப்ளான்
போட்டனர். அவன் தான் முதல் சீனில் பின்தொடர்ந்து
வந்தது. பின் அவர்கள் கி.குமாரை இதில் மாட்டி விட்டனர்.


ஆனால் இது விவேக்குக்கும் பிர்யாவோட அப்பாவுக்கும்
தெரியும். (அதாவது மாட்டி விட்டது) அதனால் விவேக்
இந்த கேஸ திரும்பி ஓப்பன் பண்ணி விசாரிக்க
ஆரம்பிச்சான். காசு வாங்க வந்த பையனை மிரட்டிக்
கேட்டதில் அவன் எல்லா உண்மையும் சொல்லிட்டான்
தன் தங்கையை ரஞ்சித் நாசம் பண்ணதால் தான் இந்த
கொலை ஏற்பாடு. ஆனால் நடந்தது வேறு. அதாவது,
மிலிட்டரியில் உள்ள தன் நண்பனை அழைத்து அவன்
மூலம் கொலை செய்ய ஏற்பாடு. அவன் பேரு நந்தகுமார்,
கேப்டன். அவன் டெல்லியில் இருந்தான். ஒரு நாள் டெல்லியில்
இருந்து அவன் கிளம்பி ரயிலில் வரும் போது அங்கங்கே
நிற்கும் ஸ்டேஷனிலிருந்து அந்த நீனா( பெண் சப்ளையர்)
அவளை போனில் பிடித்து சாமர்த்தியமாக பேசி அவளின்
துனையோடு ரஞ்சித்தை கொலை செய்ய ப்ளான். ஆனால்
அவள் அதற்கு சரியாக ஒத்துழைப்பு கொடுக்காததால்
முதலில் அவளை முடித்துவிட்டு பின் ரஞ்சிதிடம் வந்தனர்.
ஆனால் அவர்கள் அங்கே கண்டதோ ரஞ்சித் ஏற்கெனவே
கொலை செய்யப் பட்டிருந்தார். மிகவும் பயந்து போனார்கள்
பின் அவனுடைய உடலை இழுத்துக் கொண்டு போய்
வீட்டின் முன்னாடி புதைத்து விட்டு மறுபடியும் வந்து
பக்கத்திலயே அவளையும் எரித்து விட்டனர். இதை விவேக்
மிக சாமர்த்தியமா கண்டு பிடித்தான். பின் கேப்டனை விசா
ரிக்கும் போது தான் தெரிந்தது ரஞ்சித்தின் கையில் ஒரு சிவப்பு
கயிறு இருந்தது என்றும் அது தாங்களிடம் பத்திரமாக
உள்ளது என்றும் என்றாவது தாங்கள் மாட்டினால் அதை
கோர்ட்டில் கொடுக்கலாம் என்றும் சொன்னார்கள்.
தங்களையும் தங்கள் தங்கையையும் இதிலிருந்து விடு
வித்தால் தாங்கள் அந்த கயிற்றை கொடுக்க சம்மதித்தனர்.

இந்த கேஸில் விவேக்கால் கொலைகாரனை கண்டு பிடிக்க
முடியாததால்,கோர்ட் விவேக் கி.குமாரைக் காப்பாற்றத்
தான் ஏதோ செய்கிறான் என்று விவேக்கை சஸ்பெண்ட்
செய்து அவனை வேலையிலிருந்து நீக்கினர்.
இதனால் போலிசாரிடமிருந்து கிருஷ்ணகுமாரை மட்டும்
விடுவித்த விவேக், தன் வேலயை இழந்தான். பதிலாக
ப்ரியாவை இழ்ந்தான். அப்போது ப்ரியாவின் அப்பா இவனை
பார்த்து கேட்டார். இவன் தனக்கு எல்லம் தெரியும் என்றான்.
அதாவது ஒருநாள் ரஞ்சித்தும் அவன் அப்பாவும் பேசிக்கொண்டு
இருக்கும் போது தன்னைப் பற்றி அப்பாவிற்கு எல்லாம்
தெரிந்துவிட்டதாலும் தனக்கு பதிலாக அவர் கிருஷ்ணகுமாரை
சொத்துக்கு வாரிசாக்கப் போவதாக சொல்லிக் கொண்டு
இருக்கும் போது தான் வாக்கு வாதம் முற்றிப் போயி அப்பா
கை பட்டு தவறுதலாக ரஞ்சித் கீழே விழுந்து இறந்து போனான்.
அப்போது கூடவே கி.குமாரும் இருந்ததால் அங்கிருந்து
அவ்ன தான் அப்பாவை அங்கிருந்து போகச் சொல்லி எல்லா
வற்றையும் மாற்றி விட்டு போயிவிட்டான். அப்போது தான்
இந்த கொலை காரர்கள் வந்தனர். பாத்துவிட்டு யாரோ செய்த
கொலைக்கு தாங்கள் பொறுப்பாகி போனதால் அவன் உடலை
அடக்கம் செய்ய வேண்டியதாகிப் போனது. ப்ரியாவின் அப்பாவைக்
காப்பாற்ற வேண்டியதால் விவேக் தன் வேலை,ப்ரியா எல்லா
வற்றையும் இழந்தான்.

ஆனால் இது எல்லாம் தெரிந்து கிஷோர் விவேக்கிடம்
மன்னிப்பு கேட்டு விட்டு ப்ரியாவயும் அவனிடமே
கொடுத்து விட்டான்.


இது ஒரு படத்தோட கதை,FINGER PRINT. இத நான் சீன் பை
சீன் எழுதனும்னு நினைச்சேன், அனா இதுக்கே எல்லாரும்
கொழம்பினதால் சுருக்கமா சொல்லிட்டேன். படம் பாக்க
ரொம்ப த்ரில்லிங்கா இருக்கும். ஒவ்வொரு சீனும் என்னன்னு
புரியாமயே இருக்கும். ஆனா கடைசியில தான் தெரியும்
அது கொலை யில்ல தற்செயலா நடந்ததுன்னு. ஆனா இதை
கண்டு பிடிச்ச விதம் தான் சூப்பர். but any how its a gud different
thrilling movie for those who like crime.

sari ippavaavathu puriyuthaa illai ...? puriylainnaa naan onnum panna
mudiyaathu. so neengalee intha padaththooda cd vaangi paarunga.
ithu Malayalam film. FINGER PRINT.

actor VIVEK--JAYARAM. KISHORE--INDRAJITH (brother of
Prithviraaj, mozi) PRIYA--GOPIKAA. APPA --NEDUMUDI VENU.

Monday, April 09, 2007

CRIME-- 3.

Hai friends,


CRIME...3

இறந்தது பொண்ணா? அப்படின்னா ரஞ்சித் என்னவானார்?
அவரோட உடல் எங்கே?

ரெண்டு பேருக்கும் பயங்கர அதிர்ச்சி. அதோட கூட அந்த
பெண்ணுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? திரும்ப
அவங்க முதல்ல இருந்து ஆரம்பிச்சாங்க.அப்போ அந்த
கிருஷ்ண குமார் கிட்ட இருந்து ஆரம்பமானது விசாரனை.
இப்போ கிருஷ்ண குமாரப் பத்தி ஒரு குறிப்பு. ப்ரியாவோட
அப்பாவுக்கு பிறந்தவன் தான் இந்த கி.குமார். (illegal child)
அதனால யாருக்கும் அவனைப் பிடிக்காது. ஆனால் அவருக்கு
மட்டும் கொஞ்சம் பாசம் உண்டு. அதுவும் ரஞ்சித்துக்கு துளி
கூட பிடிக்காது. இது அங்க உள்ள எல்லாருக்கும் தெரியும்.
ஆக முதல் விசாரனை அவன் கிட்ட இருந்து ஆரம்பம். ஆனா
அவனுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கிஷோரோட அப்பாவுக்கு இதுல கொஞ்சம் சந்தேகம் இருந்தது.
ஏன்னா ரஞ்சித்துக்கு அப்பறமா தன் மகன் தான் ஏகபோக
அதிபதி. ஒருவேள அதுக்கு போட்டியா கி.குமார் வந்துடு
வானோனு பயந்தாரு.


மறுபடியும் கொலை நடந்த அந்த வீட்டுக்கு போயி பாத்தாங்க.
ஏதாவது தடயம் கிடைக்குதானு. சுத்தி சுத்தி பாத்ததுல ஒரு
இடத்துல மண் கலைக்கப் பட்டிருந்தது. அங்க தோண்டி
பாத்ததில் ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு சட்டை ரத்தக்கறை
யோட இருந்தது. உடனே அதை எடுத்து லேபிற்கு அனுப்பி
விட்டு வீட்டுக்கு வந்து ப்ரியா கிட்ட சில கேள்விகள் கேட்டனர்

"ரஞ்சித்துக்கு யாராவது பெண் நண்பர்கள் உண்டா?"

எனக்கு அவ்வளவா தெரியாது. -- ப்ரியா. பின் மீண்டும்
அந்த பையனிடமே (காசு வாங்கவந்தவன்) ஆரம்பித்தனர்.
கிஷோர் மீண்டும் கி.குமாரிடம் விசாரனையை ஆரம்பித்தான்.
அப்போது ரஞ்சிதுக்கு சில பென் நண்பர்கள் உண்டு என்றான்.
அதில் அவன் காசு வாங்க வந்தவனுடைய தங்கையை
கேட்டால் தெரியும் என்றான். இதற்கு நடுவில் லேபிலிருந்து
வந்த ரிசல்ட் ரஞ்சித் ஒரு தடிமனான பொருளால் தான் தாக்கி
இருக்க வேண்டும் என்றும், மேலும் அந்த சட்டையில் O+ ரத்தம்
கூட ரஞ்சித்தோட ரத்தமும் இருக்கு என்றனர். கி.குமாரின்
ரத்தம் O+. உடனே அவனை தேடி போனார்கள். அந்த சட்டையும்
கி.குமாருடையது தான் என்றும் கண்டுபிடித்தனர்.(அதாவது
டெயிலர் மார்க் வைத்து) அவனுடைய வீட்டில் அவன் வெளியூர்
செல்ல தயாராகி கொண்டிருந்தான்.கஷ்டப் பட்டு அவனை
பிடிக்க போனப் போது அவன் தப்பி விட்டான். இதனாலயே
கிஷோருக்கு அவன் மேல சந்தேகம் வந்து விட்டது. கொலை
காரன் அவன் தான் என முடிவே செய்து விட்டான்.


ப்ரியாவின் அபாவுக்கு அவன் மேலே எந்த சந்தேகமும்
இல்லை. ஆனால் அவனும் தன்னை விட்டு போயிடுவானோ
என்ற பயம் வந்து விட்டது. விவேக்கை கூப்பிட்டு அவனை
எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

"கிஷோர், நீ எதற்காக அவ்னை கைது செய்ய வேண்டும்?"

"விவேக், நீ எதற்காக அவனைக் காப்பாற்ற வேண்டும்?"

அவன் மீது எந்த தவறும் இருப்பதாக சொல்ல முடியாது.
எப்படி, சட்டை அவனுடையது, ரத்தமும் அவனுடையது,அது
தெரிந்ததும் அவன் ஏன் தப்பி ஓட வேண்டும்? இல்லை
என்றால் தைரியமாக வந்து நிரூபிக்க வேண்டியது தானே?

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அவனை
எப்படியாவது கைது செய்வேன்,பார். அப்படியானால் , நான்
அவனை எப்படியாவது காப்பாற்றுவேன், பார். கி.குமார்
தப்பித்து நேராக இவர்களுடைய மாமா வீட்டுக்கு சென்றான்.
அவர் அவன் தப்பிக்க பல வழிகளில் முயற்ச்சி செய்து
கிஷோரிடம் கொஞ்சம் பணம் கேட்டு வாங்கி கொண்டு
நேராக தன் வீட்டுக்கு வந்தார். கி.குமாரிட்ம் அந்த பணத்தைக்
கொடுத்து அங்கிருந்து தப்பித்து போகுமாறு சொல்லிக்
கொண்டிருக்கும் போதே கிஷோர் வேகமாக வந்து அவனை
பிடித்து போனான். இப்போது இருவரும் தனித் தனியாக
விசாரனையை ஆரம்பித்தனர்.

விவேக், அந்த லேபிற்கு சென்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து
பின் அந்த வீட்டுக்கு சென்ற போது சுவற்றில் ஒரு ரத்தக்
கறை மட்டும் வித்தியாசமாக கண்டான். அதாவது துப்பாகியால்
சுட்டால் ரத்தம் எப்படி சிதறுமோ அப்படி ஒரு கறை. மேலும்
வட்டமாக ஏதோ ஒரு பொருளால் தாக்கியதை போல் ஒரு
அடையாளமும். விவேக் இப்போது முதலில் பணம் வாங்க்
வந்த அந்த பையனை விசாரித்தான் பலமாக. அதில் தான்
பல பயங்கர அதிற்சியான தகவல்கள் கிடைத்தது. அதாவது
இறந்து போன ரஞ்சித்துக்கு நிறைய்ய பொண்களோடு
பழக்கம் உண்டென்றும் அதில் ஒருத்தி தான் தன் தங்கையின்
தோழி என்றும் சொன்னான். அவளை கேட்டால் பல தகவல்கள்
கிடைக்கலாம் என்றான். அவளைத் தேடி போனால் அவள்
ஊரில் இல்லை என்றும் வீட்டிற்கு வந்து 15 நாட்களாகி விட்டது
என்றும் பதில் கிடைத்தது. ஆனால் இறந்தது அவள் தான் என்று
அவனுக்கு ஏன் யாருக்குமே தெரியாது.அவள் பெயர் நீனா.

ஃப்ரெண்ட்ஸ், ரொம்பக் கொழப்பமா இருக்கா? இந்தக் கதையில
மொத்தமே சில கேரக்டர்ஸ் தான். ஹீரோயின்-- ப்ரியா.
ஹீரோஸ்-- விவேக்,கிஷோர். அண்ணன்-ரஞ்சித் (இறந்தவன்)
இன்னொரு அண்ணன் கிருஷ்ண குமார்.(Illegal) காசு வாங்க
வந்த பையன் அப்பறம் கொலைகாரன்.

சிம்பிள்....அவ்வளவுதான்.

Friday, April 06, 2007

CRIME-- 2.

Hai friends,

இப்போ க்ரைம்--2.


அவங்க வீட்டுக்குவந்தப்பறம் தான் தெரிஞ்சது முதல் நாள்
ராத்திரி ரஞ்சித் இறந்துபோன(கொலை செய்யப் பட்ட)
விஷயம். மறு நாள் காலையில் கிஷோரும் விவேக்கும்
தங்கள் வீட்டுக்கு வந்த உடனே தான் இந்த விஷயம்
தெரிந்தது. அப்போது கிருஷ்ண குமார் னு ஒருவன் அந்த
வீட்டு பெரியவரை(ப்ரியாவின் அப்பா) பார்க்க வேண்டும்
என்று சொன்னான். கிஷோரின் அப்பா அவர் யாரயும்
பார்க்க விரும்பவில்லை என்று சொன்னார். அவன் சிறிது
நேரம் அங்கேயே நின்று கொண்டுருந்தான். அப்போ
விவேக் அவனைப் பாத்து "இப்போது நீ போ, இன்னொரு
சமயம் வா, " என்று அனுப்பினான்.

கிஷோரின் அப்பா இவர்களிடம் ரஞ்சித் கொலை செய்யப்
பட்டது பற்றி பேசிக் கொண்டுருந்தார். பின் தன் மகனிடம்
"கிஷோர், நீ எப்படியாவது இந்த கொலை செய்தவனை
கண்டு பிடிக்கவேண்டும்.அப்ப தான் ப்ரியாவை நீ
கல்யாணம் பண்ணிக்க முடியும். இந்த ஆஸ்தி முழுவதும்
நமக்கு கிடைக்கும் ."

"அப்பா, நான் என்னால ஆன வரைக்கும் முயற்சி செய்யறேன்"

"அது மட்டும் இல்லை, ப்ரியா ஏற்கெனவே விவேக்கோடு
பழகிட்டு இருக்கா, அவனும் உனக்கு இப்போ போட்டியா
மாறிட்டு இருக்கான். இது ஞாபகம் இருக்கட்டும்."

ரெண்டு பேரும் ஆபீசில் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன்
டீமில் இந்த கொலையை பற்றி விசாரிக்க சார்ஜ் எடுக்கி
றார்கள். முதலில் கொலை நடந்த அந்த இடத்துக்கு
வருகிறார்கள்.ஒவ்வொன்றாக ஆராய்கிறார்கள். அதாவது
யாரோ ஒருவன் ரஞ்சித்தை தலயின் பின்புறத்தில்
அடித்து கொன்றிருக்கிறான். தரையில் ரத்தம் நிறைய்ய
தேங்கி இருந்தது. போன் கீழே தொங்கி கொண்டு இருந்தது.
அவரது கையிலிருந்து அந்த குப்பி சற்று தொலைவில்
விழுந்து கிடந்தது .உடலை இழுத்து சென்றதால் தரையில்
ரத்தக் கோடும் இருந்தது.

கொலை செய்த பின்பு உடலை இழுத்துக் கொண்டு போயி
வீட்டின் முன்பாக வைத்து எரித்தும் விட்டார்கள். ஆனால்
கொலை நடந்த இடத்தில் ஒரு சிறிய குப்பியில் ஒரு
பொருள் மட்டும் விழுந்து இருந்தது.அதை எடுத்து கொண்டனர்.
பின் வீட்டு வாசலுக்கு வந்து எரிந்து கிடந்த இடத்திருந்து ஒரு
சில எலும்புகளை எடுத்து லேபுக்கு டெஸ்டிங்குக்கு அனுபினர்.
பின் வீட்டு காவல்காரனை விசாரித்தனர். அவன் நேற்று
ரெண்டு பேர் ரஞ்சித்த பாக்க வந்ததாகவும், போகும் போது
கண்களில் கண்ணீரோடு போனதாகவும் கூறினான்.கிஷோரும்
விவேக்கும் ஒன்றாகவே விசாரனையை ஆரம்பித்தார்கள்.
ப்ரியாவும் விவேக்கும் தோட்டத்தில பேசிகிட்டு இருக்காங்க.

"ப்ரியா, நீ நினைக்கிறாப் போல நான் ஒன்னும் பெரிய்ய
போலீசுகாரனா வர முடியாது. ஏன்னா எனக்கு அந்த அளவுக்கு
சாமர்த்தியம்லாம் இல்லை. இதுக்கு கிஷோர் தான்சரி.பேசாம
நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கோ."

"எனக்கு தெரியும் உன் திறமயப் பத்தி. உன்னால நிச்சயம்
முடியும். தைரியமா இரு. கண்டு பிடி. அப்பறமா என் அப்பாவ
நான் சமாளிச்சுக்கறேன்."

அந்த நேரத்தில அங்க கிஷோரும் வந்து பேசிட்டு பின்
ரெண்டு பேரும் போகின்றனர். மறு நாள் ரஞ்சித்தை பாக்க
வந்த அந்த பையனை விசாரிக்கின்றனர்.

"நீங்க எதுக்காக ரஞ்சித்த பாக்க வந்தீங்க?"

"சார், நான் என் தங்கை கல்யாண விஷயமா கொஞ்சம்
பணம் கடனாக கேக்க வந்தோம். சார் இங்க வந்து பாக்க
சொன்னார். அதனால தான் வந்தோம்."

"சரி சார் பனம் குடுத்தாரா?"

"இல்லை சார். அவர் கிட்ட இப்போ பணம் இல்லைனு
சொன்னார்."

"வாட்? இல்லைனு சொன்னாரா? அப்படி சொல்ல மாட்டாரே?"

"ஆனால் அப்படித்தான் சொன்னார். இதனால் நாங்க ரொம்ப
ஏமாந்து போயிட்டோம். ஏன்னா நாங்க ரொம்ப எதிர்பார்த்து
வந்தோம். இல்லைன்னதும் கண்கலங்கிட்டோம். "

சரி அப்பறம் என்னாச்சு?"

நாங்க போயிட்டோம் சார். ஆனா அதுக்குஅப்பறம் தான்
கொலை செய்யப் பட்டு இருக்கார்."

"நீங்க இருக்கும் போது ஏதாவது போன் வந்ததா?"

"ஆமாம் சார். யார் கிட்டயோ கோவமாகப் பேசினார்."

சரி நீங்க போகலாம். ரெண்டு பேரும் ஃபாரன்சிக் லேபுக்கு
போயி அந்த ரிசல்ட பார்த்தனர். அப்போ ஒரு பெரிய்ய
அதிர்ச்சி கிடைத்தது. அதாவது அந்த மண்டைஓடு ஒரு
பொண்ணுடையது என்றும் அதுவும் ஒரு சிறு வயது
பெண் என்றும் சொன்னார்கள். ரெண்டு பேருக்கும்
அதிர்ச்சி. இறந்தது பொண்ணா? அப்படின்னா ரஞ்சித்
என்னவானார்? அவரோட உடல் எங்கே?


நண்பர்களே, கதை எப்படி உள்ளது? பிடித்திருக்கிறதா?
மேலே தொடரலாமா? சொல்லுங்கள்.....

Wednesday, April 04, 2007

இது எப்படி இருக்கு..!!!!!

Hai friends,

இது ஒரு விஷுவல் ஜோக் funtoosh la இப்படி ஒரு ஜோக்
போட்டு இருக்காங்க!!!

Sleeping Positions When You Are Drunk..!!!!!!


After Two Beer...



After three glasses of Wine

after four pegs of votka...

After a few shared bottles of wine




After a few Margaritas....




After 2 bottles of Whiskey's




And after an evening of two beers,three wines,vodkas,
Margaritas,and that bottle of Whiskey shared with friends!!




இந்த வெயிலிக்கு உடம்பு ரொம்ம்ப சூடாகி இருக்கும்
இல்லையா? ஜாலியா மசிங்களோட போயி சும்மா
ஜில்லுனு ஒரு நாலு பாட்டில் பீரு அடிச்சா எப்படி
இருக்கும்? அது மட்டுமா? என்னமா தூக்கம் வரும்..
வெறும் பீர் அடிச்சாவா? என்னா சொல்றீங்க?னு
கத்தறது காதுல கேக்குது.o.k. o.k. o.k. relax....
இந்த funtoosh la தண்ணி அடிச்சா எப்படில்லாம்
தூங்கலாம்னு சொல்லியிருக்காங்க.அதனால நீங்க
எப்படி தூங்கலாம்னு இதப் பாத்துட்டு நீங்களே முடிவு
பண்ணீகோங்கப்பு....

CRIME-- 1.

Hai friends,

இங்க அடிக்கற வெயில்ல .ஸ்ஸ்ஸ்ஸ்....அப்பா நல்லா
ஜில்ல்ல்லுனு ஒரு நாலு கப் தர்பூஸ் ஜூஸு குடிச்சா
எப்படி இருக்கும்...ஆஹா அது மாதிரி இருந்தது நான்
எழுதின கதயை நீங்கள்லாம் படிச்சுட்டு புகழ்ந்தது.(ஆமா
மனசுக்குள்ள இதுல்ல்லாம் ஒரு கத...இத வேற நாம
படிக்கனும்.ஹும் சே இதல்லாம் ஒரு பொழைப்பா னு
சொல்ல்றது காதுல கேக்குது) என்ன பன்றது.. ஒரு டுபுக்கு
மாதிரியோ இல்ல நாட்டாம மாதிரியோ அம்பி மாதிரியோ
ம்ஹூம் தல கீழ நின்னு ஒரு MH கூட அடிச்சு பாத்துடேன்.
(அதாங்க,ஓசில கிடைச்சுது) வருவனாங்கறது. ஒருவேள
நான் நினைக்கிறேன் பக்கார்டி அடிச்சா தான் இப்படிலாம்
தோனுமோ? அட ராமா... இப்ப எதுக்குடா இந்த பில்டப்புனு
கேக்கறீங்களா? ஹி..ஹி..ஹி.. வேற ஒன்னுமில்ல.....
அடுத்து நான் எழுதப் போற ஒரு 'க்ரைம் கதை"க்கு தான்
இவ்வளவும்.O.K. ready... shot -1, take- 1.


அதாவது கதையோட நாயகி ப்ரியா. பெரிய்ய பணக்கார
வீட்டு பொண்னு. எக்கச் சக்க சக்கமா சொத்து.அவளுக்கு
ரெண்டு முறை பையன்கள். ரெண்டு பேருமே போலீஸ்
ட்ரெயினிங் முடிச்சுட்டு வெயிட்டிங் ஃபார் போஸ்டிங்.
கிஷோர், விவேக் ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு ரெடி.
இதுல ப்ரியாவுக்கு விவேக் மேலத்தான் காதல்.ஆனா
விவேக்கோட அம்மா வேற ஜாதிக்காரன் ஒருவனை
கல்யாணம் பண்ணிகிட்டதால கொஞ்சம் பிரச்சனை.
ஆனா ரெண்டு பேருக்கும் சின்ன வயசுல இருந்து ஆசை.
ஒரு நாள் ப்ரியா தன்னோட அண்ணன் கிட்ட போன்ல
அவசரமா வரச் சொல்றா.

"அண்ணா, நான் உன்னை உடனே பாக்கனும்."

"என்னம்மா விஷயம்? இப்ப நான் வர முடியாதே"

"அண்ணா, எனக்கு உன்னை விட்டா யார் இருக்கா?"

"சரி சொல்லு,என்ன விஷயம்? "

"எனக்கு கிஷோர கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்லை"

"ஏய் என்ன இது, இது ஏற்கெனவே முடிவானது தானே.
இப்ப வந்து சொன்னா? அப்பாவப் பத்தி உனக்குத் தான்
தெரியுமே. நான் என்ன பண்ணுவேன்?"

"அண்ணா, விவேக்கும் நானும் சின்ன வயசுலருந்து
இஷ்டப்பட்டுருக்கோம்.எனக்கு கிஷோர பிடிக்கலை.
நீ தான் எப்படியாவது இத தடுத்து நிறுத்தனும்."

"சரி கொஞ்சம் டைம் குடு, பேசிப் பாக்கறேன்."

அப்ப ரஞ்சித் தன்னோட ஒரு தனி பங்களாவுக்கு
போய்கொண்டு இருக்கும் போது தன்னை யாரோ
பின்தொடர்ந்து வருவது போல திரும்பி திரும்பி
பாத்துக் கொண்டே போகிறான். அப்போ ஒரு ஆள்
இவனை தொடர்ந்து கொண்டே தன்னோட பாக்கட்ல
இருந்து எதையோ எடுக்கிறான். அப்போ ஒரு சின்ன
பிளாஸ்டிக் பீஸ் துண்டு ஒன்னு கீழ விழுந்தது.உடனே
ரஞ்சித் அதப் பாத்து எடுத்து தன்னோட பாக்கட்ல
பத்திரப்படுத்திக் கொண்டான். அங்க அவனைப் பாக்க
ஒரு வயதானவர் தன்னோட மகனுடன் வந்திருந்தார்.
அப்ப ரஞ்சித் ஒரு செக் குடுத்து "இத வச்சிகோங்க,
இப்போ என்னால இவ்வளவு தான் முடியும்", சொல்லி
ஒரு செக் குடுக்கறான்."அய்யா, நீங்க நல்லா இருக்கனும்
நீடூழி வாழனும்"ட்டு போகிறார்கள். ரஞ்சித் அங்க எடுத்த
அந்த பீஸ ஒரு சின்ன பிளாஸ்டிக் டப்பவுல போட்டு
எடுத்துகிட்டு தன் வீட்டுக்கு போறான். அங்க தன்
தங்கைகிட்ட அத கான்பிச்சு ஏதோ சொல்லுறான்.
கொஞ்ச நேரம் ப்ரியாவோட திருமணத்தப் பத்தி பேசி
விட்டு திரும்பி கெஸ்ட் ஹவுஸுக்கு போறான்.

ப்ரியா விவேக்கு போன் பண்ணி ராத்திரி தன்னோட
அண்ணாகிட்ட பேசச் சொல்றா. அப்போ கிஷோருக்கு
கோல்டு மெடல் அவார்டு விழா நடந்துகிட்டு இருக்கு.
கிஷோரும் மெடல் வாங்கிட்டு விவேக்க பாக்க வரான்.
அப்போ விவேக் ப்ரியாவோட அண்ணனுக்கு போன்
பண்ணினா எங்கேஜ்டாவே இருக்கு.ரொம்ப நேரமா ட்ரை
பண்ணி பாக்கறான் திரும்ப திரும்ப எங்கேஜ்டா இருக்கு.
அப்ப தான் கிஷோரும் வரவே ரெண்டு பேரும் வீட்டுக்கு
கிளம்பத் தயாராகிறார்கள்.இவங்க ரெண்டு பேரும் நல்ல
நண்பர்கள்.ரெண்டு பேருக்கும் ஒரு நல்ல Understanding
இருக்கு. கிஷோருக்கு நல்லாத் தெரியும் விவேக்கும்
ப்ரியாவும் விரும்பறாங்கன்னு. ஆனாலும் பெரியவங்க
பாத்து முடிச்சதால இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கறான்.
அதுவும் பிரியாவும் ஒத்துகிட்டதால்.அவங்க வீட்டுக்கு
வந்தப்பறம் தான் தெரிஞ்சது முதல் நாள் ராத்திரி
ரஞ்சித் இறந்துபோன(கொலை செய்யப் பட்ட)விஷயம்.

தொடரும்.....