Sunday, April 01, 2007

நானே ஒரு வியர்டு தாங்க..!!!

Hai friends,

இந்த டிடிக்கு பொழுது போகாம யாரடா வம்புக்கு
இழுக்கலாம்னு ஒரு யோசனை. சரியா என்ன பிடிச்சாங்க.
ஏன் நாங்கல்லாம் மட்டும் மாட்டலாம், நீங்க மட்டும்
என்ன தப்பிக்கறது? ஆமாங்க எனக்கு ஒன்னும்
பெருஸ்சா எழுதல்லாம் தெரியாது. ஆனா நல்ல
எழுத்துக்கள ரசிக்க தெரியும். சரி இப்போ என்னோட
வியர்டு பத்தி சொல்லுறேன்.

1. நான் ஒரு க்ரைம் கதை ரசிகை. எனக்கு சின்ன
வயசிலயிருந்து பாப்பா கதைகளும் முத்து,ரானி
காமிக்ஸும் தான் அதிகம் படிச்சது. அப்பறமா திடீர்னு
ஒரு நாள் இநத க்ரைம் கதை பக்கம் போனேன்.
அப்ப ஆரம்பிச்சுது இந்த பழக்கம். நிறைய்ய க்ரைம்
கதை- இந்த ராஜேந்திர குமார்,ராஜேஷ் குமார் இப்படி
நிறைய்ய படிக்க ஆரம்பிச்சேன். இப்பக் கூட இந்த
பழக்கம் குறையல. அதுவும் இந்த க்ரைம் சினிமான்னா
'ரொம்ப விரும்பி பாப்பேன்.இன்னைக்கு கூட ஒரு
க்ரைம் மலயாளப் படம் பாத்தேன். நல்லாயிருந்தது.
கடைசி வரைக்கும் யார் கொலைகாரன்னே புரியாம
இருந்தது.வாவ் its really gud.

2. நான் என்னோட நெருங்கின நண்பர்கிட்டல்லாம்
ரொம்ப argue பண்ணுவேன். எந்த ஒரு விஷயத்தையும்
சிலசமயம் கொஞ்சம் கோவமா கூட ஆர்கியூ பண்ணி
இருக்கேன். .இப்ப ஒருத்தர் இத செய்யாதேன்னு சொன்னா
அது ஏன்னு கேப்பேன். அதுக்கு சரியான காரணம் சொன்னா
உடனே சரின்னு ஏத்துப்பேன். இல்லைன்னா அவ்வளவு
சீக்கரத்துல ஒத்துக்க மாட்டேன். என் நண்பர் கூட உன்
கிட்ட பேசி ஜெயிக்கரது கஷ்டம்னு தான் சொல்லுவார்.

3. அதே மாதிரி எந்த ஒரு விஷயத்திலயும் என்னை
அவ்வளவு சீக்கரமா திருப்தி பண்ணவே முடியாது.எனக்கே
மனசு எப்ப சரின்னு படுதோ அப்பதான் ஒ.கே. இல்லைன்னா
என்ன ஆனாலும் சரி நோ தான். நான் யாரயும் நம்பவே
மாட்டேன். எந்த ஒரு விஷயமானாலும் சரி என் கண்
பார்வையில நான் பாத்து ஒ.கே சொன்னா தான் சரி.
இல்லைன்னா கண்டிப்பா ஒத்துக்க மாட்டேன்.ஒரு சின்ன
பொருள் வாங்கனும்னா கூட சலிக்காம நாலு கடை
ஏறி எனக்கு பிடிச்சதா தான் வாங்குவேன்.அதனாலயே
என் கூட ஷாப்பிங் வர யாரும் தயங்குவாங்க.ஒருத்தர்
மட்டும் சலிக்காம வருவாரு.( என் நண்பர் செந்தில் தான்)
வாழ்க அந்த நல்ல ஆத்மா..!!!!

4.அதே மாதிரி நான் நட்ப ரொம்ப மதிப்பேன். ஆனா
அதுக்காக ஈகோவோட பழக நினைச்சா ஒரு பெரிய்ய
முழுக்கு தான்.திரும்பி அந்த திசை பக்கமே தலை
வச்சு கூட பாக்க மாட்டேன்.என்ன புரிஞ்சுக்கறதே
ரொம்ப கஷ்டம்னு தான் நிறைய்ய பேர் சொல்றாங்க.
பாக்க ரொம்ப திமிர் பிடிச்சவ மாதிரி இருப்பேன்.
ஆனா பழகிட்டா என்ன குழந்தை மாதிரின்னு சொல்வாங்க.

5.எனக்கு என்னை பத்தி யாரும் பின்னாடி பேசினா
பிடிக்காது.எதுவானாலும் திட்டறதுனாக் கூட என்
முன்னாடி சொல்லிட்டா நான் விட்டுடுவேன். ஆனா
எனக்கு பின்னாடி எது பேசினாலும் அவங்களை நான்
சுத்தமா வெறுத்துடுவேன். இதனாலயே நான் நிறைய்ய
நண்பர்களையும் ஏன் உறவுகளையும் கூட இழந்து
இருக்கேன். அதுக்கெல்லாம் நான் கொஞ்சம் கூட கவலை
பட்டதே இல்லை.

மொத்ததுல நீங்க நினைக்கறமாதிரி வியர்டு நான் தான்னு
சொல்லுவேன்.நிஜமாவே நான் ஒரு மாதிரி தான்.
கொஞ்சம் கஷ்டம் தான்.

சரி நான் யாரு 5 பேர சேர்த்து விடறது? ஏன்னா எல்லாரும்
எற்கெனவே ஒரு ரவுண்டு வந்துட்டாங்கன்னு
நினைக்கிறேன். அதனால நான் இதுலர்ந்து ஜூட்..!!!!

14 comments:

k4karthik said...

firsrtuuu....

dubukudisciple said...

naan seconda?

dubukudisciple said...

//இந்த ராஜேந்திர குமார்,ராஜேஷ் குமார் இப்படி
நிறைய்ய படிக்க ஆரம்பிச்சேன். இப்பக் கூட இந்த
பழக்கம் குறையல. அதுவும் இந்த க்ரைம் சினிமான்னா
'ரொம்ப விரும்பி பாப்பேன்.இன்னைக்கு கூட ஒரு
க்ரைம் மலயாளப் படம் பாத்தேன். நல்லாயிருந்தது.
கடைசி வரைக்கும் யார் கொலைகாரன்னே புரியாம
இருந்தது.வாவ் its really gud. //
idellam paravaillai.. anaa antha effectla neenga ethavathu crime pannama iruntha seri

dubukudisciple said...

//என் நண்பர் கூட உன்
கிட்ட பேசி ஜெயிக்கரது கஷ்டம்னு தான் சொல்லுவார்.//
ellarume konjam appadi thaanunga.. avanga ninaikarthu correctnu thaan ninaipaanga

dubukudisciple said...

//அதனாலயே
என் கூட ஷாப்பிங் வர யாரும் தயங்குவாங்க.ஒருத்தர்
மட்டும் சலிக்காம வருவாரு.( என் நண்பர் செந்தில் தான்)
வாழ்க அந்த நல்ல ஆத்மா..!!!!//
paavam unga husbandu.. avar varamatarnu ninaikiren

dubukudisciple said...

//என்ன புரிஞ்சுக்கறதே
ரொம்ப கஷ்டம்னு தான் நிறைய்ய பேர் சொல்றாங்க.
பாக்க ரொம்ப திமிர் பிடிச்சவ மாதிரி இருப்பேன்//
adu thaan appove sonnanga.. arum adu azham illa..adu serum kadalum azham illa.. aazham idu aiya antha pombala manasu thaan ya

dubukudisciple said...

//இதனாலயே நான் நிறைய்ய
நண்பர்களையும் ஏன் உறவுகளையும் கூட இழந்து
இருக்கேன். அதுக்கெல்லாம் நான் கொஞ்சம் கூட கவலை
பட்டதே இல்லை//
same blud

dubukudisciple said...

//மொத்ததுல நீங்க நினைக்கறமாதிரி வியர்டு நான் தான்னு
சொல்லுவேன்.நிஜமாவே நான் ஒரு மாதிரி தான்.
கொஞ்சம் கஷ்டம் தான்.//
oru mathiriya irukarthula thappu illa... onrai mathiri irukarthu thaan thappu.. seri seri .. niraya commentiachu.. bye

dubukudisciple said...

appuram unga manam virumbuthe unnai nalla irunthuchu.. ana mudivu enaku pidikala avalavu thaan.. innum konjam ezhuthi irukalam neenga

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Who z that Senthil ?!?

May God Bless.

Sumathi said...

//அதனாலயே
என் கூட ஷாப்பிங் வர யாரும் தயங்குவாங்க.ஒருத்தர்
மட்டும் சலிக்காம வருவாரு.( என் நண்பர் செந்தில் தான்)
வாழ்க அந்த நல்ல ஆத்மா..!!!!//

//paavam unga husbandu.. avar varamatarnu ninaikiren//

You are wrong Sudha. My Hubby comes.

Syam said...

//இன்னைக்கு கூட ஒரு
க்ரைம் மலயாளப் படம் பாத்தேன். நல்லாயிருந்தது.
கடைசி வரைக்கும் யார் கொலைகாரன்னே புரியாம
இருந்தது.வாவ் its really gud//

மலையாள படம்னா ஷக்கீலா சேச்சி நடிச்ச படம்தான் பார்ப்பேன் வேற படம் பாக்க மாட்டேன்னு எங்க தாத்தா சாகும் போது சத்தியம் பண்ணி குடுத்து இருக்கேன்...:-)

Syam said...

//அதுக்கு சரியான காரணம் சொன்னா
உடனே சரின்னு ஏத்துப்பேன்//

இம்புட்டு நல்லவங்களா நீங்க :-)

செந்தழல் ரவி said...

க்ரைம் கதை ரசிகர் ?

சின்னக்குழந்தையில் படிச்சது சரி...ஆனா இப்போ படிச்சா ராஜேஷ்குமார் நாவல் எல்லாம் ரொம்ப கேவலமா இருக்கமாதிரி தோணுது...

இப்பவும் படிக்கறீங்களா என்ன ?