Tuesday, April 17, 2007

ஏன்..எதற்கு..?

Hai friends,

நம்மள்ல பல பேருக்கு சில விஷயங்கள் அவ்வளவு
கரெக்டா தெரியாது. அதுல ஒன்னு இந்த "அட்சய த்ரிதியை"
சமீப காலமாவே இந்த நாள் ரொம்ப அமர்க்களமாக
கொண்டாடப் படுகிறது. ஆனா இதுக்கு பின்னனியில்
உள்ள காரணம் மிக மிக சுவாரஸ்யமானது.

புரான காலத்துல ஒரு நாள் கோபத்துக்கு பேர் போன
ஒரு முனிவர் அதாங்க தூர்வாசர் த்ன்னோட சீடர்களுடன்
பஞ்ச பாண்டவர்கள் தங்கியிருந்த காட்டு வழியா வரும்
போது அவர்களை பாக்க நினைத்து ஒரு ஆள் மூலமாக
திரெளபதியிடம் தனக்கும் தன் சீடர்களுக்கும் உணவு
தயாரித்து வைக்க சொன்னார். ஆனால் அந்த நேரத்தில்
திரெளபதி பாண்டவர்கள் அனைவருக்கும் உணவு பரிமாறி
விட்டு அந்த அட்சய பாத்திரத்தை கழுவி வைத்திருந்தாள்.
ஒரு முறை கழுவி விட்டால் மறு நாள் தான் அந்த
பாத்திரத்தில் உணவு திரும்பக் கிடைக்கும். இப்போதும்
அது தான்(கழுவி வைத்து விட்டாள்) நடந்தது. இந்த
சமயத்தில் தான் முனிவரிடம் இருந்து சேதி வந்தது.
முனிவரின் கோவம் தான் மிகப் பிரசித்தமாயிற்றே.
என்ன செய்வது என்று தெரியாமல் தவித்த திரெளபதிக்கு
தீர்வு ஏதும் கிடைக்காத பட்சத்தில் திரெளபதி பகவான்
கிருஷ்ணனை வேண்டினாள்..

உடனே அங்கே வந்த கிருஷ்ண பரமாத்மா திரெளபதி
கழுவி வைத்திருந்த அந்த பாத்திரத்தில் ஓரத்தில்
ஒட்டியிருந்த ஒரு பருக்கையை எடுத்து சாப்பிட்டார்.
உடனே முனிவருக்கும் அவரது சீடர்களுக்கும் வயிறு
நிரம்பி விட்டது. (இது தான் எங்க எல்லாருக்கும்
தெரியுமே னு தானே சொல்றீங்க)
ஆனா உங்களுக்கு தெரியுமா இது எப்போனு?
அதாவது இந்த நிகழ்ச்சி நடந்தது இது போல ஒரு அட்சய
த்ரிதியை தினத்தில் தான்.அதனால் தான் அந்த பாத்திரத்
திற்கே அந்த பெயர் அட்சயப் பாத்திரம் என்று பெயர்
வந்ததாம்.

மேலும் இந்த நாளில் தான் விஷ்ணுவின் ஆறாவது அவதார
மான பரசுராமர் பிறந்தார் என்றும் கூறப் படுகிறது.மேலும்
செல்வத்திற்கு அதிபதியான லக்ஷ்மிதேவியே கூட இந்த
நாளை தேர்ந்தெடுத்து "குபேரனை" வழிபட்டு குபேர
சம்பத்து பெற்றாள் என்னும் கூறப் படுகிறது.

சரி, இதை ஏன் கொண்டாடுகிறோம்?

இந்த திதியில் தான் "திரேதா யுகம்" தோன்றியது என்று இதிகாசங்களும் கூறுகின்றன.இந்த அட்சய த்ரிதியை
திதியில் தொடங்கும் ஒரு யுகம் கோடிக் கணக்கான
ஆண்டுகள் நீடிக்கிறதோ அதுபோலவே இந்த நாளில்
தொடங்கப் படும் எந்த நற்காரியங்களும் யுகம் யுகமா
நீடிக்கும் என்பது ஐதீகம்.


எதையும் வாங்குவது என்ற விஷயத்தில் மட்டும் அல்ல
நம் மனசு சந்தோஷப் படும்படியான எந்த ஒரு நல்ல
காரியங்களையுமே நாம் செய்யலாம்.இதனால் நற்பலன்
தான் கிட்டும்.

இந்த நாளை எப்படி கண்டு பிடிப்பது?

தமிழில் வரும் சித்திரை மாதத்தில் வரும் அமாவசைக்கு
அப்பறம் வரும் த்ரிதியை திதியை தான் இந்த அட்சய
த்ரிதியை நாளாக் கொண்டாடப் படுகிறது.

நண்பர்களே நீங்கள் செய்ய விரும்பும் எந்த ஒரு நல்ல
காரியமானாலும் இந்த நாளில் செய்து பல மடங்கு
நற்பலன்களை பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

21 comments:

Unknown said...

pls if u have time have a look at this..

http://iyandra-alavu-udhavalaamae.blogspot.com/2007/04/help-4-yr-old-boy-santhosh.html

and try to forward this to ur friends..
to save a 4 yr old boy Santhosh.

Thanks,
Raghavan.

Unknown said...

அடடா.. நல்ல விஷயம் சுமதி..

எனக்கு கிருஷ்ணர் கதை தெரியும்.. நீங்க அதுல ஒண்ணு சொல்ல விட்டுட்டீங்கன்னு நெனக்கிறேன்..

கிருஷ்ணர் அந்தப் பாத்திரத்தில ஒட்டியிருந்த ஒரு கீரையை உண்டு ஒரு ஏப்பம் விட்டவுடன், முனிவர் மற்றும் அவருடன் உள்ளவர்கள் அனைவருக்கும் வயிறு நிரம்பி விட்டது என எனக்கு என் தந்தை சொன்னார்கள்.

அட்சய திரிதியை பற்றி நல்லதொரு விளக்கம். கலக்குங்க..

எண்ணங்கள் ஈடேறட்டும்!

Anonymous said...

//நண்பர்களே நீங்கள் செய்ய விரும்பும் எந்த ஒரு நல்ல
காரியமானாலும் இந்த நாளில் செய்து பல மடங்கு
நற்பலன்களை பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன். //

நல்ல விஷயத்தை செய்ய நாளும் கிழமையும் பார்க்கனுமா என்ன ? மூட நம்பிக்கைகளை ஒழித்து மனிதம் கானும் நல்லறிவை நீங்கள் பெறுமாறு சேம் அட்சய திருதியை அன்று கடவுளை வேண்டுங்க :)))

Syam said...

யக்கா ஒரு வீக் எண்ட் முடிஞ்சு வரதுக்குள்ள 5 போஸ்ட் போட்டு அநியாயம் பண்ணி இருக்கீங்க :-)

Syam said...

நீங்க சொல்றத வெச்சு பாக்கும் போது இந்த திரெளபதிக்கு பாத்திரம் கூட ஒழுங்கா கழுவ தெரியலனு தெரியுது :-)

Syam said...

//சரி, இதை ஏன் கொண்டாடுகிறோம்?//

ஒரே காரணம் நகை கடை காரங்க நல்லா விளம்பரம் பண்ணி திடீர்னு இத பேமஸ் ஆக்கிட்டாங்க...தங்கமணி இப்போ இருந்தே ஆரம்பிச்சுட்டா தங்கம் வாங்கனும்னு...:-)

வல்லிசிம்ஹன் said...

நன்றி சுமதி.
பொன்னா வாங்கிக் குவிக்கட்டும்.
அன்னிக்கு இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்தால் நம்ம குடும்பமும் வளரும்னு கதை இருக்கணும்:-)

Sumathi. said...

ஹாய் ராகவன்,

கண்டிப்பா செய்யறேன்.

//எனக்கு கிருஷ்ணர் கதை தெரியும்.. நீங்க அதுல ஒண்ணு சொல்ல விட்டுட்டீங்கன்னு நெனக்கிறேன்..//

இல்லை ராகவ், இது எல்லாருக்கும் தெரிஞ்சது தான், ஆனா நான் சொல்ல வந்தது இந்த நாளுக்கு உள்ள பெயர் காரணத்தை தான்.மேலும் அதனோட பலனும் தான்.
படிச்சதுக்கு தேங்ஸ் ராகவ்.

Sumathi. said...

ஹாய் ரவி,

//நல்ல விஷயத்தை செய்ய நாளும் கிழமையும் பார்க்கனுமா என்ன ? மூட நம்பிக்கைகளை ஒழித்து மனிதம் கானும் நல்லறிவை நீங்கள் பெறுமாறு சேம் அட்சய திருதியை அன்று கடவுளை வேண்டுங்க :)))//

ரவி எல்லாத்துக்குமே ஒரு நாள் தேவை படுகிறதே..
இப்ப மதர்ஸ் டே, அப்பாக்கள் தினம்,குழந்தைகள் தினம் இது மாதிரி இதுக்கும் ஒரு தினம் தேவை. நாம எப்பவுமே செய்ய முடியலைன்னாலும் அட்லீஸ்ட் இந்த ஒரு நாள்லயாவது செய்யலாம் இல்லையா? அதுக்கு தான் ..

Anonymous said...

தயவு செய்து இது போல முடநம்பிக்கையை பரப்பாதீர்.

Sumathi. said...

ஹாய் ஷ்யாம்,

//யக்கா ஒரு வீக் எண்ட் முடிஞ்சு வரதுக்குள்ள 5 போஸ்ட் போட்டு அநியாயம் பண்ணி இருக்கீங்க :-)//

இதிலிருந்து என்ன தெரியுது?
வர வர நாட்டாம ரொம்ப ஸ்லோனு..

Sumathi. said...

ஹாய் ஷ்யாம்,

//நீங்க சொல்றத வெச்சு பாக்கும் போது இந்த திரெளபதிக்கு பாத்திரம் கூட ஒழுங்கா கழுவ தெரியலனு தெரியுது :-)//

ஆமாம், அந்த காலத்துல ஒரு டிஷ்வாஷர் கூட இல்லைன்னு தெரியலையா?ரொம்ப லொல்லு தான்.

//ஒரே காரணம் நகை கடை காரங்க நல்லா விளம்பரம் பண்ணி திடீர்னு இத பேமஸ் ஆக்கிட்டாங்க...தங்கமணி இப்போ இருந்தே ஆரம்பிச்சுட்டா தங்கம் வாங்கனும்னு...:-)//

ஷ்யாம் அதுக்காக ஒரு 10 பவன் கூட வாங்கி தரலைன்னா எப்படி?மக்கி சூஸ் மார்வாடியா இருக்கிங்கலே..

Sumathi. said...

ஹாய் வல்லிசிம்ஹன்,

//அன்னிக்கு இன்னும் நிறைய பேருக்கு உதவி செய்தால் நம்ம குடும்பமும் வளரும்னு கதை இருக்கணும்:-)//

ஆமாங்க இதுக்கே பாருங்க ரவி இப்படி ஒரு நாள் தேவையான்னு கேக்கறாரு.அட்லீஸ்ட் இந்த ஒரு நாள்லயாவது நல்லது செஞ்சா தேவலைனு நாம நினைக்கிறோம்.
என்னோட சின்ன வயசுல இந்த மாதிரி நாளெல்லாம் பெருசா கொண்டாடின ஞாபகம் இல்லை. போகப் போக இது மாதிரி கதையும் வந்திடும்.

ACE !! said...

அருமையான விளக்கம்..கதை தெரியும், ஆனா மத்த விஷயம் எனக்கு புதுசு தான்.. ஆன இன்றைக்கு நல்லது செய்வோம்னு இல்லாம ஆளுக்கு தங்கத்த வாங்க போட்டி போடறாங்க.. அதுவும் ஒரு சில வருஷமா தான்.. எங்க வீடு தி.நகர்னால, அட்சய திரிதி அன்னிக்கு வீட்டுக்கு வரவோ போகவோ முடியாது.. ரொம்ப இம்சை.. :(

Anonymous said...

//தயவு செய்து இது போல முடநம்பிக்கையை பரப்பாதீர். //

இது முடநம்பிக்கையை என்று தான் நான் சொன்னேன்..தங்கம் வாங்க சொன்னீர் என்று கூறவில்லை.

dubukudisciple said...

sumathi
arumaiyana post thaan potu irukeenga

dubukudisciple said...

//மூட நம்பிக்கைகளை ஒழித்து மனிதம் கானும் நல்லறிவை நீங்கள் பெறுமாறு சேம் அட்சய திருதியை அன்று கடவுளை வேண்டுங்க//
enga idula mooda nambikai engernthu vanthathu.. namaku oru vishayam pidikalai endral adai patri pesamal irupathu nallathu ena ninaikiren..engaluku serinu patathu ungaluku thappunu pattamathiri engalukum padalam..

dubukudisciple said...

தயவு செய்து இது போல முடநம்பிக்கையை பரப்பாதீர்.

idu mooda nambikai illai

Anonymous said...

இதில் இருப்பது மூடநம்பிக்கை தான். ஈரோடு கண்ணாடி உதவியுடன் படிக்கவும்.

Also read
http://arivagam.blogspot.com

Sumathi. said...

//இதில் இருப்பது மூடநம்பிக்கை தான். ஈரோடு கண்ணாடி உதவியுடன் படிக்கவும்.//

மொதல்ல ஈரோடுல இருக்கறவரு தன்னோட எந்த கருத்துக்களையும் யார் மீதும் உங்களைப் போல திணிக்கவில்லை.நீங்க அத மொதல்ல புரிஞ்சுக்கோங்க..

2வது எந்த ஒரு தினத்தையும் கொண்டாடுவது என்பது அவரவர் விருப்பம். மற்றவங்க அதைஇப்படி தான் கொண்டாடவேண்டும் என்று கட்டாயப் படுத்துவது அநாகரீகம்.
உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் சும்மா இருந்து விடுங்கள்.மற்றவர்களின் விருப்பதில் தலையிடாதீர்கள்.

dubukudisciple said...

//இதில் இருப்பது மூடநம்பிக்கை தான். ஈரோடு கண்ணாடி உதவியுடன் படிக்கவும்//
கல் என்பவற்கு கல், கடவுள் என்பவற்கு கடவுள்.. அதைப்போல தான் இதுவும்.. உங்களுக்கு மூட நம்பிக்கை.. ஈரோடு கண்ணாடி போட்டிருப்பதால்