Thursday, March 29, 2007

மனம் விரும்புதே உன்னை...2

Hai friends,


மனம் விரும்புதே உன்னை...2

பூஜா வேலைக்கு சேர்ந்த 2 மாசத்துலயே அங்க இருக்கற
எல்லார்கிட்டயும் நல்ல பேரு வாங்கிட்டா. பாஸுக்கும்
கூட ஒரு நல்ல impression. அதனால பூஜாவுக்கும் ஒரு
நல்ல அனுபவம் கிடைச்சுது.ஆனா பூஜாவுக்கும் இதுலயே
தொடர்ந்து இருக்க இஷ்டமில்லை.
ஒரு நாள் பூஜா Bank exam எழுதறத்துக்கு ஒரு மூணு
போட்டோ வச்சிருந்தா.ஆபீசுல லன்ச் டைம்ல
அப்ளிகேஷன் ஃபில் பண்ணி முடிச்சுட்டு பேக்ல இருந்த
போட்டோவ தேடினப்ப 2 போட்டோ மிஸ்ஸிங். உடனே
ஆபீசு முழுதும் தேடி பாத்தும் கிடைக்கல. உடனே ஜான்
மேல தான் சந்தேகம் வந்தது. நேரடியாவே கேட்டுட்டா

"ஜான் நீங்க என் போட்டோவ எடுத்தீங்களா?"

"எனக்கென்ன வேற வேலயே இல்லைன்னு நினைச்சியா?"

"ஆமாமாம், இதுவும் உங்க வேலைல ஒன்னு தான்னு
எனக்கு தெரியும்.நீங்க என்ன தான் மறைச்சாலும் உங்க
பார்வையும் செயலுமே காட்டி குடுத்துடும்.போதும்
உங்க நடிப்பு, என்னோட பர்மிஷன் இல்லாம என்
போட்டோ உங்ககிட்ட எதுக்கு இருக்கனும்?"

ஜானுக்கு புரிஞ்சுபோச்சு. "So, you know very well, That Im
in love with you. Then why do you pretend as if you don't know
anything?"

"hey, how can u expect me to love u?you can love anybody,
but why should I?You cannot force me o.k. இந்த காதல்
எல்லாம் தானா வரனும். நீ கேட்டு வராது.நீ என்ன
பெரிய்ய ஆளா? உன்கிட்ட அப்படி என்ன இருக்கு?
உன்ன பாக்கறப்போ எனக்கு ஒன்னும் பெருஸ்சா
எதுவும் தோனல."

"இங்க பாரு, எனக்கு வாழ்க்கையை நிம்மதியா வாழனும்.
அதுக்கு தேவை ஒரு நல்ல வேலை, கைநிறய்ய பணம்,
முக்கியமா மனசுல ஒருத்தர் மேல ஒருத்தர் அளவில்லாத
அன்பு வேணும். நீ என்னயும் நான் உன்னயும் புரிஞ்சுக்கனும்.
உனக்கு என்ன பாத்த உடனே வந்த மாதிரி எனக்கும்
உன்ன பாக்கும் போது மனசுக்குள்ள ஒரு மாற்றம்
வரனும்.அப்போ தான் நாம ஜெயிக்க முடியும்.நல்ல
வாழ்க்கை வாழ முடியும்.புரியுதா. So try to accept the
truth. practical life is entirely different from what u think.
இனிமே இந்த மாதிரி எண்ணத்தோட என் கிட்ட பேசாதே."

"ஹேய், உனக்கு என்ன பிடிக்கலைன்னா பிடிக்கலைன்னு
சொல்லு. அத விட்டுட்டு பிராக்டிகல் லைப் அது இதுன்னு
கதையெல்லாம் வேண்டாம்.நீ ஆசப் படற வாழ்க்கையை
என்னால குடுக்க முடியாதுன்னு எத வச்சு சொல்லறே?

"இங்க பாரு, எனக்கு இந்த காதல் மேலயெல்லாம்
நம்பிக்கை கிடையாது. சரி,நான் நீ சொன்ன மாதிரியே
வச்சுகிட்டாலும் முதல்ல உனக்கும் எனக்கும்
எப்படி ஒத்து வரும். உன் கல்ச்சர் வேற என் கல்ச்சர் வேற.
நிச்சயமா என்னால உன் கல்ச்சருக்கு மாற முடியாது.
அங்கயிருந்து பிரச்சனை ஆரம்பிக்கும்.பின்னாடி அதுவே
பெரிசாகி வாழ்க்கையே தொலைஞ்சு போகும். So,please
இதெல்லாம் வேண்டாமே."

"ஓஓ...இது தான் உனக்குள்ள இருக்குற பயமா? சரி அப்ப
நான் உன்க்காக விட்டு குடுக்கறேன் போதுமா? அப்ப
ஒ.கேயா?பாரு நீ என்ன சொன்னாலும் அதுக்கு நான்
என்னை மாத்திக்கறேன்."

"சரி, இதுல்லாம் எத்தனை நாளுக்கு? பின்னாடி நீயே
மாற மாட்டேன்னு என்ன நிச்சயம்? "

"இங்க பாரு, எனக்குனு ஒரு நல்ல குடும்பம் இருக்கு.
அவங்க நிச்சயமா என்னை விட்டுட மாட்டாங்க.ஒ.கே.
என்னாலயும் என் குடும்பத்தை மீறீ உன்கூட வரமுடியாது."

"அப்போ நீ என்ன தான் சொல்ல வற?"

"என்னை விட்டுடு."எனக்கு இதெல்லாம் வேண்டாம்.

ஜான் நிஜமாவே உடைஞ்சு தான் போனான்.ஏன்னா
அவனுக்குனு சொல்லிக்குற மாதிரி யாரும் இல்லை.
அவனுக்கு அப்பா அம்மா இல்லை. அக்கால்லாம்
அந்த அளவுக்கு கேர் பண்றதில்லை. இந்த நிலமையில
பாவம் அவனோட காதலும் போச்சு. அப்ப தான் ஜானுக்கு
மனசுல ஒரு வேகம் வந்தது. இவ கண்ணு முன்னாடியே
ஒரு பெரிய்ய பணக்காரனா வந்து காட்டனும். இவள விட
அழகான ஒருத்திய சொந்தமாக்கி வாழ்ந்து காட்டனும்.
ஆனாலும் பூஜாவ மறக்கல. இந்த விஷயத்துக்கு அப்பறம்
பூஜா அந்த வேலயை விட்டுட்டு வேற வேலைக்கு
மாறிட்டாலும் ஜானை ஒரு நல்ல நண்பனாவே
நினைச்சு பழகினாள்.அவனுக்கு நிறய்ய அட்வைஸ்
பண்ணாள்.கஷ்டப் பட்டு அவனை நினைச்ச மாதிரி கொஞ்ச
நாள்லயே (2 வருஷத்தில்) ஜான் ஒரு கம்பனி ஆரம்பிச்சு
வேகமா ஒரு நல்ல நிலமைக்கு வந்தான்.பூஜா அத
பாத்து ரொம்ப சந்தோஷப் பட்டாள். அப்ப தான் ஒரு நாள்
பூஜா ஜான்கிட்ட," ஜானி உன்ன இந்த நிலைல பாக்கதான்
நான் உன்ன வேண்டாம்னு சொன்னேன். ஏன்னா அந்த
பாஸ் என்ன மேல வர முடியாதபடி தனக்கு சாதகமா
யூஸ் பன்னிகிட்டு இருந்தான். ஆனா நீ இப்ப ஒரு நல்ல
நிலமைக்கு வந்துட்ட.சீக்கரமே ஒரு நல்ல பொண்ண
கல்யாணம் பண்ணிகிட்டு சந்தோஷமா இருக்கனும்."

"உங்க அட்வைசுக்கு ரொம்ப தேங்ஸ் மேடம்".

அதுக்கு அப்பரம் ரெண்டு பேரும் பிரிஞ்சு போனாலும்
ஒரு நல்ல நண்பர்களேவே அடிக்கடி சந்திச்சுகிட்டு தான்
இருந்தாங்க.ரெண்டு பேரும் தனித் தனி வாழ்க்கயை
அமைச்சுகிட்டு நட்பையும் விடாம ஒரு நல்ல
நண்பர்களாவே இருந்தார்கள்.

இந்த கதை பெருஸ்சா போனதால சீக்கரமாவே
முடிச்சுட்டேன். எப்படியும் வந்துட்டீங்க..
படிச்சுட்டீங்க.. அப்படியே உங்க யோசனையும்
சொல்லிட்டு போனா என்ன குறைஞ்சுடுவீங்க?

16 comments:

SENTHIL EG IYAPPAN said...

Hi,
Me 1st ?

May God Bless.

SENTHIL EG IYAPPAN said...

Hi,
Me 1st ?

May God Bless.

SENTHIL EG IYAPPAN said...

Hi,

U started off well. Y did u finish this so soon. Ur presentation is good. Keep it up and keep going. If feasible, continue the same. Good.

Vungalukkul vulla (Mirugam ?) ezhuthaatralai thatti vidungal. May God Bless. Senthil EG Iyappan.

Syam said...

yagha attendance...eppadi unga 2 posts miss pannenu theriala...avalo aani...appalika padichitu solren :-)

ACE said...

hmm.. sama fast unga kathai.. aarambachitha vehathula mudichitteenga..

(nagesh balayya kitta sonna mathirinnu pona commetla sonnathu, bayathukkaha illa.. unga narration.. suspensa kondu poha try panreenga.. so etho turning point irukkanumnu yosikka vacchuthu ) :)

Syam said...

//இந்த நிலமையில
பாவம் அவனோட காதலும் போச்சு. //

அது எப்படி காதல் ஆகும்...அம்பிக்கு கூட தான் ஐய்வர்யா ல இருந்து ஏஞ்சலீனா ஜூலி வரைக்கும்..அதுக்குன்னு அது காதல் ஆகுமா :-)

Syam said...

//எப்படியும் வந்துட்டீங்க..
படிச்சுட்டீங்க.. அப்படியே உங்க யோசனையும்
சொல்லிட்டு போனா என்ன குறைஞ்சுடுவீங்க//

அதுதான் முடிச்சிட்டீங்களே இனிமே என்ன யோசனை சொல்றது..:-)

Syam said...

எனக்கு என்னமோ இது கதை மாதிரி தெரியல....என்னமோ போங்க :-)

Syam said...

//அதுக்கு அப்பரம் ரெண்டு பேரும் பிரிஞ்சு போனாலும்
ஒரு நல்ல நண்பர்களேவே அடிக்கடி சந்திச்சுகிட்டு தான்
இருந்தாங்க//

எப்படி பஞ்சாப் & அம்பி மாதிரியா...
:-)

Arunkumar said...

adada naan innum first part kooda padikkala.. adhukkulla seconda? sari rendayum koodiya viraivil padichitu commentaren :)

adhuvaraikum enjoy pannunga :P

Arunkumar said...

படிச்சிட்டேன். கதை சூப்பர் ஃபாஸ்டா போனாலும் கடசில சுபமா முடிச்சிட்டீங்க.
suggestion குடுக்குற அளவுக்கு நமக்கு அறிவு பத்தாதுங்கோ :(

ambi said...

yekka,
starting nalla irunthathu, but avasara avasaramaa mudicha maathiri irukke!

2 yearsla company arambichu periyaa aalu ayittan john!nu summa padayappa paatu "vetri kodi kattu"nu solliteenga.
mega serial ellam paakarathe illaya? :p

//எப்படி பஞ்சாப் & அம்பி மாதிரியா...//
yow syam, enna kozhuppaa?
antha uzhal pugara ippa thaan samalichu vechruken, again rmbering..?
kudumbathula kummi adikara velai vendaam! Grrrrrrrrr. :)

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Onnu sorry kettuttu indha episode-ai continue seiyunga.

Illa, pudhu episode podunga. Padika engala maari emaali irukkumpodhu enna kavalai vungalukku.

May God Bless.

Guna said...

Ennanga, ivvalavu vegama mudichitinga ??? It was very interesting..Start a new one soon...

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Will you heed to our words ?

Start a new Episode. A great Fan (Orient illa Senthil EG Iyappan Fan)

May God Bless.

itsraghz said...

@சுமதி,
நல்ல கதைங்க.. நல்ல தலைப்பும் கூட.. ஆனாலும் என்னவோ ஒண்ணு குறையுது. சில திருப்பங்கள் வச்சிருக்கலாமோ?

//எப்படியும் வந்துட்டீங்க..
படிச்சுட்டீங்க.. அப்படியே உங்க யோசனையும்
சொல்லிட்டு போனா என்ன குறைஞ்சுடுவீங்க?//

சத்தியமா இல்லீங்க.. சொல்லிட்டேன்ல!!! நான் எல்லாம் ரொம்ப நல்லவன்ன்ன்ங்க்க... ;-)