Wednesday, January 02, 2008

வேதனை..ஏன் இந்த கொலை வெறி?

மக்களே முதல்ல கீழ இருக்கற இந்த செய்தியை படிங்க:

புத்தாண்டு இரவில் கும்பலிடம் சிக்கிய பெண்கள் மானப்பங்கம்:

மும்பை (ஏஜென்சி), புதன்கிழமை, 2 ஜனவரி 2008 ( 11:39 IST )
புத்தாண்டு தின இரவில் மும்பையில் 2 பெண்களை சுமார் 80 பேர் கொண்ட கும்பல் ஒன்று சூழ்ந்துகொண்டு அவர்களது ஆடைகளை கிழித்து மானப்பங்கப்படுத்தியது.


புத்தாண்டு தினமான நேற்று இரவு 1.40 மணியளவில் 2 இளம் பெண்கள் தங்களது ஆண் நண்பர்கள் இரண்டு பேருடன் மும்பையின் பிரபலமான ஜூஹூ கடற்கரையை நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தனர்.அப்போது அவ்வழியாக வந்த சுமார் 40 பேர் கொண்ட கும்பல் ஒன்று அந்த பெண்களை சூழ்ந்துகொண்டு கிண்டல் செய்யத் தொடங்கியது. இதனால் மிரண்டு போன அந்த பெண்கள், தங்களை விட்டுவிடும்படி பெரும் குரலெடுத்து கத்தினார்கள்.ஆனால் அவர்கள் பயத்தில் கத்துவதை ரசித்த அந்த ரவுடிக் கும்பல், அவர்கள் உடலில் ஆங்காங்கே கைவைத்து மேலும் சீண்டத் தொடங்கினர்.

அப்போது அந்த் இடத்தில் மேலும் ஒரு கும்பல் வந்ததது.இதனால் கும்பலின் எண்ணிக்கை 70 முதல் 80 வரை ஆனது. எண்ணிக்கை கூடிப்போனதால் மேலும் தைரியம் பெற்ற அந்த கும்பல், தங்களது வக்கிர விளையாட்டை அரங்கேற்ற தொடங்கியது. அந்த இரண்டு பெண்களில் ஒருவரை அருகிலுள்ள மரத்திற்கடியிலும், மற்றொரு பெண்ணை வாகனம் ஒன்றின் பக்கத்திலும் தள்ளிக் கொண்டு சென்றனர்.அவர்களுடன் வந்த இரண்டு ஆண் நண்பர்கள் அவர்களை காப்பாற்ற முயற்சித்த போதிலும், அந்த பெரும் கும்பலின் வெறியாட்டத்தில் அவர்களால் அது முடியாமல் போனது.


இந்நிலையில், அந்த 2 பெண்களையும் தங்களது பிடிக்குள் கொண்டு வந்த அந்த கும்பல், அவர்கள் இரண்டு பேரது முகத்திலும் குத்தியது. இதனால் அந்த பெண்கள் நிலைகுலைந்துபோனார்கள்.அப்போது அந்த பெண்கள் அணிந்திருந்த ஜூன்ஸ் பேண்ட் மற்றும் ஸ்கர்ட்டையும் , மேலாடையையும் அவிழ்த்தும் , கிழித்தெறிந்தும் மானப்பங்கப்படுத்தியது அந்த கும்பல்.இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அந்த பெண்கள் மீது சுமார் ஒரு டஜன் பேர் மேலே விழுந்து சில்மிசத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் சிக்கிக் கொண்ட அந்த 2 பெண்களும் உதவி கேட்டு கூச்சலிட்டனர்.

அப்போது அந்த வழியாக வந்த 'இந்துஸ்தான் டைம்ஸ் ' நாளிதழின் புகைப்படக்காரர்கள் இருவர் இந்த சம்பவத்தை பார்த்து அதிர்ச்சியடைந்து, உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்க நினைத்தபோதே அவ்வ்வழியாக போலீஸ் ரோந்து வேன் ஒன்று சென்றதை கண்டனர்.


உடனடியாக அவர்கள் போலீசாரை நோக்கி குரலெழுப்பினர்.இதனையடுத்து போலீஸ் வேன் அங்கு விரைந்தது.போலீசாரை பார்த்ததும் அந்த கும்பல் அந்த பெண்களை விட்டுவிட்டு ஓட்டமெடுத்தது. போலீசார் அவர்களை விரட்டி சென்றபோதிலும் அக்கும்பல் தப்பி ஓடிவிட்டது.

இதனையடுத்து அந்த பெண்கள் இருவரும் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டனர்.இருப்பினும் வழக்கு ஏதும் பதிவு செய்யப்படவில்லை என ஜூஹூ காவல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.பெண்கள் இருவரும் மானப்பங்கப்படுத்தப்படும்போது எடுக்கப்பட்ட புகைப்பட காட்சிகள் ' இந்துஸ்தான் டைம்ஸ் ' நாளிதழில் வெளியிடப்பட்டுள்ள நிலையில்,


மும்பைவாசிகளை இச்சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த புத்தாண்டு தினத்தன்றும் மும்பையில் உள்ள கேட்வே ஆப் இந்தியாவில் இதே போன்று ஒரு பெண் மானப்பங்கப்படுத்தப்பட்ட சம்பவம் நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. பெண்களுக்கு பாதுகாப்பான நகரம் என்ற பெருமையை பெற்றிருந்த மும்பையில், தற்போது டெல்லியைப் போன்ற நிகழ்வுகள் நடந்தேறுவது, மும்பையும் விரைவில் டெல்லியாகிவிடுமோ என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ( நன்றி:மூலம்: தமிழ் யாகூ)


மக்களே நம்மோட நாடு எங்கே போயிட்டு இருக்கு? இதே மாதிரி இங்க பெங்களூரிலும் என்னோட நண்பர்களும் MG Road ல போயி இந்த புது வருஷம் எப்படி ஆரம்பிக்கிறார்கள் என பாக்க போனார்கள்.

அங்கயும் இதே மாதிரி சில அருவருக்கத் தக்க நிகழ்ச்சிகளால் மனம் நொந்து வேதனையோட தான் திரும்பி வந்தாங்க. அதுவும் 12 மணி வரைக்கும் பொறுமையாக இருந்த காமாந்தகர்கள் பின்னாடி தான் பெண்களை கண்ட இடத்திலும் கை வைத்து சீண்டி பார்ப்பதும் அதிலும் கொடுமை என்னன்னா, ஒரு வெளிநாட்டு பெண் தன்னோட ரெண்டு கைகளையும் பின்னாடி பிடித்துக் கொண்டு தான் போனாராம். கேட்டா நம் நாட்டு குடி(?) மக்கள் அவரோட பின்னாடியயை பிடித்தும் கிள்ளிப் பார்த்தும்தான் அவருக்கு புத்தாண்டு வாழ்த்து சொன்னார்களாம். அவரும் பயத்துடனேயே ரொம்ப கஷ்டப் பட்டு கொண்டு சென்றாராம்.

நம் நாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்டு மற்ற நாட்டு மக்கள் நம்மளப் பாத்து பெருமை படும் நேரத்தில் நம் நாடு எங்கே போயிக் கொண்டிருக்கிறது மக்களே? இத படித்த போது மனசு ரொம்ப கணத்து தான் போகிறது.

8 comments:

Dreamzz said...

//நம் நாட்டு கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கண்டு மற்ற நாட்டு மக்கள் நம்மளப் பாத்து பெருமை படும் நேரத்தில் நம் நாடு எங்கே போயிக் கொண்டிருக்கிறது மக்களே? இத படித்த போது மனசு ரொம்ப கணத்து தான் போகிறது./
முதல்ல இந்த நினைப்ப விடுங்க!
சும்மா கலாச்சாரம் மன்னாங்கட்டினு பேசினா பத்தாது! ஒருவனுக்கு ஒருத்து என்பது நம் கலாச்சாரமாய் இருக்கலாம்! பெயரளவில்... இல்ல்லனா நாம எய்ட்ஸ்ல மிக அதிகளவில் பாதிக்கபட்ட நாடுகளில் ஒன்றாகி இருப்போமா?

இந்த கலாசாரம் மண்ணாங்கட்டி.. இதெல்லாம் மனசுல இருக்கனும். உதட்டில இல்ல..

Dreamzz said...

பார்க்கவெ அருவருக்க தக்க நடந்துகிட்ட இவனுங்களை, நிக்கவைச்சு வெட்டனும். சுட்டுடா அதோட மறந்திடுவாங்க.ஒரு கால் ஒரு கை எடுத்திட்டா கடசி வரை நியாபகம் இருக்கும். இப்படி அசிங்கமா நடந்துகிட்டது.. அத பார்த்து ரசிச்சு சும்மா இருந்தது எல்லாம்....

I wish He had captured all their fotos. ella paperlayum podanum avanunga fotova.

ரசிகன் said...

வருத்தத்துக்குறிய விஷயம் தான் மின்னல்..

வேதா said...

எனக்கு என்ன சொல்றதுன்னே தெரியல, சட்டதிட்டங்களை இன்னும் கடுமையாக்கனும்னு நினைக்கறேன். இப்டி குறைந்தபட்ச மகிழ்ச்சியை கூட அனுபவிக்க முடியாத நிலை தான் இன்று பெண்களின் நிலையா இருக்கு :(
ஒரு பெண்ணாய் நான் கருதுவது இப்டிப்பட்ட கொண்டாட்டங்களில் பாதுகாப்பில்லாத நேரங்களில் பாதுகாப்பில்லாத இடங்களுக்கு செல்வதை தவிர்த்துவிடலாம் :(

ரசிகன் said...

தினமலரில் கூட படித்தேன்.. மறுபடியும் காட்டுமிராண்டிகளின் காலத்துக்கு பின்னோக்கி போகிறதோ நாடு என்று தோன்றியது :((

Raghavan alias Saravanan M said...

மிகவும் வருத்தத்துக்குரிய செய்தி தான்..

மனது கனத்துப்போவதும் உண்மையே! :(

Anonymous said...

அன்று..1960 ல்
காமுகன் நெஞ்சில் ஈரம் இல்லை ‍ அவனுக்கு
தாய் என்றும் தாரம் என்றும் பேதம் இல்லை....
என‌
என்றோ என் இள வயதில்
சோக பாடல் ஒன்று சிந்திக்க வைத்தது.
இன்று ..2008 ல
புத்தாண்டில் ஓர் கோரம்.

குடியும் காமமும் = வெறி
பிடித்த நாயினம் போல்
குதறும் காட்சி..

இந்த வெறியர்கள்
இந்தியர்கள். வெட்கம். வெட்கம்.

சோனியாவும் பிரதிபாவும்
உமாவும் அம்பிகாவும் ஆவேசத்துடன் ஒரு
பிருந்தாவும் மமதாவும்
பெண்களுக்கு மூன்றில் ஒன்று
பங்கு வேண்டுமென போராடுகிறார்கள்.

பெண்கள் கெளரவத்தைக் காத்திட‌
யாரிங்கே வருவார்கள் ?

Geetha Sambasivam said...

"சாதனை"ப் பதிவு எழுத உங்களை அழைத்துள்ளேன், வந்து பார்த்துவிட்டுப் பின் எழுதவும்