Monday, January 28, 2008

சிவபூஜைப் பலன்கள்...

சிவ பக்தர்களுள் சிறந்தவர் அவர்; சைவத்தின் மூலமாகத் தெய்வவீகத்தைப் பரப்பியவர். அந்தக் காலத்திலேயே பர்மா, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்குச் சென்று சிவபெருமானின் புகழைப் பேசினார். கேட்போர் மனத்தின் இருளறு சொல்லிற்குச் சொந்தக்காரர். நித்தய சிவபூஜை செய்ததால் உலக இன்ப துன்பங்கள் அநித்தியம் என்பதைக் கண்டவர்; ஆதலால் மக்களுக்கு ஆழமான உணர்வுடன் ஆன்மிகத்தை எடுத்தோதினார். யார் அந்த சிவப்பழம்?


அவர்தான் சைவத் திரு. அ.மு. சரவண முதலியார். சென்ற நூற்றாண்டின் தலை சிறந்த-தமிழ் அறிஞர்களில் முக்கியமானவர்.
அந்த நிகழ்ச்சி ஏதோ நேற்று நடந்தது போல் இருக்கிறது. தெய்வ பூஜை செய்பவர்கள் காலத்தை மீறித்தான் காணப்படுகிறார்கள். 1958-ஆம் ஆண்டு.


சரவண முதலியார் அப்போது ராயப்பேட்டை மருத்துவமனையில் உடல் நலமின்மையால் சேர்க்கப்பட்டிருந்தார். அனுதினம் சிவதியானமும் தேவார பாராயணமுமாக இருந்த அவருக்கு மருத்துவமனையிலும் தெய்வ சிந்தனை கை கூடியிருந்தது. அவருடன் அவரது மகனும் தங்கி சேவை செய்து வந்தார். டாக்டர் ரத்தினவேல் சுப்பிரமணியம் அந்தக் காலத்தில் புகழ் பெற்ற மருத்துவர். சரவண முதலியார் படுத்திருந்த கட்டிலுக்குப் பக்கத்தில் செட்டியார் ஒருவரும் சிகிச்சை பெற்றுவந்தார்.


அன்று டாக்டர் அவருக்கு வேண்டிய மருந்துகளைக் கொடுத்த பிறகு அவருக்குத் ¨தைரியமூட்டும் வகையில், "செட்டியாரே, நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். உங்களைச் சுகப்படுத்தி வீட்டிற்கு அனுப்ப வேண்டியது என் பொறுப்பு" என்று கூறினார்.


'சிவன் செயலே யாதும்' என்று தெளிந்த அறிவுடை சரவண முதலியார் இதைக் கேட்டு சிரித்துவிட்டார். இதனால் மருத்துவர் கோபிப்பாரே என்று முதலியாரின் மகன் உள்ளளூ பயந்தார். மகன் இவ்வாறு கலங்கி இருக்க தந்தையோ இன்னும் பெரிதாகித் தெய்வீகச் சிரிப்பு சிரிக்க, மருத்துவர் மெல்ல சரவண முதலியார் கட்டிலுக்கு வந்தார். அவர், "பெரியவரே, எதற்காக இப்போது சிரித்தீர்? சொல்லும்" என்று வினவினார்.

சரவண முதலியாரின் மகனுக்கும் இதே கேள்வி நெஞ்சில் நிழலாடிக் கொண்டிருந்தது. சரவண முதலியார் மெதுவாக, "டாக்டர், உங்களை அவமானப்படுத்த நான் சிரிக்கவில்லை. நீங்கள் கூறியதைக் கேட்டதும் எனக்கு பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறிய ஓர் உபதேசம் நினைவிற்கு வந்தது.

"பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் கூறுகிறார்: 'இறைவன் இரண்டு முறை சிரிக்கிறார். ஒன்று, இரு சகோதரர்கள் தங்களுக்குள் நிலத்தைப் பிரித்து, குறுக்கே கயிற்றைப் பிடித்து, 'இந்தப் பக்கம் என்னுடையது. அந்தப் பக்கம் உன்னடையது' என்று சொல்லிக் கொள்ளும்போது அவர் சிரித்தார். 'இந்தப் பக்கம் என்னுடையது. அதில் ஒரு துண்டு நிலத்தை வைத்துக்கொண்டு இந்தப் பக்கம் என்னுடையது, அந்தப் பக்கம் உன்னுடையது என்கிறார்களே! என்று நினைத்து இறைவன் சிரிக்கிறார்.

"கடவுள் மேலும் ஒருமுறை சி¡¢க்கிறார். குழந்தையின் நோய் தீர்க்க முடியாததாக உள்ளது; தாய் அழுது கொண்டிருக்கிறான்; வைத்தியர் அவளிடம், "அம்மா, பயப்படாதே. நான் குணப்படுத்திவிடுகிறேன்" என்று சொல்கிறார்.
அப்போதும் கடவுள் சிரித்துக்கொள்கிறார். இறைவன்தான் எல்லோருடைய விதியையும் நிர்ணயிக்க முடியும். நடக்கக்கூடியதைத் தடுக்க யாராலும் முடியாது என்பது வைத்தியருக்குத் தொ¢யவில்லை." இவ்வாறு சரவண முதலியார் கூறிய தத்துவத்தை டாக்டர் ரத்தின வேல் சுப்பிரமணியம் கேட்டு உணர்ந்தார். அவர் அடிப்படையில் ஓர் ஆன்மிகவாதி. ஆதலால் அவர் தமது எண்ணத்தை மேம்படுத்திக் கொண்டார். அன்றிலிருந்து அவர் தினமும் சரவண முதலியாரிடம் வந்து அடிக்கடி பேசத் தொடங்கினார். அவர்கள் இருவரும் முக்கியமாக, பெரியபுராணம் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள்.
மருத்துவரின் பவரோகத்திற்கு சரவண முதலியார் தெய்வ மருந்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார். அன்றிலிருந்து அவர் தினமும் சரவண முதலியாரிடம் வந்து அடிக்கடி பேசத் தொடங்கினார். அவர்கள் இருவரும் முக்கியமாக, பெரியபுராணம் பற்றி நேரம் போவது தெரியாமல் பேசுவார்கள். மருத்துவரின் பலரோகத்திற்கு சரவண முதலியார் தெய்வ மருந்தைக் கொடுத்துக்கொண்டிருந்தார்.


இதனால் சரவண முதலியாரின் மகன் ஒரு நாள் தம் தந்தையிடம், "அப்பா, டாக்டரின் நேரம் பொன்னானது. அவரது சேவை எல்லோருக்கும் தேவை. அதோடு, அதிகமாகப் பேசி நீங்கள் உங்கள் உடல்நலத்தைக் கொடுத்துக் கொள்ளவேணடாமே" என்று விண்ணப்பித்துக் கொண்டார். இந்த விண்ணப்பம் மருத்துவரின் செவிக்கும் எட்டியது. அதனால் அவர் சரவண முதலியாரின் சிவபரமான விளக்கங்களைத் தமது பகலுணவு நேரத்தில் வந்து கேட்பார். முதலியாரும் சளைக்காது சொல்லிக் கொடுத்தார். சிறிது காலத்திற்குப் பிறகு சரவண முதலியார் மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார். ஓரிரு மாதங்களுக்குள் சரவண முதலியார் மீண்டும் நோய்வாய்ப்பட்டார். இம்முறை அவருக்கு மருத்துவம் செய்தவர் டாக்டர் குருசாமி முதலியார். டாக்டர் குருசாமி முதலியாரும் நல்ல சிவபக்தர். அவரைப் பற்றி அந்தக் காலத்தில் இப்படியொரு நம்பிக்கை இருந்தது; அவர் தினமும் காலையில் சிவபூஜை செய்து முடித்துக் கதவைத் திறந்து வெளியில் வருவார். அப்போது முதலில் அவரது கண்ணில்படுபவரின் வியாதி பரிபூரணமாகக் குணமாகும் என்ற மக்கள் நம்பினார்கள். இது சிவபூஜை அவருக்குக் கொடுத்திருந்த பலன். அன்று சரவண முதலியார் மகனும் அவர்களது குடும்ப மருத்துவர் ஏ. தியாகராஜனும் அந்த மருத்துவரைக் காணச் சென்றிருந்தார்கள்.


டாக்டர் குருசாமி முதலியார் பூஜை நேரம் முடிந்து வெளியில் வந்தார். டாக்டர் தியாகராஜன் சரணவண முதலியாரின் உடல்நலக்குறைவு பற்றிக் கூறிவந்து பார்க்குமாறு வேண்டினார். அதற்கு குருசாமி முதலியார் "மார்ச் 15-ஆம் தேதி போகிறவரை 1-ஆம் தேதியே கூட்டி வந்து ஏனய்யா வம்பு செய்கிறீர்கள்?" என்று கூறினார்.


சரவண முதலியாரின் மகனை மருத்தவ கூறிய அந்தச் செய்தி நிலைகுலையச் செய்தது. பின்னர் குருசாமி முதலியார் மெதுவாக, "அவர் சிவபூஜை செய்பவர். அவரைப்பற்றி ஒன்றும் கவலைப்பட வேண்டாம் என்று ஆறுதல் கூறி அனுப்பி வைத்தார்.

1950, மார்ச் 13-ஆம் தேதி வீட்டில் சரவண முதலியாருக்கு நினைவு தவறி 'கோமா' நிலை ஏற்பட்டது. 14-ஆம் தேதியும் நினைவு திரும்பவில்லை. மருத்துவர்கள் கைவிரித்து விட்டார்கள். சரவண முதலியாரின் குடும்பம் தத்தளித்தது. அவரது மகன் செய்வதறியாது திகைத்தார். அவர் மனதில் பல பிரச்சனைகள் தோன்றினாலும், நெஞ்சை வாட்டும் ஒரு கேள்வி மிகுந்த சிரமத்தைக் கொடுத்தது. அது தந்தையின் ஆன்மிகத்தைப் பற்றியது. 'வாழ்நாள் முழுவதும் சிவபூஜை செய்த ஒருவர் இப்படித்தான் சாவதா? என் தந்தை பக்தியுடன் சிவபூஜையின் சிறப்பு இவ்வளவுதானா?' -இவ்வாறான கேள்விகள் அவரைத் துளைத்தன. சரியாக மார்ச் 15-ஆம் தேதியும் வந்தது. ஏற்கனவே டாக்டர் குருசாமி முதலியார் கூறியது நினைவிற்கு வரவே எல்லோரும் பந்தனர்.


ஆன்மிக சாதகர்கள் வாழ்வது எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்குச் சாவதும் முக்கியமானது. சிவபூஜை செய்த ஒருவர் இப்படித்தானா மற்றவர் போல் மறைவது? வீட்டில் சரவண முதலியாரின் உறவினர்கள் அறைக்கு வெளியில் கூடிப் பேசிக் கொண்டிருந்தார்கள். மகனின் மனதிலிருந்த கேள்விகள் தான் எல்லோர் மனதிலும் ஒலித்துக் கொண்டிருந்தன. அந்தச் சூழல் பரபரப்பு மிகுந்திருந்தது. இனி தந்தையின் குரலைக் கேட்கவே முடியாதா? இது முதலியார் மனைவியின் ஏக்கம். நினைத்து நினைத்து ஏங்கத்தான் முடியும் என்று மனதைத் திடப்படுத்தும் போதுதான் அந்த ஒலி கேட்டது. ஆ, அது சரவண முதலியாரின் இருமல் சப்தம் அல்லவா? எல்லோரும் அவசரமாக உள்ளே நுழைந்தார்கள். சரவண முதலியார் தம் நிலையைப் பற்றி கவலைப்படாமல் தமது மனைவியிடம்,"இன்று விசேஷமான நாள். நீ ஏன் இன்று இன்னும் குளிக்காமல் இருக்கிறாய்? போய் உடனே குளித்துவிட்டு, பூஜை செய்" என்று பணித்தார். அவரது மகனிடமும், மகளிடமும் அவ்வாறே கூறினார்.

பிறகு தமது மருமகளை அழைத்தார். மருமகளைத் தமது மகளாகத் கண்டவர் அவர். அவரது கைமேல் தமது கைகளை வைத்து மூடினார். அவ்வாறு அவர் செய்தது அந்தக் கைகளில் சிவலிங்கம் இருப்பதான மானசீக யாவனையை உணர்த்தியது.பின்னர், தாம் தினமும் செய்யும் சிவபூஜை மந்திரங்களை ஒவ்வொன்றாகக் கூற ஆரம்பித்தார்.'ஈசான மூர்த்தாய நாம: தத்புருஷ பத்ராய நம: என்று தொடர்ந்தார்.

பூஜை மந்திரங்களுக்குப் பிறகு தேவாரம், திருவாசகம் ஓத ஆரம்பித்தார். உலக பந்தத்திலிருந்து விடுபடும் ஜீவன் பரமாத்மாவைச் சென்றடையும் ஆன்ம யாத்திரைக்கான துதிப்பாடல்கள்தாம் அவை. அவைகளை அவர் அனுபவ ஆதங்கத்தோடு பாடினார். எல்லோரும் சரவண முதலியாரையே கவனித்துக் கொண்டிருந்தனர். திருவாசகப் பாடல்கள் சிலவற்றைப் பாடி முடித்தார். இறுதியாகப் பட்டினத்தாரின் 'கல்லாப்பிழையும், கருதாப் பிழையும்...' என்று தொடங்கும் பாடலைப் பாடினார். அந்தப் பாட்டின் கடைசி வரியான எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் இறைவா!' என்று வணங்கவும் அவரது உடல் கட்டிலில் சரியவும் சரியாக இருந்தது. ஆம் சரவண முதலியார் சிவலோக பதவி அடைந்தார். சிவபூஜையின் பெருமையை முற்றிலும் உணர்ந்தார். 'கடவுள் இல்லை என்று இனி யார் உரைத்தாலும் தமது உறுதிப்பாடு மாறவே மாறாது' என்று இன்றும் உறுதியுடன் வாழ்ந்து வருகிறார் அவர்.
'பெருஞ்சொல் விளக்கனார்' என்று பெயர் பெற்ற அ.மு. சரவண முதலியாரின் திருமகனார் தமிழ்ப் பெராசிரியரும் அறிஞருமான திரு. அ. ச. ஞானசம்பந்தம் ஆவார்.


இது நான் Modern Tamil World ல் படிச்சது.

13 comments:

MyFriend said...

யக்கா.. எப்போ சரித்திர டீச்சரா ஆனீங்க?

க்ளாஸ்ல டீச்சர் பாடம் நடத்துற மாதிரிய்யே இருக்கு.. :-P

Dreamzz said...

naan kooda muthal variay padichitu enani pathinu thappa ninachuten :D
hehehe ;)

D

Dreamzz said...

naan kooda muthal variay padichitu enani pathinu thappa ninachuten :D
hehehe ;)

D

மெளலி (மதுரையம்பதி) said...

மிகவும் சுவாரஸ்யமான செய்தி. நன்றி.

Anonymous said...

அருமையான செய்தி. சிரமம் பாக்காம தட்டி அல்லது காப்பி பேஷ்ட் பண்ணியதுக்கு நன்னி. :)


//யார் அந்த சிவப்பழம்?//
நான் கூட 'மாதவி பந்தல்' KRSதான்னு சொல்ல வந்தேன். ஆனா அவர் பெருமாள் பழம் ஆச்சே! :p

தி. ரா. ச.(T.R.C.) said...

சத்தான விஷ்யத்தை முத்தாக தந்ததற்கு நன்றி.

Dubukku said...

ஓம் நமச்சிவாய...நல்ல தகவல்

வொய் சோ பக்தி???

Sumathi. said...

ஹாய் அனு,

//யக்கா.. எப்போ சரித்திர டீச்சரா ஆனீங்க?
க்ளாஸ்ல டீச்சர் பாடம் நடத்துற மாதிரிய்யே இருக்கு.. ://

ஏம்மா தங்கச்சி -உனக்கு இத படிச்சா சரித்திரம் மாதிரி இருக்கா?
இல்ல என்னை பாத்தா சரித்திர டீச்சர் மாதிரியா இருக்கா?

இதெல்லாம் ரெம்ம்ம்ப ஒவ்வரா இல்ல?

Sumathi. said...

ஹாய் தினேஷ்,

//naan kooda muthal variay padichitu enani pathinu thappa ninachuten :D//

ஏன் நீகூட சிவ சிவா னு சொல்லு உனக்கு கூட அழகான ஒரு தேவதை கிடைப்பாள்.உன் கவிதை மாதிரியே..ஹி ஹி ஹி ஹி

Sumathi. said...

ஹாய் மதுரையம்பதி,

வாங்க வாங்க.

//மிகவும் சுவாரஸ்யமான செய்தி. நன்றி//

ஏதோ இந்தபுது வருஷத்துலயாவது நல்லதா நாலு வார்த்தை சொல்லலாமேனு தான், ஹி ஹி ஹி ஹி
ரொம்ப நன்றினிங்கோ படிச்சு அனுபவிச்சதுக்கு

Sumathi. said...

ஹாய் அம்பி,

//யார் அந்த சிவப்பழம்?//
நான் கூட 'மாதவி பந்தல்' KRSதான்னு சொல்ல வந்தேன். ஆனா அவர் பெருமாள் பழம் ஆச்சே! :p//

ஆமாம், ஆனா அவர் சிவபெருமாள் பழமும் கூட தெரியுமா?

Sumathi. said...

வாங்க தி. ரா. ச.(T.R.C.) சார்,

படிச்சதுக்கு நன்றி. ஆனாலுமுங்க்லை மாதிரியெல்லாம் தர முடியல..


ஹாஉ டுபுக்ஸ்,

//வொய் சோ பக்தி???//
ஆமாம், இல்லைன்னா ப்ளாக் எழுத முடியாதாம், அப்படீன்னு நம்ம சிவல்புரி சிங்காரம் சொன்னார். ஹி ஹி ஹி..(சும்மா தமாஷுக்கு)

திவாண்ணா said...

நல்ல பதிவு. நன்றி!