Tuesday, March 13, 2007

கல்யாணந்தான் கட்டிகிட்டு.....

ஹாய் FRIENDS,

எப்படி இருக்கீங்க? ஹி ஹி ஹி ஹி... நான் கொஞ்ச நாள்
ஜாலியா ஊர சுத்துட்டு வந்தேன். நல்லா மூக்கு பிடிக்க 3
வேளயும் துன்னுபுட்டு கேரளாவுல இருக்கிற எல்லா பீச்சயும்

சுத்திபுட்டு வந்தேன். ஆஹா கேரளா பீச்சு என்னமா இருக்கு..
அதுவும் அந்த கோவளம் இருக்கே.... சும்மா சொல்லக் கூடாது
அந்த பீச்சுல வெளி நாட்டு பிகருங்களை டூ பீஸுல பாக்க 2

கண்ணூ போதாது..அதுக்காக நாம அதையெல்லாம் பாத்து
ஜொள்ளூ விடுவோமா என்னா? நம்ம ஸ்டேட்டஸ் என்னாவும்?
அதுக்காக பாக்காம வருவமா? சும்மா அப்படியே ஓரக்கண்ணால

ஒரு லுக்கு விட்டுகிட்டே ஒரு கையில ஐசையும் நக்கிகிட்டே
சும்ம பந்தாவா ஒரு ரவுண்டு வந்தோம்ல...

அப்பரமா ஒரு மூனு சினிமா பாத்துட்டு அதுவும் நம்ம
தமிழுக்காக
சண்டையெல்லாம் போட்டு ...ம்ம் ஒரு வழியா சினிமா
பாத்துட்டு வந்தோம். எங்கே போனாலும் நம்ம
அருணயும் ஷ்யாமயும் மட்டும் மறக்கவே முடியலைங்க.
ஏன்னா அங்க கிடைக்கற ஆப்பமும் கடலக்
கறியும் அருண ஞாபகப் படுத்தியது. அப்பறமா நம்ம

தோஸ்துக்கு (செந்தில்IAF தான்)கிடைக்கும் (தண்ணிதான்)
ஷ்யாம ஞாபகப் படுத்தியது.
அப்ப ஒரு நாள் நாங்க போக்கிரி படம் பார்க்க
போன கதய நினைச்சாலே... அத ஒரு போஸ்டாவே
போடலாம்.


சரி இப்ப எனக்கு ஒரு மெயிலில் வந்த படம் தான் இது.


WHAT IS MARRIAGE MEANS......?
ஷ்யாம் இத பாக்கும் போது உங்க ஞாபகம் வருது ...
நீங்க எப்பவும் பூரி கட்ட ஞாபகமாவே இருபீங்க இல்ல?
அப்ப சரி தான்....


அது சரி இதுல எனக்கு ஒன்னுமே புரியல.. உங்களுக்கு?

புரிஞ்சா மட்டும் நீங்க ஒத்துக்கப் போறீங்களா என்ன?

18 comments:

Syam said...

first ah illaanu theriyalaye... :-)

Syam said...

கேரளா போனீங்களா....அவ்வ்வ்வ்வ்வ்....சொல்லவே இல்ல....எனக்கு கேரளா அதுவும் கோவளம் நினைச்சா அழுகையா வருது...ஊர்ல இருக்கும் போது நினைச்சா போவோம்.... :-)

Syam said...

கேரளா போயும் எங்கள நினைச்சுகிட்ட உங்க பாசத்த என்னனு சொல்ல :-)

Syam said...

//ஷ்யாம் இத பாக்கும் போது உங்க ஞாபகம் வருது ...
நீங்க எப்பவும் பூரி கட்ட ஞாபகமாவே இருபீங்க இல்ல//

எனக்கு பூரி ரொம்ப பிடிக்கும் அதுனால தான் :-)

Arunkumar said...

kerala poneengala? super

anga poi engala nenachirkinga.. neenga oru 200 yrs nalla irukkanum :)

Arunkumar said...

aiyo college trip nyabagam vandurche... inime velai nadantha maathiri thaan :P

Arunkumar said...

kovalam beach romba supera irukkum... hmm, volley ball velayadra maathiri , beach paakura maathiri act vittutu andha figures paatha supera irukkum :)

Arunkumar said...

paathingala "WELCOME BACK" solla marandhuttene..

Arunkumar said...

//
அது சரி இதுல எனக்கு ஒன்னுமே புரியல.. உங்களுக்கு?
//
idhula ennga pudiyala?
marriage life-a puttu puttu vechirukaanga :)

dubukudisciple said...

sumathi!!
unga veetula ippadi thaan iruka marriage life???

ambi said...

ஹஹா! ROTFL :)
ஆயிரம் சொல்லுங்க, ஒமனகுட்டிகளுக்கு நிகர் உண்டா?

//நீங்க எப்பவும் பூரி கட்ட ஞாபகமாவே இருபீங்க இல்ல?
அப்ப சரி தான்....//
//எனக்கு பூரி ரொம்ப பிடிக்கும் அதுனால தான் //

@syam, போதும் கண்ணா! ரீலு அந்து போச்சு! :)

Sumathi said...

ஹாய் ஷ்யாம்,

ஆமாம், சாட்சாத் நீங்களேதான்.

ஆமாம் ஷ்யாம், நண்பர் ரொம்ப விரும்பி கூப்பிட்டாரு, தட்ட முடியல அதான் ஜாலியா ஒரு ட்ரிப்.

ஆமாம் அந்த கோவளம்,சங்கு முகம், அப்பறம் வர்க்கலா இப்படி எல்லா கடலோடயும் நல்லா ஆட்டம் போட்டுட்டு வந்தேன்.

அப்பறம் அந்த கடல்ல போற கப்பலயெல்லாம் பாக்கும் போது நம்ம கடல் கணேசனோட ஞாபகம் வந்தது.

//கேரளா போனீங்களா....அவ்வ்வ்வ்வ்வ்....சொல்லவே இல்ல..//

அது சரி சொல்லியிருந்தா நீங்களும் வந்து இருப்பீங்களே..இன்னும் ஜாலியா சைட் அடிச்சிருக்கலாம்.

//எனக்கு பூரி ரொம்ப பிடிக்கும் அதுனால தான் :-)//

பூரிக் கட்டைக்கு இப்படி ஒரு சமாளிப்பா? பேஷ். பேஷ் ரொம்ப நன்னாயிருக்கு.

Sumathi said...

ஹாய் ஷ்யாம்,

//எனக்கு கேரளா அதுவும் கோவளம் நினைச்சா அழுகையா வருது...ஊர்ல இருக்கும் போது நினைச்சா போவோம்.... :-)//

அடடா... இதுக்கெல்லாம் போயி கண் கலங்கிட்டு... நீங்க ஒ.கேன்னு சொல்லுங்க இன்னொரு ட்ரிப்பு அடிச்சிடுவோம். ஓசியில "கவணிக்க" தான் ஒரு ஆளுரிக்கில்ல...

Sumathi said...

ஹாய் அருண்,

ஹி ஹி ஹி.. ஆமாம் அங்க தினமும் உங்க ஞாபகம் தான் போங்க. ஆஹா ஆப்பம்-அருண் என்ன காம்பினேஷன்..

//hmm, volley ball velayadra maathiri , beach paakura maathiri act vittutu andha figures paatha supera irukkum :)//

அட ஆமாம், நான் கூட பாத்தேன்,
ஓஓஓஓஓ இது தானா அது.என்ன கூட 2, 3 பேரு சைட்டு அடிச்சுகிட்டு இருந்தாங்க...

நான் கூட நண்பர்ட்ட கேட்டேன் இங்க எதுக்கு விளையாடறாங்கனு... இதுக்கு தானா...

என்ன இருந்தாலும் அந்த பீச்சுல அலையோட காலார நடக்கற சுகமே தனி.

Sumathi said...

ஹாய் அருண்,

//paathingala "WELCOME BACK" solla marandhuttene..//

தேங்க் யூ..தேங்க யூ. தேங்க் யூ...

Sumathi said...

ஹாய் சுதா,

விட்டா முடிவே பண்ணிடுவீங்க போலருக்கே...

Sumathi said...

ஹாய் அம்பி,

//ஆயிரம் சொல்லுங்க, ஒமனகுட்டிகளுக்கு நிகர் உண்டா?//

அது சரி, நீங்க அந்த ஓமனக்குட்டிகிட்ட இருந்து புடவைய அடிச்சீங்கல்ல அதான் அந்த பாசம் பேசுது.

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Missing since many days.

Welcome back ?!?

First Photola - Onnu Panni innonnu innaadhu ?!

May God Bless.