Thursday, January 17, 2008

மெளனமே பார்வையால்....

அதிகாலை இருள் பிரியும் முன்
என் நினைவலைகள் என்னை
தட்டி எழுப்பின..


"உன்னவன் தேடி வரும் நேரத்தில்
ஏன் இன்னும் உறக்கம்?"


மின்சாரம் தாக்கியதுபோல
துள்ளி எழுந்தேன்..


அதற்குள் வந்து விட்டான்
வந்தே விட்டான் என்னவன்.


என் தூக்கத்தை கலைக்க
விரும்பாமல்,
மெல்ல அடி எடுத்து
வரும் முன்னே
என் மனம் துள்ளி உணர்ந்து
ஓடி திறந்தது வாயில் கதவு.


அந்த நிமிடத்தில்
சந்தித்துக் கொண்டது
நான்கு கண்களும்..


பல கேள்விகளும் பதில்களும்
ஆம், கேட்கமுடியாத
கேள்விகளும் பதில்களும்.


"என் வரவுக்காக் இரவெல்லாம்
தூங்காமல் விழித்திருந்தாயா?"


"இல்லை, ஆனால் என் மனமும்
உணர்வும் தான் தூங்கவில்லையே",


"அப்படியானால் உனக்கு
ஆர்வமில்லையா?"


"இது என்ன வரும் முன்னே
விசாரனை?"


"ஏன் கேட்கக் கூடாதா?"


"ஆனால் உங்கள் கண்கள்
அப்படி சொல்லவில்லையே?"


"என்ன சொல்லிற்று?"


"ஏதோ என்னை ஏமாற்ற
திட்டம் தீட்டியது போலல்லவா
தெரிகிறது.."


"அப்படியா?
காட்டிக் கொடுத்து விட்டது,
துரோகி."


"சரி அந்த துரோகிக்கு
நான் சரியான தண்டனை கொடுக்கவா?"


"ஆகட்டும் மகாராணி"


"இந்த கண்களில் நான் என்றும்
உங்களின் அன்பை மட்டுமே
காண வேண்டும் ஆயுள்வரை".


இது தான் நான் கொடுக்கும் தண்டனை.


"நான் இந்த கண்களை கானாமல்
விட்டிருந்தால் என் வாழ்நாளில்
உன் அன்பை அறியாமலே
போயிருப்பேன்,


சரியான தண்டனைதான்."


"என் அன்பு அத்தனை உயர்ந்ததா?"


"உன் தூய்மையான அன்பிற்கு
உயர்வு தாழ்வு கூட உண்டா?"


"எத்தனை பாக்கியம் செய்திருக்கிறேன்
உன் இந்த அன்பையும் காதலையும் பெற.."

6 comments:

dubukudisciple said...

ennanga idu.. ippadi kavithai ellam potu asathi irukeenga.. seri sonthama iravala??
sonthama iruntha supera iruku

Dreamzz said...

Wow, supera irukku :)
keep going :)
Belated Happy Pongal :)

Sumathi. said...

ஹாய் டிடி,

என்னப்பா இது எப்பவோ ஒரு வாட்டி எழுதறேன், இத போயி இரவலானு கேட்டுட்டீங்களே? எல்லாம் என் சொந்தம் தான்..

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்

தேங்க்ஸ்பா. என்ன இருந்தாலும் உன்னை போல வரலையே...

ஹாய் வேதா,

//அருமையான உணர்வுகள் நல்லா இருக்கு :)//

என்ன உங்களை மதிரி வடிக்கத் தான்
முயற்சி பண்றேன், ம்ஹூம் முடியல..
எல்லாம் ஒரு வரம்...

நிரஞ்சன் said...

வணக்கம் சுமதி...
காட்சிகள் கண் முன்னே விரிகிறது...
வேறென்ன சொல்ல? அழகு...

ரசிகன் said...

அவ்வ்வ்வ்......இம்புட்டு அருமையா கவிதை எழுத தெரியுமா உங்களுக்கு ?
சூப்பர்....

//"உன் தூய்மையான அன்பிற்கு
உயர்வு தாழ்வு கூட உண்டா?"

"எத்தனை பாக்கியம் செய்திருக்கிறேன்
உன் இந்த அன்பையும் காதலையும் பெற.."//

பாக்கியம் செய்திருக்கனும் இப்படியெல்லாம் கவிதை எழுத தெரிய:P
ரிப்பீட்டேய்ய்ய்ய்ய்ய்.....

நல்லா இருக்குங்க மின்னல்