Thursday, October 25, 2007

எனக்கு வந்த சோதனை..

ஹாய் FRIENDS,

எனக்கு கம்ப்யூட்டர் தெரியாது. கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் தெரியாது,
நான் ஒத்துக்கறேன். அதுக்காக என்னக்கு இப்படிலாம் சோதனை வரலாமா?

எனக்கு ஒரு தம்பி இருக்கான். பாவம் சூது வாது தெரியாத பையன்.
அதுவும் இந்த யுகத்துல நம்மளை மாதிரி வாழுற ஒரு பையன், கணக்குல புலினுலாம் சொல்வாங்க, ஆனா பாருங்க அவனுக்கு தெரியாத ஒரு விஷயம். ஆமாங்க அவனுக்கு வேலை கிடைச்சு எங்கூருக்கு வந்து
சேர்ந்தான். எங்களோட இருந்து நல்லா வேலைலாம் கத்து கிட்டு நல்ல பேரும் வாங்கினான். ஆபீசுலதான்.(அப்ப வீட்டுல னு கேக்கப்டாது)

நாங்கல்லாம் சேர்ந்து அவனை கொஞ்சம் நம்ம மாதிரி ஆக்கனும்னுட்டு ( ரொம்ப ஆசாரமான பையன்) ஏதேதோ ப்ளான்லாம் பண்ணி கொஞ்சம் கொஞ்சமா ட்ரை பண்ணோம். ஒரு நாள் எல்லாரும் சேர்ந்து ஹோட்டலுக்கு போலாம்னு முடிவு செஞ்சு அவனையும் கூட்டிகிட்டு போனோம். நானும் இன்னுமொரு குடும்பமும்(என் தங்கை) சேர்ந்து அவனை தள்ளி கிட்டு போனோம். இறைவா, அங்க தாங்கோ எங்களுக்கு சோதனையே ஆரம்பிச்சுது.

ஹோட்டல்ல பேரர் வந்து எல்லாருக்கும் மெனு கார்டு குடுத்துட்டு எங்களோட ஆர்டருக்காக காத்துகிட்டு இருந்தார். நாங்களும் அந்த கார்ட
பாத்து எங்களுக்கு பிடிச்சதை எல்லாம் சொல்லிகிட்டு இருந்தோம்.
என் தம்பி அந்த கார்ட முன்ன பின்ன பாத்துட்டு இருந்த இடத்திலயே
வச்சிட்டான். நாங்கல்லாம் அவன் கிட்ட என்ன வேனுமின்னு கேட்டதுக்கு
அவன் சாதம், பருப்பு, ரசம் போதும்னு சொன்னான். நாங்கல்லாம் அவனை
ஒரு மாதிரி 'ங்ஏ' னு பாத்துட்டு விட்டுட்டோம்.


எல்லா அயிட்டமும் வந்தது, நாங்களும் ஒரு பிடி பிடிச்சுட்டு போதாத கொறைய்க்கு ஐஸ்க்ரீமும் இதே மாதிரி பெரிய "டிஸ்கஷன்" லாம் நடத்தி
ஒரு வழியா மை டார்லிங்" மாதிரி ஒரு பேரை சொல்லி ஆர்டர் குடுத்து
அப்பறமா அதையும் நல்லா சாப்டுட்டு கூட ஒரு பீடாவும் போட்டுட்டு வீட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

அங்கதான் எனக்கு சோதனை. என் தம்பி அக்கா ஹோட்டல்ல நீங்கல்லாம் ஒரு புக்கு மாதிரி எதயோ வச்சிகிட்டு ஆர்கியூ பண்ணிட்டு இருந்தீங்களே
அது என்னக்கா? னு கேட்டான் பாருங்க. இந்த வேதனையை சோதனைய
எங்க போயி சொல்றது?.

அப்பறமா அவனுக்கு என் ரங்குவும் நானும் உக்கார வச்சி ஒரு வழியா
எல்லா மந்தரத்தையும் போதிச்சு முடிய ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் .... அப்பாஆஆஅ
நடுராத்திரி ஆச்சு. இப்ப கூட நாங்கல்லாம் அவனை பாத்தா இத சொல்லி கிண்டலடிப்போம். நாட்டுல இப்படி கூட நல்ல பசங்கல்லாம் இருக்காங்க
அதனால தான் வருஷா வருஷம் தவறாம மழை பெய்யுது.நல்லா வெயில்
காயுது.நீங்க என்ன சொல்றீங்க?(ஹா ஹா ஹா ...எல்லாரும் மொக்கை போடறாங்க... இது என் பங்கு மொக்கைங்கோஓஓஓஓ)

13 comments:

Raghavan alias Saravanan M said...

ஹாய் சுமதி,

இது ஏதோ 'ஏப்ரல் மாதத்தில்' படத்துல வர்ற ஸ்ரீகாந்த் தம்பி கேரக்டர் மாதிரி இருக்கும்னு நெனச்சேன். ஒரு அளவுக்கு அந்த மாதிரித் தான் இருக்கு.

ஆனா என்ன சொல்ல வர்றீங்க ன்னு புரியலயே.. திடீர்னு உப்புச்சப்பு இல்லாம முடிச்சிட்டீங்க..

இதுக்கு நான் வெச்ச சாம்பார் இன்னைக்கு எவ்வளவோ மேல்! :)

எனக்குத் தோணுனத சொன்னேன்!

dubukudisciple said...

enaka solla vareenga
konjam kozhapama iruku...
ana supera ezhuthi irukeenga..
neenga pesama oru tv serialku kadai ezhuthalam

நாகை சிவா said...

அறிந்தும் அறியாமல்
புரிந்தும் புரியாமல் பலர் இருக்காங்க போல உங்க பதிவ படிச்சு....

தலைப்ப வச்சு நாங்களே ஒரு மாதிரி கதை புரிஞ்சுக்கிட்டோம்... எத்தன மொக்கை தமிழ் பட பாத்து இருக்கோம்... ஹிஹி...

இருந்தாலும் இப்ப எல்லாம் சின்ன சின்ன ஊர்ல கூட மெனு கார்டு இருக்கு... அது போக அதை கையில் பார்த்து உணவுகளின் பெயரும் விலையும் தான் அதில் இருக்க போகுது... அதை பார்த்த பிறகுமா அண்ணாத்தைக்கு அது என்னனு புரியல...

ரொம்பவே நல்லவரா இருக்காரே...

Sumathi. said...

ஹாய் ராகவ்,

//இது ஏதோ 'ஏப்ரல் மாதத்தில்' படத்துல வர்ற ஸ்ரீகாந்த் தம்பி கேரக்டர் மாதிரி இருக்கும்னு நெனச்சேன். ஒரு அளவுக்கு அந்த மாதிரித் தான் இருக்கு.//

அதே தாங்கோ,ஆனா அதைவிட மோசம்.


//ஆனா என்ன சொல்ல வர்றீங்க ன்னு புரியலயே.. திடீர்னு உப்புச்சப்பு இல்லாம முடிச்சிட்டீங்க..//

இப்ப படிச்சு பாருங்க கொஞ்சம் மாத்திட்டேன்.

//இதுக்கு நான் வெச்ச சாம்பார் இன்னைக்கு எவ்வளவோ மேல்! :)//

அட அது எப்படி? நாங்க டேஸ்ட் பண்ணாம எப்படி சொல்ல முடியும்?

அது தான் மாத்திட்டேன்.

Sumathi. said...

ஹாய் சுதா,

//enaka solla vareenga
konjam kozhapama iruku...
ana supera ezhuthi irukeenga..
neenga pesama oru tv serialku kadai ezhuthalam//

என்னக்கா நீங்க இப்புடி சொல்லிபுட்டீங்க...

சரி சரி நீங்க சொன்னா சரியா தான் இருக்கும்.

Sumathi. said...

ஹாய் சிவா,

//அறிந்தும் அறியாமல்
புரிந்தும் புரியாமல் பலர் இருக்காங்க போல உங்க பதிவ படிச்சு....//

ஹி ஹி ஹி.. இதெல்லாம் பதிவு வாழ்க்கையில சாதாரணமப்பா.

//தலைப்ப வச்சு நாங்களே ஒரு மாதிரி கதை புரிஞ்சுக்கிட்டோம்... எத்தன மொக்கை தமிழ் பட பாத்து இருக்கோம்... ஹிஹி...

அட அவ்ளோ ஈசியாவா இருக்கு.

//ரொம்பவே நல்லவரா இருக்காரே...//

ஆமாம் ரொம்ப்ப்பவே நல்லவரு தான்.
நிஜமாவே.

ரசிகன் said...

அடப்பாவமே.. உங்களுக்கு (அதுவும் உங்களுக்கு) இப்பிடி ஒரு (சொந்த(?) )தம்பியா?...நம்ப முடியலியே..

// அப்பறமா அவனுக்கு என் ரங்குவும் நானும் உக்கார வச்சி ஒரு வழியா
எல்லா மந்தரத்தையும் போதிச்சு முடிய //

இதுக்கு நீங்க இம்புட்டு சிரமப்படனுமா என்ன?.. உங்க தம்பிய..ஒரு நாளு நாளைக்கு இங்க எங்கிட்ட அனுப்பி வையிங்க.. நம்மோட நண்பர் பட்டாளத்துங்க கிட்ட கூட்டிப்போறேன்..ஆனா பின்ன நீங்க என்னிய திட்டப் படாது?..

[அட நானும் இங்க வரத்துக்கு முன்னாடி..அதப்போல தாங்க இருந்தேன்.வந்தப்பறம் பொதுஅறிவு பொசுக்குன்னு ஏறிடுச்சில்ல..(ரோடுகள் நினைவுக்கு வரலன்னு சொன்னதுக்காக.. தப்பு தப்பாவழி சொல்லி..அலையவுட்டு என்னிக்குமே வழி மறக்கமுடியாதள்வு செஞ்ச மகா புத்திசாலிங்களாம் இருக்காங்கல்ல... ]

ரசிகன் said...

// நாட்டுல இப்படி கூட நல்ல பசங்கல்லாம் இருக்காங்க//
என்னியயும் சேத்துதான சொல்றிங்க.. தாங்க்ஸ்பா..

ரசிகன் said...

//அதனால தான் வருஷா வருஷம் தவறாம மழை பெய்யுது.நல்லா வெயில்
காயுது.நீங்க என்ன சொல்றீங்க//
மழை கொஞ்சம் ஓவராவே பெய்யுதாமே?...

ரசிகன் said...

//(ஹா ஹா ஹா ...எல்லாரும் மொக்கை போடறாங்க... இது என் பங்கு மொக்கைங்கோஓஓஓஓ)//
யாருக்கோ உள்குத்து போல தெரியுதுங்க.. இதுல பங்கு வேரயா?..ம்..நடத்துங்க..நடத்துங்க...

காரூரன் said...

அனேகமாக பசங்க அப்பாவிகள் தான் ஆனால்..., மேலே ஒன்றும் சொல்லல்ல, சந்தர்ப்பங்களின் பிரதிபலிப்புக்கள் தான் வாழ்க்கை.

Dreamzz said...

rofl! enna koduma ithu ?

மங்களூர் சிவா said...

என்னைபோலவே இன்னொரு அப்பாவி. ஹும்.

ஆமா அது என்ன புக் வெச்சிகிட்டு ஆர்க்யூ பன்னுனீங்க கடைசி வரைக்கும் சொல்லவே இல்லை