Monday, October 22, 2007

ஆஹா! கவிதையால் கைது செய்.

ஹாய் மக்கள்ஸ்,

எல்லாரும் நல்லா சுண்டல்லாம் சாப்டுட்டு கொலுவையும் நல்லா
ரசிச்சிருப்பீங்க னு நினைக்கிறேன். அதே மாதிரி இங்க கீழ இருக்கற
கவிதையும் நல்லா ரசிச்சுட்டு போங்க. எங்கப்பா சொல்வாரு உனக்கு
வராதுன்னு தெரிஞ்சும் ஏன் அத இப்படி கொலை பண்றேன்னு,அதுக்காக
சும்மா விட்ருவமா, அதானே எனக்குதான வரலை, அதுவா தானே வந்து
என் காதுல விழுந்து 'கேளு, கேளு னு சொல்லும் போது கூடவா கேக்க
கூடாது. சரி இங்க இருக்கறது எல்லாமே ஆஹாFM ல சனி, ஞாயிறுல
ராத்திரி 9-11 வரைக்கும் சொன்னது தான். மக்களே (நாகை சிவா) தயவு
செஞ்சு இதுக்கெல்லாம் சொந்தக்காரங்க யாருன்னு மட்டும் கேக்காதீங்க,
ஏன்னா அத அவங்கலே சொல்ல்லலை..சொல்லலை. ..சொல்லலை..
இதுல்லாம் நான் ரொம்ம்ப ரசிச்சது.உங்களுக்கும் பிடிக்கும் னு நினைக்கிறேன்.

மணம் வீசும் மலர்களே,
செடியை விடுத்து தரைக்கு
வாருங்கள்,
பெருமை அடைவீர்கள்.
உண்மை தான்
இந்த வழியில் தான் என்னவள்
வந்து கொண்டிருக்கிறாள்...
உன்னை நினைக்க போவதில்லை,
ஆம், உன்னை நினைக்கவே போவதில்லை
சத்தியமாக சொல்கிறேன்.

இனியவளே,

எனது இந்த வைராக்கியம் தான்
உன்னை மீண்டும் மீண்டும்
நினைக்கத் தூண்டுகிறது.இருந்த இடத்தில்தான்
இதயம் துடிக்கும் - இது அறிவியல்.
என்னவளே,

நீ இருக்கும் இடத்தில் தான்
எனது இதயம் துடிக்கும் - இது காதல்.உனது விழிகளுக்கும்
வலிமை உண்டு என
உன் பார்வையை பார்த்து
தெரிந்து கொண்டேன்.

என் இதயத்திற்கும் வலிமை
உண்டு என்பதை
நீ என்னை தவிர்த்த போது
தெரிந்து கொண்டேன்.முள்மீது ரோஜா தூங்கினாலும்
கணத்து போகும் இதயம்.
இனியவளே,
இது உனக்கு தெரிந்தும்
ஏன் என்னை வதைக்கிறாய்?

ஒன்று செய்
கவலைகளை மறந்து விடு
இல்லையேல்,
என்னிடமாவது மறைத்து விடு.

27 comments:

Tharuthalai said...

கத்தரிக்காயே
நீ
வெயிலில்தான் வதங்குவாய்.
நான்
நிழலிலும் வாடுகிறேன்
என் காதலியைப் பார்க்கததால்.

பாலே
நீ
திர்ந்து தயிராய்தான் போவாய்.
நான்
திரிந்து மயிராகிறேன்
என் காதலியைப் பார்க்காததால்.

எள்ளே
நீ
எண்ணெய் போனபிந்தான் புண்ணாக்காகிறாய்.
நான்
என்னை அவள் மறந்தபின் புண்ணாகிறேன்.


---------------------
தறுதலை
(தெனாவெட்டுக் குறிப்புகள்-'07)
என் வாழ்க்கை இணையம் முழுவதும் கழிந்து கிடக்கிறது.

gils said...

i thefirst commenta?

Dreamzz said...

padangalum super, kavidhaiyum super!

வேதா said...

தபூசங்கர் கவிதைகள் மாதிரி இருக்கு :)

ரசிகன் said...

ஹாய்..சுமதி,எப்பிடிப்பா இதெல்லாம்...
காப்பி அடிச்சாலும்(இன்னும் காலேஜ் பழக்கத்த மறக்கலேன்னு தெரியுது) ,கரட்டான கவிதையைத்தா புடிச்சியிருக்கிங்க..

// ஆம், உன்னை நினைக்கவே போவதில்லை, எனது இந்த வைராக்கியம் தான்
உன்னை மீண்டும் மீண்டும்
நினைக்கத் தூண்டுகிறது.// அடடா.. அருமை.நாங்கூட தூங்கனுமின்னு நெனச்சிடேயிருந்தா, சொல்லிவச்ச மாதிரி தூக்கமே வரதில்ல..மனசு ஒரு மங்கி யாமே.

// நீ இருக்கும் இடத்தில் தான்
எனது இதயம் துடிக்கு // புல்லரிக்குதுங்க.(உடனே டாக்டரப் போயி பாக்கனுமெல்லாம் சொல்லப் படாது)எழுதனவங்க யாராயிருந்தாலும்,எனது பாராட்டுக்கள். நான் தவற விட இருந்த கவிதை முத்துக்களை,கோர்த்து மாலையாக்கித் தந்த தோழி சுமதிக்கும் ஒரு thanks...

ரசிகன் said...

அப்பறம் அந்த கவிதையோட போட்டிருக்குர அழகான பெண் ஒவியம் போல எங்க கெடைக்குது.. நல்லாயிருக்கில்ல...படத்த பெருசாக்கி,பாத்தாக்கா.. அந்த கண்களே எதோ கவிதை சொல்ற மாதிரி இருக்கு.

Raghs | இராகவன் said...

ஹாய் சுமதி,

//அதுவா தானே வந்து
என் காதுல விழுந்து 'கேளு, கேளு னு சொல்லும் போது கூடவா கேக்க
கூடாது. //

அதானே.. சும்மாவா விடறது? சூப்பர் போங்க...

Raghs | இராகவன் said...

//ஏன்னா அத அவங்கலே சொல்ல்லலை..சொல்லலை. ..சொல்லலை..
இதுல்லாம் நான் ரொம்ம்ப ரசிச்சது.உங்களுக்கும் பிடிக்கும் னு நினைக்கிறேன்//

பரவால்ல.. பரவால்ல .. பரவால்ல..

கண்டிப்பா.. பின்ன.. படிக்கிறோம்ல..

Raghs | இராகவன் said...

கவிதை 1:

//மணம் வீசும் மலர்களே,
செடியை விடுத்து தரைக்கு
வாருங்கள்,
பெருமை அடைவீர்கள்.
உண்மை தான்
இந்த வழியில் தான் என்னவள்
வந்து கொண்டிருக்கிறாள்...//

நல்லாயிருக்கு.. ஆனா இதே கருத்தை வேறவிதமா இன்னும் நல்லாக் கேட்டிருக்கேன்..

Raghs | இராகவன் said...

கவிதை 2:

//உன்னை நினைக்க போவதில்லை,
ஆம், உன்னை நினைக்கவே போவதில்லை
சத்தியமாக சொல்கிறேன்.

இனியவளே,

எனது இந்த வைராக்கியம் தான்
உன்னை மீண்டும் மீண்டும்
நினைக்கத் தூண்டுகிறது.
//

அடடா.. அருமை போங்க

எனக்கொரு பாட்டு ஞாபகம் வருது. 'ரோஜாவனம்' படத்துல வரும் 'மனமே மனமே தடுமாறும் மனமே' ன்னு ஒரு பாட்டு. ஸ்ரீனிவாஸ் பாடுனது.

'ஆல விருட்சம் போல வளருது அழகுப்பெண்ணின் நினைப்பு
வெட்டி எறிந்து பார்த்தேன் மறுபடி வேரில் என்ன துளிர்ப்பு' ன்னு..

ரொம்ப ரசிச்ச பாடல்.. அருமையான வரிகள்..

சூப்பர் போங்க.. படம் ரொம்பவே பொருத்தம்! :)

Raghs | இராகவன் said...

கவிதை 3:

//இருந்த இடத்தில்தான்
இதயம் துடிக்கும் - இது அறிவியல்.
என்னவளே,
நீ இருக்கும் இடத்தில் தான்
எனது இதயம் துடிக்கும் - இது காதல்.
//

நல்லாயிருக்கு! இருதயம் இடம் மாறித் துடிக்குதோ..

Raghs | இராகவன் said...

கவிதை 4:

//உனது விழிகளுக்கும்
வலிமை உண்டு என
உன் பார்வையை பார்த்து
தெரிந்து கொண்டேன்.

என் இதயத்திற்கும் வலிமை
உண்டு என்பதை
நீ என்னை தவிர்த்த போது
தெரிந்து கொண்டேன்.
//

நல்லாயிருக்கு.. ஆனா அந்தக் கண்கள் இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருக்க வேண்டுமோ?

Raghs | இராகவன் said...

//ஒன்று செய்
கவலைகளை மறந்து விடு
இல்லையேல்,
என்னிடமாவது மறைத்து விடு.//

அப்படிப்போடு.. இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் சுகம் பிறகெப்படிக் கிடைக்கும்.. ம்ஹீம்..?

Sumathi. said...

ஹாய் Tharuthalai,

என்னங்க உங்க பேரு இப்படி வச்சியிருக்கீங்க, மாத்துங்க முதல்ல.

அப்பறம், நீங்க போட்ட கவிதைகூட நல்லாவே இருக்குங்க.

Sumathi. said...

ஹாய் கில்ஸ்,

//i thefirst commenta?//

ஹா ஹா ஹா ஹா ஜஸ்டு மிஸ்ஸு..

Sumathi. said...

ஹாய் டிரீம்ஸ்,

//padangalum super, kavidhaiyum super!.//

தேங்க் யூ.

Sumathi. said...

ஹாய் வேதா,

//தபூசங்கர் கவிதைகள் மாதிரி இருக்கு :)//

தெரியல வேதா, இது எல்லாமெ ஆஹா FM ல கேட்டது தான்.அவங்க பேருல்லாம் சொல்றது இல்ல.

இன்னும் கூட நிறைய்ய வச்சிருக்கேன் அப்பப்போ வரும் பாருங்க...

Sumathi. said...

ஹாய் ரசிகா,

//ஹாய்..சுமதி,எப்பிடிப்பா இதெல்லாம்...//
அது அப்படி தான். தான வருது நான் என்ன செய்ய?

//காப்பி அடிச்சாலும்(இன்னும் காலேஜ் பழக்கத்த மறக்கலேன்னு தெரியுது)//

ஏய் என்னப்பா இப்படி லாம், எங்க காலேஜ் ரொம்ப ஸ்டிரிக்க்ட். தலையைகூட திருப்பக் கூடாது. எல்லாம் உங்களை மாதிரி ரசிகர்கள்கிட்ட தான் கத்து கிட்டேன்.
(இது எப்படி)

//கரட்டான கவிதையைத்தா புடிச்சியிருக்கிங்க..//

பின்ன நான் யாரு?

//மனசு ஒரு மங்கி யாமே.//

ஹா ஹா ஹா ஹா... மனசு மட்டும் தானா?

//நான் தவற விட இருந்த கவிதை முத்துக்களை,கோர்த்து மாலையாக்கித் தந்த தோழி சுமதிக்கும் ஒரு thanks...


அட இருங்கப்பு, நான் இன்னும் இத மாதிரி நிறைய்ய ஸ்டாக் வச்சிருக்கேன்ல, அப்பப்போ வரும். அதுக்கெல்லாம் சேர்த்து சொல்லுங்க கடைசியுல ஹி ஹி ஹி....

Sumathi. said...

ஹாய் ரசிகா ரசிகா,

//அப்பறம் அந்த கவிதையோட போட்டிருக்குர அழகான பெண் ஒவியம் போல எங்க கெடைக்குது.. நல்லாயிருக்கில்ல...//

ஹா ஹா... அது என் நண்பன் குடுத்தது.

//படத்த பெருசாக்கி,பாத்தாக்கா.. அந்த கண்களே எதோ கவிதை சொல்ற மாதிரி இருக்கு.//

அது அது அதுக்கு தான் அத போட்டதே..

Sumathi. said...

ஹாய் ராகவ்,

//அதானே.. சும்மாவா விடறது? சூப்பர் போங்க...//

ஆமாங்க, ஒரொருத்தர் சொந்தமாவே சூப்ப சூப்பரா எழுதறீங்க, நான் அட்லீஸ்ட் இப்ப்டியாவது தீத்துக்கறேன்.


//கண்டிப்பா.. பின்ன.. படிக்கிறோம்ல..//
ஹா ஹா ஹா பாவம் அது உங்க விதி.


//நல்லாயிருக்கு! இருதயம் இடம் மாறித் துடிக்குதோ// ஆமாம்.

//நல்லாயிருக்கு.. ஆனா அந்தக் கண்கள் இன்னும் கொஞ்சம் கூர்மையாக இருக்க வேண்டுமோ?//

அய்யோ..கூர்மையா இருந்தா குத்திடாதா?

Sumathi. said...

ஹாய் ராகவ்,

// இருந்தாலும் பகிர்ந்து கொள்ளும் சுகம் பிறகெப்படிக் கிடைக்கும்.. ம்ஹீம்..?//

தலைவர் தலைவியை எப்போதுமே சந்தோஷமாவே பாக்க விரும்புகிறார்.
அதனால் தான் நோ சோகம்..ஹி ஹி ஹி ஹி ஹி ...

நாகை சிவா said...

இதுக்கு கரண்ட் கம்பத்தில் கட்டி வச்சு நாலு அடி அடிச்சு இருக்கலாம்.

சிங்கம்லே ACE !! said...

பெங்களூருல வெயில்னு சொன்னப்பவே சந்தேகப்பட்டேன், இப்படி எதாவது நடக்கும்னு.. :( இதை எழுதி வச்சு பதிவிடறீங்களா??

//கணத்து போகும் இதயம்.//

கனத்து போகும் இல்லயா.. கணம் = நேரத்தை குறிப்பது இல்லயா??

Sumathi. said...

ஹாய் சிவா,

//இதுக்கு கரண்ட் கம்பத்தில் கட்டி வச்சு நாலு அடி அடிச்சு இருக்கலாம்.//

அடடா.. அப்ப ரத்தம்லாம் வருமே, ரொம்ப வலிகூட இருக்குமே..என்ன பரவாயில்லயா?

Sumathi. said...

ஹாய் ஏஸ்,


//பெங்களூருல வெயில்னு சொன்னப்பவே சந்தேகப்பட்டேன், இப்படி எதாவது நடக்கும்னு.. :( இதை எழுதி வச்சு பதிவிடறீங்களா??//


ஹி ஹி ஹி ஹி ஹி ஹி ஹி...
இங்க நல்ல மழை அது தான் சும்மா ஜாலியா ஆன்லைன்ல பாட்டு கேட்டுகிட்டே உங்க ப்ளாக் எல்லாம் படிச்சுட்டு, அப்படியே சுடற வேலையையும் பாத்து கிட்டு..ஹி ஹி ஹி ஹி...

யாழ் வானம்பாடி said...

aha..! good collections!! keep it up Sumathi!

சுபானு said...

அருமையாக இருக்கின்றது... :)