Tuesday, May 15, 2007

சூப்பர் ஸ்டாராக ஆசை..


திருப்பதி உண்டியலைத் திறந்தபோது உருண்ட சில்லறை மாதிரி கலகலவென வார்த்தைகள் உதிர, அஜித்தின் மௌனம் அன்றோடு கலைந்தது. ‘‘முன்பெல்லாம் நான் பேசும்போது எல்லாத்துக்கும் எமோஷனலாகி விடுவேன். அதனால் எனக்கு எவ்வளவோ பிரச்னைகள். இப்போது அப்படிப் பேசுவதில்லை. காரணம். என் வயசு. இன்னிக்கு என்னோட 36வது பிறந்த நாள். இந்த வயதிலும் எனக்குப் பக்குவம் வரலேன்னா எப்படி? இந்தப் பக்குவத்தை வரவழைத்ததில் என் நேசத்துக்குரிய மனைவி ஷாலினிக்கு பெரும் பங்குண்டு.
அடுத்த சூப்பர் ஸ்டார் நீங்கள்தானா?’ என்று மீடியாக்கள் கேட்டபோது, ‘ஆமாம் எனக்கு அந்த நாற்காலி வேணும்’னு நான் சொன்னதை தவறாகப் புரிந்துகொண்டனர். ஏதோ திமிரில் நான் சொல்வதாக என் கன்னத்தில் அறைந்த மாதிரி எழுதினார்கள்.
யார மாதிரி வரணும்னு ஆசைப்படறே?’னு கேட்டால், ஒரு குழந்தை ‘சச்சின் மாதிரி வரணும்னு சொல்லும். இன்னொரு குழந்தை அப்துல்கலாம் மாதிரி வரணும்’னு சொல்லும். குழந்தைகள் மனதில் யாரைப் பிடிச்சிருக்கோ அப்படி வரணும்னு சொல்லும். என்னைப் போன்ற நடிகர்களுக்கு ரஜினி சார்தான் ரோல் சொல்லப் போனால், அது ஒரு தன்னம்பிக்கை. குழந்தைகளிடம் ‘நீ யார் மாடல். எல்லோருக்கும் அவரைப்போல் சூப்பர் ஸ்டார் ஆகும் ஆசை இருக்கும் போது நான் அந்த இடத்துக்கு ஆசைப்பட்டுச் சொல்றது எந்த விதத்தில் தப்புன்னு புரியலை. சிலர் அதை நாற்காலியாகப் பார்க்கலாம். நான் அதை லட்சியமாகப் பார்க்கிறேன். மொத்தத்தில் அது ஒரு முயற்சிதானே’’ என்றார்.

1 comment:

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,
Thala superaa Mazhuppidichi

May God Bless.