Wednesday, May 02, 2007

சிவாஜி.. by விவேக்...

ஹாய்..ஹாய்..ஹாய்ய்...


தமிழ் சினிமா இது வரை காணாத இறுக்கத்தில் இருக்கிறது.
காரணம் சிவாஜி.

வரலாற்றை கி.மு..கி.பி. என்று பிரித்தார்கள். ஆனால் இப்போது
சினிமாவை சி.மு..சிபி. என்று பிரிக்கிறார்கள். அதாவது
"சிவாஜிக்கு முன், சிவாஜிக்கு பின்" என்று.. சிவாஜி முடிவடைந்த
நிலையில் சிவாஜி யூனிட் பற்றி நான் ஏதேதோ எண்ணூகிறேன்..

நான் கீழ்காணும் வகையில் எழுதுவது ஹைக்கூவா..இல்லை
கவிதையா..இல்லை உரைநடையா..இல்லை "மப்பில் எழுதும்
உளர நடையா" என்றெல்லாம் எழும் சந்தேகங்களை வைரமுத்து
சுஜாதா இவர்கள் பார்வைக்கு விட்டு விடுகிறேன்.


ரஜினிஅது ஒரு ரகசியம்!!
ஆசியாவின் அதிசயம்!!!
குழந்தைகளின் 5 ஸ்டார்!!
குடும்பங்களின் சூப்பர் ஸ்டார்!!!
ஸ்டைல்களின் சுரங்கம்!!
சாகசங்களின் அரங்கம்!!!


மெகாதகப் பங்சுவாலிட்டி!!
எண்ணத்தில் வழியும் ஸ்பிரிச்சுவாலிடி!!!
தனக்குத் தானே குடை பிடிக்கிறார்!!
தாங்குவது இந்த மெட்ராஸ் சிட்டி!!!
எல்லாம் இவருக்கு ஒரே லொக்காலிட்டி!!
அப்படி ஒரு சிம்லிசிட்டி!!!
ஆனாலும் இது அநியாயமான அட்ராசிட்டி!!!


இவரை 20 வருடம் rewind செய்தது யார்?
மீண்டும் நாம் காலேஜ் போலாமா? சார்?

குப்பன் சுப்பன் முதன்
ஜப்பான் நிப்பான் வரை க்யூ கட்டி நிப்பான்!!
"சிவாஜி" .... வாய் பிளக்க வைப்பான்!!!!!

எல்லாருக்கும் சிவாஜி ஆக ஆசை..!!
ஆனால் இந்த சிவாஜிக்கோ
மீண்டும் சிவாஜி ராவ் ஆக ஆசை.!!!

இரண்டுமே நடக்காது..
எழுந்த பாம்பு மீண்டும் படுக்காது!!
(இது அவருக்கு மட்டும் புரியும்)

ஷ்ரேயா.கிண்டல் கேலி நாட்டி..!!
பண்டல் ஆஃப் லூட்டி.!!

இது தான் 'ஷ்ரெயா' எனும் ப்யூட்டி!!

அறிவுக்கும் அழகுக்கும் பொதுவாக
கைகலப்பு..
ஆனால்..ஷ்ரேயா இதற்கு விதிவிலக்கு.!!!

கண்களில் கிக்கு..கைகளில் புக்கு..
இதழை திறந்தால் வார்த்தைகள் பூக்கு..
வளைவுகள் சிக்கு..விழுந்தவன் சீக்கு..
ஈசனின் உடுக்கு இடையினில் கிடக்கு..!!

அருகில் வந்ததும் அஸ்திவாரம் ஆடாதவன்
மக்கிலும் மக்கு..சிவாஜிக்கு பிறகு
வருதப்பா ஒரு பீக்கு..!!!ஏ.ஆர். ரஹ்மான்.


தீப்பிடிக்குது சீ.டி. அதில் பத்தவைக்கலாம் பீடீ..
ஏ.ஆரின் சுரம்..இளைஞர்களின் ஜுரம்..!!
இது ஸ்லோ பாய்ஸன் பாயசம்
பொங்கி வழியுது ஆகாசம்!!!
எல்லா புகழும் இறைவனுக்கே!! ஆனால்
அவனின் ஆசி இவனுக்கே..!!


விவேக்

அன்று நான்......
இன்னைக்கு செத்தா நாளைக்கு பாலா?

இன்று நான்...
ஷங்கர் கொளுத்திய தெளசண்ட் வாலா!!
வெடித்து சிதறுவதை வெள்ளித் திரையில் காண்க!!

பேசப் படுவேன் பின்னர் ஒரு நாள்...
அது சிவாஜியின் வெற்றித் திரு நாள்!!


நண்பர்களே இது என்னன்னு தானே நினைக்கிறீகள்.
அது வேற ஒன்னுமில்லை..சென்னையில கொஞ்சம்
வெயில் அதிகம்ல..அது தான் விவேக் கொஞ்சம்
தடுமாறிட்டாரு..இல்ல இல்ல இல்ல..தண்ணியில
தடுமாறிட்டாரு... இது குமுதம்ல வந்த ஒரு மேட்டர்.

4 comments:

dubukudisciple said...

pudusu kanna pudusu rangeku
kalaki irukeengale sumathy

Raghs said...

சூப்பர் சுமதி..

விவேக் இந்த மாதிரி எதுகை மோனையில பொளந்து கட்டுறத நான் நெறயத் தவணை குமுதத்துல படிச்சிருக்கேன்..

கலக்கறீங்க போங்க...

Arunkumar said...

kalakkals sumathi

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Shivaaji or TR ?

Couldn't make out.

Clarify. May God Bless.