Sunday, May 13, 2007

லண்டன் வற்றல் குழம்பு

ஹாய் லேடீஸ் & ஜெண்டில்மென்,

ஒரு புது விதமான குழம்பு ஒன்னு பாத்தேன். உடனே
நம்ம ம்க்கள்ஸுக்கு சொல்லலைன்னா எப்படி?
முக்கியமா நம்ம அருணோட குருப்ஸுக்கு(ஹி ஹி அது
வேற ஒன்னும் இல்லை.. பாச்சிலர்ஸுக்கு ம்ட்டும்)
நாட்ஸ், நீங்க ட்ரைப் பண்ணாக் கூட தப்பேயில்லை,
ஆனா ரிசல்டு மட்டும் சொல்லிடுங்க...


தேவையானப் பொருட்கள்

பீன்ஸ் - 8
சின்ன கத்தரிக்காய் - 5
பெரிய வெங்காயம் - 3
வாழைக்காய் - 1
செளசெள - ஒன்று
வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
புளி தண்ணீர் - 2 கப்
கசகசா - 3 தேக்கரண்டி
தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
மஞ்சள் தூள் - 3/4 தேக்கரண்டி
கல் உப்பு - 1 1/2 தேக்கரண்டி
எண்ணெய் - 2 மேசைக்கரண்டி

காய்ச்சிய பால் - ஒரு கப்
கடுகு - ஒரு தேக்கரண்டி.



பூண்டை தோலுரித்து வைத்துக் கொள்ளவும். பெரிய எலுமிச்சை அளவு புளியை தண்ணீரில் கரைத்து, 2 கப்அளவிற்கு புளிக்கரைசல் எடுத்துக் கொள்ளவும

இந்தக் குழம்பிற்கு கத்தரிக்காய், வாழைக்காய், சௌசௌ போன்றவை பொருத்தமாக இருக்கும். கூடவே தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார்போல் சில
காய்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.
கத்தரிக்காய், பீன்ஸை துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பெரிய வெங்காயத்தை சற்று பெரிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். வாழைக்காய், செளசெள இரண்டையும் தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.


வெறும் வாணலியில் கசகசாவை 30 நொடி வதக்கவும். தேங்காய் துருவலையும் அதை போல்
வதக்கிக் கொள்ளவும். முதலில் மிக்ஸியில் கசகசாவை
போட்டு ஒரு முறை அரைத்து பிறகு அதில் அரை
டம்ளர் தண்ணீர் ஊற்றி தேங்காய் துருவல் போட்டு
விழுதாக அரைக்கவும்.


வாணலியில் ஒரு மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி கடுகு தாளித்து வெடித்ததும், வெந்தயம் போட்டு அதனுடன் கறிவேப்பிலை, பூண்டு, நறுக்கின வெங்காயம் சேர்த்து 30 விநாடிகள் வதக்கவும்.

பிறகு அதில் நறுக்கி வைத்துள்ள கத்திரிக்காய், செளசெள,
வாழைக்காய், பீன்ஸ் போட்டு மேலும் 2 நிமிடம் வதக்கவும்.
அத்துடன் மிளகாய் தூள் சேர்த்து பிரட்டி விட்டு 30
விநாடிகள் வேகவிடவும். காஷ்மீர் மிளகாய்த் தூள்
சேர்த்தால் நல்ல நிறம் கிடைக்கும்.
(எனக்கு ஒரு சந்தேகம்.. குங்குமப் பூலயும் காஷ்மீர்,
மிளகாயிலும் காஷ்மீர்.. இப்ப வரவர எல்லாத்துலயும்
காஷ்மீர் வர ஆரம்பிச்சுடுத்து..)

பிறகு புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும்.
புளி கரைசல் நன்கு கொதித்து வர வேண்டும்.
சுமார் 10 நிமிடங்கள் வேக வைக்கவும்.

10 நிமிடங்கள் கழித்து காய்கள் வெந்து, கொதித்ததும்
தேங்காய் கசகசா விழுது சேர்க்கவும். மேலும் 30
விநாடிகள் கொதிக்க விடவும்.


பிறகு அதில் பால் ஊற்றி ஒரு நிமிடம் கலக்கவும்.
ஒரு கொதி வந்தவுடன் இறக்கி
விடவும்.
இப்போது லண்டன் வற்றல் குழம்பு தயார்,
அசத்தல் சுவையில்.
இது வந்து இந்த குழம்பை சாப்பிட்டவர் சொன்ன
ஒரு கமெண்ட்..ஹி ஹி ஹி ஹி...
(சென்னையில் நடந்த ஒரு திருமண விருந்தில் இந்த லண்டன் வற்றக்குழம்பை சாப்பிட்டு இருக்கிறேன். சமைத்தது இந்த குறிப்பை கொடுத்த சீனுவாசனா என்று தெரியாது. குழம்பு நன்றாக இருக்கின்றதே என்று பெயர் கேட்ட போது லண்டன் வற்றகுழம்பு என்று சொன்னார்கள். ஆத்துக்காரிக்கும் மிகவும் பிடித்து போயிற்று. நம்ம ஆத்துல நாளைக்கு இந்தக் குழம்புதான்)

5 comments:

Anonymous said...

அதென்ன லண்டன் ..???
:))

மே. இசக்கிமுத்து said...

//ஆனா ரிசல்டு மட்டும் சொல்லிடுங்க...

//

ரிசல்ட் எப்படி முதல்ல நீங்க சொல்லுங்க!!

MyFriend said...

நல்லா விளக்கமாக எழுதியிருக்கீங்க.. நானும் ட்ரை பண்ணி பார்க்கிறேன். :-)

SENTHIL EG IYAPPAN said...

Hi Buddy,

Vaazhai Pazha Somberigalukku ............ edhaavadhu ....... ?!?

May God Bless.

ரசிகன் said...

அடடா.. போட்டோவ பாத்தாலே நாக்கு ஊறுதே.. எனக்கும் ஒரே ஒரு ஜட்டம் சமைக்கத் தெரியும் ..(சுடு நீர் வைக்கிறதுன்னு சொல்லனுமா என்ன?)ஹிஹி..