Monday, September 29, 2008

அலுவலகத்தில் போர் அடிக்கிறதா? இதோ சில டிப்ஸ்....

இதோ சில டிப்ஸ் உங்கள் உபயோகத்திற்கு:

1. சின்னதா ஒரு டிடெக்டிவ்
ஏஜென்ஸியை உங்கள்
அலுவலகத்திற்குள்ளாவே உருவாக்கி அடுத்தது யார்
வேலையிலிருந்து விடுபட போகின்றார் என்பதை
கண்டறியுங்கள்.

2. உங்க பாஸுக்கு சும்மா சும்மா BLANK CALL பண்ணுங்க.

3. உங்கள் யாகூ ID யிலிருந்து Gmailக்கு ஒரு மெயில்
அனுப்புங்க, உடனே அதை திறந்து பாருங்க. மெயில் வர
எவ்வளவு நேரம் ஆகுதுன்னு செக் பண்ணுங்க.இந்த முறையை
அப்படியே ரிவர்சில் பண்ணுங்க.

4. மற்றவர்கள் பயன் படுத்தும் நாற்காலி,பிரிண்டர் ஆகியவற்றை
அடிக்கடி இடமாற்றம் செய்து அவர்களுக்கு கோபம் வரச்
செய்யுங்கள்.

5. உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள்.இன்னுமும் போர்
அடித்தால் கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள்.

6. மற்றவர்கள் வேலை செய்யும் போது அவர்களின் முக
பாவனையை பாருங்கள்.கண்டிப்பாக உங்களுக்கு சிரிப்பு வரும்.
உங்கள் முக பாவனைகளையும் அவ்வபோதுமாற்றுங்கள்.
அப்போது தான் நீங்கள் வேலை செய்வது போல தோன்றும்.

7. இரண்டு மணி நேரம் சாப்பிட எடுத்துக் கொள்ளூங்கள்.
சமுதாயப் பிரச்சனைகளை அலசுங்கள்.

8. விசில் அடிக்க பழகி கொள்ளுங்கள்.

9. போன மாதம் அல்லது போன வாரம் நாளிதழை படியுங்கள்.

10. தேநீர் பருகிய கப்பை குறிபார்த்து குப்பைத்தொட்டியில்
எறிய பயிற்சி எடுங்கள்.

11. தொலைபேசியை எடுத்து தற்போது உபயோகத்தில் இல்லாத
எண்களுக்கு போன் போடுங்கள்.

12. உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை
அப்ளிகேஷசனை திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.

13. கணினியில் தேவை இல்லாததை அழியுங்கள்.பிறகு
ரிசைக்கிள் பின்னிலிருந்து ரீ-ஸ்டோர் செய்து விளையாடுங்கள்.
திரும்ப திரும்ப இதையே செய்யுங்கள்.

14.உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள நாற்காலியில் எவ்வளவு
தூரம்
சாய முடியுமோ அவ்வளவு சாய்ந்து பாருங்கள்.

இதுக்கும் மேல போர் அடிச்சா இதயே திரும்ப திரும்ப செய்து
பாருங்க.

19 comments:

மங்களூர் சிவா said...

//
உங்கள் கைவிரல்களை எண்ணுங்கள்.இன்னுமும் போர்
அடித்தால் கால் விரல்களையும் சேர்த்து எண்ணுங்கள்.
//

இன்னும் ரொம்ப போர் அடிக்குது ரிசப்சனிஸ்ட் கால் கை வெரல் எல்லாம் என்னலாமா??

மங்களூர் சிவா said...

//
விசில் அடிக்க பழகி கொள்ளுங்கள்.
//

அடிச்சேனே கண்டுக்க மாட்டிக்கிறாளே!!

:))))))))))))))

மங்களூர் சிவா said...

//

14.உங்களுக்கு கொடுக்கப் பட்டுள்ள நாற்காலியில் எவ்வளவு
தூரம் சாய முடியுமோ அவ்வளவு சாய்ந்து பாருங்கள்.
//

இதனால இதோட 7தரம் பக்கத்து சீட் பிகர் மேல இடிச்சிடுச்சு நீங்கதான் பொறுப்பு

:))))

Sumathi. said...

ஹாய் சிவா,

ஏன் அவளையே கூட (கணக்குபண்ணிதான்) பாருங்களேன்.என்ன நடந்தது னு அப்பரமா சொல்லுங்க.

Sumathi. said...

ஹாய் சிவா,

//அடிச்சேனே கண்டுக்க மாட்டிக்கிறாளே!!//

அப்ப உங்க விசில் சரியா இல்லைனு அர்த்தம் இல்லைனா உங்களுக்கு அடிக்க தெரியலைனு அர்த்தம்.

சிவா இன்னுமும் நீங்க அப்படியேவா இருக்கீங்க?.

Sumathi. said...

ஹாய் சிவா,

//இதனால இதோட 7தரம் பக்கத்து சீட் பிகர் மேல இடிச்சிடுச்சு நீங்கதான் பொறுப்பு..//

அட பாவமே, ஒன்னுமே ஆகலையா?

ஆயில்யன் said...

/உங்கள் கணினியில் ஒரே சமயத்தில் எத்தனை
அப்ளிகேஷசனை திறக்க முடியும் என்று சோதித்து பாருங்கள்.
//

ஹய்ய்ய்ய்!

இது நான் ஏற்கனவே நொம்ப தடவை வெளையாண்டது ஆச்சே

செம சூப்பரா இருக்கும்!

எல்லாரும் டிரைப்பண்ணி பாருங்க!!!

Iyappan Krishnan said...

ulakam uruppattudum!!

Iyappan Krishnan said...

ulakam uruppattudum!!

Thamiz Priyan said...

கண்ணை மூடாமலேயே தூங்க பிராக்டீஸ் பண்ணுங்க என்பதை விட்டு விட்டீர்கள்!

Sumathi. said...

ஹலோ ஆயில்,

//இது நான் ஏற்கனவே நொம்ப தடவை வெளையாண்டது ஆச்சே..///

ஆமாம் நொம்ப விவரமாத் தான் இருக்கீங்க போல. சரி மீதியெல்லாமும்
எப்ப ட்ரை பண்ணப் போறீங்க?

Sumathi. said...

ஹாய் ஜீவ்ஸ்,

என்ன இப்படி சொல்லிபுட்டீங்க? எல்லாரும் நல்லா இருக்கனும் னு தானே
இவ்வளவு கஷ்டப் பட்டூ போட்டது.

Sumathi. said...

ஹாய் தமிழ்பிரியன்,

//கண்ணை மூடாமலேயே தூங்க பிராக்டீஸ் பண்ணுங்க என்பதை விட்டு விட்டீர்கள்!//

அட அதையும் சேத்துகிட்டா போச்சு, சொல்லிட்டீங்கல்ல.

VIKNESHWARAN ADAKKALAM said...

:)))))))))))))

Unknown said...

:))))))

புகழன் said...

ஆஹா.........
ரெம்ப பயனுள்ள குறிப்புகளா இருக்கே
இன்று முதல் ட்ரை பண்ண வேண்டியதுதான்.

மெளலி (மதுரையம்பதி) said...

சூப்பர் ஐடியாக்கள், எப்ப இதன் அடுத்த பகுதின்னு சொல்லுங்கக்கா...:))

butterfly Surya said...

போன் பண்ணாகூட போனை எடுக்க முடியாத அளவுக்கு பிஸி போல காட்டுங்க .. அதே சமயம் கண்டுகாத பழைய friends க்கு போனை போட்டு மொக்க போடுங்க...

சூர்யா
சென்னை

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

:))))))