Tuesday, September 25, 2007

வரமாகிய சாபம்.

நான் சிரிக்கும் போது
வரமாகிறாய்..

துடிக்கும் போது
சாபமாகிறாய்..

நீ என் வாழ்வில் வந்தது
வரமா இல்ல சாபமா?

எதுவாயிருந்தாலும்
நீ எனக்கு கிடைத்த வரமே…


துறைமுகத்தில்
வழிகாட்டியாய் எப்போதும்
மின்னிக் கொண்டிருக்கும் விளக்காய்

இருளில் தேடும் போது
விடி வெள்ளியாய்
எனக்கு கிடைத்த விளக்கு நீ.

உன் வருகையால் என் வீட்டில்
அன்பெனும் ஒளிமழை
பொழிந்து கொண்டிருக்கிறது.

இதற்கு நான்
என்ன விலை கொடுக்க வேண்டும்?

22 comments:

Dreamzz said...

எல்லாத்துக்கும் விலை கிடையாதுங்க. சில விலைமதிப்பற்றவை!

கவிதை நல்லா இருக்கு!!

நாகை சிவா said...

இது நீங்க எழுதியதா?

ஏங்கய்யோ கேட்ட மாதிரி இருக்கே..

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

//எல்லாத்துக்கும் விலை கிடையாதுங்க. சில விலைமதிப்பற்றவை!//

ஆமாங்க, நிஜம். இதுவும் விலைமதிப்பில்லாதது தான்.

Sumathi. said...

ஹாய் சிவா,

//இது நீங்க எழுதியதா?
ஏங்கய்யோ கேட்ட மாதிரி இருக்கே..//

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்.. நிஜமாவே சத்தியமா காட் ப்ராமிசா நான் தான் எழுதினேன்.நேத்து கொஞ்சம் மூட் அவுட், அதுல தோனினது தான் இந்த எஃப்க்ட்.

Sumathi. said...

ஹாய் வேதா,

//கவிதை நல்லா இருக்கு உங்க படைப்பா?//

ஆமாம், வேதா எனக்கு ஒரு சந்தேகம், அதாவது நான் G3 பண்ணி போடும் போதுல்லாம் யாருமே என்ன இந்த கேள்வி கேக்கலை, ஆனா சுயமா போடும் போது சோதனையா எல்லாரும் கேக்குறீங்க, அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...

மே. இசக்கிமுத்து said...

NICE WORDS...GOOD ONE!!

Sumathi. said...

ஹாய் இசக்கிமுத்து,

//NICE WORDS...GOOD ONE!!//

ரொம்ப நன்றி.

Sumathi. said...

ஹாய் வேதா,

//ஹிஹி இனி நீங்க எழுதும் போது சத்தியமா நான் தான் எழுதினேன்னு ஒரு டிஸ்கி போட்டுடுங்க :)//

அட ராமா, இது வேறயா...

இல்ல வேதா, நான் படிச்சது காயிதே மில்லத் காலேஜ் தான், ஹி ஹி, உங்க பக்கத்து காலேஜ் தான்.

தி. ரா. ச.(T.R.C.) said...

நான்சொல்லலாம் என்று நினைத்ததை வேதா முந்திக்கொண்டு வீட்டார்கள்

Compassion Unlimitted said...

இருளில் தேடும் போது
விடி வெள்ளியாய்
எனக்கு கிடைத்த விளக்கு நீ.

nalla varigal..aanal silamurai vidi velli nokki kappal sendral erpadum innalgalum adhigam !Adhai samalikka vendiya dhayiriyatthai iraivan ungalukku arulvanaga..

vaazhthukkal

CU

வத்திராயிருப்பு தெ. சு. கவுதமன் said...

//இதற்கு நான்
என்ன விலை கொடுக்க வேண்டும்?//

சொர்க்கமும் நரகமும் நம் எண்ணங்களால் தான் வரையறுக்கப்படுகிறது.
எனவே எண்ணங்களை வளப்படுத்தி, ஒருவழிப்படுத்தி, மகிழ்ச்சியை முகத்தில் பிரதிபலித்தாலே போதும்!!!

Sumathi. said...

வாங்க சார்,

//நான்சொல்லலாம் என்று நினைத்ததை வேதா முந்திக்கொண்டு வீட்டார்கள்..//

அதுக்கென்ன, நீங்களும் வாழ்த்தினதாகவே எடுத்துக்கறேன்.ரொம்ப நன்றி சார்.

Sumathi. said...

ஹாய் Compassion Unlimitted,

//nalla varigal..aanal silamurai vidi velli nokki kappal sendral erpadum innalgalum adhigam !Adhai samalikka vendiya dhayiriyatthai iraivan ungalukku arulvanaga..//

ரொம்ப தேங்க்ஸ்.

Sumathi. said...

ஹாய் கவுதமன்.

வாங்க வாங்க..

உங்க வருகைக்கும் கருத்துக்கும் ரொம்ப நன்றி கவுதமன்.

Raghavan alias Saravanan M said...

ஹ‌லோ சும‌தி அக்கா,

ஒரு அட்ட‌ன்ட‌ன்ஸ்.. ச‌ரியா.. எப்ப‌டி இருக்கீங்க‌.. ரொம்ப‌ நாளாச்சு.. சாரி.. நான் இப்போ பெஹ்ரைன்ல‌ இருக்கேன்.. ம‌ட‌ல் கிடைச்சிருக்கும்னு நென‌க்கிறேன்...

இப்போ.. க‌மெண்ட் க‌வுன்ட் ட‌வுன் ஸ்டார்ட்ஸ்.....

Raghavan alias Saravanan M said...

//நான் சிரிக்கும் போது
வரமாகிறாய்..//

நல்லாத் தான் இருக்கு.

//துடிக்கும் போது
சாபமாகிறாய்..//

அதானே.. எங்கடா காணோமேன்னு பாத்தேன்.. நல்லா உருவகம் பண்ணியிருக்கீங்க..

வரம்-சாபம்
சிரிப்பு- அழுகை ன்னு வழக்கமான எதிர்ப்பதம் இல்லாமல்

சிரிப்பு - துடிப்பு ன்னு வித்தியாசம்!

Raghavan alias Saravanan M said...

//நீ என் வாழ்வில் வந்தது
வரமா இல்ல சாபமா?//

இந்த ஒற்றைக் கேள்வியைத் தான் நெற்றிப்பொட்டில் வைத்துக் கொண்டு கவிதைபாடித் திரிகின்றன காதல் நெஞ்சங்கள்.. என்ன சொல்றீங்க?

//எதுவாயிருந்தாலும்
நீ எனக்கு கிடைத்த வரமே…//

ஓ... நீங்களே ஒரு முடிவு செஞ்சுட்டீங்க.. பதிலும் சொல்லிட்டீங்க.. ம்ஹீம்.. நல்லாயிருந்தா சரிப்பா..

Raghavan alias Saravanan M said...

//துறைமுகத்தில்
வழிகாட்டியாய் எப்போதும்
மின்னிக் கொண்டிருக்கும் விளக்காய்//

அடடா.. நல்ல உருவகம்.. ஆனால் ஒரு சந்தேகம்.. பகல்ல துறைமுகத்தில் எரியுமா விளக்கு? கவிதை எழுதிய சுமதி அக்காவே இதை நீ கொஞ்சம் எனக்கு விளக்கு!

Raghavan alias Saravanan M said...

//இருளில் தேடும் போது
விடி வெள்ளியாய்
எனக்கு கிடைத்த விளக்கு நீ.//

ம்ஹீம்.. இருளில் கிடைத்த நிலா! நல்லாயிருக்கு.

தேடிக் கிடைத்த நிலாவா?
தேடாமல் கிடைத்த பலாவா?

Raghavan alias Saravanan M said...

//உன் வருகையால் என் வீட்டில்
அன்பெனும் ஒளிமழை
பொழிந்து கொண்டிருக்கிறது.//

அன்பென்ற மழையிலே
அகிலங்கள் நனையவே
அதிரூபன் தோன்றினானே...

வைக்கோலின் மேலொரு
வைரமாய் வைரமாய்
வந்தவன் மின்னினானே..


உங்கள் வரிகளைப் படித்தவுடன் நினைவுக்கு வந்த பாட்டு.. அதனால் தட்டச்சிட்டேன்..

Raghavan alias Saravanan M said...

//இதற்கு நான்
என்ன விலை கொடுக்க வேண்டும்?//

இப்போ கேட்டீங்க பாத்தீங்களா.. நெத்தியடியான கேள்வி..

சூப்பர்..

விலைமதிப்பற்ற உணர்வுதொடும் உறவுக்கு ஏது விலை?

கொடுப்பதாயிருந்தால் அது ஒரு தனிக் கலை!

விலைவைத்து விற்பனை செய்ய
அது அல்ல ஒரு சிலை!

------------
நடத்துங்கள்.. தொடர்கிறோம்..

வாழ்த்துக்கள்.

cheena (சீனா) said...

ராகவன் வரிக்கு வரி கருத்து சொல்லிட்டார். நான் லேட்டு ! பரவா இல்லே ! வரமாகிய சாபம் மொத்தத்தில் அழகு தமிழில் எளிய சொற்களைக் கொண்டு எல்லோருக்கும் புரியும் வண்ணம் புனையப்பட்ட அருமையான கவிதை. வாழ்த்துகள் சுமதி