Wednesday, August 22, 2007

கறுப்பானவர்கள் மாநிறமாகலாம்....

கறுப்பானவர்கள் மாநிறமாகலாம்...

குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள்...

செரிமானம் கூடும்...

குடல் வலி குணமாகும்...

குடல் புழுக்கள் மறையும்...
அது என்ன மருந்து என்று தானே யோசிக்கிறீர்கள்? இது மருந்து இல்லை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய் கேரட் தான்
ஒரு 100 கிராம் கேரட்டில் 86.0 விழுக்காடு நீர்ச்சத்தும், 0.9 விழுக்காடு புரோட்டின் சத்தும், 0.2 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 11 விழுக்காடு தாதுக்களும், 1.2 விழுக்காடு நார்ச்சத்தும், 10.6 விழுக்காடு கார்போஹைட்ரேட்ஸ•ம் உள்ளது.

கால்சியம் 80 மில்லி கிராமும் பாஸ்பரஸ் 530 மில்லி கிராமும், இரும்புச்சத்து 2.2 மில்லி கிராமும் வைட்டமின் சி 3 மில்லிகிராமும் மற்றும் சிறிதளவு வைட்டமின் பியும் உள்ளது.

கேரட் ஒரு காரத்தன்மை (alkaline) அதிகம் உள்ள கிழங்கு என்பதால் அமில உடல்வாகு (acidic) உள்ளவர்கள் இதனை அதிகம் உண்ண அமில நிலை சமநிலை அடையும்.

கேரட்டில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களும் கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும், நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும்.

இந்த பச்சைக் கேரட் ஜூஸ் நம்முடைய குடல் சதைகளைப் பலப்படுத்தி இரத்தம் உற்பத்தியாகப் பயன்படுகிறது. பொதுவாக கேரட்டை வேகவைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிய நேரிடுகிறது. எனவே வேகவைத்த கேரட்டைவிட பச்சைக் கேரட் உண்ணுவதே சிறந்தது.

கருப்பு நிறம் உள்ளவர்கள் கேரட் ஜூஸ் அடிக்கடி அருந்த அவர்களின் நிறம் சிறிது மாறுவதுடன் தோலின் கடினத் தன்மையும் உலர் தன்மையும் செம்மைப்படும். நாம் தினமும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு கேரட்டைக் கடித்து உண்டால் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத்துகள்களை வெளியேற்றுவதுடன் ஈறுகள் பலப்பட்டு பற்கள் சொத்தை ஆவதைத் தடுக்க முடியும்.

கேரட்டைக் கடித்து உண்பதால் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர நம் உணவுக் குழாய்களில் தோன்றும் நோய்களாகிய குடல்புண், வயிற்றுவலி, அஜ“ரணம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.

தினமும் வெறும் வயிற்றில், துருவிய கேரட் ஒரு கப் சாப்பிட குடலில் வாழும் நூல் புழுக்கள் (Thread Worms) வெளியேறி விடும். கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் மலட்டுத் தன்மை மறையும்.

கேரட் ஜூஸ் உடம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தாமல், கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸைக் குடிக்க வேண்டும்.

கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்­ரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், துருவி மிக்ஸ’யில் சிறிது நீர் விட்டு அரைத்து நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது.

ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸ’ல் சிறிது சர்க்கரை சேர்த்து பருகலாம் அல்லது மிளகு ஜீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம்.

கேரட் சூப் வயிற்றோட்டத்திற்கு ஒரு சிறந்த மருந்து. 1/4 கிலோ கேரட்டை சுத்தம் செய்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்புடன் சிறிது உப்புச் சேர்த்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு இரண்டு ஸ்பூனாகக் குடிக்க வேண்டும். வயிற்றோட்டத்தின் மூலம் இழக்கப்பட்ட சோடியம், பொட்டாசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய சத்துக்களை இந்த கேரட் சூப் ஈடு செய்யும்.

இதன் நிறமும் சுவையும் அனைவரையும் தன் வசப்படுத்தும். பொதுவாகக் கேரட் எல்லா நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை கேரட் விளைச்சலை அதிகரிக்கும். கேரட் உடன் அதன் உச்சியில் இருக்கும் கேரட் கீரையும் பல சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அக்கீரையையும் சமைத்து உண்ணலாம்.

11 comments:

d4deepa said...

hi sumathi.

d4deepa said...

கேரட் பற்றி நிறைய தெரிந்து வச்சிருக்கேங்க ரொம்ப நல்லது.

Anonymous said...

சுமதியக்கா, இவ்ளோ தகவலா? சபாஷ். :)
எல்லாம் சரி, நீங்க ஏதவது காரட் கடை ஷ்டார்ட் பண்ணி இருக்கீங்களா?

காரட் உங்கள் வீட்டில் வாங்கி விட்டீர்களா?னு விளம்பரம் பலமா இருக்கே! :p

Dreamzz said...

அப்ப எனக்கு வேண்டாம்!! இருக்கிற கலருக்கே பிகர் கிடைக்கல. இன்னும் வேறயா?? என்ன கொடும இது கொடி!

ஹிஹி! எனக்கு கேரட்ட வெறுமனே சாப்பிட தான் பிடிக்கும்!

Sumathi. said...

ஹாய் தீபா,

வாங்க வாங்க,
அட.. நீங்க வேற... இத நான் ஒரு சைட்டுல படிச்சேன். நமக்கெல்லாம் கொஞ்சம்
கலர் கிடைக்கட்டுமே னு தான்..ஹி ஹி ஹி..ஹி..

Sumathi. said...

ஹாய் அம்பி,


//இவ்ளோ தகவலா? சபாஷ்.//

ஏன் போதாதா? இன்னும் வேனுமா?

//எல்லாம் சரி, நீங்க ஏதவது காரட் கடை ஷ்டார்ட் பண்ணி இருக்கீங்களா? //

அப்படி மட்டும் பண்ணியிருந்தா நான் எல்லருக்கும் தினமும் 1 கிலோ அனுப்பிச்சுட மாட்டேனா என்ன?

//காரட் உங்கள் வீட்டில் வாங்கி விட்டீர்களா?//

தெரியாதா உங்களுக்கு, அதனால தான் நான் இவ்ளோ கலரா இருகேன்னு..
ஹி.ஹி.ஹி.ஹி...

Sumathi. said...

ஹாய் தினேஷ்,

//இருக்கிற கலருக்கே பிகர் கிடைக்கல//

இப்ப உன்னோட ப்ரச்சனை கலரா? இல்ல பிகரா?


//எனக்கு கேரட்ட வெறுமனே சாப்பிட தான் பிடிக்கும்.//

ஓஓஓஓஓ...அப்படி சாப்டே நீ இவ்ளோ கலரா?
எப்படியோ மொத்தத்தில சாப்டா சரி..
(ஒருவேளை உனக்கு இன்னும் கொஞ்சம் கலர் தேவையோ?யோசனை பண்ணி பாரு)

Raghavan alias Saravanan M said...

என்னங்க சுமதி,

வந்து ரொம்ப நாள் ஆச்சு.. ஒத்துக்கிர்றேன்.. நீங்க புத்திசாலின்னு ஒத்துக்குறேன்..

அதுக்காக டபால்னு பின்புலத்தை இப்படி மாத்திட்டீங்களே.. பூப்போட்டு நல்லாயிருக்கு.. இதே பின்புலத்தை நான் இன்னைக்கு இன்னொரு வலைப்பக்கத்தில் பாத்தேன் (kavinila.blogspot.com).. இன்னைக்குத் தான் அங்க முதல் விசிட்..

என்னன்னெமோ ஊட்டச்சத்து, செரிமானம், தேய்மானம் லாம் பேஸ்றீங்க.. பயமா இருக்கே.... ;‍)

Sumathi. said...

ஹாய் ராகவ்,

//நீங்க புத்திசாலின்னு ஒத்துக்குறேன்..//

ஆஹா...நீங்க ஒருத்தராவடு என்ன புத்திசாலி னு ஒத்துகறீங்களே....
நீர் வாழ்க...உம் குலம் வாழ்க...வாழ்க ...வாழ்க...

நன்றி, ராகவ்.

//அதுக்காக டபால்னு பின்புலத்தை இப்படி மாத்திட்டீங்களே.. பூப்போட்டு நல்லாயிருக்கு//

ஆமாம், ஒரே டிசைன்ல பாத்தா எனக்கே போரடிக்குது...அதான்..

//பயமா இருக்கே....//

அடடா.. நான் என்ன சொல்லிட்டேன் இப்போ. கேரட் தானே சாப்பிட சொன்னேன். இதுக்கு எதுக்கு பயம்?
சும்மா தைரியமா சாப்டுங்க ராகவ்...

Raghavan alias Saravanan M said...

//ஆஹா...நீங்க ஒருத்தராவடு என்ன புத்திசாலி னு ஒத்துகறீங்களே....
நீர் வாழ்க...உம் குலம் வாழ்க...வாழ்க ...வாழ்க... //

ஆஹா.. இப்படித்தானா கூப்பாடு போடும் குஷியான உள்ளம்.. நன்றி ஹை..

நீங்க சந்தோஷமா இருந்தா எனக்கும் அதில் மகிழ்ச்சியே! (பின்னே என் குலத்தை எல்லாம் இல்லை வாழ்த்தி இருக்கீக...அடியாத்தி)...

//ஆமாம், ஒரே டிசைன்ல பாத்தா எனக்கே போரடிக்குது...அதான்..//

அதுவும் சரிதான்.. 'மாற்றம்' என்ற ஒன்றே மாறாதது! ஆராய்ஞ்சு சொல்லி இருக்காய்ங்க .. சும்மாவா?

//அடடா.. நான் என்ன சொல்லிட்டேன் இப்போ. கேரட் தானே சாப்பிட சொன்னேன். இதுக்கு எதுக்கு பயம்?//

பயம் கேரட் பத்தி இல்லீங்கோவ்.... நீங்க இப்டி ஞானி ரேஞ்சுக்கு பேஸ்றீங்களே அதுனால... ;-)

தகவலுக்கு நன்றிங்கோ...

ரசிகன் said...

பரவாயில்லைங்க..கைவசம் ..ஒரு தொழில் இருக்கு..( நாட்டுவைத்தியம்) .ஹிஹி..