கறுப்பானவர்கள் மாநிறமாகலாம்...
குழந்தைகள் ஊட்டம் பெறுவார்கள்...
செரிமானம் கூடும்...
குடல் வலி குணமாகும்...
குடல் புழுக்கள் மறையும்...
அது என்ன மருந்து என்று தானே யோசிக்கிறீர்கள்? இது மருந்து இல்லை, நாம் அன்றாடம் பயன்படுத்தும் காய் கேரட் தான்
ஒரு 100 கிராம் கேரட்டில் 86.0 விழுக்காடு நீர்ச்சத்தும், 0.9 விழுக்காடு புரோட்டின் சத்தும், 0.2 விழுக்காடு கொழுப்புச் சத்தும், 11 விழுக்காடு தாதுக்களும், 1.2 விழுக்காடு நார்ச்சத்தும், 10.6 விழுக்காடு கார்போஹைட்ரேட்ஸ•ம் உள்ளது.
கால்சியம் 80 மில்லி கிராமும் பாஸ்பரஸ் 530 மில்லி கிராமும், இரும்புச்சத்து 2.2 மில்லி கிராமும் வைட்டமின் சி 3 மில்லிகிராமும் மற்றும் சிறிதளவு வைட்டமின் பியும் உள்ளது.
கேரட் ஒரு காரத்தன்மை (alkaline) அதிகம் உள்ள கிழங்கு என்பதால் அமில உடல்வாகு (acidic) உள்ளவர்கள் இதனை அதிகம் உண்ண அமில நிலை சமநிலை அடையும்.
கேரட்டில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளதால் கண்பார்வை குறைபாடு உள்ளவர்களும் கண்பார்வை வளர்ச்சி குன்றிய குழந்தைகளும், நோயிலிருந்து விடுபட்டு உடல் நலம் தேறி வருபவர்களும், கேரட் ஜூஸ் ஒருநாள் விட்டு ஒரு நாள் தினமும் 10 மில்லி லிட்டர் அருந்த வேண்டும்.
இந்த பச்சைக் கேரட் ஜூஸ் நம்முடைய குடல் சதைகளைப் பலப்படுத்தி இரத்தம் உற்பத்தியாகப் பயன்படுகிறது. பொதுவாக கேரட்டை வேகவைப்பதால் அதில் உள்ள சத்துக்கள் அழிய நேரிடுகிறது. எனவே வேகவைத்த கேரட்டைவிட பச்சைக் கேரட் உண்ணுவதே சிறந்தது.
கருப்பு நிறம் உள்ளவர்கள் கேரட் ஜூஸ் அடிக்கடி அருந்த அவர்களின் நிறம் சிறிது மாறுவதுடன் தோலின் கடினத் தன்மையும் உலர் தன்மையும் செம்மைப்படும். நாம் தினமும் இரவு உணவிற்குப் பின்னர் ஒரு கேரட்டைக் கடித்து உண்டால் பல் இடுக்குகளில் ஒட்டிக் கொண்டிருக்கும் உணவுத்துகள்களை வெளியேற்றுவதுடன் ஈறுகள் பலப்பட்டு பற்கள் சொத்தை ஆவதைத் தடுக்க முடியும்.
கேரட்டைக் கடித்து உண்பதால் உமிழ்நீர் அதிகமாகச் சுரந்து செரிமானத்தை அதிகரிக்கிறது. நாம் தினமும் ஒரு கேரட் உண்டு வர நம் உணவுக் குழாய்களில் தோன்றும் நோய்களாகிய குடல்புண், வயிற்றுவலி, அஜ“ரணம் ஆகியவற்றில் இருந்து விடுதலை கிடைக்கும்.
தினமும் வெறும் வயிற்றில், துருவிய கேரட் ஒரு கப் சாப்பிட குடலில் வாழும் நூல் புழுக்கள் (Thread Worms) வெளியேறி விடும். கேரட்டை உணவில் அதிகம் சேர்த்துக் கொண்டால் மலட்டுத் தன்மை மறையும்.
கேரட் ஜூஸ் உடம்பிற்குக் குளிர்ச்சி ஏற்படுத்துவதால், மதிய வேளைகளில் அருந்தாமல், கோடைக் காலத்தில் உடல் சூடு தணிய, நிறைய கேரட் ஜூஸ் பருகலாம். சளித்தொல்லை உள்ளவர்கள் அதிலிருந்து விடுபட்ட பின்னரே ஜூஸைக் குடிக்க வேண்டும்.
கேரட்டில் உள்ள வைட்டமின் ஏ தோலுக்கு மிக அருகில் இருப்பதால், கேரட்டில் மேல் தோலை அழுத்திச் சீவக் கூடாது. சுத்தமான தண்ரில் கேரட்டை நன்றாகக் கழுவிய பின்னர், துருவி மிக்ஸ’யில் சிறிது நீர் விட்டு அரைத்து நன்றாக அரைத்தால் ஜூஸ் பிழிய முடியாது.
ஒரு சுத்தமான வெள்ளைத் துணியில் ஜூஸ் பிழிந்து எடுக்க வேண்டும். மறுபடியும் சிறிது நீர் விட்டு இருக்கும் ஜூஸைப் பிழிந்து கொள்ள வேண்டும். ஜூஸ’ல் சிறிது சர்க்கரை சேர்த்து பருகலாம் அல்லது மிளகு ஜீரகப் பவுடர் சேர்த்தும் அருந்தலாம்.
கேரட் சூப் வயிற்றோட்டத்திற்கு ஒரு சிறந்த மருந்து. 1/4 கிலோ கேரட்டை சுத்தம் செய்து வேக வைத்து அதிலிருந்து கிடைக்கும் சூப்புடன் சிறிது உப்புச் சேர்த்து 10 நிமிடத்திற்கு ஒருமுறை இரண்டு இரண்டு ஸ்பூனாகக் குடிக்க வேண்டும். வயிற்றோட்டத்தின் மூலம் இழக்கப்பட்ட சோடியம், பொட்டாசியம், கால்சியம், சல்பர், பாஸ்பரஸ், மெக்னீசியம் ஆகிய சத்துக்களை இந்த கேரட் சூப் ஈடு செய்யும்.
இதன் நிறமும் சுவையும் அனைவரையும் தன் வசப்படுத்தும். பொதுவாகக் கேரட் எல்லா நாடுகளிலும் பயிரிடப்படுகிறது. குளிர்ந்த சீதோஷ்ண நிலை கேரட் விளைச்சலை அதிகரிக்கும். கேரட் உடன் அதன் உச்சியில் இருக்கும் கேரட் கீரையும் பல சத்துக்களைக் கொண்டுள்ளது. எனவே அக்கீரையையும் சமைத்து உண்ணலாம்.