Tuesday, January 16, 2007

மஞ்சு போல் ஒரு பெண் குட்டி...

எல்லாரும் சந்தோஷமா பொங்கல் கொண்டாடி இருப்பீங்கனு நினைக்கிறேன்...
இந்த பொங்கல் நாள்ல நம்ம டிவியில எல்லாம் வித விதமா நிகழ்ச்சிகலெல்லாம் பாத்து ரசிச்சிருப்பீங்க.. நானும் தான்.

கொஞ்ச நாளுக்கு முன்னாடியே நான் இந்த படம் பாத்தேன் சூர்யா டிவியில.நேற்றும் இதே படம் பாத்தேன்.
இது ஒரு மலயாளப் படம் தான். ஆனா இவ்வளவு நல்ல படங்கள் ஏன் தமிழ்ல வரலை? என்னை ரொம்ப பாதிச்ச படங்களுல் ஒன்னு தான் இந்த படம். கதை இது தான்...

ஒரு பத்தாங் கிளாஸ் படிக்கும் ஒரு மாணவியோட மனப் போராட்டம் தான் இந்த கதை. படம் ஆரம்பமே நாயகி தன்னோட பிரச்சனையை தானே சொல்ல ஆரம்பிக்கிறாள்.

தன்னோட அம்மா அருந்ததி மேனன் (பானுப்ரியா) மற்றும் தன் தங்கையோடும் இவள் குடும்பம், ஒரு விபத்தில் தன் தந்தை மறைந்து விட தன் தாய்
இவர்களை காப்பாற்ற ஒரு Departmental Store ஆரம்பித்து சக்சஸ்புல்லாக நடத்தும் ஒரு பெண். உறவினர்களின் கட்டாயத்தால்
அதே விபத்தில் தன் மனைவியையும் குழந்தையையும் இழந்த ஒருவனை மணக்கிறாள். இங்குதான் கதை ஆரம்பம். தன்னுடைய இரண்டாவது அப்பா தன்னிடம் தவறாக பழகுவதைக் கண்டு மனம் வேதனை அடைகிறாள். இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை.
மிகுந்த மனக்குழப்பம் அடைகிறாள். தன் தாயோ தன் இரண்டாவது கணவனிடம் நிறைய்ய அன்பு. இந்நிலையில் தன் தாயிடம் சொன்னால் இதை நம்பப் போவதில்லை. தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவன்(சந்தீப்) இவள் மன வேதனையை கண்டு காரணம் கேட்கிறான்.இந்நிலையில் வகுப்பில் படு சுட்டியாகவும் நல்ல மாணவியாகவும் இருந்த வள் மெல்ல மெல்ல மார்க் குறைந்து மேலும் மோசமான நிலைக்கு வருகிறாள்.இதை கண்ட ஆசிரியர் இவள் அம்மாவிடம் பேசுகிறார்.இது தெரிந்து தந்தையோ இதை பற்றி தாயிடம் சொன்னால் இவளையும் இவள் குடும்பத்தையும் கொல்வதாக மிரட்டுகிறான். இவள் மெதுவாக அவனிடம் தன் பிரச்சனையை சொல்கிறாள்.ரெண்டு பேரும் சேர்ந்து தன் தந்தையை ஒரு வழியாக தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார்கள்.

இந்நிலையில் இதை எப்படி செய்வது என்று யோசிச்சு தன் ஃப்ளாட்டில் வசிக்கும் மானுவல் அங்கிளை அனுகி பேசி தனக்கு உதவுமாறு கேட்கிறாள். பாவம் இவரும் இவள் வேதனையை கண்டு தன் மகளை போல் எண்ணி உதவ சம்மதிக்கிறார். ஆக மூவரும் சேர்ந்து இன்னொரு நன்பனிடம் ஐடியா கேட்கிறார்கள். அவனும் தனக்கு தெரிந்த வழிகளையெல்லாம் சொல்கிறான் முடிவில் தந்தையை சுட்டுக் கொல்வது என்று முடிவு செய்கின்றனர்.. அவனும் தன் வீட்டிலிருந்து தன் தாத்தாவின் ஒரு பழைய துப்பாக்கியை கொண்டு வந்து அதை எப்படி சுடுவது என்றும் அந்த அங்கிளுக்கு சொல்லியும் குடுக்கிறான். ஒரு வழியாக பயிற்சியும் எடுத்துக் கொண்டு பின் ஒரு நாள் இவள் தந்தையை போனில் அழைத்து இவர்கள் விஷயம் எல்லாம் தனக்கு தெரியும் என்றும் அதை மறைக்க வேண்டுமெனில் தனக்கு நிறய்ய பணம் வேண்டும் என்றும் கூறுகிறான். ஒரு பாதி கட்டிகொண்டிருக்கும் கட்டடத்திற்கு வருமாறு அழைக்கிறார்கள். அவனும் சரியாக சொன்ன இடத்திற்கு வருகிறான்.இருவருக்கும் சண்டை ஆரம்பிக்கிறது.முடிவில் அவள் தந்தை மானுவல் அங்கிளை கொன்று அந்த இடத்திலேயே ஒரு கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு சென்று விடுகிறார். இது தெரியாமல் இந்த பெண் தன் வீட்டில் செல்பேசியில் அங்கிலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறாள்.தன் நண்பனுடன் வேறு அடிக்கடி பேசுகிறாள். அப்பொழுது தன் தந்தை வீட்டுக்கு திரும்பி வருவதைக் கண்டு மிகவும் பயந்து போய் தன் நன்பனுக்கு போனில் விஷயத்தை சொல்கிறாள்.
மறு நாள் மூவரும் சேர்ந்து அந்த இடத்துக்குப் போனால்.. அங்க போலீஸ் ... மானுவல் அங்கில் ஒரு கயிற்றில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சியோடு திரும்பி விடுகிறார்கள். நிதி இது எல்லாவற்றுக்கும் தான் தான் காரணம் என்று எண்ணிக்கொண்டு தானே அவனை கொல்ல நினைக்கிறாள். பின் இவர்கள் மூவரும் சேர்ந்து அந்த துப்பாகியை தேடப் போகிறார்கள். அப்பொழுது இது நிதி கையில் கிடைக்க அவள் வேகமாக அதை எடுத்துக் கொண்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு திரும்பி வருகிறாள் தன் வீட்டுக்கு.. அப்பொழுது சந்தீப் இதை பார்த்துவிட்டு உடனே தன் அக்காவிடம் சென்று நடந்த எல்லா விஷயங்கலையும் சொல்ல...அவள் உடனே நிதியின் அம்மாவிடம் சென்று நடந்தவற்றை சொல்ல அவள் அம்மா பதற்றத்துடன் வீட்டூக்கு ஓடி வர... இங்கு துப்பாக்கியுடன் அவனைக் கொல்ல காத்திருக்கிறாள் நிதி. அந்த சமயத்தில் அவன் திரும்பி வர அந்த சமயம் பார்த்து தீடீரென்று துப்பாக்கியால் படபடவென்று சுட்டுத் தள்ளுகிறாள்.அவனுக்கு பின்புறத்தில்
குண்டு பாய்ந்து அவன் கத்தவும் நிதியின் அம்மா மற்றும் எல்லாரும் அங்கு வரவும் அவள் அம்மா பாய்ந்து அவளை பிடிக்கவும் அவள் திமிறிக் கொண்டு துப்பாக்கியில் குண்டு தீரும் வரை சுட்டுத் தள்ளூகிறாள்.நிதியின் அம்மா நிதியை சமாதானப் படுத்துகிறாள்.பின் போலீஸ் அவனை பிடித்துக் கொண்டு போக அவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கிறது. நிதியை விடுதலை செய்கிறது. பின் நிதி(அம்ரிதா) தன் மனநிலை மாறி எப்பொழுதும் போல் ஆகிறாள்.

இந்த கடைசி காட்சியில் அந்த பெண்ணின் நடிப்பை நாம் கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும். அந்த கண்ணில் தெரியும் கொலைவெறி அற்புதமான நடிப்பு. சிறிய பெண்ணானாலும் அபாரத் திறமை.

இந்த படத்தை டைரக்ட் பன்னியது கமல். ஒரு நல்ல டைரக்டர் இவரது பல படங்கள் சூப்பர் ஹிட்தான் இந்த படத்தை பற்றிய சில கமெண்ட்ஸ் கீழே பாருங்கள்..........

//" Its really good that the sensitive message is being broadcast out there.."//

//"It is the twist, before a chilling climax as the story takes another turn which will keep the audience glued to their seat.."//

//"Kamal is the most innovative director in Malayalam film industry who has always taken risks by making films with new comers which have however paid off handsomely. "//


//"Marvellous Movie.Jayakrishnan is absolutely stunni...: Marvellous Movie.Jayakrishnan is absolutely stunning.."//


//"Its really good that the sensitive message is being broadcast out there.."//


12 comments:

Arunkumar said...

konjam perusa irukku , aprom vandhu padikkiren sumathi :)

Anonymous said...

Hi,
Hats off to this Movie. Nice and xcellent.
Unlike Tamil movies, Malayalam movies have different types of stories. We in Tamil follow one formula that is if a film is a superhit in the Box Office, new movies are made in the similar type of story.
Otherwise, we in no way inferior to Malayalam movies be it in Technology, Expenditure, story, Acting, Fund, Innovations etc.
May God Bless.

Arunkumar said...

sumathi, padam peru enna?
kadhaila egappata twist irukkum pola theriyude...

Sumathi. said...

Hai Arun,

padam MANJU POL ORU PEN KUTTY'.
such a nice movie, neat presentation,arumaiyaana climax, padaththula engiyumey konjam kuda salipee varaadhu. xcellent movie.dont miss this.

Sumathi. said...

Hai Arun,

//kadhaila egappata twist irukkum pola theriyude...//
I dont think so Arun.she want to kill her father but how, thats the story

Arunkumar said...

sure, when i get a chance, will watch it

Syam said...

மலையாள படமா ஷகீலா சேச்சி நடிச்சு இருக்காங்களா.. :-)

Sumathi. said...

நாட்டாம,

ஞான் ஷகிலா சேச்சியோடு பரைஞ்சு, நிங்கள்கு ஆயாலோட படம் வரும்போது ஒரு பாஸ் கொடுக்கான். மதியோ?

Syam said...

ஓ நிங்கள்கு ஷகிலா சேச்சி அறியோ...படத்திண்ட பாஸ் வேண்டா கேட்டோ..சேச்சிண்ட போன்ல பறையா ஒரு சான்ஸ் கிட்டினா மதியோ மதி... :-)

Sumathi. said...

ஹாய் ஷ்யாம்.

ஞான் சேச்சியோடு பறஞ்சு,அவரு நிங்கள விளிக்கான்னு பறைஞ்சுடுன்டு கேட்டோ, பின்ன விளிக்கும்போல் நிங்கள்கு எந்தா வேண்டதுனு ஸ்வஸ்தமாயிட்டு பறைஞோளு... எந்தா இத்தர மதியோ.....

Anonymous said...

நான் மலையாளப் படம் நிறைய பாக்கும். சேச்சி ஞங்கள்ட பதிவையும் நோக்கினா, ஞான் பிரியப்படும்.
http://pirakeshpathi.blogspot.com/

இது என்னோட மலையாளம் , சரியா இருக்குதோ?

Anonymous said...

அடப்பாவமே...நாட்டாமைக்கும் சுமதியக்காவுக்கும் நடுவுல மாட்டிட்டு
பாவம் ஷகிலா மாமி..

மாமியின் கலைச்சேவையை(!) இப்படியெல்லாம் கேவலப்படுத்தலாமா?