Monday, October 02, 2006

டிகிரி அல்லது டிப்லமா.

நான் டிகிரி படிச்சிட்டு வேலைக்கு விண்ணப்பம் எழுதி கொண்டு இருக்கும் போது ஒரு கம்பனியில் இருந்து "டிகிரி அல்லது டிப்லமா ஆட்கள் தேவை" என்ற விளம்பரம் பார்த்துட்டு நானும் உடனே அதுக்கும் சேர்த்து மொத்தமா நாலு கம்பனிக்கு வின்னப்பம் எழுதி எல்லாம் சரி பாத்துட்டு உடனே போஸ்ட் பன்னிட்டு வந்தேன். ஒரு வாரத்தில் மூன்று கம்பனியில் இருந்தும் உடனே நேர்முகத் தேர்வுக்கு வருமாரு அழைப்பு வந்தது. அத பாத்த உடனே ரொம்ப சந்தோஷமா போயி நானும் அதுக்கு ரெடி பண்ண ஆரம்பிச்சேன். அந்த நல்ல நாளும் வந்தது. சீக்கரமா ரெடியாயி மொதல்ல ஒரு கம்பனிக்கு தேர்வுக்கு போயிட்டு வந்தேன். ம் அங்கயும் ஒகே ஆயி உடனே வேலைக்கு சேரச் சொன்னாங்க. அந்த கம்பனி மெட்ராஸ்ல ஹார்ட் ஆப் தி சிட்டியில ஒரு நல்ல வேல.உடனே சரின்னுட்டு சொல்லிட்டு வந்துட்டேன். வீட்டுக்கு வந்து பார்த்தா வேர ஒரு கம்பனியில ஒரு அழைப்பு. சரின்னுட்டு அதுவும் பார்க்கலாம்னுட்டு அதுக்கும் ரெடி யாயி போனேன்.ஒரு வழியாயிட்டேன். அங்க போனதுக்கப்பறம் தான் தெரிஞ்சது அது ஒரு எலக்ட்ரிகல் காண்டிராக்டர் கம்பனி. என்கிட்ட போயி கரண்ட பத்தியும் கான்டிராக்ட பத்தியும் கேட்டா நான் என்னாத்த சொல்றது?.தட்டி தடவி எதையோ சொல்லிட்டு வந்திட்டேன். எனக்கு தெரியும் இது அம்பேல்னு. வீட்டுக்க்கு வந்து சிரியோ சிரின்னு சிரிச்சேன்.


அப்ளிகேஷன் போடும்போதே ஒரு டவுட்டு தான்..!(?) ஹா எனக்கு எங்கயோ ஒரு மச்சம் இருக்குதுன்னு நினைக்கிறேன், உடனே வேலைக்கு வர சொல்லி "கால்" வந்தது. ஒரே சந்தோஷம். ஜாலியா வேலைக்கு போய் சேந்தேன்.அந்த கம்பனி மேனேஜர் சும்மா சொல்லக் கூடாது தொட்டு பொட்டு வச்சுக்கலாம், அப்படி ஒரு கலர்(கருப்பு) "எனக்கு கருப்பன்னாலே ஒரு அலர்ஜி. அதுவும் அந்த ஆள் கூடத்தான் என் வேலயே.!என் நிலம எப்படி இருக்கும்?" சரின்னுட்டு ஒரு வழியா வேலய கத்துகிட்டு, கொஞ்ச கொஞ்சமா என்ன நானே தேத்தி கிட்டு ஒரு வழியா பழகிட்டேன். அப்பறமா அந்த ஆளு(மேனேஜரு கரிவாயன்) நம்ம தெறமய பாத்துட்டு அசந்துட்டான் இல்ல. ஒரு நாள் பில் அடிக்கும் போது நான் ரொம்ப மெதுவா கேட்டேன், MCB, GI Pipe ன்னா என்னாது? அதுக்கு அந்த கரிவாயன், "உனக்கு தான் டிகிரிக்கும் டிப்லமாவுக்குமே வித்யாசம் தெரியாதெ,, அப்பறமா இதுக்கு மட்டும் சொன்னா தெரியுமா?"ன்னுட்டு போட்டானே ஒரு போடு.. அவ்வளவு தேன், அதுக்கு அப்பறம் அந்த கரிவாயன் கிட்ட எதுவுமே இல்ல....(!)அல்லாம் முடிஞ்சுது...!


இப்ப கூட யாராவது " நீ என்ன படிச்சிருக்க?" ன்னு கேட்டா ஒரு நிமிஷம் இதையெல்லாம் நினைச்சி சிரிப்பேன்.

9 comments:

கடல்கணேசன் said...

ஆகா, வாம்மா மின்னல்.. நீங்க தானா அது.. சொல்லவே இல்லை.. இப்படி யாருக்கும் சொல்லாம இருந்தா எப்படி நாங்க உங்க அட்ரஸ் கண்டுபிடிக்கறதாம். (உங்க username உபயோகித்து கமெண்ட் எழுதினால் இங்கே வர வசதியாக இருக்கும்)

கடல்கணேசன் said...

ஸாரி, 'வாங்கம்மா மின்னல்' என்று திருத்தி வாசிக்கவும். பிழைக்கு மன்னிக்கவும். (அந்த சினிமா டயலாக்கை அப்படியே சொல்ல முற்பட்டதன் விளைவு).தவறாக நினைக்காதீர்கள்.

Syam said...

ஆகா நீங்களும் ஒரு பிளாக் ஓனரா...இன்னும் அதே கம்பேனில தான் இருக்கீங்களா...இப்பவாவது டிகிரிக்கும் டிப்லமாக்கும் வித்தியாசம் தெரியுமா :-)

Anonymous said...

ஹாய் கணேஷ்,

அப்பா.... எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு...

// இப்படி யாருக்கும் சொல்லாம இருந்தா எப்படி நாங்க உங்க அட்ரஸ் கண்டுபிடிக்கறதாம். (உங்க username உபயோகித்து கமெண்ட் எழுதினால் இங்கே வர வசதியாக இருக்கும்)//

அய்யா சாமி, உங்க அளவுக்கு நான் என்ன பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய ஆளா? ஏதோ ஒரு ஆசைல ஆரம்பிச்சுட்டேன், ஆனா என்ன எப்படி எழுதறதுன்னு தான் புரியவே மாட்டேங்கிறது?

அது தான் "சைலண்ட்டு" இப்ப புரியுதா..!

Anonymous said...

நாட்டாமை,

வணக்கம் நாட்டாமை, மொதல்ல என்ன மன்னிச்சுடுங்க, ஏன்னா நீங்க இங்க வந்ததே தெரியாதண்ணே..

நாட்டாம அளவுக்கு இல்லைனாலும் ஒரு அல்ப ஆசை அவ்வளவு தான் ஆரம்பிச்சுட்டேன்.. அப்பறம் தான் என்ன பண்ணறதுன்னு தெரியாம முழிச்சிகிட்டு இருக்கேன்...ஹி ஹி ஹி ஹி

//இப்பவாவது டிகிரிக்கும் டிப்லமாக்கும் வித்தியாசம் தெரியுமா //

அய்யோ என் மானத்த வாங்கிட்டீங்களே...ம்ம் என்ன பன்றது?

Anonymous said...

கணேஷ்,
ரொம்ம்ம்ம்ம்ம்ப மரியாதை எல்லாம் குடுத்து என்னை உங்க சர்க்கிள்ல இருந்து பிரிச்சிடாதீங்க ப்ளீஸ்..

நீங்க என்ன உங்க விருப்பம்போல கூப்பிடலாம். சரியா...

Anonymous said...

கணேஷ்,
ரொம்ம்ம்ம்ம்ம்ப மரியாதை எல்லாம் குடுத்து என்னை உங்க சர்க்கிள்ல இருந்து பிரிச்சிடாதீங்க ப்ளீஸ்..

நீங்க என்ன உங்க விருப்பம்போல கூப்பிடலாம். சரியா...

ரவி said...

இயல்பாத்தான் இருக்கு...ஆனால் கொஞ்சம் ஸ்பெல்லிங் மிஸ்டேக் இல்லாம எழுதினா நல்லாருக்கும்...

Sumathi. said...

வாங்க ரவி,

ரொம்ப நன்றி,தமிழ் எழுதி நாளாச்சு, இனி குறையும் என நினைக்கிறேன்.

நன்றி. மீண்டும் வருக..