Sunday, September 17, 2006

மசாலா லட்டு....

இத பாரு, உனக்கு தெரியலன்னா யாருகிட்டயாவது கேளு... அப்பறம் என் உயிர வாங்காதே....என்ன பாத்தா உனக்கு பரிதாபமா இல்லயா ..? " உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன் சரியா..? இப்ப கூட கொஞ்சம் உதவி பன்னலாமில்ல"....முருகா நீதான் என்ன காப்பாத்தனும்...

கல்யாணத்துக்கு அப்பறம் இப்ப தான் முதல் தடவையா நம்ம தெறமய காட்டப்போறோம், இதுல வேற எத்தன தடங்கல்பா...... சே..நம்மள பத்தி தெரியல..
அப்பிடி இப்படி ஒரு வழியா லட்டு பண்ண ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா பூந்தி பிடிச்சு வச்சிட்டு (எல்லா மாவையும்) ஒரு பாத்திரத்தில போட்டு மூடி வச்சிட்டு அப்பறமா சக்கர பாகு ரெடி பண்ண ஆரம்பிச்சு ஒரு வழியா அதுவும் ரெடி பண்ணி ஆஹா ........என்ன வாசன ம்ம்ம்ம் காத்துலயே லட்டு வாசனய புடிச்சுட்டு .......உடனே லட்டு சாப்பிட ஆசயா உள்ளே வந்து " என்ன லட்டு ரெடியா..? எங்க ஒன்னு குடு.. டேஸ்டு பாக்கலாம்.." பாவம் ரொம்ப ஆசயா கேக்கும் போது மாட்டேன்னு சொல்ல முடியுமா? அதுவும் நம்ம தெரமய பாத்து வாசண வேற புடிச்சுட்டு.... நமக்கு... ஒரே சந்தோஷம் தான். உடனே ஒன்னு எடுத்து குடுத்து....? கொஞ்ச நேரம் முகத்தையே பாத்து கிட்டே இருந்தேனா...? ஆஹா நம்ம ஆளு அந்த லட்டுவ ரசிச்சு சாப்படற அழகே அழகு ....."சாப்டாச்சா..? எப்டி இருக்கு? சீக்கிரம் சொல்லுங்க?......"

ஹா ஹா ஹா ஹா ஹா............" இப்படி ஒரு லட்ட என் வாழ் நாள்லயே சாப்டதில்லே.....!பேஷ் பேஷ்ஷ் ......! .இதுக்கு நான் ஒரு பேரு வக்கட்டுமா?
இந்த தீபாவளிக்கு நம்ப வீட்டு ஸ்பெஷல் இந்த "மசாலா லட்டு " தான்.சொன்ன உடனே எனக்கு ஒரே ஆச்சர்யம்...! "என்னது.. மசாலாவா? லட்டுலயா? நான் பன்னது சாதாரன லட்டுதானே? மசாலா லட்டு இல்லயே? " இப்படி யோசனை பண்ணிகிட்டே இருக்கும்போது தான் புரிஞ்சுது, ஆஹா நாம லட்டுக்கு போட்ட முந்திரியும் திராட்சையும் தான்.என்னன்னு கேக்கறீங்களா? அதாங்க இந்த முந்திரியும் திராட்சையும்
மசாலா டப்பாவில போட்டு வச்சிருந்தேனா(அதுல பட்டையும் லவங்கமும் சேர்ந்து இருந்ததா...!) அந்த வாசனைய தான் ஐயா இப்படி சொல்லிட்டாரு..! அப்பறம் என்ன பண்ணறது? வாசனையோ தூக்கறது, வீடு முழுவதும் மசாலா வாசனை வேரயா.

ஆனா விடல ஆஹ ஒரு வழியா அந்த தீபாவளிய மசாலா வோட புது விதமா (புது ஸ்வீட்டோட) கொண்டாடினோம். ஆனா ஒரு விஷயமுங்க இந்த மசாலா விஷயம் மட்டும் யாருக்கும் தெரியாதா...! அதான் இப்பவும் பாருங்க யெல்லாரும் கேப்பாங்க (!!!!!!!!) அந்த ரெசிபிய ......(!?)

2 comments:

Dubukku said...

கலக்கறீங்க போங்க...சில ரெசிபி எல்லாம் எப்படிடா இதக் கண்டுபிடிச்சிருப்பாங்கன்னு தோனும் எனக்கு...இப்போதானே புரியுது..

நல்லா எழுதியிருக்கீங்க

Anonymous said...

ஹாய் டுபுக்கு,

வாங்க வாங்க, ஆமாங்க, இத்தனை நாளா ரகசியமா வச்சிருந்தேன், நீங்களும் யார் கிட்டயும் சொல்லிடாதீங்க என்ன சரியா...

ஆஹா கண்டு பிடிச்சுட்டாங்கப்பா...