Wednesday, September 13, 2006

ஆஹா, வந்துடுச்சு....

அப்படா நானும் ஒரு வழியா எழுத ஆரம்பிச்சுடேன். என் கண்னை என்னாலயெ நம்ப முடியலை.என் நன்பர்கள் சிலர் "நீ யா? எழுதபோரியா? உனக்கு எதுக்கு இந்த வம்பு எல்லம்?" என்ரு கேலி செய்தனர். அது சரி, நான் மட்டும் எழுத கூடாத? என் கிட்ட ஒரு கெட்ட பழ்க்கம் என்ன யாராவது சீண்டி பார்த்தால் உடனே அதை செய்து விட வேண்டும் . அப்பத்தான் நமக்கு தூக்கமே வரும்.சரி இதையும் ஒரு கை பார்போம்னுட்டு ஆரம்ப்பிச்சுட்டேன்.அப்பாடா! இன்னிக்கு தான் நல்லா தூங்கினேன். ஆனா இதுக்காக என் நன்பர்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். நம்ம டுபுக்குவுக்கும் இன்னொரு நன்பர் திரு.தேசிகனுக்கும் தான் ரொம்ப நன்றி சொல்லனும்.நம்ம தேசிகன் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்தது. நன்றின்னு ஒரு வார்த்தைல சொன்னா அது ரொம்ப சாதாரனம்.என்னோட ஒவ்வொரு பதிவும் அவர்க்ளை ஞாபக படுத்தும். அது தான் நான் அவர்களுக்கு சொல்லும் நன்றி.

நான் கல்லூரிக்கு போகும் போது language தமிழ் தான். அப்பவே எனக்கு சரியா எழுத வராதா, (!!)இதுல ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் எழுதரனா..!ம்ம்ம் எவ்வலவு கஷ்டமடா !(?) "அப்பவே வீட்டுல படி படினு சொன்னாங்க, அதையெல்லம் கேட்டுட்டா அப்பறம் நமக்கு என்ன மரியாதை", இப்ப புரியுது. இதுல ஒரு ஜோக் என்னன்னா நாங்கல்லாம் ரெண்டாவது வருஷம் படிக்கும் பொது தமிழுல ஒரு பேப்பர் அதாவது ஆங்கிலத்தை (G.O) தமிழுல அப்படியே காப்பி பன்னனும். அப்பதானே இந்த தமிழோட அருமையே புரியுது . நான் படிச்சது சென்னையில மவுண்ட்டு ரோடில உள்ள ஒரு பெரிய்ய்ய்ய காலேஜில. அப்ப அந்த ரோடில உள்ள பெயர் பலகையெல்லாம் படிச்சுட்டே பொவோமா, வீட்டுக்கு வந்த பின்னாடி எல்லாத்தையும் எழுதி வைச்சிட்டு மறு நாள் கல்லூரிக்கு ப் போயி எல்லாரோடயும் சேர்ந்து குறிச்சு வச்சிட்டு ... ஆஹா நாங்க அடிச்ச லூட்டி இருக்கே !! இப்ப எல்லாம் அதை நினைக்க மட்டும் தான் முடியுது.

என்ன இருந்தாலும் நம்ப கல்லூரி நாட்களும் அதுல நாம அடிச்ச லூட்டிகலும் நமக்கு வாழ்க்கையில திரும்பவே கிடைகாத ஒரு வரம். கவலையே இல்லாம், கஷ்டமே தெரியாம நமக்குன்னு ஒரு தனி உலகம்.


"இதெல்லாம் இப்ப எதுக்கு", அதானே, அதாங்க ஒரு சின்ன re-cap இந்த மாதிரி பின்னாடி எழுதும் போது நமக்கு விஷயம் வேண்டாமா? சரி எல்லாத்தயும் ஒரே நால்ல சொல்லிட முடியுமா? திரும்ப எழுத வேண்டாமா? விரைவில் வருகிரேன்.

ஏங்க இதை படிச்சுட்டு சும்மா போகாதீங்க? அது பாவங்க !. எதாவது எழுதிட்டு போங்க


வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டாடாடா.

19 comments:

Anonymous said...

fine

Anonymous said...

நன்றாக எழுதுகிறீர்கள். தொடர்ந்து நிறைய எழுதுங்கள். வாழ்த்துக்கள்!

Dubukku said...

வாங்க வாங்க...கலக்குங்க..:))

தொடர்ந்து விடாம எழுதுங்க ...கேக்கிறதுக்கு நாங்க ரெடி :)

கடல்கணேசன் said...

வந்துட்டேன்.. ஓகோ , தேசிகன் ஸார் வளர்த்து விட்ட ஆளா நீங்க?.. அப்போ பெரிய ஆள் தான் ..
(நான் மூன்று மாதத்துக்கு முன்பு முதல் முறையா இணையத்தில் தமிழ் வாசிக்க ஆரம்பித்த போது, தேசிகனின் எழுத்துக்களை முதலில் படித்து விட்டு, சுஜாதா தான் வேண்டுமென்றே 'தேசிகன்' என்ற பெயரில் எழுதுகிறாரோ என்ற சந்தேகம் வந்தது.. பின்பு அவருடைய பக்கத்தில் போய் பார்த்தபோது அவருக்கும் சுஜாதாவுக்கும் உள்ள நட்பு புரிந்தது.. சமீபத்தில் அவர் எழுதிய 'உயிர்த்தோழன்' சிறுகதையை ரசித்த நினைவு வருகிறது..)

சரி சரி.. ஏன் நிறுத்தி விட்டீர்கள்.. தொடர்ந்து எழுதுங்கள். நாங்கள் படிக்கிறோம்.. (நீங்கள் என் பக்கத்தில் கமெண்ட் எழுதும்போது உங்கள் Blogger name பயன்படுத்துங்கள். ப்ளீஸ்)

Anonymous said...

ஹாய் கணேஷ்,

மொதல்ல என் வலைக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி.

//தேசிகன் ஸார் வளர்த்து விட்ட ஆளா நீங்க?..// ஆமாம் கணேஷ், நான் மொதல்ல வலையுலகத்துக்கு வந்ததே ஒரு வித்யாசமானது தான். அதுவும் மொதல்ல இந்த வலையுலகம் பற்றி எதுவும் தெரியாமலே நம்ம டுபுக்குவயும் தேசிகனையும் படிச்சிட்டு அது பற்றி தெரிந்து கொள்ள அவங்களுக்கு உடனே மின்னஞ்சல் அனுப்பி அப்பறம் அவங்களோட ஒத்துழைப்பினாலும், ஆசியினாலும் தான் நான் ஒரு வலை ஆரம்பிச்சேன்.பாவம் நான் அவங்களை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன், ஆனா அவங்க தான் எனக்கு எல்லாம் சொல்லிக் குடுத்து எந்த அளவுக்கு வர வழைச்சுது.

ஆஹா என்ன எல்லாரும் ஊக்கப் படுத்தறத பாக்கும் போது எனக்கு ...ஒன்னுமே புரியல...

ரொம்ப நன்றி கணேஷ்.

Anonymous said...

ஹாய் கணேஷ்,

மொதல்ல என் வலைக்கு வந்ததுக்கு ரொம்ப நன்றி.

//தேசிகன் ஸார் வளர்த்து விட்ட ஆளா நீங்க?..// ஆமாம் கணேஷ், நான் மொதல்ல வலையுலகத்துக்கு வந்ததே ஒரு வித்யாசமானது தான். அதுவும் மொதல்ல இந்த வலையுலகம் பற்றி எதுவும் தெரியாமலே நம்ம டுபுக்குவயும் தேசிகனையும் படிச்சிட்டு அது பற்றி தெரிந்து கொள்ள அவங்களுக்கு உடனே மின்னஞ்சல் அனுப்பி அப்பறம் அவங்களோட ஒத்துழைப்பினாலும், ஆசியினாலும் தான் நான் ஒரு வலை ஆரம்பிச்சேன்.பாவம் நான் அவங்களை ரொம்ப கஷ்டப்படுத்தியிருக்கேன், ஆனா அவங்க தான் எனக்கு எல்லாம் சொல்லிக் குடுத்து எந்த அளவுக்கு வர வழைச்சுது.

ஆஹா என்ன எல்லாரும் ஊக்கப் படுத்தறத பாக்கும் போது எனக்கு ...ஒன்னுமே புரியல...

ரொம்ப நன்றி கணேஷ்.

Anonymous said...

வாங்க தேசிகன்,

ரொம்ப நன்றி,என்ன தாராளமா பாராட்டினதுக்கு,
முயற்சி பன்றேன் எழுதறத்துக்கு.

Anonymous said...

ஹாய் டுபுக்கு,

வாங்க வாங்க,

உங்களையெல்லாம் பக்கத்தில வச்சுகிட்டு... நானும் எழுதினா..?

என்னவோ"கேக்க ரெடி" ன்னு வேர சொல்லீட்டீங்களா.. பாக்கறேன்,

சேதுக்கரசி said...

ஆஹா வந்துடுச்சு...
ஆஹஹா ஓடிவந்தேன்...
அப்படின்னு பாட்டுப் பாடறீங்களோ.

வாழ்த்துக்கள்.

தமிழ்மணம் பயனர் கையேடு பார்த்து, அண்மையில் மறுமொழியப்பட்ட இடுகைகள் பகுதியில் உங்க பதிவு வர ஏற்பாடு செய்யுங்க முதல்ல.

Sumathi. said...

வாங்க அரசி,(அப்படி கூப்பிடலாமா)

முதல் முறையா என் உலகத்திற்கு வந்து இருக்கீங்க, நலமா?

//ஆஹா வந்துடுச்சு...
ஆஹஹா ஓடிவந்தேன்...
அப்படின்னு பாட்டுப் பாடறீங்களோ..//

ம்ம்ம்ம்... ஆமாம் இல்ல, பாடிடலாமா? நீங்க சொன்னா செஞ்சுடலாம்..

நன்றி அரசி அவர்களே...

dondu(#11168674346665545885) said...

நல்ல இணைய அனுபவங்களுக்கு வாழ்த்துக்கள் சுமதி அவர்களே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

Unknown said...

கலக்குறீங்களே! வாழ்த்துக்கள்!

சேதுக்கரசி said...

//(அப்படி கூப்பிடலாமா)//

அழைக்கலாம்.

Sumathi. said...

வாங்க ஐய்யா,

ரொம்ப நன்றி ஐயா, நீங்கள் என்னை வாழ்த்தியதற்கு.

இதே போல எப்பவும் உங்கள் வாழ்த்துக்கள் வேண்டும். நன்றி ஐயா.

Sumathi. said...

வாங்க சுல்தான்,

துபாயிலிருந்து வந்து என்னை வாழ்த்தியதற்கு மிகவும் நன்றி.

அடிக்கடி வந்து வாழ்த்த வேண்டும்.
நன்றி.

Raghavan alias Saravanan M said...

உங்க பாவத்தையோ உங்க வலைப்பூவோட சாபத்தையோ நான் வாங்கிக்கல சுமதி.. நிச்சயமா எழுதிட்டுத் தான் போறேன்..

உங்கள் முயற்சிகள் வெற்றியடைய வாழ்த்துக்கள்.. தொடர்ந்து எழுதுங்கள்..

இடையிடையே உள்ள எழுத்துப்பிழைகளையும் சற்றுத் திருத்திக் கொண்டே வந்தீர்களானால் உண்மையான வளர்ச்சி கிட்டும்!

உதாரணத்திற்கு சில...
//ஒரே நால்ல சொல்லிட முடியுமா
ஒரே நாள்ல சொல்லிட முடியுமா (அல்லது ஒரே நாளில்)

//எழுதபோரியா?
எழுதப்போறியா? (ஒற்று அவசியம்)

//பார்போம்னுட்டு
பார்ப்போம்னுட்டு

//ஆரம்ப்பிச்சுட்டேன்
ஆரம்பிச்சுட்டேன் (இங்கு ஒற்று தேவையில்லை)

சித்திரமும் கைப்பழக்கம்.. செந்தமிழும் நாப்பழக்கம் சுமதி.. போகப் போகப் பழகப் பழக எளிதாகும்...நீங்கள் தமிழ்ப்பாலைத் தாராளமாகப் பருகிவிடுவீர்கள்.... பாருங்களேன்...

Sumathi. said...

வாங்க இராகவன்,

உங்கள் வாழ்த்துக்கும் வருகைக்கும் மிக்க நன்றி.

ஆமாம் இராகவன், முதல்ல எனக்கு தமிழ் டைப்பிங்கே தெரியாது, அதுவும் முதல் முதலா தேடித் தேடி டைப் அடிச்சதுல நிறைய பிழைகள்... கடைசியில பாத்ததுக்கப்பறமா தான் தெரிஞ்சது.. அதான் ஒன்னும் பன்ன முடியலை...

ஆனா இப்ப கொஞ்சம் தேரிட்டேன்னு நினைக்கிறேன், மீதியையும் படிச்சுட்டு பிழைகள் இருந்தால் சொல்லுங்கள் திருத்திக் கொள்கிறேன்.. நன்றி.மீண்டும் வருக....

வடுவூர் குமார் said...

வாங்க வாங்க.
இப்படித்தான் பலரும் கேள்விப்பட்டு,பார்த்து பிறகு எழுத ஆரம்பிக்கிறோம்.சிலருக்கு உதவி சீக்கிரம் கிடைத்துவிடுகிறது.
எழுத எழுத எழுத்து வளப்படும்.
என்னுடைய எழுத்தை பார்க்காதீர்கள்.
:-))

Sumathi. said...

வாங்க குமார்,

ஆமாம், எனக்கு கூட கடல் கணேசன் தான் உதவி செய்தார். ஆரம்பத்தி டுபுக்குவும், தேசிகனும் ரொம்பவே உதவியிருக்கிறார்கள், இப்போது கணேசன். நன்றி குமார்...