Thursday, July 05, 2007

நீங்களும் முயன்று பாருங்கள்...!

haai friends,

என்ன இதுன்னு யோசிக்கறீங்களா? நான் இன்னிக்கு பொழுது
போகாம வீட்டுல இருந்தப்போ சும்மா ஏதோ சில சைட்டுல
போயி ஏதேதோ படிச்சுகிட்டு இருந்தப்போ தோனினதையெல்லாம்
கீழே குடுத்துருக்கேன், படிச்சுட்டு உங்களுக்கு உபயோகமா
இருந்தா ஒ.கே. இல்லயா நோ ப்ராப்ளம், சும்மா ஒரு சிரிப்பு
சிரிச்சுட்டு போங்களேன்.


தக்காளிப் பழத்தால் எப்பேர்பட்ட பெண்ணின் முகத்தையும் தக... தகக்க வைத்து விடலாம். தக்காளியானது முகச்சுருக்கத்தை விரட்டி இளமையானவராக மாற்றி விடும்.

நீண்ட நாட்களாக முகத்தை சரிவர பராமரிக்காதவர்களின் முகத்திலுள்ள செல்கள் இறந்து போய் முகம் பொலிவிழந்து விடும். இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியின் சாறுடன் கால் டீஸ்பூன் ரவையைக் கலந்து கொள்ளுங்கள்.

இதை நன்றாக முகத்தில் தேய்த்து கழுவுங்கள். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் முகம் சூரியனாகப் பிரகாசிக்கும். சில பெண்களுக்கு முகத்தில் மென்மைத்தன்மை குறைந்து முரட்டுத்தனமாகத் தெரியும் இப்படிப்பட்டவர்கள் ஒரு தக்காளியை எடுத்து கூழாக்கிக் கொள்ளுங்கள். இதனுடன் அரை டீஸ்பூன் தயிரைக் கலந்து கொள்ளுங்கள்.இதை முகத்துக்குப்பூசி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் மிருதுவாகி தங்கம் போல் தக தகவென ஜொலிக்கும்.


சில பெண்கள் கண்ணுக்கு கீழ் கருவளையம் தோன்றி எதையோ பறிகொடுத்தது போல் வலம் வருவார்கள். இவர்களை அழகு தேவதைகளாக மாற்றுவதில் தக்காளிக்கு நிகர் தக்காளிதான்.


ஒரு வெள்ளரித்துண்டு, அரை தக்காளி இரண்டையும் அரைத்துக் கொள்ளுங்கள்.

இமைகளின் மேல் இந்த கலவையைப்பூசி, 2 நிமிடம் கழித்துக் கழுவுங்கள். ஒரிரு வாரங்கள் இதைச் செய்து வந்தாலே கருவளையம் காணாமல் போவதுடன் கண்களும் பளிச்சென்று இருக்கும்.


பெரும்பாலான பெண்கள் முகத்துக்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை கழுத்திற்கு கொடுப்பதில்லை. இதனால் கழுத்தில் கறுப்புக்கயிறு கட்டியது போல் கருவளையம் தோன்றி விடும்.இதனை தக்காளி பேஸ்ட்டால் விரட்டி விடலாம்.

தக்காளி சாறு- அரை டீஸ்பூன், தேன்அரை டீஸ்பூன், சமையல் சோடா- ஒரு சிட்டிகை. இந்த மூன்றையும் கலந்து கொள்ளுங்கள்.
இந்த பேஸ்ட்டை கருவளையத்தின் மேல் பூசி 10 நிமிடம் கழித்து கழுவுங்கள். வாரம் 3 முறை இப்படி செய்து வந்தால் கருவளையமா அது எங்கே என்பார்கள்.


கண்ணாடியைப் பார்க்கவே பிடிக்காமல், கரும்புள்ளியும் கருந்திட்டுகளும் உங்கள் முகத்தை ஆக்ரமித்துக் கொண்டனவா? ரிலாக்ஸ் பிளீஸ்... உங்கள் முகத்தை கண்ணாடி போல் மாற்றிக் காட்டுகிறது. இந்த தக்காளி பேஸ்ட்!
உருளைக்கிழங்கு துருவல் சாறு- ஒரு டீஸ்பூன், தக்காளி விழுது- அரை டீஸ்பூன், இரண்டையும் கலந்து கொள்ளுங்கள்.இந்த பேஸ்ட்டை கழுத்திலும் முகத்திலும் தடவி 5 நிமிடம் கழித்து கழுவுங்கள். தொடர்ந்து அதைச்செய்து வந்தால், சில வாரங்களிலேயே வித்தியாசத்தை உணர முடியும்.

கன்னங்கள் ஒட்டிப்போய் அழகற்றதாக காணப்படுகிறதா? முகத்தை புஸ் புஸ் என மாற்றிட இந்த தக்காளி கூழை பயன்படுத்துங்க.

தோல் மற்றும் விதை நீக்கிய ஒரு தக்காளியை கூழாக்குங்கள். ஒரு டீஸ்பூன் ஆலிவ் எண்ணையை எடுங்கள்.
முதலில் முகத்தில் ஆலிவ் எண்ணையை தடவுங்கள். அதன் மேல் இந்தத் தக்காளி கூழைப் பூசி, 10 நிமிடம் கழித்து கழுவுங்கள்.

வாரம் ஒருமுறை இப்படி செய்து வர தக்காளி போன்ற கன்னங்கள் கிடைக்கும்.


கமலா ஆரஞ்சு தோல் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பூன், எலுமிச்சை தோல் அரைத்த விழுது - 1 டேபிள் ஸ்பீன், பீட்ரூட் சாறு - 1 டேபிள் ஸ்பூன், பாதாம் அரைத்த விழுது - 2 டேபிள் ஸ்பூன், உப்பு - 1 சிட்டிகை
இவற்றுடன் 5 துளிகள் ஜாஸ்மின் (அ) பாதாம் எண்ணெயை சேர்த்து பேஸ்ட் ஆக்குங்கள். இந்த பேஸ்ட்டை முகத்திலும் உடம்பு முழுக்கவும் நன்றாகப் பூசி, குளித்தால்.... முரடு தட்டிப் போன முகம் மிருதுவாகும். உடம்பும் நறுமணத்துடன் பளபளக்கும்.


* முகத்தில் வரிகள் விழுகின்றனவா? கவலையே வேண்டாம். இதோ அருமையான ஃபேஸ் பேக்!

பீட்ரூட் அரைத்த விழுது - ஒரு டேபிள் ஸ்பூனுடன், ஒரு டீஸ்பூன் தேனைக் கலந்து கொள்ளுங்கள். இதை முகத்தில் தடவி, 15 நிமிடம் கழித்து கழுவுங்கள். முகம் பளிங்கு போல் பிரகாசமாகும்.

* முகத்தில் கன்னிப் போன பகுதி, கரும்புள்ளிகளை நீக்க ஆவி பிடிக்கலாம்.


சமையலறையில் சுக்குப்பொடி, ஜீரகப் பொடி, எலுமிச்சம்பழம், ஓமவாட்டர் என்று ஒரு குட்டி மருந்துகள் உலகம் அவசியம் வேண்டும்! வாயு, அஜீரணம், பித்தம் சம்பந்தமான தலைசுற்றல் ஏற்படும்போது கை கொடுக்கும் நண்பர்கள் இவர்கள்.


சாதாரணமாக நடப்பதைவிட சற்று மெதுவாக நடக்க முயலுங்கள்.
மகிழ்ச்சியான, மனநிறைவான உணர்ச்சிகளை தினமும் பத்து நிமிடங்கள் மனதிலே கொண்டு வாருங்கள்.

சாதாரணமாகப் பேசுவதைவிட குறைவாகப் பேசுங்கள். இனிமையாகப் பேசுங்கள்.

உங்களுக்காகத் தினமும் 30 நிமிடங்களை ஒதுக்குங்கள். அந்த முப்பது நிமிடங்களுக்குள் மற்றவர்களை நுழைய விடாதீர்கள்.

சாப்பிட்ட உடனே எழுந்து ஓடாதீர்கள். அமர்ந்து பின்னர் எழுந்து செல்லுங்கள்.

ஒரு கூட்டத்தில் பங்கேற்கும் போதும், மற்ற நேரங்களிலும் மக்களின் முகங்களைப் பாருங்கள்.

பிறர்மேல் உள்ள அன்பை வார்த்தைகளில் வெளிப்படுத்துங்கள்.

உங்கள் கோபத்திற்கு உரிய காரணங்களைக் கண்டுகொள்ள இன்று முயலுங்கள்.

அழகான மரம், மலர் போன்ற இயற்கை காட்சிகளை நின்று ரசியுங்கள்.
உங்கள் முகம்கூட மலர்ச்சியாக இருக்க முடியும் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

பிறரைப் பார்க்கும்போது புன்முறுவல் பூத்துப் பழகுங்கள்.

2 comments:

Anonymous said...

உடலும், உள்ளமும்
அழகும், அமைதியும்
பெறுவதற்குரிய
அருமருந்தளித்தமைக்கு
மிக்க நன்றி.

Kittu said...

adaengappa oru mega thakkaali super market pona feeling vandhuduchu...but message ellam superaa dhaan irukkum...naanum sivaji maadhiri idhai ellam poosi bayamuruthap poraen :)