Thursday, September 27, 2007

KOD ( Kaadal on demand)

ஹாய் ஃப்ரெண்ட்ஸ்,

கீழே இருக்குற அழகான வரிகள் எல்லாமே நான் ஒரு 2 அல்லது
3 வருஷத்துற்கு முன்னாடி கைரளி மலயாள சேனலில் KAIRALI
ON DEMAND அப்படிங்கற ஒரு நிகழ்ச்சியில் ஸ்கிரீனில் எழுதப் பட்ட
சில வரிகள் தான். நான் இதுக்காகவே அநத நிகழ்ச்சிய விடாம
பாத்து இருக்கேன். உடனே ஒரு நோட் புக்கில் எழுதியும் வச்சிருக்கேன்.
இந்த நிகழ்ச்சி வரும் போது ரொம்ப பாப்புலரான ஒரு சீரியல்
கூட அப்போ வரும். அது தான் மெட்டி ஒலி. அத கூட பாக்காம
நான் இத பாப்பேன். அதிலிருந்து சில நல்ல வரிகள் தான் இது.
உங்களுக்கு எல்லாம் பிடிக்கும் னு நினைக்கிறேன்.



LOVE THE HEART THAT HURTS YOU
BUT NEVER HURT THE HEART THAT LOVES YOU..

நல்லாயிருக்கா? பிடிச்சிருந்ததா?

COURTESY: kod, kAIRALI TV.

Tuesday, September 25, 2007

வரமாகிய சாபம்.

நான் சிரிக்கும் போது
வரமாகிறாய்..

துடிக்கும் போது
சாபமாகிறாய்..

நீ என் வாழ்வில் வந்தது
வரமா இல்ல சாபமா?

எதுவாயிருந்தாலும்
நீ எனக்கு கிடைத்த வரமே…


துறைமுகத்தில்
வழிகாட்டியாய் எப்போதும்
மின்னிக் கொண்டிருக்கும் விளக்காய்

இருளில் தேடும் போது
விடி வெள்ளியாய்
எனக்கு கிடைத்த விளக்கு நீ.

உன் வருகையால் என் வீட்டில்
அன்பெனும் ஒளிமழை
பொழிந்து கொண்டிருக்கிறது.

இதற்கு நான்
என்ன விலை கொடுக்க வேண்டும்?

Friday, September 07, 2007

என் இனிய காதலா !!

உன் தோள் மீது தலை சாய்த்து

கனவுகளால் ஆகிய நம் உலகிற்கு

போகிறேன் விரைவாக,

நாம் சேர்ந்தே கானும் கனவுகளில்,

விரலுடன் விரல் சேர்த்து,

நாம் இனைந்து நடக்கும் நேரங்களில்,


இன்பங்களையும் சில சமயங்களில்

துன்பங்களையும் பகிர்ந்து கொள்ளும்,

நமக்கே சொந்தமாகிய நிமிடங்களில்

என் வாழ்க்கையின் லட்சியம்,

என் கனவுகள், நம்பிக்கைகள்,

கொடுத்து விட்டேனடா அனைத்தையும்

உன் கைகளில்,

ஏனென்றால்,

நீ தானே நான் தேடும்

என் பூலோக சொர்கம்..

Thursday, September 06, 2007

தொலைந்து போன காதல்.1

ஹாய் மக்கள்ஸ்,


இது காதல், தொலைந்து போன காதல். எனக்குப் பிடித்த சில
காதல் கவிதைகள் உங்களின் பார்வைக்கு. இது நான் எழுதியது
இல்லை. நான் ரசித்தது. காதல் மனிதர்களுடன் மட்டும் தான்
உண்டாக வேண்டும் என்று இல்லை. ஏன் அழகான மலர்களைப்
பார்த்தால் கூட "அட எவ்ளோ அழகாயிருக்கு",
சொல்றதில்லையா, அது போலத் தான்.


இப்ப கொஞ்ச நாளா அறிவுமதி னு ஒரு கவிஞர்
ரொம்ப அழகா இருக்கு அவரோட சில கவிதைகள் இங்கே...
என்னோட கை வண்ணத்தில்..