Hai Ladies & Gentlemen,
இப்ப நம்ம ப்லாக் உலகத்த 8 ங்கற பேய் பிடிச்சு ஆட்டிகிட்டு
இருக்கு. யாரப் பாத்தாலும் ஒரே 8 தான் போங்க... சரி சரி இந்த
பேய் கோப்ஸ் மூலமா என்னையும் பிடிச்சிடுச்சு. எனக்கு
தெரிந்த 8 நல்ல விஷயம் இதோ...ஹி ஹி ஹி ஹி...
படிச்சுட்டு என்ன திட்டறதா இருந்தா நல்லா திட்டுங்க ...
இதுக்கு முழுப் பொறுப்பும் கோப்ஸ் தான்...( அப்பா....
டிடி கிட்டருந்து தப்பிச்சாச்சு...)
முட்டைக்கோஸ், காலிபிளவர் போன்றவைகளை வேக வைக்கும் பொழுது ஒரு சொட்டு எலுமிச்சை சாறு ஊத்தி வேக வைத்தால் வேண்டாத வாசம் போய் விடும்.
• தேங்காய் துருவும் பொழுது ஓட்டையும் சேர்த்து துருவி பயன்படுத்தினால் குடல் புண் உண்டாகும். அதனால் வெள்ளைப் பகுதியை மட்டும் பயன்படுத்தவும்.
• மிளகாய் வத்தலை வறுக்கும் பொழுது சிறிது உப்பு சேர்த்து வறுத்தால் ஹச்...... ஊச்......... என்று தும்மல் ஏற்பட்டு பாடாய்படுத்தாது.
• வடகத்தை வெறும் வாணலியில் வறுத்த பின் எண்ணெயில் வறுத்தால் நன்றாக பொறிந்து மொறு, மொறுப்பாக இருக்கும்.
• வேப்பம் பூவை நெய்யில் வறுத்து சிறிது உப்பு சேர்த்து சாதத்தில் பிசைந்து பயன்படுத்தினால் ஜுரம், வரவே வராது. வேப்பம்பூவிற்கு எங்கே போவது என நினைக்க வேண்டாம். கடைகளில் கிடைக்கிறது.
• ஓமப்பொடி செய்யும் பொழுது கடலைமாவு, மூன்று பங்கு, அ¡¢சி மாவு ஒரு பங்கு சிறிது மைதா கலந்து செய்தால் எண்ணெய் குடிக்காமலும், தூள் அதிகமாகமலும், நன்றாக எடுக்க வரும்.
• கறிவேப்பிலைச் செடி நன்கு வளர புளித்த மோருடன் நீர் கலந்து ஊற்றி வரலாம். மைசூர் பாகு செய்வதற்குக் கடலை மாவை டால்டாவில் கரைத்து பின் சர்க்கரைப் பாகில் கிளறினால் கட்டியில்லாமல் மென்மையாக வரும்.
• ஜாடியில் ஊறுகாயைப் போடும் முன் கொதிக்கும் எண்ணெயில் நனைக்கப்பட்ட துணியால் ஜாடியின் உட்புறத்தை துடைத்த பின் ஊறுகாயைப் போட்டு மூடி வைத்தால் பூசனம் பிடிக்காமல் இருக்கும்..
( இந்த 8 ல எத வேனா சொல்லலாம்ல. சொல்லிட்டோம்ல...)
Thursday, June 28, 2007
Subscribe to:
Posts (Atom)