Hai friends,
இப்போ க்ரைம்--2.
அவங்க வீட்டுக்குவந்தப்பறம் தான் தெரிஞ்சது முதல் நாள்
ராத்திரி ரஞ்சித் இறந்துபோன(கொலை செய்யப் பட்ட)
விஷயம். மறு நாள் காலையில் கிஷோரும் விவேக்கும்
தங்கள் வீட்டுக்கு வந்த உடனே தான் இந்த விஷயம்
தெரிந்தது. அப்போது கிருஷ்ண குமார் னு ஒருவன் அந்த
வீட்டு பெரியவரை(ப்ரியாவின் அப்பா) பார்க்க வேண்டும்
என்று சொன்னான். கிஷோரின் அப்பா அவர் யாரயும்
பார்க்க விரும்பவில்லை என்று சொன்னார். அவன் சிறிது
நேரம் அங்கேயே நின்று கொண்டுருந்தான். அப்போ
விவேக் அவனைப் பாத்து "இப்போது நீ போ, இன்னொரு
சமயம் வா, " என்று அனுப்பினான்.
கிஷோரின் அப்பா இவர்களிடம் ரஞ்சித் கொலை செய்யப்
பட்டது பற்றி பேசிக் கொண்டுருந்தார். பின் தன் மகனிடம்
"கிஷோர், நீ எப்படியாவது இந்த கொலை செய்தவனை
கண்டு பிடிக்கவேண்டும்.அப்ப தான் ப்ரியாவை நீ
கல்யாணம் பண்ணிக்க முடியும். இந்த ஆஸ்தி முழுவதும்
நமக்கு கிடைக்கும் ."
"அப்பா, நான் என்னால ஆன வரைக்கும் முயற்சி செய்யறேன்"
"அது மட்டும் இல்லை, ப்ரியா ஏற்கெனவே விவேக்கோடு
பழகிட்டு இருக்கா, அவனும் உனக்கு இப்போ போட்டியா
மாறிட்டு இருக்கான். இது ஞாபகம் இருக்கட்டும்."
ரெண்டு பேரும் ஆபீசில் ஸ்பெஷல் இன்வெஸ்டிகேஷன்
டீமில் இந்த கொலையை பற்றி விசாரிக்க சார்ஜ் எடுக்கி
றார்கள். முதலில் கொலை நடந்த அந்த இடத்துக்கு
வருகிறார்கள்.ஒவ்வொன்றாக ஆராய்கிறார்கள். அதாவது
யாரோ ஒருவன் ரஞ்சித்தை தலயின் பின்புறத்தில்
அடித்து கொன்றிருக்கிறான். தரையில் ரத்தம் நிறைய்ய
தேங்கி இருந்தது. போன் கீழே தொங்கி கொண்டு இருந்தது.
அவரது கையிலிருந்து அந்த குப்பி சற்று தொலைவில்
விழுந்து கிடந்தது .உடலை இழுத்து சென்றதால் தரையில்
ரத்தக் கோடும் இருந்தது.
கொலை செய்த பின்பு உடலை இழுத்துக் கொண்டு போயி
வீட்டின் முன்பாக வைத்து எரித்தும் விட்டார்கள். ஆனால்
கொலை நடந்த இடத்தில் ஒரு சிறிய குப்பியில் ஒரு
பொருள் மட்டும் விழுந்து இருந்தது.அதை எடுத்து கொண்டனர்.
பின் வீட்டு வாசலுக்கு வந்து எரிந்து கிடந்த இடத்திருந்து ஒரு
சில எலும்புகளை எடுத்து லேபுக்கு டெஸ்டிங்குக்கு அனுபினர்.
பின் வீட்டு காவல்காரனை விசாரித்தனர். அவன் நேற்று
ரெண்டு பேர் ரஞ்சித்த பாக்க வந்ததாகவும், போகும் போது
கண்களில் கண்ணீரோடு போனதாகவும் கூறினான்.கிஷோரும்
விவேக்கும் ஒன்றாகவே விசாரனையை ஆரம்பித்தார்கள்.
ப்ரியாவும் விவேக்கும் தோட்டத்தில பேசிகிட்டு இருக்காங்க.
"ப்ரியா, நீ நினைக்கிறாப் போல நான் ஒன்னும் பெரிய்ய
போலீசுகாரனா வர முடியாது. ஏன்னா எனக்கு அந்த அளவுக்கு
சாமர்த்தியம்லாம் இல்லை. இதுக்கு கிஷோர் தான்சரி.பேசாம
நீ அவனையே கல்யாணம் பண்ணிக்கோ."
"எனக்கு தெரியும் உன் திறமயப் பத்தி. உன்னால நிச்சயம்
முடியும். தைரியமா இரு. கண்டு பிடி. அப்பறமா என் அப்பாவ
நான் சமாளிச்சுக்கறேன்."
அந்த நேரத்தில அங்க கிஷோரும் வந்து பேசிட்டு பின்
ரெண்டு பேரும் போகின்றனர். மறு நாள் ரஞ்சித்தை பாக்க
வந்த அந்த பையனை விசாரிக்கின்றனர்.
"நீங்க எதுக்காக ரஞ்சித்த பாக்க வந்தீங்க?"
"சார், நான் என் தங்கை கல்யாண விஷயமா கொஞ்சம்
பணம் கடனாக கேக்க வந்தோம். சார் இங்க வந்து பாக்க
சொன்னார். அதனால தான் வந்தோம்."
"சரி சார் பனம் குடுத்தாரா?"
"இல்லை சார். அவர் கிட்ட இப்போ பணம் இல்லைனு
சொன்னார்."
"வாட்? இல்லைனு சொன்னாரா? அப்படி சொல்ல மாட்டாரே?"
"ஆனால் அப்படித்தான் சொன்னார். இதனால் நாங்க ரொம்ப
ஏமாந்து போயிட்டோம். ஏன்னா நாங்க ரொம்ப எதிர்பார்த்து
வந்தோம். இல்லைன்னதும் கண்கலங்கிட்டோம். "
சரி அப்பறம் என்னாச்சு?"
நாங்க போயிட்டோம் சார். ஆனா அதுக்குஅப்பறம் தான்
கொலை செய்யப் பட்டு இருக்கார்."
"நீங்க இருக்கும் போது ஏதாவது போன் வந்ததா?"
"ஆமாம் சார். யார் கிட்டயோ கோவமாகப் பேசினார்."
சரி நீங்க போகலாம். ரெண்டு பேரும் ஃபாரன்சிக் லேபுக்கு
போயி அந்த ரிசல்ட பார்த்தனர். அப்போ ஒரு பெரிய்ய
அதிர்ச்சி கிடைத்தது. அதாவது அந்த மண்டைஓடு ஒரு
பொண்ணுடையது என்றும் அதுவும் ஒரு சிறு வயது
பெண் என்றும் சொன்னார்கள். ரெண்டு பேருக்கும்
அதிர்ச்சி. இறந்தது பொண்ணா? அப்படின்னா ரஞ்சித்
என்னவானார்? அவரோட உடல் எங்கே?
நண்பர்களே, கதை எப்படி உள்ளது? பிடித்திருக்கிறதா?
மேலே தொடரலாமா? சொல்லுங்கள்.....
Subscribe to:
Post Comments (Atom)
7 comments:
Hi Buddy,
//நண்பர்களே, கதை எப்படி உள்ளது? பிடித்திருக்கிறதா? மேலே தொடரலாமா? சொல்லுங்கள்.....//
Very nice and Any doubt. Besh Besh Romba Nannaa irukku. Thodarungal. Vaazhthukkal.
May God Bless.
நல்லா போகுது கண்டினியூ :-)
சீக்கிரம் நீங்க ஷிட்னி ஷெல்டன் ரேஞ்சுக்கு வர போறீங்க போல இருக்கு...(இப்படியே ஏத்தி விட்டு ஏத்தி விட்டு) :-)
Aaha.. ivlo supera thriller story pottuttu thodaralaamannu vera kekkareenga? neenga thodaralana engalukku climax eppadi theriyum :-((
Hi Climax Eppo ?
May God Bless.
நல்லா போகுது please கண்டினியூ...
//சீக்கிரம் நீங்க ஷிட்னி ஷெல்டன் ரேஞ்சுக்கு வர போறீங்க போல இருக்கு//
LOL. syamuku eppavume thamasu thaan! :p
hi sumathi..
kadai nalla iruku.. en naan vendamnu sonna niruthura abiprayam iruka?? engala ippadi climaxla vachi ippadi ellam keta naanga vera enna bathil solradu
Post a Comment