Monday, April 09, 2007

CRIME-- 3.

Hai friends,


CRIME...3

இறந்தது பொண்ணா? அப்படின்னா ரஞ்சித் என்னவானார்?
அவரோட உடல் எங்கே?

ரெண்டு பேருக்கும் பயங்கர அதிர்ச்சி. அதோட கூட அந்த
பெண்ணுக்கும் அவருக்கும் என்ன சம்பந்தம்? திரும்ப
அவங்க முதல்ல இருந்து ஆரம்பிச்சாங்க.அப்போ அந்த
கிருஷ்ண குமார் கிட்ட இருந்து ஆரம்பமானது விசாரனை.
இப்போ கிருஷ்ண குமாரப் பத்தி ஒரு குறிப்பு. ப்ரியாவோட
அப்பாவுக்கு பிறந்தவன் தான் இந்த கி.குமார். (illegal child)
அதனால யாருக்கும் அவனைப் பிடிக்காது. ஆனால் அவருக்கு
மட்டும் கொஞ்சம் பாசம் உண்டு. அதுவும் ரஞ்சித்துக்கு துளி
கூட பிடிக்காது. இது அங்க உள்ள எல்லாருக்கும் தெரியும்.
ஆக முதல் விசாரனை அவன் கிட்ட இருந்து ஆரம்பம். ஆனா
அவனுக்கும் இந்த கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
கிஷோரோட அப்பாவுக்கு இதுல கொஞ்சம் சந்தேகம் இருந்தது.
ஏன்னா ரஞ்சித்துக்கு அப்பறமா தன் மகன் தான் ஏகபோக
அதிபதி. ஒருவேள அதுக்கு போட்டியா கி.குமார் வந்துடு
வானோனு பயந்தாரு.


மறுபடியும் கொலை நடந்த அந்த வீட்டுக்கு போயி பாத்தாங்க.
ஏதாவது தடயம் கிடைக்குதானு. சுத்தி சுத்தி பாத்ததுல ஒரு
இடத்துல மண் கலைக்கப் பட்டிருந்தது. அங்க தோண்டி
பாத்ததில் ஒரு பிளாஸ்டிக் பையில் ஒரு சட்டை ரத்தக்கறை
யோட இருந்தது. உடனே அதை எடுத்து லேபிற்கு அனுப்பி
விட்டு வீட்டுக்கு வந்து ப்ரியா கிட்ட சில கேள்விகள் கேட்டனர்

"ரஞ்சித்துக்கு யாராவது பெண் நண்பர்கள் உண்டா?"

எனக்கு அவ்வளவா தெரியாது. -- ப்ரியா. பின் மீண்டும்
அந்த பையனிடமே (காசு வாங்கவந்தவன்) ஆரம்பித்தனர்.
கிஷோர் மீண்டும் கி.குமாரிடம் விசாரனையை ஆரம்பித்தான்.
அப்போது ரஞ்சிதுக்கு சில பென் நண்பர்கள் உண்டு என்றான்.
அதில் அவன் காசு வாங்க வந்தவனுடைய தங்கையை
கேட்டால் தெரியும் என்றான். இதற்கு நடுவில் லேபிலிருந்து
வந்த ரிசல்ட் ரஞ்சித் ஒரு தடிமனான பொருளால் தான் தாக்கி
இருக்க வேண்டும் என்றும், மேலும் அந்த சட்டையில் O+ ரத்தம்
கூட ரஞ்சித்தோட ரத்தமும் இருக்கு என்றனர். கி.குமாரின்
ரத்தம் O+. உடனே அவனை தேடி போனார்கள். அந்த சட்டையும்
கி.குமாருடையது தான் என்றும் கண்டுபிடித்தனர்.(அதாவது
டெயிலர் மார்க் வைத்து) அவனுடைய வீட்டில் அவன் வெளியூர்
செல்ல தயாராகி கொண்டிருந்தான்.கஷ்டப் பட்டு அவனை
பிடிக்க போனப் போது அவன் தப்பி விட்டான். இதனாலயே
கிஷோருக்கு அவன் மேல சந்தேகம் வந்து விட்டது. கொலை
காரன் அவன் தான் என முடிவே செய்து விட்டான்.


ப்ரியாவின் அபாவுக்கு அவன் மேலே எந்த சந்தேகமும்
இல்லை. ஆனால் அவனும் தன்னை விட்டு போயிடுவானோ
என்ற பயம் வந்து விட்டது. விவேக்கை கூப்பிட்டு அவனை
எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

"கிஷோர், நீ எதற்காக அவ்னை கைது செய்ய வேண்டும்?"

"விவேக், நீ எதற்காக அவனைக் காப்பாற்ற வேண்டும்?"

அவன் மீது எந்த தவறும் இருப்பதாக சொல்ல முடியாது.
எப்படி, சட்டை அவனுடையது, ரத்தமும் அவனுடையது,அது
தெரிந்ததும் அவன் ஏன் தப்பி ஓட வேண்டும்? இல்லை
என்றால் தைரியமாக வந்து நிரூபிக்க வேண்டியது தானே?

இதனால் இருவருக்கும் வாக்குவாதம் முற்றியது. அவனை
எப்படியாவது கைது செய்வேன்,பார். அப்படியானால் , நான்
அவனை எப்படியாவது காப்பாற்றுவேன், பார். கி.குமார்
தப்பித்து நேராக இவர்களுடைய மாமா வீட்டுக்கு சென்றான்.
அவர் அவன் தப்பிக்க பல வழிகளில் முயற்ச்சி செய்து
கிஷோரிடம் கொஞ்சம் பணம் கேட்டு வாங்கி கொண்டு
நேராக தன் வீட்டுக்கு வந்தார். கி.குமாரிட்ம் அந்த பணத்தைக்
கொடுத்து அங்கிருந்து தப்பித்து போகுமாறு சொல்லிக்
கொண்டிருக்கும் போதே கிஷோர் வேகமாக வந்து அவனை
பிடித்து போனான். இப்போது இருவரும் தனித் தனியாக
விசாரனையை ஆரம்பித்தனர்.

விவேக், அந்த லேபிற்கு சென்று ஒவ்வொன்றாக ஆராய்ந்து
பின் அந்த வீட்டுக்கு சென்ற போது சுவற்றில் ஒரு ரத்தக்
கறை மட்டும் வித்தியாசமாக கண்டான். அதாவது துப்பாகியால்
சுட்டால் ரத்தம் எப்படி சிதறுமோ அப்படி ஒரு கறை. மேலும்
வட்டமாக ஏதோ ஒரு பொருளால் தாக்கியதை போல் ஒரு
அடையாளமும். விவேக் இப்போது முதலில் பணம் வாங்க்
வந்த அந்த பையனை விசாரித்தான் பலமாக. அதில் தான்
பல பயங்கர அதிற்சியான தகவல்கள் கிடைத்தது. அதாவது
இறந்து போன ரஞ்சித்துக்கு நிறைய்ய பொண்களோடு
பழக்கம் உண்டென்றும் அதில் ஒருத்தி தான் தன் தங்கையின்
தோழி என்றும் சொன்னான். அவளை கேட்டால் பல தகவல்கள்
கிடைக்கலாம் என்றான். அவளைத் தேடி போனால் அவள்
ஊரில் இல்லை என்றும் வீட்டிற்கு வந்து 15 நாட்களாகி விட்டது
என்றும் பதில் கிடைத்தது. ஆனால் இறந்தது அவள் தான் என்று
அவனுக்கு ஏன் யாருக்குமே தெரியாது.அவள் பெயர் நீனா.

ஃப்ரெண்ட்ஸ், ரொம்பக் கொழப்பமா இருக்கா? இந்தக் கதையில
மொத்தமே சில கேரக்டர்ஸ் தான். ஹீரோயின்-- ப்ரியா.
ஹீரோஸ்-- விவேக்,கிஷோர். அண்ணன்-ரஞ்சித் (இறந்தவன்)
இன்னொரு அண்ணன் கிருஷ்ண குமார்.(Illegal) காசு வாங்க
வந்த பையன் அப்பறம் கொலைகாரன்.

சிம்பிள்....அவ்வளவுதான்.

7 comments:

G3 said...

Adada.. unga posta padikka aarambikkaradhukku munnadi "thodarum"-a illa "the end"-aanu paaka keezha vandhen.. simple..avvalavudhaannu paathadhum.. seri.. kadha idhoda mudiyodhu polanu posta fulla padikka aarambichen.. kadaisila paatha andha simple..avvalavudhan kadhayoda character explanationukku!!!! Sema bulbunga :-((

dubukudisciple said...

seri ippo enna solla vareeenga?
kadai thoduram thodaratha??
antha kolai kaaran yaaru??
avan en kolai panninan!!
ore kozhapam thaan ponga

Anonymous said...

sssspppa ippave kanna katuthe!
yekka, mudiva enna solla varinga?

neenava ethuku ranjith kollanum?

adhellam kidakuthu oru pakkam!

he hee, priyava yaaru thatindu ponanga? adhu thaan mukyam! enna naan solrathu? :)

Syam said...

enakkum same blud...kanna kattuthu...
:-)

Syam said...

next part varumaa illa idhoda mudinju pochaa :-)

Syam said...

//seri ippo enna solla vareeenga?
kadai thoduram thodaratha??
antha kolai kaaran yaaru??
avan en kolai panninan!!//

DD akka ketkira maathiri ithu ellaam enga guess ku vituteengalaa :-)

SENTHIL EG IYAPPAN said...

Hi,

Quite interesting.

Keep it up.

May God Bless.