ஹாய்,
மாமனாரோட படம் ரிலீசாகும் போது மாப்போட படம்
போட்டி போட்டா எப்படி? அப்பறம் மாப்புக்கு கோவம்
வந்து எசகு பிசகா ஆயிடுச்சுன்னா....? அதுவும் இந்த
நியூச படிங்க அப்ப தெரியும் என்ன மேட்டருன்னு...
பரட்டை என்கிற அழகு சுந்தரம்
நடிகர்கள்???: தனுஷ், மீரா ஜாஸ்மின், அர்ச்சனா, சந்தானம், மோனிஷா,
தயாரிப்பு???: ராம் பிரசாத் இயக்கம் ???: சுரேஷ் கிருஷ்ணா
இசை????: யுவன் ஷங்கர் ராஜா
திரைக்கதை???: பிரேம்
அடுத்தடுத்து தொடர்ந்த மசாலா படங்களிலிருந்து கொஞ்சம் சவாலான அழுத்தமான ஒரு கதாபாத்திரத்தில் தனுஷ் நடிக்கிற திரைப்படம் பரட்டை என்கிற அழகு சுந்தரம். இந்த திரைப்படம் ஜோகி என்ற கன்னட வெற்றி படத்தின் தமிழ் ரீமேக் ஆகும். ஜோகி திரைப்படத்தால் மிகவும் கவரப்பட்ட ரஜினிகாந்த், அதன் தமிழ் ரீமேக்கில் நடிக்க மிகவும் விருப்பப்பட்டாராம். ஆனால் ரஜினிக்கு நேரமில்லாததால் தனுஷுக்கு அடித்திருக்கிறது அதிர்ஷ்டம்.
நாடோடியாக சுற்றித் திரியும் பரட்டை என்கிற பிச்சைக்காரனுக்கு மகனான அழகுசுந்தரத்தின் கதைதான் இந்த திரைப்படம். ஏழ்மை, பட்டினி, வேலைச்சுமை ஆகியவற்றால் அழகுசுந்தரத்தின் அப்பா பரட்டை நோய்வாய்பட்டு இறந்துவிடுகிறார். நண்பர்கள் விவரிக்கும் நகர வாழ்க்கைக் கதைகளில் மயங்கிய பரட்டை, தன் அம்மாவை (தேசிய விருது பெற்ற நடிகை அர்ச்சனா) விட்டு விட்டு நிறைய பணம் சம்பாதித்து பெரிய ஆளாகும் ஆசையில் நகரத்தை நோக்கி வருகிறான்.
நகரத்தில் ஒரு டீக்கடை வைக்கிறான் அழகு சுந்தரம். எல்லா சமூக விரோதிகளுடனும் நட்பாகிறான். கடைசியில் ஒரு பயங்கரமான தாதாவை அழித்ததால் ஜெயிலுக்கு போகிறான் அழகுசுந்தரம். அந்த தாதாவின் அடியாட்கள் அழகுவை தங்களின் தலைவராக இருக்குச் சொல்லி கேட்கிறார்கள். அனால் அழகு மறுத்துவிடுகிறான். ஜெயிலிலிருந்து விடுதலையாகிற அழகு மீண்டும் தன் டீக்கடைக்கே திரும்பிவிடுகிறான்.
படத்தில் நடித்திருக்கும் இன்னொரு தேசிய விருது பெற்ற நடிகையான மீரா ஜாஸ்மின், தனுஷின் காதலியாக வருகிறார். ஜெயில் பறவையான அழகுவின் வாழ்க்கை ரகசியங்க்ளை தெரிந்து கொள்ளத் துடிக்கும் ஒரு துறுதுறு பத்திரிக்கையாளராக வருகிறார் மீரா ஜாஸ்மின்.
தன் மகன் அழகுசுந்தரத்தைத் தேடி நகரத்துக்கு வருகிற அவன் அம்மா மீரா ஜாஸ்மினை சந்திக்கிறார். மகனை கண்டுபிடித்து தருவதாக
அம்மாவுக்கு வாக்கு கொடுக்கிறார் மீரா ஜாஸ்மின்.
அம்மா மகனை சந்தித்தாரா? எந்த சூழ்நிலையில் சந்தித்தார்? இறுதியில் கதாநாயகனும் கதாநாயகியும் சேர்ந்தார்களா? கன்னட திரைப்படத்தை போல தமிழ் ரீமேக்கிலும் முடிவு சோகம்தானா? காத்திருந்து பாருங்கள் பரட்டை என்கிற அழகு சுந்தரத்தை!
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
parattai azhagu sundarathoda appanu solreenga.. appuram paratai engira azhagu sundaramnu solreenga..
ippo kadasiya yaar appa?? yaaar magan
vara vara yar kooda nadikarthune illama pochu meera jasmineku.. guruve enga irukeenga neenga.. vanthu paarunga intha aniyayatha.. erkanave suryovoda nadichi pera keduthu kitachu...ippo thanush veraya
ம்ஹீம்... இன்னிக்குக் காலைல தான் போஸ்டரப் பாத்துட்டு எங்க அண்ணன்கிட்ட சொல்லிட்டிருந்தேன் நான்.. இதே மாதிரி இங்க ஒரு கன்னடப்படம் ஓடிட்டிருந்துச்சுன்னு (பேரு தெரியாது)... எங்க அண்ணன் இல்லை. இருந்திருந்தா ஏதாவது செய்தியில வந்திருக்கும்னு சொன்னான்..
இப்ப இங்க வந்து பாத்தா நம்ம கருத்து ஊர்ஜிதம் ஆயிருச்சுல்ல!! ;-) அப்பாடா.. நன்றி.. கூடுதல் தகவலுக்கும் (ஜோஹி -ங்கிற படப்பேருக்கும்)..
சூப்பருங்கோ..ரஜினி இந்தப் படத்தப் பாத்துட்டு இதுல நடிக்கணும்னு ஆசப்பட்டத நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கேனுங்கோ.
ரீமேக் படம் எல்லாம் எப்பவுமே 'பேக்கிரி' விஜய் தானே குத்தகைக்கு எடுப்பாரு? :p
தனுஷுக்கு ஜோடி மீரா ஜாஸ்மினா?
என்ன கொடுமை இது (iam not)ACE? :)))
தனுஷ் எந்த படத்துல எப்பிடி நடிச்சாலும் எனக்கு அவன பிடிக்காது !!! ஏன்னு தெரியல
ஹாய் டிடி,
//parattai azhagu sundarathoda appanu solreenga.. appuram paratai engira azhagu sundaramnu solreenga..
ippo kadasiya yaar appa?? yaaar magan..//
தெரியாது. படம் பாத்தா தான் தெரியும் னு நினைக்கிறேன்.
இந்த(தனுஷ்) படத்தை எல்லாம் மனுஷன் பாப்பானா?
ஹாய் டிடி,
//vara vara yar kooda nadikarthune illama pochu meera jasmineku..//
ஆமாம்.. என்ன பண்றது பணமாச்சே..அதான்..
ஹாய் ராகவன்,
//ரஜினி இந்தப் படத்தப் பாத்துட்டு இதுல நடிக்கணும்னு ஆசப்பட்டத நான் ஏற்கெனவே கேள்விப்பட்டிருக்கேனுங்கோ.//
அட..இது எனக்கு தெரியாதே..
ஹாய் அம்பி,
//ரீமேக் படம் எல்லாம் எப்பவுமே 'பேக்கிரி' விஜய் தானே குத்தகைக்கு எடுப்பாரு? :p//
ஆமாமாம்.. விஜய் என்ன லூசா..
இந்த மாடிரி படத்துலயெல்லாம் நடிக்க.!!!!
//தனுஷுக்கு ஜோடி மீரா ஜாஸ்மினா?
என்ன கொடுமை இது (iam not)
ACE? :)))//
கலி முத்திடுச்சோன்னோ.. அதான் இப்படி எல்லாம்...
ஹாய் அருண்,
//தனுஷ் எந்த படத்துல எப்பிடி நடிச்சாலும் எனக்கு அவன பிடிக்காது !!! தனுஷ் எந்த படத்துல எப்பிடி நடிச்சாலும் எனக்கு அவன பிடிக்காது !!! ஏன்னு தெரியல
..//
ஒரே ரத்தம்...ஒரே இனம்(அவன பிடிக்காது !!! (ஏன்னு தெரியல..)
Hi Buddy,
//தனுஷ் எந்த படத்துல எப்பிடி நடிச்சாலும் எனக்கு அவன பிடிக்காது !!! ஏன்னு தெரியல - Arun Kumar//
But, I don't know why I like Dhanush very much. Let him act in any film and in any role
//ரீமேக் படம் எல்லாம் எப்பவுமே 'பேக்கிரி' விஜய் தானே குத்தகைக்கு எடுப்பாரு? - Ambi//
Naakku Poochi nu enakku therinjavanga solluvaanga. But he is one among the greatest and no doubt about it. If I am not mistaken he had given continously 03 - 04 Box Office Hit movies from the debut.
May God Bless.
Pekkiri ?!?
//தனுஷுக்கு ஜோடி மீரா ஜாஸ்மினா? //
Rombave kodumai thaan.. enna panrathu.. :( :(
எல்லாத்தையும் சொன்னீங்க.. ஆனால், படம் நல்லா இருக்கா இல்லையான்னு ஒரு வார்த்தையும் சொல்லலையே? நாங்கள் இந்த படத்தை பார்க்கலாமா??? ;-)
வணக்கமுங்க..
நேத்து இந்தப் படத்தைப் பாத்தேனுங்க..
நீங்க சொன்ன கதைக்கும் படத்தின் கதைக்கும் நெறைய வித்தியாசமுங்க.. அப்பால சொல்றேமுங்க.
Post a Comment