Wednesday, October 17, 2007

தலைவி - கொலு - விருந்து.

ஹாய் மக்கள்ஸ்,

இந்த கொலு வந்தாலும் வந்தது எல்லாரும் பிஸியாயிட்டோம். அதிலயும் இந்த அம்பி ஆபீஸுக்கு போயிட்டு வந்ததுக்கு அப்பறமும் டிடி அக்கா வீடு சுண்டலை ஒரு பிடி பிடிக்காம தூங்கறதேயில்லையாம்.


சரி அதாவது நம்ம யூனியன் தலைவியும் டாக்டர் டிடி அக்காவுமாகிய சுதா என்ன ரொம்ம்ப விரும்பி அவங்க வீட்டு கொலுவுக்கு வரச் சொல்லி ஒரே அன்புத் தொல்லை போங்க. பின்ன நம்ம தலைவி ஆர்டர் போட்டாச்சுன்னா அத மீற முடுயுமா?மீறீனா என்ன ஆகும்னு கேக்கறீங்களா? அத நம்ம கில்ச்
கிட்ட கேளுங்க. அவரு அழுதுகிட்டே சொல்லுவாரு.


சரின்னு நானும் அழைப்பை ஏத்துகிட்டு ஒரு வழியா வரேன்னு சொன்னேன். நான் சும்மா இல்லாம அவங்களை சிநேகிதியப் படிச்சுட்டு ஒவ்வொருநாளும் என்ன சுண்டல் பண்ணனும், அப்பறமா காலைல என்ன பண்ணனும் னு வெறுப்பேத்திகிட்டு இருந்தேன். உடனே அவங்க என்ன எல்லா புக்கையும் எடுத்துகிட்டு நீ உடனே எங்க வீட்டுக்கு வரலைன்னா நான் என்ன
பண்ணுவேன்னு எனக்கே தெரியாதுனு ஒரே போடு போட்டாங்க.


நானும் சரின்னுட்டு எல்லா புக்கையும் எடுத்து கிட்டு போலாம் னு
முடிவு பண்ணி ஒரு வழியா சொன்னேன். அதாவது போன சனிக்கிழமை
முடிவாச்சு. அவங்க வேற என்ன வியாழக்கிழமையில இருந்து போன் மேல போன போட்டு சாப்பிட என்ன பண்ணறது னு ஒரே குழம்பி என் கிட்ட ஆர்ட்ர் எடுக்க ஆரம்பிச்சுட்டாங்க. நானும் என் பங்குக்கு எனக்கு என்னலாம் பிடிக்குமோ அதையெல்லாம் சொன்னேன்.

இதுல அவங்க சும்மா இல்லாம கூட ஒரு நண்பரையும் கூப்பிட்டாங்க.
அவரை நான் பாத்தது இல்லை, ஆனா சாட்ல மட்டும் பேசியிருக்கேன்.
டிடி அவருகிட்டயும் நான் வரப் போறதா சொன்னாங்க, பாவம் அவரு ரொம்ப பயந்து போயி மொத நாளு அடக்கமா பவ்யமா டிடி கிட்ட அக்கா சுமதி அக்காவும் வராங்களானு கேட்டாரு.டிடியும் ஆமாம் னு சொன்னாங்க, அவரு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு, என்னடா நாம சொந்த செலவுல சூனியம் வச்சிக்கரமோன்னு. இருந்தாலும் நாங்க சும்மா இருப்போமா? அவரையும்
வரவழிச்சுட்டோம்ல.

வெள்ளிக் கிழமை காலைலயிருந்து நம்ம டிடிக்கு ஆபீசுல வேலயே
ஓடலைங்க. ஏன்னா, மறு நாள் என்ன டிபன், மத்தியானம் என்ன சாப்பாடு பண்றது, என்ன ஸ்வீட்டு பண்றது னு ஒரே டென்ஷனாப் போச்சுங்க. அவங்க நான் எது சொன்னாலும் அது வேனாம் சுமதி, இது வேனாம் சுமதினு எல்லாத்தையும் விஷேஷ கால தள்ளுபடி மாதிரி தள்ளுபடிட்டாங்க.


சனிக்கிழமை காலைல புளியோதரை, வத்தல், அப்பறம் மத்தியானம்
லன்ச்சுக்கு வெங்காய சாம்பார், உருளை ஃப்ரை, இது நம்ம நண்பரோட ஆர்டர். அதுக்கு அவங்க சனிக்கிழமை நோ வெங்காயம் னு சொல்லிட்டாங்க. அப்பறம் என்கிட்ட கேட்டாங்க, நானும் எனக்கு தெரிஞ்சது பிடிச்சது எல்லாம் ட்ரை பண்ணேன், ஹூம் நோ யூஸ். கடைசியில ஒரு வழியா காலைல புளியோதரை + வத்தல்ஃப்ரை, அப்பறம் மத்தியானம் சாப்பிட முருங்கக்காய் சாம்பார் அப்பறம் ஏதோ கையில கிடைக்கற காய் னு எதோ ஒரு வழியா ஆர்டர முடிச்சுகிட்டாங்க.(நமக்கு இத விட்ட வேற வேலை என்ன இருக்கு)


நானும் காலைல வீட்டுல ஒரு பாதி கப் காபிய குடிச்சுட்டு வயிற காலியா வச்சுகிட்டு தெற்கே போற ரயில பிடிச்சு கே ஆர் புரத்துல இறங்கி ஆட்டோகாரன் கிட்ட கேட்டா அவன் சொன்ன ரேட்ட கேட்டா அதே ரயில்ல மெட்ராஸுக்கே போயிடலாம். அப்பறமா பத்து விட்டு பதினோறாவதா ஒரு ஆளப் பிடிச்சு அவங்க வீட்ட ஒரு 3 சுத்து சுத்தி(வாங்கினகாசுக்கு
வஞ்சனையில்லாம) ஒரு வழியா கொண்டு வந்து சேர்த்தான். நானும் போன உடனே யக்கா பசிக்குது, ஒன்னும் சாப்பிடல, எங்கே புளியோதரை னு கேட்டா அவ்வ்வ்வ்வ்வ்வ், ஐய்ட்டம் கேன்சலுங்கோ...நான் சோகமா ஏன்னு
கேட்டா, ஏதேதோ சொல்றாய்ங்க. அப்பறமாத் தான் புரிஞ்சுது. பக்கத்து வீட்டு அம்பி ஆபுசுக்கு போயிட்டாராம், அவரு தங்கமணியும் வீட்டுக்கு யாரையோ டின்னருக்கு கூப்பிட்டு இருக்காங்களாம். அதனால அம்பிக்கு இல்லாதது மத்தவங்களுக்கும் நோ னு தெரிஞ்சுது. என்ன கொடுமை இது பிகர பாத்து ஏமாந்த ஏஸ்?


அப்பறமா கொஞ்ச நேரம் நம்ம நண்பரோட(காதலி) வருங்கால மனைவியை எநத முறையில கல்யாணம் பண்ணிக்கலாம், டின்னர் எப்படி ஏற்பாடு பண்ணலாம்னுலாம் பெரிய்ய டிஸ்கஷன்.ஆனா நண்பர் சும்மாசொல்லக் கூடாது ம்ம்ம்.. வாயத் தொறக்கலியே....என்னன்னமோ வழியிலயெல்லாம் ட்ரை பண்ணி பாத்தும் ம்ம்ஹீம்ம்ம்.தேறல. சரி ரெம்ம்ம்ப பசிச்சுது. சாப்பிட கூப்டாங்க.


ஆஹானு போயி பார்த்தா மெனு புதினாரைஸ்+ வத்தல், முருங்கைகாய்
சாம்பார், அவரைகாய், உருளை பொறியல், தயிர் சாதம், சேமியா பாயசம்.
ஒரு பிடி பிடிச்சேன். அதுல பாருங்க பாயசம் நல்லாயிருந்தது.ஆனா
சாப்பிடதான் முடியல.புதினா ரைஸும் நல்லாத் தான் இருந்தது.

அப்பறம் கொஞ்ச நேரம் பேசிட்டு இருக்கும் போது தான் திடீருன்னு
டிடிக்கு ஞாபகம் வந்துது புட்டு பண்ணலாம்னு. சரி னுஉடனே
ஆரம்பிசுட்டோம். அப்படி இப்படி னு ஒரு வழியா புட்டு பண்ணி முடிச்சா
நாம பண்ணத நாமளே டேஸ்டு பண்ணலாமா? பெரிய்ய கொடுமை இல்லயா? இதுக்காகவே நம்ம நண்பரை கெஞ்சி புடிச்சு வச்சிருந்தோம் அவரு (பாவம்) டிடிக்கு பயந்துகிட்டே கஷ்டப் பட்டு ஆஹா ரெம்ம்ம்ப நல்லாயிருக்கு னு சொல்லி தப்பிச்சுகிட்டாரு. உட்டாங்களா அவரை, உடனே ஒரு டப்பாவுல போட்டு மீதியையும் தலைல கட்டிடாங்கல்ல.

ஒருவழியா அங்கிருந்து நானும் தப்பிச்சு வந்து சேர்ந்தேன்.மறு நாள்
பாருங்க அவங்களோட அன்பு மழையில நனைஞ்சு போயி எனக்கு
பிடிச்ச ஜலதோஷம் தாங்க ஒரே ஹைலைட். இன்னமும் சரியாகலை.
ஆனாலும் அவிய்ங்க ரெம்ம்ம்ப நல்லவங்க. நல்லாயிருக்கட்டும்.

அவ்ளோதாங்க, தலைவியோட கொலு விருந்து.நல்லாயிருந்ததா?

36 comments:

தி. ரா. ச.(T.R.C.) said...

நானும் காலைல வீட்டுல ஒரு பாதி கப் காபிய குடிச்சுட்டு வயிற காலியா வச்சுகிட்டு தெற்கே போற ரயில பிடிச்சு கே ஆர் புரத்துல இறங்கி ஆட்டோகாரன் கிட்ட கேட்டா அவன் சொன்ன ரேட்ட கேட்டா அதே ரயில்ல மெட்ராஸுக்கே போயிடலாம்.

ஆஹா அம்பியோட வாடை வீசுதே

ஆஹானு போயி பார்த்தா மெனு புதினாரைஸ்+ வத்தல், முருங்கைகாய்
சாம்பார், அவரைகாய், உருளை பொறியல், தயிர் சதம், சேமியா பாயசம்.
ஒரு பிடி பிடிச்சேன். அதுல பாருங்க பாயசம் நல்லாயிருந்தது.ஆனா
சாப்பிடதான் முடியல.புதினா ரைஸும் நல்லாத் தான் இருந்தது.
இருக்கட்டும் டிடி அக்காவை ஒரு கை பாத்துக்கிறேன். நான் 2 தடவை போயிருக்கேன் பச்சைத்தண்ணிகூட தரலே.
இதுதான் மகளிர் அடிமைத்தன்ம் என்பது.
பாவம் அம்பிக்கு கிடைப்பதும் நின்று விடப்போகிறது.
மின்னல் நீ நல்லபொண்னு பாங்களூர் வரும் போது நல்ல டின்னர் கொடுக்கனும்.

Anonymous said...

alo..yaar`antha`pavapatta`nanbar??
..sama`kattu`kaati`irupeenga`polirukke

--ACE

Anonymous said...

ama..kodumaiellam`ippo`naan`deal`panrathu`illa`:D:D

--ACE

Anonymous said...

புதினாரைஸ்+ வத்தல், முருங்கைகாய்
சாம்பார், அவரைகாய், உருளை பொறியல், தயிர் சதம், சேமியா பாயசம்.


super..hmm..nalla`iruntha`sari`thaan

-ACE

k4karthik said...

//என்ன கொடுமை இது பிகர பாத்து ஏமாந்த ஏஸ்?//

சூப்பரு.. ஆனா 'சிங்கம்லே'-ய மறந்துட்டீங்களே!!

ambi said...

இருக்கட்டும், மறுபடி நேர்ல வராமயா போவீங்க? அப்ப இருக்கு உங்களுக்கு கச்சேரி. :p

Sumathi. said...

ஹலோ சார்,

//இருக்கட்டும் டிடி அக்காவை ஒரு கை பாத்துக்கிறேன். நான் 2 தடவை போயிருக்கேன் பச்சைத்தண்ணிகூட தரலே.//

அடடா, உங்களை ஏமாத்திட்டாங்களா? உடாதீங்க ஒரு பிடி பிடிங்க...

//பாவம் அம்பிக்கு கிடைப்பதும் நின்று விடப்போகிறது.//

அட நீங்க வேற சத்தமில்லாம நடக்குது
வேலை.


//மின்னல் நீ நல்லபொண்னு பாங்களூர் வரும் போது நல்ல டின்னர் கொடுக்கனும்.//

ஆஹா, என்ன பத்தி தெரியாமலயே இவ்வளவு புகழ்றீங்களே,அவ்வ்வ்வ்
எனக்கு ரொம்ப கூச்சமாயிருக்கு.நன்றி சார். வாழ்க வாழ்க...

நாகை சிவா said...

//என்ன கொடுமை இது பிகர பாத்து ஏமாந்த ஏஸ்?//

ரைமிங்கா, டைமிங்கா அடிக்குறாங்கப்பா :)

//அதுல பாருங்க பாயசம் நல்லாயிருந்தது.ஆனா
சாப்பிடதான் முடியல.புதினா ரைஸும் நல்லாத் தான் இருந்தது.//

அப்ப மத்தது எல்லாம்... ரொம்ப நல்லா இருந்துச்சா ;)

dubukudisciple said...

adu seri.. koluva pathi oru vaarthai kooda sollaliye.. enna kodumai idu figure kite mayangiya singamle ace !!!!

dubukudisciple said...

இருக்கட்டும் டிடி அக்காவை ஒரு கை பாத்துக்கிறேன். நான் 2 தடவை போயிருக்கேன் பச்சைத்தண்ணிகூட தரலே. ///
enna trc sir... ippadi solliteenga.. neenga thaan eppa vanthalum ambiyoda veetliye ellam saptukurennu soneenga.. seri adutha vaati vaanga peria virunthe kuduthudalam

dubukudisciple said...

super..hmm..nalla`iruntha`sari`thaan
//
idu enna vara vara ellam quotesla adikireenga

Sumathi. said...

ஹாய் ஏஸ்,

//alo..yaar`antha`pavapatta`nanbar?sama`kattu`kaati`irupeenga`polirukke//

கொஞ்சம் இருங்க அவரே இதை படிச்சுட்டு சூப்பரா கமண்டுவாங்க..அப்போ தெரியும் யாருன்னு ஹி ஹி ஹி...

//ama..kodumaiellam`ippo`naan`deal`panrathu`illa`:D:D//

அத பத்தி எங்களுக்கு என்ன கவலை?



//

Sumathi. said...

ஹாய் k4karthik,

//ஆனா 'சிங்கம்லே'-ய மறந்துட்டீங்களே!!//

அதான் ஜொள்ளு விடப் போய் சிங்கம் ஏமாந்துடுச்சே, அதான் இப்படி மாத்திட்டேன். இது பரவாயில்லையா?

Sumathi. said...

ஹாய் அம்பி,

//இருக்கட்டும், மறுபடி நேர்ல வராமயா போவீங்க? அப்ப இருக்கு உங்களுக்கு கச்சேரி. ://

அப்ப பாத்துகலாம். அதுக்குள்ள நீங்களே இதையெல்லாம் மறந்துட மாட்டீங்க!?

Sumathi. said...

ஹாய் சிவா,

//அப்ப மத்தது எல்லாம்... ரொம்ப நல்லா இருந்துச்சா ;)/

அதாவது இந்த சாம்பார், ரசம் லாம் தினமும் தான் இருக்கு, அதனால அத பத்தி பேசறதேயில்லை.

Sumathi. said...

ஹாய் வேதா,

//என்னதிது ப்ரேக்பாஸ்டுக்கே புளியோதரையா? கல்யாண விருந்தை விட கலக்கலா இருக்கும் போலிருக்கு :)//
அதாவது, இந்த புக்குல போட்ட மாதிரி காலைல புளியோதரையும் கூட வத்தலும் அப்படின்னு மெனு சொன்னாங்க, அவ்வளவு தான்.கண்ணுலயே காட்டலையே...


//புது பட்டம் சூப்பர் விவிசி :)//

ஆமாங்க அப்ப தோனித்து உடனே குடுத்துட்டேன்.


//ஆகா அப்ப தினமும் வீட்டுல அம்பி சமையல் இல்லியா டிடி அக்கா தான் சப்ளையா? //

அதெல்லாம் தெரியாது, ஆனா அன்னிக்கு அம்பி இல்லாததால எங்களுக்கும் இல்லை.

Sumathi. said...

ஹாய் வேதா,

//ஒன்னு நீங்க அவர பத்தி இங்க சொல்லியிருக்கக்கூடாது இல்லேன்னா அது யாருன்னாவது சொல்லியிருக்கணும். இப்டி சொல்லி எங்கள யோசிக்க வைக்கறீங்களே? :)//

ஹா ஹா ஹா... எல்லாம் ஒரு முன்னோட்டம், விளம்பரம் தான்..
கவலை படாதீங்க அவரே கமெண்டுவாரு பாருங்க..(அனானியா)

Sumathi. said...

ஹாய் சுதா,

//adu seri.. koluva pathi oru vaarthai kooda sollaliye.. enna kodumai idu figure kite mayangiya singamle ace !!!!//

இப்ப கொலுவா முக்கியம், அதைவிட நீங்க எங்களை புளியோதரை குடுக்கறேன் வானு சொல்லி ஏமாத்திட்டீங்களே அது அது தான் முக்கியம்.

Sumathi. said...

ஹாய் சுதா,

//idu enna vara vara ellam quotesla adikireenga.//

அதான் அவரே சொல்லிட்டாரே, Alt +ctrl key laam தொலைச்சுட்டதா, ஹி ஹி ஹி... சரிதானே பி.பா.ஏ.ஏஸ்?

Dreamzz said...

//என்ன கொடுமை இது பிகர பாத்து ஏமாந்த ஏஸ்?
//
இத முதல்ல சொல்லுங்க டீடெய்லா!

Dreamzz said...

சும்மா ஜமய்ச்சீங்க போல! சூப்பர்!

ACE !! said...

//enna kodumai idu figure kite mayangiya singamle ace !!!!
//

ஆகா.. டிடி அக்கா, நீங்களுமா?? :((

//idu enna vara vara ellam quotesla adikireenga.//

அதான் அவரே சொல்லிட்டாரே, Alt +ctrl key laam தொலைச்சுட்டதா, ஹி ஹி ஹி... சரிதானே பி.பா.ஏ.ஏஸ்?//

Alt and space key தான் இல்லயே.. எப்படி வார்த்தைகளை பிரிக்கறது.. அதான் quotes

MyFriend said...

ஹாஹாஹா.. சூப்பரோ சூப்பர்..

யார் அந்த அப்பாவி ஜீவன் என்று சொல்லவே இல்லையே??

Compassion Unlimitted said...

Indha navarathiri special maadhiri oru,Diwali specialum undo ?Maatikkiradhu neenga,Sirippadhu naanga !!

ரசிகன் said...

// நாம பண்ணத நாமளே டேஸ்டு பண்ணலாமா? பெரிய்ய கொடுமை இல்லயா? // ஹா..ஹா...

சுமதி,ஏனிந்த "கொலை வெறி"
தான் பெற்ற கஷ்டம்,பெறுக இவ் வையகமே-ங்கரது இது தானா? வீட்டுல எப்புடி?

//அவரு யோசிக்க ஆரம்பிச்சுட்டாரு, என்னடா நாம சொந்த செலவுல சூனியம் வச்சிக்கரமோன்னு.//
அத யோசிச்சு என்ன புண்ணியம்,வந்து மாட்டிக்கிடாரே?.

//ஆனா நண்பர் சும்மாசொல்லக் கூடாது ம்ம்ம்.. வாயத் தொறக்கலியே.//
பொழக்கச் தெரிந்தவர்.பொண்ணுங்ககிட்ட வாயகுடுத்து,அதுவும் தனியாளா மாட்டினாக்கா..சமாளிக்க முடியுமா?.

// இதுக்காகவே நம்ம நண்பரை கெஞ்சி புடிச்சு வச்சிருந்தோம் //
இது வேறயா? "என்னடா இந்த நற்புக்கு வந்த சோதனை?" .இப்ப எந்த ஆஸ்பத்திரியில இருக்காருன்னு சொன்னாக்கா.. போய் பாக்கலாமில்ல..ஹிஹி.. நல்லாயிருக்கு..அடுத்த கொலுவுக்கு என்னோட சார்பா,என்னோட எதிரிய அனுப்பலாமுன்னு இருக்கேன்.

Anonymous said...

nanbar per ille nanbar aal per venumna solren.....thee...avangale thigil jodinu solvaanga....:-)

Sumathi. said...

ஹாய் ட்ரீம்ஸ்,

////என்ன கொடுமை இது பிகர பாத்து ஏமாந்த ஏஸ்?
//
இத முதல்ல சொல்லுங்க டீடெய்லா!//

ஹேய், ஏஸோட லேட்டஸ்டு போஸ்டு பாக்கலையா? முதல்ல போயி பாரு, அப்ப புரியும் ஏன் அப்படி சொன்னேனு.

Sumathi. said...

ஹாய் மை ஃபிரண்ட்,

//யார் அந்த அப்பாவி ஜீவன் என்று சொல்லவே இல்லையே??//

அட இன்னுமா புரியல, டிடிகிட்ட கேளுங்க சொல்வாங்க.

Sumathi. said...

ஹாய் Compassion Unlimitted ,

// Indha navarathiri special maadhiri oru,Diwali specialum undo ?Maatikkiradhu neenga,Sirippadhu naanga !!//

ஓஹோ, நாங்க மாட்டிகிறதுல அவ்வ்வளவு சந்தோஷமா? நல்லா இருங்க ச்ஆமி, நல்லாவே இருங்க.

அப்பறம் இந்த தீபாவளிக்கு நம்ம டிடி அக்கா ஊருக்கு போறாங்க, அதனாலே எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்...

சந்தோஷமா?....

Sumathi. said...

ஹாய் ரசிகன்,

//சுமதி,ஏனிந்த "கொலை வெறி"
தான் பெற்ற கஷ்டம்,பெறுக இவ் வையகமே-ங்கரது இது தானா? வீட்டுல எப்புடி?//

ஹா ஹா ஹா... அதெல்லாம் பக்கா. யாரு நானு..!!!


//அடுத்த கொலுவுக்கு என்னோட சார்பா,என்னோட எதிரிய அனுப்பலாமுன்னு இருக்கேன்.//

நீங்க யார அனுப்பினாலும் நாங்க யாரு, அப்பறம் தெரியும் எங்களை பத்தி.ஹி ஹி ஹி....

சும்மா ட்ரை பண்ணி பாருங்க....அசந்துடுவீங்க.

Sumathi. said...

ஹாய்,

வாங்க வாங்க,

//nanbar per ille nanbar aal per venumna solren.....thee...

ஆஹா, அப்ப நான் சொன்னதை சரிங்கறீங்க.ஹாஹா...

//avangale thi gil jodinu solvaanga....:-)//

ஆஹா, நான் அவளில்லை..நான் அவளில்லை...

Compassion Unlimitted said...

// இந்த தீபாவளிக்கு நம்ம டிடி அக்கா ஊருக்கு போறாங்க, அதனாலே எஸ்கேப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்//
Variety is spice of life.Akka oorukku pona enna..vera yarachum..engalakku pozhudhu poganume at your expense!!
TC
CU

ஜி said...

//புதினாரைஸ்+ வத்தல், முருங்கைகாய்
சாம்பார், அவரைகாய், உருளை பொறியல், தயிர் சாதம், சேமியா பாயசம்.//

இங்க வெள்ளக்காரம் பிரட்டையும் பிட்சாவையும் தின்னுட்டு இருக்குற எங்கக்கிட்ட இப்படி செம ஐட்டமா போட்டுட்டு கடுப்பேத்துறீங்களே :(((

ரசிகன் said...

உருல ரொம்ப மழை பெய்யுதாம்.. ஆனா புது பதிவு போட மின்னல் மட்டும் இன்னும் வரல.. ஏங்க...

தெனமும் வரவங்களுக்கு அட்லிஸ்ட் "புளியோதரை"யாவது ஏற்பாடு பண்ணலாமில்ல...

Anonymous said...

hmm..auto gapla aalabaniye panirukeenga..singa summa irukaratha paathu sundeli koothatam podra kathaiaya irukku..ithuku varum column badil solum

Anonymous said...

Hello sumathi akka,
Vantha nanbarooda name G-la start aagum,s-la mudiyu, correctta?...:)

Regards,
Ganeshan