ஒன்பது படிகள் :
நவராத்திரி கொலு வைப்பதில் ஒரு தத்துவம் உள்ளது. மனிதன் எவ்வகையிலேனும் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். ஆன்மரீதியாக மனிதன் தம்மை படிப்படியாக உயர்த்திக்கொண்டு இறுதியில் இறைவனில் கலக்க வேண்டும். இதுவே மனிதப் பிறப்பின் அடிப்படை தத்துவம். இதை விளக்கும் பொருட்டே கொலுக் காட்சியில் ஒன்பது படிகள் வைத்து அதில் பொம்மைகளை அடுக்கி வழிபடுகிறோம். ஒன்பது படிகள் வைத்து ஒவ்வொரு படியிலும் பின்வருமாறு பொம்மைகளை வைத்து வழிபட வேண்டும்.
* முதல் படியில் ஓரறிவு உயிர்ப் பொருட்களை உணர்த்தும் புல், செடி, கொடி போன்ற தாவர பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* இரண்டாவது படியில் இரண்டறிவு கொண்ட நத்தை, சங்கு போன்ற பொம்மைகள் இருத்தல் வேண்டும்.
* மூன்றாவது படியில் மூவறிவு உயிர்களை விளக்கும் கரையான், எறும்பு போன்ற பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* நான்காவது படியில் நான்கு அறிவு கொண்ட உயிர்களை விளக்கும் நண்டு, வண்டு பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஐந்தாவது படியில் ஐயறிவு கொண்ட நாற்கால் விலங்குகள், பறவைகள், பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஆறாவது படியில் ஆறறிவு படைத்த உயர்ந்த மனிதர்களின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* ஏழாவது படியில் மனிதனுக்கு மேற்பட்ட மகரிஷிகளின் பொம்மைகள் இடம் பெற வேண்டும்.
* எட்டாவது படியில் தேவர்களின் உருவங்கள் இடம்பெற வேண்டும். நவக்கிரக அதிபதிகள், பஞ்சபூத தெய்வங்கள், அஷ்டதிக்கு பாலகர்கள் என்பன வைக்கலாம்.
* ஒன்பதாவது படியில் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்னும் மும்மூர்த்திகள் அவர்தம் தேவியர்களான சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகியோருடன் இருக்க வேண்டும். ஆதிபராசக்தி நடு நாயகமாக இருக்க வேண்டும்.
மனிதன் படிப்படியாக பரிணாம வளர்ச்சி பெற்று கடைசியில் தெய்வம் ஆக வேண்டும் என்கிற தத்துவத்தை உணர்த்தவே இப்படி கொலுப் படிகளில் பொம்மைகள் வைக்க வேண்டும்.(மூலம் - வெப்துனியா)
8 comments:
அட இதுல இவ்ளோ இருக்கா! சூப்பர்!
நல்ல தகவல்கள்.
அப்படியே 9 நாளும் என்ன வகையான சுண்டல் செய்து பக்கத்து வீட்டுகாரங்களுக்கு குடுக்கனும்?னு போட்டா டிடி அக்காவுக்கு உபயோகமா இருக்கும். :p
ஹாய் தினேஷ்,
//அட இதுல இவ்ளோ இருக்கா! சூப்பர்!//
ஆமாம், இன்னும் கூட இருக்கு, முடிஞ்சாஅடுத்த பதிவுல போடறேன்.
ஹாய் அம்பி,
//அப்படியே 9 நாளும் என்ன வகையான சுண்டல் செய்து பக்கத்து வீட்டுகாரங்களுக்கு குடுக்கனும்?னு போட்டா டிடி அக்காவுக்கு உபயோகமா இருக்கும். :p//
எனக்கு தெரியும் நீங்க இப்படி சொல்வீங்கன்னு,அதான் ஏற்கெனவே டிடி அக்காக்கு சொல்லிட்டேன்.
சுண்டல்லாம் சாப்டுட்டு
வயிறு மக்கர் பன்னா ஏற்கெனவே நம்ம தலைவி சொன்ன மாதிரி டிப்ஸுகளை ட்ரை பண்ணலாம்.
இம்மாம் மேட்டரு இருக்கா இதுல...
ஆனா நீங்க சொல்லுறப்படி யாரும் வைப்பது இல்லை போல இருக்கே...அவங்க அவங்களுக்கு பிடிச்ச சிலைய தான் வைக்கிறாங்க...
சுண்டலை கொரியர் பண்ணிடுங்க... :)
ஹாய் சிவா,
//ஆனா நீங்க சொல்லுறப்படி யாரும் வைப்பது இல்லை போல இருக்கே...அவங்க அவங்களுக்கு பிடிச்ச சிலைய தான் வைக்கிறாங்க...//
ஆமாம், கேட்டா அது அவங்க விருப்பம்னு சொல்வாங்க, எனக்கு எதுக்கு ஐய்யா வம்பு.....சொல்றத சொல்லிபுட்டேன் அம்புட்டுதான்.ஹி ஹி ஹி ஹி...
//சுண்டலை கொரியர் பண்ணிடுங்க... :)//
அப்டீன்னா? அது என்ன தின்ற விஷயமா?ஓஹோ....
கொஞ்சம் படிச்சா டார்வின் பரிணாம வளர்ச்சி மாதிரிஇல்லை.நம்மதான் முதல்.சுண்டல்இல்லாத கொலு கணக்குல வராது
அடடே..நல்ல உருப்படியான தகவல்!
அருமை.. நன்றி நன்றி நன்றி அறியத் தந்தமைக்கு!
ஆமா... எல்லோரும் கேட்டபடி, மிஸ்டர். சுண்டல் எங்கே? விட்டுட்டீங்களே..
அவ்வ்வ்வ்வ்வ்...........
Post a Comment