Hai Friends,
இது ஒரு கதை.. காதல் கதை... கொஞ்ச நாளாவே
எழுதனும்னுநினைச்சு கிட்டு இருந்தேன், ஆனா ஏனோ
தெரியல சரியான டைம் கிடைக்கல.. இன்னைக்கு
ஒரு முடிவோட ஆரம்பிச்சுட்டேன். இது என்னோட
முதல் முயற்சி. படிச்சுட்டு எப்பவும் போல உங்க
கருத்துக்களை சொல்லுங்க.Sugestions too..
பூஜா ஒரு இண்டர்வியுவுக்கு ரெடியாயிட்டு கிளம்பிக்
கொண்டு இருந்தாள். அதுவும் அது அவளுக்கு ரெண்டாவது இண்டர்வியு.அதனால கொஞ்சம் நெர்வசாவே இருந்தது.
என்னதான் சீக்கரமா கிளம்பி டைமுக்கு போனாலும்
மனசுக்குள்ள இந்த வேல கிடைக்கனுமேனு ஒரு ஏக்கம்.
இருக்கத் தானே செய்யும். ஏன்னா அந்த அபீசோட
லுக்கு அந்த மாதிரி. அழகா எல்லா இடத்திலயும்
க்ளீனா துடைச்ச கண்ணாடியும்,அழகழகா அங்கங்கே
சொருகியிருந்த புதுசா பூத்த பூக்களும், கம்முனு
காத்துல வர்ர வாசனையும்.. பூஜாவுக்கு ரொம்பவே
பிடிச்சு போனது.அங்க வேலை செய்யற ரெண்டொருத்தரும்
அவங்க பாட்டுக்கு வேலையில மூழ்கிட்டாங்க.பாவம் இந்த
டேமேஜர் மட்டும் ஒரு கண்ண பூஜாகிட்டயும் இன்னொரு
கண்ண பாஸ் எப்படா கூப்பிடுவாருன்னு பொருமை
இல்லாம தவிச்சுகிட்டு இருந்தாரு.ஏன்னா அந்த
டேமேஜருக்கு பூஜாவ பாத்த உடனே ஒரு கெமிஸ்ட்ரி
ஸ்டார்ட் ஆயிடுச்சு.அப்ப பாஸ்கிட்டயிருந்து ஒரு கால்.
"ஜான், அந்த பொண்ண உள்ள அனுப்பு".
"மேடம் பாஸ் உங்கள கூப்பிடுறாரு, நீங்க இந்த
பக்கம் போங்க," "தேங்க் யூ,". பூஜா உடனே மெதுவா
எந்த பரபரப்பும் இல்லாம நிதானமா உள்ள போனாள்.
ஜான் பூஜா நடந்து போர அழகையே ரசிச்சு பாத்துகிட்டு
இருந்தாரு. மனசுல என்னவோ தெரியல ஏதோ ஒரு சின்ன
'சந்தோஷம் மட்டும் இருந்தது.ஜான் ஒரு மலயாளி.ஒரு
பாட்டு மலயாளதில" அருகில் நீ உண்டாயிருந்தெங்கில்
என்னு நான், ஒரு மாத்ரம் வெருதே நினைச்சு போயி,
ஒரு மாத்ரம் வெருதே நினைச்சு போயி..." இங்க ஜானப்
பத்தி சொல்லறேன். ஜான் சின்ன வயசு தான் ஒரு 26.
ஆள் பாக்க நல்ல கறுப்பு.தொட்டு பொட்டு வச்சுக்கலாம்.
ஆனாலும் அந்த முகத்தில, கண்ணுல ஏதோ ஒரு
வசீகரம் இருந்தது.கொஞ்சம் ஒல்லி தான்.எப்பவும் கையுல
சிகரெட் இருக்கும். ஒரு டிகிரி படிச்சுட்டு நல்ல வேலைய
தேடிக்க அக்கா வீட்டுக்கு வந்தான். அப்ப அவசரத்துக்கு
இந்த வேலைக்கு வந்துட்டான். பரவாயில்ல ஒரு சுமாரான
கம்பனிதான்.ஏதோ தன்னோடசெலவுக்கு பஞ்சமில்ல.
ஆனா என்னவோ இங்கயே நிரந்தரமாயிட்டான்.பாஸும்
கொஞ்சம் பர்சனலாவே பழக்கமாயிட்டாரு. ரெண்டு பேரும்
ஒரே ஜாதி. ஒன்னா சிகரெட் பிடிச்சுட்டும் ஒன்னா ஊர்
சுத்திட்டும் ஒரே ஜாலிதான். இவன நம்பி பாஸும் எல்லா
பொறுப்பையும் விட்டுட்டாரு.ஏதோ வாழ்க்கை ஒரு
வழியா ஜாலிய போயிகிட்டு இருந்தப்போ தான் இந்த
பூஜா எண்டரி. ஜானும் ஜாலியா ஹம் பண்ணிகிட்டு
இருந்தப்போ பூஜா வெளியே வந்தா. ஜான் உள்ளே
போனான். பாஸ் ரூமுக்குள்ளங்க.
"ஜான், நீ இந்த பொண்ணப் பத்தி என்ன நினைக்கறே",
"பரவாயில்ல சார், பாத்தா ரொம்ம சுட்டியா தெரியுது.
எந்த வேலயும் சட்டுனு பிடிச்சுக்கும்னு நினைக்கிறேன்".
"கரெக்ட். நான் கூட அதான் நினைச்சேன். அப்ப சரி,
நீ ஒரு வேல பண்ணு, அந்த பொண்ணு கிட்ட ஏதாவது
பேசி பாரு. உனக்கு பிடிச்சிருந்தா, உடனே உனக்கு
அசிஸ்டெண்டா அப்பாயிண்ட் பண்ணிக்கோ,சரியா".
"சார் எனக்கு அஸிஸ்டெண்டா? எதுக்கு சார்," நானே
பாதிநேரம் வெளில இருக்கேன்.
"அதனால தான், ஆபீஸ பொறுப்பா பாத்துக்கவும்,தேடி
வரவங்களுக்கு பொறுப்பா பதில் சொல்லவும் தான்."
"அப்ப சரி சார்.பாத்துட்டு வந்து சொல்றேன்."
ஜான் பூஜாகிட்ட ஒரு அஞ்சு நிமிஷம் பேசிட்டு "சரி,
நீங்க கொஞ்சம் வெயிட் பண்ணுங்க, உங்களுக்கு ஆர்டர்
தர்றேன்".
பூஜாவுக்கு ஒரே சந்தோஷம் தாங்க முடியல. ஆனா எதயும்
வெளிக்காட்டிக்காம இருந்தா. அப்பப்போ இந்த டேமேஜர
மட்டும் ஒரு லுக்கு விட்டுகிடே இருந்தா. கொஞ்ச
நேரத்துல கைக்கு ஆர்டர் வந்ததும் பூஜா தேங்ஸ்
சொல்லிட்டு கிளம்பி வீட்டுக்கு வந்தா. வீட்டுல வேல கிடச்சத
பத்தி சொல்லிட்டு ஃப்ரெண்டு வீட்டுக்கு போயிட்டா.
ஃப்ரெண்ட் கிட்ட பூஜா அந்த டேமஜரப் பத்தி சொல்லி
கிட்டு இருந்தா.
"அந்த டேமேஜர் சரியான ஜொல்லு பார்ட்டி, நீ வேனா பாரு
ஒரு நாள் அது என்கிட்ட வந்து ஐ லவ் யூ னு சொல்றதா
இல்லயான்னு,"சொல்லி ரெண்டு பேரும் பயங்கர நக்கல்
பண்ணிகிட்டுருந்தாங்க.இங்க பூஜாவ பத்தி ஒரு சிறு
குறிப்பு. பூஜா காலேஜ் படிச்சுட்டு ஜாலியா கொஞ்ச நாள்
ஊர சுத்திட்டு இருந்தப்போ அவளும் அவ ஃப்ரெண்டும்
சேந்து வேலைக்கு போகலாம்னு முடிவு பண்ணாங்க.
ரெண்டு பேரும் சின்ன வயசுலயிருந்து ஒன்னா
படிச்சவங்க.வீட்டபொறுத்த வரையில ரொம்ப சாது.
அதுலயும் பூஜா வீட்டுக்கு ஒரே பொண்ணூ.ரொம்பவே
சாது.ஆனா வெளியத் தான் அவங்க சுய ரூபமே தெரியும்
பூஜா வந்து நடுராத்திரி கூப்பிட்டாக் கூட அவ ஃப்ரெண்ட
கூட அனுப்புவாங்க.ஆனா தனியாவோ அல்லது வேற
யார் வந்து கூப்பிட்டாலும் ஃப்ரெண்ட் வர மாட்டாங்க.
அந்த அளவுக்கு பயந்தாங்கொள்ளி.பூஜாவோ பயங்கர
ரெளடி. அவள நம்பி தைரியமா யார வேனாலும்
அனுப்பலாம். அவ்வளவு நல்ல பேரு.இப்படியே ரெண்டு
பேரும் வேலைக்கு போக முடிவு பண்ணி ரெண்டு பேரும்
ஒரே கம்பனிக்கு அப்ளை பண்ணி ஆனா இதுல பூஜா
மட்டும் தான் சேர முடிஞ்சுது.
தொடரும்.......
Subscribe to:
Post Comments (Atom)
17 comments:
1st ?
attendance....varen konjam neram kalichi..
//ஏன்னா அந்த அபீசோட
லுக்கு அந்த மாதிரி. .. //
LOL :) kadhai nalla poguthu.
btw, pooja ph no enna?u syam keppen, kudukaatheenga. :p
arunuku mattum kudunga. :)
முதல் முறையா பின்னூட்டமிடறேன்.. கதை நல்லா தான் போகுது.. இதை படிக்கறப்போ, ஏனோ நாகேஷ் பாலைய்யாக்கு கதை சொல்ற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கு... வாழ்த்துக்கள்
//இது ஒரு கதை.. காதல் கதை... கொஞ்ச நாளாவே
எழுதனும்னுநினைச்சு கிட்டு இருந்தேன்,//
vareva, kadhal kadhai'a.. ok ok
// ஆனா ஏனோ
தெரியல சரியான டைம் கிடைக்கல.. //
aaama aaaam serial paarkuradha nippatu'nga konjam (a).
/ஒரு முடிவோட ஆரம்பிச்சுட்டேன். //
enna mudivu? aarambathulai'ey mudiva sonna epadinga?
//இது என்னோட
முதல் முயற்சி.//
vaalthukal..
// படிச்சுட்டு எப்பவும் போல உங்க
கருத்துக்களை சொல்லுங்க.Sugestions too..//
kandipaaaa varadhey adhuku thaaney
//லுக்கு அந்த மாதிரி. அழகா எல்லா இடத்திலயும்
க்ளீனா துடைச்ச கண்ணாடியும்,அழகழகா அங்கங்கே
சொருகியிருந்த புதுசா பூத்த பூக்களும், கம்முனு
காத்துல வர்ர வாசனையும்.. பூஜாவுக்கு ரொம்பவே
பிடிச்சு போனது.//
yenga, idhukaaga thaaan poraangana, pesaaaama avanga, than vootulai'ey idhelam panni'tu Tv serial paarthukittu irrundhu irukalam.. atleast offfice'ku pora bus fare, petrol micham ..
He he he
//பூஜாவ பாத்த உடனே ஒரு கெமிஸ்ட்ரி
ஸ்டார்ட் ஆயிடுச்சு.அப்ப பாஸ்கிட்டயிருந்து ஒரு கால்.
"ஜான், அந்த பொண்ண உள்ள அனுப்பு".
//
manager arajagam oliga...
// ஜான் சின்ன வயசு தான் ஒரு 26.
//
ஜான்'ku badhila, gops'nu pottu paarunga, padam sema hit aagum :P
(alo, naan name'a mattum thaan sonnen, mathapadi john'kum enakkum no the match vokay? )
//இவன நம்பி பாஸும் எல்லா
பொறுப்பையும் விட்டுட்டாரு.//
boss'ku oru alagaaana adangapidari ponnu onnu irukanumey?
//ஆபீஸ பொறுப்பா பாத்துக்கவும்,தேடி
வரவங்களுக்கு பொறுப்பா பதில் சொல்லவும் தான்."
//
john pudisaali'a thaaan irrukaan ponga (gops maadhiriey ) :)
//அப்பப்போ இந்த டேமேஜர
மட்டும் ஒரு லுக்கு விட்டுகிடே இருந்தா. //
kannum kannum sony ericsson song odi irukanumey back ground'la?
//பயங்கர
ரெளடி. //
appppa 10 auto vachi irrupaaanga...
//இதுல பூஜா
மட்டும் தான் சேர முடிஞ்சுது.
//
sare sare apppuram ?
perusa irukkunga naan aproma vandhu padikkiren kathai !!
ok va?
ஹாய் Gops,
அப்பா.. ஒரு வழியா 1st வந்துட்டீங்க...
//manager arajagam oliga...//
ஹா ஹா ஹா ஹா....கரெக்ட்.
//appppa 10 auto vachi irrupaaanga...//
ஹலோ..ஆட்டோல்லாம் இப்போ.
அப்போல்லாம் டெம்ப்போ தான்...
ஹாய் அம்பி,
//pooja ph no enna?u syam keppen, kudukaatheenga.//
சேச்சே...நாட்டாமை போன் நம்பரையெல்லாம் கேக்க மாட்டாரு,
அவர் அட்ரஸ் தான் கேப்பாரு பெறுந்தன்மையாய்....
//arunuku mattum kudunga.//
நான் நினைக்கிறேன் அருண் needs to take class from Shyam.
Hai ACE,
a warm welcome to u.
//ஏனோ நாகேஷ் பாலைய்யாக்கு கதை சொல்ற மாதிரி ஒரு ஃபீலிங் இருக்கு... வாழ்த்துக்கள்.//
appadiyaa.? ithula payappadura maadiri ethaavathu solliteenaa?
Hi Buddy,
It z reel or real ?
Xcellent.
May God Bless.
உன்மை கதையா...இல்ல நீங்க யோசிச்சதா...ஆனா நல்லா நக்கலா எழுதறீங்க :-)
//btw, pooja ph no enna?u syam keppen, kudukaatheenga//
@ambi,
இருடி உனக்கு ஆப்பு பார்ட் 2 ல வந்து வெக்கறேன் :-)
//சேச்சே...நாட்டாமை போன் நம்பரையெல்லாம் கேக்க மாட்டாரு,
அவர் அட்ரஸ் தான் கேப்பாரு பெறுந்தன்மையாய்....//
யக்கா நம்மல பத்தி நல்லா புரிஞ்சு வெச்சு இருக்கீங்க :-)
Post a Comment