ஹாய் Friends,
தேடிப்பார்க்க நான் உன்னை
தொலைக்கவும் இல்லை
விலாசம் கேட்க நான் உன்னை
மறக்கவும் இல்லை
நலம் விசாரிக்க காலம் நம்மை
பிரிக்கவும் இல்லை
என்றென்றும் உன்
காதல் நினைவுகளோடு வாழும்
உன்...
இது இந்த வாரம் அ.வி லருந்து சுட்டது.
சரி நான் இப்போ ஒரு கதை சொல்லப் பேறேன்.
அதாவது நானும் என் நண்பரும் (திருவனந்தபுரத்தில)
தமிழ் சினிமா பார்க்க போனோம். அந்த ஊர்ல
இருக்கறதிலயே ஒரு கேவலமான மகா மட்டமான
தியேட்டர்ல போயி படம் பாக்க வேண்டிய விதி.
சரின்னு நாங்க கிளம்பி போனாமா.. தியேட்டர்க்கு
போயி அது ஒரு Multiplex theatre.அதனால ஏதோ
எனக்கு தெரிஞ்ச மலயாள அறிவ வச்சு தியேட்டர்
பேர படிச்சுட்டேன். சினிமா பேரயும் தான்.
நான்: நான் உன்கிட்ட என்ன சொன்னேன்?
அவர்: சினிமா டிக்கெட் வாங்கிட்டு வரச் சொன்னே.
நான்: என்ன சினிமாவுக்கு?
அவர்; தமிழ் சினிமாவுக்கு.
நான்: நீ கேட்டியா? குடுத்தாங்களா?
அவர்: ஆமாம், குடுத்தாங்க.
நான்: என்ன குடுத்தாங்க?
அவர்; சினிமா டிக்கெட்டு.
நான்: என்ன படத்துக்கு?
அவர்: தமிழ் படத்துக்கு.
நான்: அப்ப இது என்ன படம்?
அவர்: அட அது தான்மா...
அதாவது நண்பர் நான் சொன்னத கேட்டுட்டு
கவுண்டர்ல போயி தியேட்டர் பேரச் சொல்லி
டிக்கெட் வாங்கிட்டு வந்துட்டாரு. நாங்களும்
உள்ள போயி உக்காந்துட்டோம்.முதலில் சின்ன
சின்னதா விளம்பரப் படம் போயிட்டு இருந்தது.
அப்பறமா மெயின் படம் ஆரம்பிச்சுது. எல்லாம்
மலயாளத்துல எழுதியிருந்தது.எனக்கு ஒரே அதிர்ச்சி.
நாம என்ன படம் பாக்க வந்தோம்? தமிழா இல்ல
மலயாளமானு கேட்டேன். அவருக்கும் ஒன்னுமே
புரியல. அவருக்கோ சுத்தமா மலயாளப் படம்
பிடிக்காது.ஹாஹாஹா எனக்கோ ரொம்ம்ப பிடிக்கும்.
நான் எப்போழுதும் பாக்கறதே அது தான்.நான்
வீட்டுல சாதாரணமா மல்ஸ் சேனல் பாத்தாலே
அய்யா கோவப்படுவாரு.இப்போ தியேட்டருக்கு
வந்து தமிழ்னு நினைச்சு மல்லு படம்.எனக்கு சிரிப்பு
அடங்க ரொம்ப நேரமாச்சு.அதாவது கீழ விழுந்தாலும்
மீசைல மண் ஒட்டலைனு சொல்லுவாங்களே அது
மாதிரி அய்யா படம் பாத்துட்டு ஆஹா..ஒஹோ ன்னு
சொல்லிட்டாரு.வேற வழி எல்லாம் விதி..
அதாவது படத்தோட பேரு DETECTIVE.
சுரேஷ் கோபியோட படம். சாதாரணமா அவரு
மலயாள கேப்டன்னு சொல்லலாம் (விஜயகாந்த்)
அவரும் இவரை போலவே அரசியலோட தான்
மோதுவாரு. ஆனா இந்த படத்துல வித்தியாசமா
ரொம்ப நல்லா பண்ணீயிருக்காரு. அவரோட entryயே
சும்மா நச்சுன்னு இருக்கு. மொதல்ல அவரு நடந்து
வரர்த காமிப்பாங்க சட்டுனு பாத்தா மோகன்லால்
மாதிரியே இருக்கும்.
படம் பாருங்க நம்ம ப.கோ.பி. ஸ்டைலில் ஆரம்பமே
ஒரு மரணம். அது கொலையா அல்லது தற்கொலையானு
கண்டு பிடிக்கனும். அதுலயும் எப்பவும் போல போலீஸ்
அவங்க பங்குக்கு சொதப்பல். ஒரு பெரிய்ய மனுஷர்
உடனே அத தனக்கு வேண்டிய CBIக்கு மாற்றச் சொல்லி
சி.எம் கிட்ட புகார். அவங்களும் உடனே அத ஹீரோகிட்ட
குடுத்து கண்டு பிடிக்க சொல்றாரு.ஒரு வழியா ஹீரோவும்
மொதல்ல அத தற்கொலைன்னு சொல்லிட்டு அப்பறமா
அது கொலைனு கண்டுபிடிக்கறாரு. சும்மாசொல்ல கூடாது
ஒவ்வொரு மூவும் நச்சுனு இருக்கு.பரவாயில்ல ஒரு
வித்தியாசமான திரைக்கதை. பாட்டும் இல்லாம
நல்லாதான் எடுத்துருக்காங்க விறுவிறுப்போட.
சாதாரணமா இந்த மாதிரி கதையெல்லாம்
மோகன்லாலுக்கு தான் நல்ல சக்சஸ் தரும்.
ஆனா இப்போ சுரேஷ் கோபிக்கு அடிச்சிருக்கு
சான்ஸ். பரவாயில்ல நல்லா தான் போகுது இதுவும்.
ஆனா எனக்கு ஒரு மனக்குறை என்னன்னா இந்த படம்
போட்டிருந்த தியேட்டர்ல dts soundல சும்மா என்னமா
இருந்தது.ஆனா நாங்க மறுபடியும் போக்கிரி பாக்க
வந்ததும் இதே காம்ளெக்ஸ்ல தான், ஆனா
தியேட்டரோ படு மோசம். சவுண்டும் சரியில்லை.
ஸ்கிரீனும் சரியில்ல, தண்டமா இருந்தது.
ஏனோ தெரியல தமிழ்நாட்ட தவிர தமிழ்
படங்கள் மத்த ஊரில அவ்வளவா எடுபடறதில்ல.
Subscribe to:
Post Comments (Atom)
14 comments:
எனக்கும் மலையால படம் ரொம்ம்ம்ம்ம்ப பிடிக்கும்..அதுவும் ஷகிலா சேச்சி நடிச்சு இருந்தா கேட்கவே வேண்டாம் :-)
உங்களுக்கு மலையாள படம் பார்க்கனும்னு ஒரு அப்பாவிகிட்ட தியேட்டர் பேர மாத்தி சொல்லி டிக்கட் வாங்கி வர சொல்லிட்டீங்க...:-)
//ஏனோ தெரியல தமிழ்நாட்ட தவிர தமிழ்
படங்கள் மத்த ஊரில அவ்வளவா எடுபடறதில்ல//
இப்போ எல்லாம் தமிழ் படங்கள் தமிழ்நாட்டுலயே எடுபடுறது இல்ல...அவ்வளோ லச்சனமா இருக்கு...:-)
hiyaa me only pashtu!
As usual ROTFL post in suamthi touch!
//மலயாள கேப்டன்னு சொல்லலாம் (விஜயகாந்த்)
அவரும் இவரை போலவே அரசியலோட தான்
மோதுவாரு. //
ROTFL :)
namma thaan firstaa?
andha padathoda mallu figures padam potrunda nalla irundurkum :)
//
ஏனோ தெரியல தமிழ்நாட்ட தவிர தமிழ்
படங்கள் மத்த ஊரில அவ்வளவா எடுபடறதில்ல.
//
enna ippidi sollitinga. avingalukku poraamai !!!
ஹாய் ஷ்யாம்,
//ஷகிலா சேச்சி நடிச்சு இருந்தா கேட்கவே வேண்டாம் :-)//
எனக்கு தெரியும், அதனால தான் நான் கேரளா போயி கூட ஷகிலா சேச்சியப் பாத்து உங்களுக்கு ஒரு சான்ஸ் புக் பண்ணிட்டு வந்துட்டேன்,அடுத்த படத்துல நீங்க தான் அவங்களோட ஜோடி..ஹி.ஹி.ஹி. (எப்படி நம்ம ஐடியா....)
ஹாய் ஷ்யாம்,
ஹாங்.. சொல்ல மறந்துட்டேன்.. எப்ப வேனா அவங்க கூப்பிடுவாங்க..தங்கமணிய சமாளிக்க வேண்டியது ஹி ஹி ஹி உங்க சாமர்த்தியம்...
ஹாய் ஷ்யாம்,
//உங்களுக்கு மலையாள படம் பார்க்கனும்னு ஒரு அப்பாவிகிட்ட தியேட்டர் பேர மாத்தி சொல்லி டிக்கட் வாங்கி வர சொல்லிட்டீங்க...//
ஷ்யாம் பாவம் நீங்க... அவரப் பத்தி சரியா தெரிஞ்ச்சுக்காமயே அவர அப்பாவினு சொல்லிட்டீங்களே..
உங்கள என்னனு சொல்லறது..ம்ம்ம்ம்
ஹாய் அம்பி,
//hiyaa me only pashtu..//
ஆஹா என்னே என் பாக்கியம்..
என் ப்ளாக்குல கூட போட்டிக்கு ஆளு இருக்காங்களே...புல்லரிக்குதுங்கோ....
ஆஹா இனிமே நான் எப்படி ஆர்டர் எடுக்கப் போறனோ தெரியலயே...
//As usual ROTFL post in suamthi touch!//
தேங்ஸ் அம்பி. ஆனாலும் உங்கள டச்சு பண்ண முடியலயே ...ஹூம்(இது
ஏக்க பெருமூச்சு)
ஹாய் அருண்,
//enna ippidi sollitinga. avingalukku poraamai !!!//
அட நீங்க வேற பெங்களூரு மாதிரி நம்மளயும் அடிக்காம இருந்தா சரி..
ஆனா அவங்க படங்களும் சமீப காலமா ரொம்ப நல்லா இருக்குது.ஆனா அது எல்லாம் நம்ம ஊருல கண்டிப்பா ஒரு ஷோ கூட ஓடாதுங்க..
Hi Buddy,
//ஏனோ தெரியல தமிழ்நாட்ட தவிர தமிழ் படங்கள் மத்த ஊரில அவ்வளவா எடுபடறதில்ல//
Where is Japan ? - Japanese who even don't have any of the resemblances with Tamil are very much fond of Tamil movies and Rajni movies in particular. Rajni movies are super hit over there.
Now let us come to Thiruvananthapuram - Whenever there is a release of a Tamil movie in TN, normally here too the same shall be released. Malayalees are very much fond of Tamil movies and Trivandrites (am I right ? - residents of Trivandrum) in particular. Even if a movie runs for more than 25 days, it is a hit movie in Kerala and whereas, it is not so in TN.
Barring few films, Tamil films are still standard ones and nothing much to worry about. (Who has the patience to watch the art movies - I mean Bengali and Malyalam movies only).
May God Bless
Hi Buddy,
I can give it in writing. Having known you very well, I am sure Your friend must be very much innocent only and more over my Boss (Who else Mr Shyam only) is always right.
May God Bless.
hi sumathy!!
super post !!!
i go with syam on
//ஏனோ தெரியல தமிழ்நாட்ட தவிர தமிழ்
படங்கள் மத்த ஊரில அவ்வளவா எடுபடறதில்ல//
இப்போ எல்லாம் தமிழ் படங்கள் தமிழ்நாட்டுலயே எடுபடுறது இல்ல...அவ்வளோ லச்சனமா இருக்கு...:-)
Post a Comment