Monday, January 08, 2007

கனவு பலித்தது..

அவள் பெயர் அஞ்சு
வயது எட்டை தொடாத மொட்டு

அவள்
பிறப்பில் தாழ்ந்தவள்
வளர்ப்பில் சரிந்தவள்

கூலிக்கு மேல்
பழையது போட்டு அவளை
பார்த்துக் கொள்வதால்..

அயராது பணி
அவள் அன்றாட பணி

அவளுக்கும் லட்சியங்கள் உண்டு


அன்றைய லட்சியம்
இரவுக்குள் ஒரு மாம்பழம்.


அன்று வெள்ளி

கருக்கலில் கண் விழித்து
பணிந்திட புறப்பட்டது
முள்ளில் அரும்பிய மொட்டு..


சாட்டை சுழற்றாமலே
பம்பரமாய் சுழன்றாள்
எட்டை தொடாத மொட்டு..

பாத்திரம் கழுவினாள்
பிஞ்சு கரங்களால்
கந்தல் துவைத்தாள்

வீடு பெருக்கும் போது
அடுக்களை அலமாரியில்
அடுக்கிய மாம்பழங்கள்
அவள் கவனம் ஈர்த்தது.


அவள் கனவில் வந்த
அதே மாம்பழங்கள்.


அருகினில் சென்று
ஆசையோடு வாசம் பிடித்தாள்
மனம் குளிர்ந்தது.


பணிகள் செய்து
பகல் கழிந்தது
வீடு திரும்பும் நேரமானது.

இடுப்பொடிந்த கிளி
இல்லம் செல்ல எத்தனித்தது

அந்தனன் மனைவி
அவளை அழைத்து

பிஞ்சுக் கைகளில் - இரண்டு
மாம்பழம் தினித்தாள்

அவளுக்கு
எட்டாத லட்சியம் எளிதில்
எட்டியதாகி மனம் களித்தது

அன்று,

அவள் கனவு பலித்தது
அவளுக்கு சொர்க்கம் தெரிந்தது.




6 comments:

Anonymous said...

எனக்கு கவித ஞானம் கம்மி...
கவிதை நல்லாருக்கு. ஆனா உட்பொருள் புரியலையே??

Syam said...

நெம்ப கஷ்டமா போச்சு போங்க....

Sumathi. said...

வாங்க சின்னக் கலைவானரே,

இது நான் ஒரு புக்குல படிச்சேன்.ஒரு சின்னக் குழந்தையோட மனசு பத்தி. என்னை ரொம்ப பாதிச்சுது. அது தான்.
ஆனா நல்லாயிருக்குல்ல..

Sumathi. said...

நாட்டாம,

என்னாது இது...புது வருஷ கொண்டாட்டம் எல்லாம் எப்படி?

Arunkumar said...

சின்ன வயதில் எவ்வளவு சோகம் :(

//
சாட்டை சுழற்றாமலே
பம்பரமாய் சுழன்றாள்
எட்டை தொடாத மொட்டு..
//
அழகா எழுதிறீங்க சுமதி

இந்தப்பக்கம் அடிக்கடி வராம் நிறைய மிஸ் பண்ணிட்டேன் போல.. இனி ரெகுலர் அட்டெந்தென்ஸ் தான் :)

Sumathi. said...

ஹாய் அருண்,

இதை ஒரு புக்குல படிச்சேன். நல்லாயிருக்கு இல்ல.