Wednesday, January 31, 2007

FUNNY MATRIMONIAL AD...

Hai friends, i saw this funny ad in

funtoosh.com.

So, don't miss to wish this couples on 14th Feb.








Monday, January 29, 2007

புத்தம் சரணம்.......






ஆசையெனும் பேயை

துறந்து உலகை மறந்து

கண்களை மூடி


சிலையாகி நின்ற எனக்கு

அழகான வண்ணம் தீட்டி


"கண்ணை திறந்து
கொஞ்சம் பாருங்கள்

நீங்கள் தான்
எவ்வளவு அழகு" என்று...


மயங்கிதான் போனேன்

எனதழகில், உன் கை வண்ணத்தில்...



வண்ணங்கள் கொடுத்து

மெளனத்தை கலைத்து


சிரிக்க வைத்து

என் மனதை கொள்ளை அடித்து விட்டாயே...





haai friends, இந்த படத்தை பாத்த உடனே
என் மனதில் தோன்றியது இது...



Sunday, January 28, 2007

உங்களுக்கு தெரியுமா....!!!

HAI FRIENDS...!!!!!!!!


எனக்கு ஒரு மெயில் வந்தது.

(123 greetings.com la irundhu)

அதாவது JAN-26

ஒரு ஸ்பெஷல் தினமாம்.

CHOCOLATES AND CAKE DAY.

SO HERE I GAVE SOME FOR

YOU TO ENSOOOOOY.






VERY NICE CAKE AND CHOCOLATES ....



sari sari neengalum niraiya idu poola
saapitu ensooy maadi...












Thursday, January 25, 2007

A Love Letter worth reading.......

ஹாய் நண்பர்களே...!!!


இப்படியும் ஒரு காதல் கடிதம் எழுத முடியுமா..?

My dear FAIR and LOVELY (ek chand ka tukda),

You are my TVS SCOOTY (first love) and my AIWA (pure passion). I always BPL (believe in the best) and you are SANSUI (better than the best). You are DOMINO'S PIZZA (delivering a million smiles) for me. This is a COLGATE ENERGY GEL (seriously fresh) feeling for me.

I want you to be my life partner but I think you are worried about your father who is KAWASAKI BAJAJ CALIBE! ! ! R (the unshakable) and my father who is CEAT (born tough). But don't worry as I am also FORD ICON (The josh machine) and rest of our family members are pretty KELVINATORS (the coolest ones).

If our fathers say no, we will run away and marry, and PHILIPS (let's make things better). They will feel MIRINDA (zor ka jhatka dhire se lage) but I believe in COCA-COLA (jo chahe ho jaye).

Trust in God who's always NOKIA (connecting people) who love e! ! ! ach other. And do not forget that we are WILLS (made for each other). Now that HYUNDAI (we are listening) the song of love, you must know that love is DAIRY MILK (real taste of life), SATYAM ONLINE (fun fast easy) and PARX (always comfortable).

So never forget me. Ok bye!


I wrote little but actually PEPSI (yeh dil mange more)!!.


Yours LG (digitally yours).


(A Love Letter worth reading...- Prem)

Monday, January 22, 2007

நிலாச் சாரலில்....

பிரியமாய்ப் பிரிந்த உதடுகளுக்கு,


உன்னுடன் பேசிக்கொள்ள மட்டுமே முடிந்தது





என்னைக் காதலிப்பதாய் வந்து சொன்னாய்


ஏன் என்று கேட்டேன்








நான் உனக்கு எல்லாவிதத்திலும்

பிடித்தமானவளாய் இருப்பதால்' என்றாய்




'அதை ஏன் என்னிடம் வந்து சொன்னாய்' என்றேன்

'அப்போதுதான் பதிலுக்கு நானும் உன்னைக்


காதலிக்க விருப்பமா என்பதை அறியமுடியும்' என்றாய்







Tuesday, January 16, 2007

மஞ்சு போல் ஒரு பெண் குட்டி...

எல்லாரும் சந்தோஷமா பொங்கல் கொண்டாடி இருப்பீங்கனு நினைக்கிறேன்...
இந்த பொங்கல் நாள்ல நம்ம டிவியில எல்லாம் வித விதமா நிகழ்ச்சிகலெல்லாம் பாத்து ரசிச்சிருப்பீங்க.. நானும் தான்.

கொஞ்ச நாளுக்கு முன்னாடியே நான் இந்த படம் பாத்தேன் சூர்யா டிவியில.நேற்றும் இதே படம் பாத்தேன்.
இது ஒரு மலயாளப் படம் தான். ஆனா இவ்வளவு நல்ல படங்கள் ஏன் தமிழ்ல வரலை? என்னை ரொம்ப பாதிச்ச படங்களுல் ஒன்னு தான் இந்த படம். கதை இது தான்...

ஒரு பத்தாங் கிளாஸ் படிக்கும் ஒரு மாணவியோட மனப் போராட்டம் தான் இந்த கதை. படம் ஆரம்பமே நாயகி தன்னோட பிரச்சனையை தானே சொல்ல ஆரம்பிக்கிறாள்.

தன்னோட அம்மா அருந்ததி மேனன் (பானுப்ரியா) மற்றும் தன் தங்கையோடும் இவள் குடும்பம், ஒரு விபத்தில் தன் தந்தை மறைந்து விட தன் தாய்
இவர்களை காப்பாற்ற ஒரு Departmental Store ஆரம்பித்து சக்சஸ்புல்லாக நடத்தும் ஒரு பெண். உறவினர்களின் கட்டாயத்தால்
அதே விபத்தில் தன் மனைவியையும் குழந்தையையும் இழந்த ஒருவனை மணக்கிறாள். இங்குதான் கதை ஆரம்பம். தன்னுடைய இரண்டாவது அப்பா தன்னிடம் தவறாக பழகுவதைக் கண்டு மனம் வேதனை அடைகிறாள். இதை யாரிடமும் சொல்ல முடியவில்லை.
மிகுந்த மனக்குழப்பம் அடைகிறாள். தன் தாயோ தன் இரண்டாவது கணவனிடம் நிறைய்ய அன்பு. இந்நிலையில் தன் தாயிடம் சொன்னால் இதை நம்பப் போவதில்லை. தன்னுடன் படிக்கும் மாணவன் ஒருவன்(சந்தீப்) இவள் மன வேதனையை கண்டு காரணம் கேட்கிறான்.இந்நிலையில் வகுப்பில் படு சுட்டியாகவும் நல்ல மாணவியாகவும் இருந்த வள் மெல்ல மெல்ல மார்க் குறைந்து மேலும் மோசமான நிலைக்கு வருகிறாள்.இதை கண்ட ஆசிரியர் இவள் அம்மாவிடம் பேசுகிறார்.இது தெரிந்து தந்தையோ இதை பற்றி தாயிடம் சொன்னால் இவளையும் இவள் குடும்பத்தையும் கொல்வதாக மிரட்டுகிறான். இவள் மெதுவாக அவனிடம் தன் பிரச்சனையை சொல்கிறாள்.ரெண்டு பேரும் சேர்ந்து தன் தந்தையை ஒரு வழியாக தீர்த்துக் கட்ட முடிவு செய்கிறார்கள்.

இந்நிலையில் இதை எப்படி செய்வது என்று யோசிச்சு தன் ஃப்ளாட்டில் வசிக்கும் மானுவல் அங்கிளை அனுகி பேசி தனக்கு உதவுமாறு கேட்கிறாள். பாவம் இவரும் இவள் வேதனையை கண்டு தன் மகளை போல் எண்ணி உதவ சம்மதிக்கிறார். ஆக மூவரும் சேர்ந்து இன்னொரு நன்பனிடம் ஐடியா கேட்கிறார்கள். அவனும் தனக்கு தெரிந்த வழிகளையெல்லாம் சொல்கிறான் முடிவில் தந்தையை சுட்டுக் கொல்வது என்று முடிவு செய்கின்றனர்.. அவனும் தன் வீட்டிலிருந்து தன் தாத்தாவின் ஒரு பழைய துப்பாக்கியை கொண்டு வந்து அதை எப்படி சுடுவது என்றும் அந்த அங்கிளுக்கு சொல்லியும் குடுக்கிறான். ஒரு வழியாக பயிற்சியும் எடுத்துக் கொண்டு பின் ஒரு நாள் இவள் தந்தையை போனில் அழைத்து இவர்கள் விஷயம் எல்லாம் தனக்கு தெரியும் என்றும் அதை மறைக்க வேண்டுமெனில் தனக்கு நிறய்ய பணம் வேண்டும் என்றும் கூறுகிறான். ஒரு பாதி கட்டிகொண்டிருக்கும் கட்டடத்திற்கு வருமாறு அழைக்கிறார்கள். அவனும் சரியாக சொன்ன இடத்திற்கு வருகிறான்.இருவருக்கும் சண்டை ஆரம்பிக்கிறது.முடிவில் அவள் தந்தை மானுவல் அங்கிளை கொன்று அந்த இடத்திலேயே ஒரு கயிற்றில் கட்டித் தொங்கவிட்டு சென்று விடுகிறார். இது தெரியாமல் இந்த பெண் தன் வீட்டில் செல்பேசியில் அங்கிலுக்காக காத்துக் கொண்டு இருக்கிறாள்.தன் நண்பனுடன் வேறு அடிக்கடி பேசுகிறாள். அப்பொழுது தன் தந்தை வீட்டுக்கு திரும்பி வருவதைக் கண்டு மிகவும் பயந்து போய் தன் நன்பனுக்கு போனில் விஷயத்தை சொல்கிறாள்.
மறு நாள் மூவரும் சேர்ந்து அந்த இடத்துக்குப் போனால்.. அங்க போலீஸ் ... மானுவல் அங்கில் ஒரு கயிற்றில் தொங்குவதை கண்டு பெரும் அதிர்ச்சியோடு திரும்பி விடுகிறார்கள். நிதி இது எல்லாவற்றுக்கும் தான் தான் காரணம் என்று எண்ணிக்கொண்டு தானே அவனை கொல்ல நினைக்கிறாள். பின் இவர்கள் மூவரும் சேர்ந்து அந்த துப்பாகியை தேடப் போகிறார்கள். அப்பொழுது இது நிதி கையில் கிடைக்க அவள் வேகமாக அதை எடுத்துக் கொண்டு அவர்களையும் அழைத்துக் கொண்டு திரும்பி வருகிறாள் தன் வீட்டுக்கு.. அப்பொழுது சந்தீப் இதை பார்த்துவிட்டு உடனே தன் அக்காவிடம் சென்று நடந்த எல்லா விஷயங்கலையும் சொல்ல...அவள் உடனே நிதியின் அம்மாவிடம் சென்று நடந்தவற்றை சொல்ல அவள் அம்மா பதற்றத்துடன் வீட்டூக்கு ஓடி வர... இங்கு துப்பாக்கியுடன் அவனைக் கொல்ல காத்திருக்கிறாள் நிதி. அந்த சமயத்தில் அவன் திரும்பி வர அந்த சமயம் பார்த்து தீடீரென்று துப்பாக்கியால் படபடவென்று சுட்டுத் தள்ளுகிறாள்.அவனுக்கு பின்புறத்தில்
குண்டு பாய்ந்து அவன் கத்தவும் நிதியின் அம்மா மற்றும் எல்லாரும் அங்கு வரவும் அவள் அம்மா பாய்ந்து அவளை பிடிக்கவும் அவள் திமிறிக் கொண்டு துப்பாக்கியில் குண்டு தீரும் வரை சுட்டுத் தள்ளூகிறாள்.நிதியின் அம்மா நிதியை சமாதானப் படுத்துகிறாள்.பின் போலீஸ் அவனை பிடித்துக் கொண்டு போக அவனுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை கொடுக்கிறது. நிதியை விடுதலை செய்கிறது. பின் நிதி(அம்ரிதா) தன் மனநிலை மாறி எப்பொழுதும் போல் ஆகிறாள்.

இந்த கடைசி காட்சியில் அந்த பெண்ணின் நடிப்பை நாம் கண்டிப்பாக பாராட்டியே தீரவேண்டும். அந்த கண்ணில் தெரியும் கொலைவெறி அற்புதமான நடிப்பு. சிறிய பெண்ணானாலும் அபாரத் திறமை.

இந்த படத்தை டைரக்ட் பன்னியது கமல். ஒரு நல்ல டைரக்டர் இவரது பல படங்கள் சூப்பர் ஹிட்தான் இந்த படத்தை பற்றிய சில கமெண்ட்ஸ் கீழே பாருங்கள்..........

//" Its really good that the sensitive message is being broadcast out there.."//

//"It is the twist, before a chilling climax as the story takes another turn which will keep the audience glued to their seat.."//

//"Kamal is the most innovative director in Malayalam film industry who has always taken risks by making films with new comers which have however paid off handsomely. "//


//"Marvellous Movie.Jayakrishnan is absolutely stunni...: Marvellous Movie.Jayakrishnan is absolutely stunning.."//


//"Its really good that the sensitive message is being broadcast out there.."//


Wednesday, January 10, 2007

இந்த நாள் இனிய நாள்....







என் இனிய தமிழ் மக்களே...



நம்ம சென்னையில படிக்கிற நம்ம
மாணவிகள் அதாவது வருங்கால
அமெரிக்க குடிமக்கள் இந்த
வருடத்தில் எந்த நாட்களையெல்லாம்
சிறப்பா கொண்டாடலாம்னு
சொல்லியிருக்காங்க..

.நல்லா கேட்டுகோங்க
மாணவிகள் தான்.. நானில்லை...



ஜனவரி------12 இளைஞர் தினம். இந்த மாதிரி இளைஞர்கள் கிட்ட டை அடிக்கிறவங்க "ட்ரீட் கேக்கலாமாம்" இது அவங்க சொன்னது தான்........









பிப்ரவரி---- 14. அதாவது
காதலர் தினம்..
இதை பத்தி
நம்ம ஜொள்ளு பாண்டி
விரிவா விளக்கமா எப்படி
"அல்வா வாங்கறது" னு சொல்லி
இருக்காரு. மக்களே அதை பாத்து
படிச்சு தெரிஞ்சுகோங்க.....



பிப்ரவரி---28 அறிவியல் தினம்.
நாமெல்லாம் படிப்ஸ்னு
காட்டிக்க வேண்டாமா?
(சொன்னது நானில்ல..இதுக்கும்
நமக்கும் ரொம்ம்ம்ம்ப தூரம்)



மார்ச்---8 உழைக்கும் மகளிர் தினம்.
பக்கத்து வீட்டு ஆன்டிக்கு ஒரு
பெரிய்ய்ய ஸ்பெஷல் ஹாய்..!!!!!



ஏப்ரல்---22 பூமி தினம். அதாவது
நாம தினம் தினம் ஹீல்ஸை போட்டு
மிதிக்கறதுக்கு ஒரு பிராயசித்தம்..




மே---13.அன்னையர் தினம்.
ஹும்ம்ம்...இன்னைக்காவது
நம்ம அம்மா பன்ற உப்புமாவ
சூப்பர்னு தாராளமா பாராட்டுவோம்




ஜூன் -----17 தந்தையர் தினம்.
அப்பாவும் பாவம் தானே...
கொண்டாடிடுங்க........அவரு தானே

நமக்கு ஃபைனான்சியர்.....


ஜூலை-----22 பெற்றோர்கள் தினம்.
ஹைய்ய்ய்ய்யா........
ஒரே கல்லுல ரெண்டு மாங்கா
அடிக்கலாம்.......




ஆகஸ்ட்----5 நட்பு தினம்.
முஸ்தப்பா முஸ்தப்பா...
மூழ்காத ஷிப்பு......
கொண்டாடலைன்னா தப்பு

நட்புக்கு செய்யற பெரிய்ய்ய்ய்ய்ய
துரோகம்......



செப்டம்பர்-----8 கல்வியறிவு தினம்.
நமக்கு முதல் வகுப்பு எடுத்த
"மல்லிகா டீச்சருக்கு" தேங்க்ஸ்...!!!!!!


அக்டோபர்-----1 முதியோர் தினம்.
ஹாய் தாத்தா... ஹாய் பாட்டி...


நவம்பர் ---17 சர்வதேச மாணவர்கள் தினம்.
ஆஹா.... இது நம்ம ஸ்பெஷல் ஆச்சே.....
தூள் கிளப்பிட வேண்டியது தான்.......


டிசம்பர்---10 மனித உரிமை தினம்.
ஏய்ய்... நம்ம வார்டனுக்கு அனுப்பு
முதல் வாழ்த்து...!


கடைசியா......
சர்வதேச மகிழ்ச்சி தினம்......
வேறென்னா...... எல்லாம் உங்க
பர்த்டே தான்......
நீங்களே ஃபீல் பண்ணி ஃபீல் பண்ணி
ஃபீல் பண்ணி.....ஃபீல் பண்ணி
கொண்டாட வேண்டியது தேன்.......



மக்களே.. நீங்க எப்பவும் கொண்டாடுற மற்ற
"சிறப்பு தினங்களோட இதையும் கொண்டாடி
மகிழுங்கள்.......



நன்றி: அவள் விகடன்.....





















Monday, January 08, 2007

கனவு பலித்தது..

அவள் பெயர் அஞ்சு
வயது எட்டை தொடாத மொட்டு

அவள்
பிறப்பில் தாழ்ந்தவள்
வளர்ப்பில் சரிந்தவள்

கூலிக்கு மேல்
பழையது போட்டு அவளை
பார்த்துக் கொள்வதால்..

அயராது பணி
அவள் அன்றாட பணி

அவளுக்கும் லட்சியங்கள் உண்டு


அன்றைய லட்சியம்
இரவுக்குள் ஒரு மாம்பழம்.


அன்று வெள்ளி

கருக்கலில் கண் விழித்து
பணிந்திட புறப்பட்டது
முள்ளில் அரும்பிய மொட்டு..


சாட்டை சுழற்றாமலே
பம்பரமாய் சுழன்றாள்
எட்டை தொடாத மொட்டு..

பாத்திரம் கழுவினாள்
பிஞ்சு கரங்களால்
கந்தல் துவைத்தாள்

வீடு பெருக்கும் போது
அடுக்களை அலமாரியில்
அடுக்கிய மாம்பழங்கள்
அவள் கவனம் ஈர்த்தது.


அவள் கனவில் வந்த
அதே மாம்பழங்கள்.


அருகினில் சென்று
ஆசையோடு வாசம் பிடித்தாள்
மனம் குளிர்ந்தது.


பணிகள் செய்து
பகல் கழிந்தது
வீடு திரும்பும் நேரமானது.

இடுப்பொடிந்த கிளி
இல்லம் செல்ல எத்தனித்தது

அந்தனன் மனைவி
அவளை அழைத்து

பிஞ்சுக் கைகளில் - இரண்டு
மாம்பழம் தினித்தாள்

அவளுக்கு
எட்டாத லட்சியம் எளிதில்
எட்டியதாகி மனம் களித்தது

அன்று,

அவள் கனவு பலித்தது
அவளுக்கு சொர்க்கம் தெரிந்தது.