Thursday, February 07, 2008

ரோஜாவில இவ்ளோ மேட்டரா?

ஹாய், இது காதல் மாதம் இல்லையா, அதனால் தான் இந்த டிப்ஸ்.

ரோஜா அழகானது மட்டுமல்ல... பலவித உணர்வுகளையும் வெளிப்படுத்தக் கூடியது. அதனால் தான் பெண்களுக்கு மட்டுமல்ல, ஆண்களுக்கும் ரோஜாவைப் பிடிக்கிறது. காதல், நட்பு, நன்றி, ஜாலி என அனைத்து உணர்வு களையும் வெளிப்படுத்த ஒரு அடையாளச் சின்னமாக விளங்குகிறது இந்த ரோஜாக்கள். ‘‘ரோஜாக்களின் வண்ணங்களை வைத்தே கொடுப்பவர்களின் எண்ணத்தையும் தெரிந்து கொள்ளலாம்’’.

சிவப்பு ரோஜா அன்பை வெளிப்படுத்தும் சின்னம். ரோஜாவில் சிவப்பு நிறம் அதிகரிக்க... அதிகரிக்க... அன்பு அதிகரிக்கிறது என்று அர்த்தம்!

« பிங்க் ரோஜாக்கள்... சந்தோஷம், ஆதரவு, நட்பு, இரக்க உணர்வு ஆகியவற்றை வெளிப்படுத்தும்.

« லைட் பிங்க் கலர் ரோஜா என்றால் ஜாலி, விருப்பம், பெருந்தன்மை மற்றும் பாராட்டுதலைத் தெரிவிப்பதற்கு.

« டார்க் பிங்க் கலர் ரோஜாக்கள் நன்றி மற்றும் விசுவாசத்தின் அடையாளம்.

« லாவண்டர் ரோஜாக்கள் கண்டவுடன் காதலை வெளிப்படுத்தும் அறிகுறியாகும்.

« வெள்ளை ரோஜாக்கள் சுத்தமான காதலின் சின்னமாகும்.

« மஞ்சள் வண்ண ரோஜா கொடுத்தால் ‘உனக்கு நானிருக்கிறேன்’ என்று அர்த்தம்.

« மெரூன் மற்றும் ஆரஞ்சு கலர் ரோஜாக்கள் மகிழ்ச்சியின் உச்சத்தை வெளிப்படுத்தும்.

« மஞ்சளும், இளஞ்சிவப்பும் கலந்து உருவான ரோஜாக்கள், பெருமையின் அடையாளம்.

« வெள்ளை மற்றும் சிகப்பு நிறங்கள் கலந்த ரோஜாக்கள் ஒற்றுமையின் அடையாளம்.

« சிகப்பு மற்றும் மஞ்சள் கலந்த ரோஜாக்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க.

« ஒற்றை ரோஜா, ‘உன்னை மட்டுமே காதலிக்கிறேன்’
என்பதை உணர்த்துவதற்கு.

« இரண்டு ஒரே கலர் ரோஜாக்கள் திருமணத்திற்கான நிச்சயத்தை உணர்த்துகின்றன.

நன்றியைக் காட்ட பூங்கொத்தில் 12 ரோஜாக்களும், வாழ்த்துக்களைத் தெரிவிக்க 25 ரோஜாக்களும், எல்லையில்லா காதலைப் பறை சாற்ற 50 ரோஜாக்களும் தேவை.

(ரோஜாவில் இவ்ளோ வாசனையா... ஸாரி, இவ்ளோ மேட்டரா?)

இதெல்லாம் இந்த மாசம் சிநேகிதில சொல்லியிருக்காங்க.
உங்களுக்கு எந்த கலர் ரோஜா வேனுமோ சும்மா தாராளமா குடுத்து அசத்துங்க அடுத்த வாராம். ஆனா யார் யாரு எந்த கலர்ல குடுத்தீங்கன்னு எனக்கு மட்டும் அப்பறமா சொல்லிடுங்கப்பா..ஏன்னா எல்லாம் சும்மா ஒரு ஜாலிக்காகத் தானே..ஹி ஹி ஹி...

8 comments:

Dreamzz said...

//நன்றியைக் காட்ட பூங்கொத்தில் 12 ரோஜாக்களும், வாழ்த்துக்களைத் தெரிவிக்க 25 ரோஜாக்களும், எல்லையில்லா காதலைப் பறை சாற்ற 50 ரோஜாக்களும் தேவை./
ithellam roja vikka business trip..
nanri solla, oru nanriyum, valthu solla oru valthum, kaadhalai solla oru i love u vum pothum ;)

Dreamzz said...

irunthaalum rojala ivlo matter a?

ambi said...

நீயே ரோஜா! உனக்கெதுக்கு ரோஜா?னு தாஜா பண்ணினா பலன் கை மேலே கிடைக்கும். :p

வேணுமினா மக்கள்ஸ் டிரை பண்ணி பாருங்க. :))

ரசிகன் said...

// எல்லையில்லா காதலைப் பறை சாற்ற 50 ரோஜாக்களும் தேவை.//

அவ்வ்வ்வ்....ஏனுங்க சுமதி..
இதுக்காக ரோஜா வியாபாரிகள் கிட்டயிருந்து எத்தனை பொட்டி கெடச்சது?.. எனக்கு உண்மை தெரிஞ்சாகனும்..:P

ரசிகன் said...

//யார் யாரு எந்த கலர்ல குடுத்தீங்கன்னு எனக்கு மட்டும் அப்பறமா சொல்லிடுங்கப்பா.//

« ஒற்றை சிவப்பு ரோஜா,

« லாவண்டர் ரோஜா,

« வெள்ளை ரோஜாக்கள்,

« இரண்டு மஞ்சள் வண்ண ரோஜா,

நீங்க வேற, வயத்தெரிச்சலை கெளப்பிக்கிட்டு...
எல்லா ரோஜாவும் ஆர்டர் பண்ணியாச்சு.. ஆனா பெறுனர் முகவரி தெரியாம போச்சே.. ஹிஹி...

(அதிலும் இந்த அதிர்ஷ்டக் கார பசங்க பண்ற ரவுசு,இந்த 14 தேதி முடியறவரை எங்களைப்போன்ற பசங்க பெருமூச்சை மொத்தமா வாங்காம விட மாட்டாங்க...இப்பவே இங்க அவனவன் பண்ற லொள்ளு தாங்கலை..ஹிஹி.. அவங்க எல்லாருக்கும் ஒரு 25 ரோஜா பார்சல்..

அப்புறம் இம்புட்டு மேட்டர் அருமையா சொன்ன தோழிக்கு..
பிங்க் ரோஜா பார்சல்...ஹிஹி..

நல்லாயிருக்கு.. சிகப்பு மற்றும் மஞ்சள் கலந்த ரோஜாக்கள் உங்களுக்கு (ஹிஹி.. வாழ்த்துக்களைத் தான் அப்டி சொன்னேன்..)

மங்களூர் சிவா said...

முதல் முறையா என் ப்ளாக் எட்டி பாத்திருக்கீங்க நன்றி.

அங்கிருந்து நூல் பிடிச்சி வந்தேன்.

பொறுமையா வந்து அப்புறமா படிக்கிறேன்.

* * * * *

யோவ் ரசிகா நீ இங்கனதான் இருக்கியா!!

ரசிகன் said...

////ambi said...

நீயே ரோஜா! உனக்கெதுக்கு ரோஜா?னு தாஜா பண்ணினா பலன் கை மேலே கிடைக்கும். :p
வேணுமினா மக்கள்ஸ் டிரை பண்ணி பாருங்க. :))//
டிரைப் பண்ணி பாத்துட்டு,எப்டி எப்டி திட்டு வாங்கி அவமானப் பட்டிங்கன்னு எனக்கு மட்டும் ரகசியமா சொல்லுங்க மக்கள்ஸ்..ஹிஹி... :P//
அம்பியண்ணா நம்ம மக்கள்ஸ் மேல ஏன் இந்த கொலைவெறி?:P.. இப்டிதான் உசுப்பேத்தி..உசுப்பேத்தி விடுவாங்க,..மக்கள்ஸ் உஷாரு..ஹிஹி...:)))))))

Raghavan alias Saravanan M said...

காதல் ரோஜாவே.. :)

சூப்பர் தகவலுக்கு நன்றி!