அட.. என்ன இது னா யோசிக்கறீங்க... மேட்டர் இதுதான்..
உருவத்தில் பெரிதாக இருப்பதானாலோ என்னவோ, நம்மில் பலரும் பரங்கிக்காயை உதாசீனப்படுத்திவிடுகிறோம். ஆனால், அதனுடைய மருத்துவ குணத்தை உணர்ந்தால், பரங்கிக்காய் இல்லாமல் காய்கறி மார்க்கெட்டிலிருந்து வீடு திரும்ப மாட்டோம். ஆம், புற்றுநோயைத் தவிர்ப்பதற்கு பரங்கிக்காய் துணைபுரிகிறது என்கிறது ஒரு மருத்துவ ஆய்வு.
அந்தக் காய்க்கு புற்றுநோய் வரக் காரணமான செல்கள் உருவாவதைத் தடுக்கும் வல்லமை உள்ளது என்று பேங்காக்கில் உள்ள ' யுனிவர்சிட்டி சயின்ஸ் மலேசியா'வின் மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது.இனியாவது, நாம் அன்றாடம் உட்கொள்ளும் உணவில் பரங்கிக்காயை தவிர்க்காமல் இருப்போம்!
தேநீர் பருகுவீர்! உடல் எடையைக் குறைப்பீர்!
'தேநீர் பருகுவது நன்மையா, தீமையா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் வைக்காதது ஒன்று மட்டுமே குறை. உலக அளவில் தேநீர் குறித்து அவ்வப்போது பல்வேறு மருத்துவ ஆய்வுகள் வெளியிடப்படுவதும், புதுப்புது முடிவுகளை அறிவிப்பதும் வழக்கமாகிவிட்டது. ஆயினும், சிரத்தையுடன் மேற்கொள்ளப்பட்ட நம்பகத்தன்மை கொண்ட மருத்துவ ஆய்வுகளை நாம் உதாசீனப்படுத்திவிடக்கூடாது. அண்மையில் (2007-ம் ஆண்டு மத்தியில்) சீன மருத்துவ விஞ்ஞானிகள் ஒர் ஆய்வை மேற்கொண்டனர். அந்த ஆய்வின் முடிவில், 'தேநீர் பருகுவதால் உடல் எடை குறையும்' என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வை சீனாவின் நான்ஜிங்கில் உள்ள குழந்தைகள் மருத்துவ அறிவியல் மையம், 5 ஆண்டுகளாக மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், அதிகமாக சாப்பிடும் நபர்களுக்கு மட்டுமின்றி, பரம்பரை காரணமாக பருமனாக இருப்பவர்களும் தேநீர் பருகுவதால் உடல் இளைக்கலாம் என்கிறது அந்த ஆய்வு.
அதேநேரத்தில், அதிக அளவு தேநீர் பருகக் கூடாது என்பதும், 'டஸ்ட் டீ' மற்றும் 'சூப்பர் டஸ்ட் டீ' போன்றவற்றுக்கு இந்த ஆய்வு பொருந்த வாய்ப்பில்லை என்பதும் கவனத்துக்கு உரியது.
courtesy:Tamil yahoo.
2 comments:
யக்கோவ்! தாங்க்ஸ் for the info :)
தகவலுக்கு நன்றி சுமதி..பரங்கிக்காய் எனக்கு சும்மாவே ரொம்பப் பிடிக்கும்.. ஏன்னா நான் எந்தக் காய்கறியையும் ஒதுக்குறதில்லே!
தேநீர் விஷயமும் நல்லாத்தான் இருக்கு.. ஆனால் எனக்கு நினைவு தெரிந்த நாள்லருந்து இந்த மாதிரி விஷயங்கள் நெறைய (ஆதாரபூர்வமா, மருத்துவபூர்வமான்னு) சொல்றாங்க.. உடனே அதுக்கு எதிர்ப்பதமாவும் சொல்றாங்க.. உதாரணத்துக்கு நம்ம சூப்பர் ஹீரோ 'காபி' யைப் பத்திப் பலதரப்பான விஷயங்கள் வந்துருக்கு..
ஸோ, எத விடுறது, எதத் தொடுறதுன்னு குழம்பி, மனசுக்குப் புடிச்சதா செய்டா கைப்புள்ளன்னு.. கெளம்பிட்டோம்ல... ஹி ஹி...
Post a Comment