Wednesday, April 30, 2008

எனக்குள் ஓர் மின்னல்..கனவு!!

கனவு!!ஆஹா எத்தனை இனிமையானது,

என் காதல் நிறைவேறியது,கனவில்...
காதலுடன் டுயட் பாடியது,கனவில்..

வானத்தில் பறந்தது,கனவில்..
வனத்தில் வாழ்ந்தது கனவில்..

அமெரிக்காவில் வலம் வந்தது,,கனவில்..
ஆப்பிரிக்காவில் நடந்தது,,கனவில்..

மாளிகையில் வாழ்ந்தது,,கனவில்...
மாண்புமிகு.முதல்வர் ஆனதும்,கனவில்..

பிடித்த மகிழ்வுந்தில் சென்றது,,கனவில்..
பிடித்த புகையை விட்டது,கனவில்..

காந்தியுடன் தண்டி யாத்திரை சென்றது,கனவில்..
கார்கில் போரில் சண்டை இட்டு மாண்டது,கனவில்..

சாய்ந்த கோபுரத்தை சாய்ந்துகொண்டு பார்த்தது,கனவில்..
சமயம் கிட்டும் போதெல்லாம் லண்டன் சென்றது,கனவில்..

தாஜ்மகாலை என் காதலிக்காக கட்டியது,கனவில்..
தாகம் ஏனும் போது பாலாறு தண்ணீர் வந்தது,கனவில்..

ஈபில் கோபுரத்தில் உச்சியில் நின்று காற்றுவாங்கியது,கனவில்..
ஈடி படத்தைபோல்(ஆங்கிலம்)அதிசயம் நிகழ்த்தும்,கனவில்..

கனவு எத்தனை இனிமையானது...நிஜத்தில் அல்லா கனவில்...
வாழ்க வளமுடன்...

ஒரு முகமறியா நண்பன் எனக்கு ஆர்குட்டில் அனுப்பியது.

Thursday, April 24, 2008

லால்பாக்- நடந்தது என்ன?

பொழுது புலர்ந்தது
அழைத்தவரும் வந்தார்
கைநிறைய ஸ்ரீ கிருஷ்ணாவுடன்.

காண வந்த தோழி கொடுத்ததோ அல்வா
அவருக்காகவே அசல்
நந்தினியால் மணக்க மணக்க
தயாரிக்கப் பட்டது அல்லவா?

தான் பெற்ற இன்பத்தை
பகிர்ந்து கொண்டார் அம்பியுடனும்
தம்பியுடனும் அல்வாவும் சேர்த்தே.


நாட்டு நடப்பு முதல் அவர் தம்
வீட்டு நடப்பு வரை
பலவிதமான பட்டிமன்ற தலைப்புகளில்
விவாதங்களும் விளக்கங்களும்,
பாவம் சாலமன் பாப்பையா இருந்திருந்தால்
நடுவர் பதவியையே துறந்திருப்பார்.

தலைவியின் வீட்டு விருந்து
நடுநடுவில் பலரின் அழைப்பு,
சளைக்காமல் சமாளித்தார்
ஆன்மிகப் பதிவர்.

விருந்து முடிந்தது.
மற்றொரு நண்பர் வந்தார்,
அவருக்கென்ன எங்கு செல்ல விரும்பினாலும்
நண்பர்களும் வாகனங்களுடன்
தயாராக இருக்க வேறென்ன குறை
மற்ற சிஷ்ய கேடிகள் அழைக்க
அடிவாங்க தாயாரானார் கேஆரெஸ்
நாராயணன் கூட இருக்கிறார்
என்ற நம்பிக்கையில்.

மீண்டும் ஒரு கூட்டம்.
அங்கே மீண்டும் இவருக்கு ஒரு சோதனை
மைசூர்பா வடிவாக........
மணக்க மணக்க சூடாக
அவருக்கு சவாலாக.

அங்கே நண்பர்கள் பலர் கூடி
அவரின் மெளனத்தை கலைக்க
முயன்றனர். தோற்றனர்.

பலவிதமான தலைப்புகளில்
விதவிதமான அனுபவங்கள்.
பா(ர்)க்கும் போது மனது இனித்தது

பறவையையும் இயற்க்கையையும்
படம் பிடித்த காட்சி மனதை விட்டு நீஙகுமா
என்கிறது.


இவரின் அன்புத் தொல்லை தாங்காமல்
தமிழையும் தமிழனையும் கூட
அடிக்காமல் விட்டு விட்டனர்
காவேரிக்காரர்கள்.
இது எப்படி....