ஹாய் ஹாய் ஹாய் ஹாய்....
எல்லாரும் எப்படி இருக்கீங்க? நல்லாத்தேன் இருக்கோம். என்ன புதுசா கேள்வி? னு கேக்கறீங்களா? சும் மா தான் கொஞ்ச நாளா இந்த பக்கம் வரலையில்லையா அதான் ஒரு பார்மாலிடிக்காக.... ஹி ஹி ஹி.
அப்பறம் புது வருஷம் வரப் போகுது, எல்லாரும் என்னன்ன
ப்ளான்லாம் வச்சியிருக்கீங்கப்பா?
அதுசரி இந்த வருஷத்துலயே ஒன்னும் பெருசா கிழிச்சுடலை, இதுல வேற என்ன அடுத்த வருஷத்தைப் பத்தினு தானே கேள்வி? அதான் அதேதான் நானும் கேக்கறேன்.
ஆனாக்க நம்ம டுபுக்ஸ் பரவாயில்ல இப்பல்லாம் கலக்கலா புதுசு புதுசா போஸ்டிங்லாம் போட ஆரம்பிச்சுட்டாரே, அதுகூட இந்த வருஷத்துல ஒரு பெரிய்ய்ய மாற்றம் இல்லையா? அப்பறமா யாரோ
ரசிகனாம் புதுசா ஒரு ஆளு வேற வேலையே இல்லாம சும்மா இருக்கறவங்களையெல்லாம் நக்கல் அடிச்சுகிட்டு, போதாகொறைய்க்கு இவரு என்னமோ புதுசா நம்மளுக்கு எல்லாம் ஆப்பு கொடுக்குறாராம் ஆப்பு. மொதல்ல நாம இவருக்கு குடுக்கனும் ஒரு பெரிய்ய்ய ஆப்பு. என்னவோ பொழுது போகாம ப்ளாக் ஆரம்பிச்ச இவருக்கே இவ்ளோ ஆசைன்னா நாம என்ன சலைச்சவங்களா?
நானும் என் ஃப்ரெண்டும் ஒரு நாள் ராத்திரி பஸ்சுல போயிகிட்டு இருக்கும் போது பெண்கள் சீட்டுல தனித் தனியா ரெண்டு பேரு உக்காந்து இருந்தாங்க. நான் என்ன பண்ணேன் அவங்கள்ல இருந்த ஒருத்தர முன்னாடி சீட்டுல போயி உட்கார முடியுமானு கேட்டேன். அதுக்கு அவரு என்ன சொல்லனும்?முடியும் இல்ல முடியாதுன்னு தானே, ஆனா அந்த ஆளு என்ன மேலேயிருந்து கீழ வரைக்கும் ஒரு பார்வை பார்த்துட்டு என்னமோ நான் அவரை கொலை பண்ண சொன்னா மாதிரி ஒரு மொறை மொறைச்சுட்டு போயி உக்காந்தாரு. நானும் என் ஃப்ரெண்டும் சிரிச்சுட்டு அங்க உக்காந்தோம். அதோட விட்டாரா அந்த ஆளு. திரும்பி திரும்பி எங்களயே பாத்துகிட்டு இருந்தாரு. ஃப்ரெண்டு என் கிட்ட "உனக்கு அந்த ஆள தெரியுமா?"னு கேட்டாரு. "ஆமா, இந்த மூஞ்சியெல்லாம் எனக்கு தெரியாதுப்பா? னு சொன்னேன். மறுபடியும் அதே மாதிரி பாத்துகிட்டே வந்தாரு. நான் சொன்னேன் ஒரு பிட்டு போட்ருவமானு கேட்டேன். "சே, வேனாம் பாவம் னு சொல்லி விட்டுட்டாரு. ஆனா அவரு விடலை. விதி என்ன செய்ய.
கொஞ்ச நேரம் கழிச்சு மெதுவா போட்டாரெ பிட்டு, அது. ஃப்ரெண்டு கிட்ட
இங்கிலீசுல மெதுவா ஆரம்பிச்சாரு, என்ன பண்றீங்க, எங்க போறீங்கனும்லாம். இவரும் மெதுவா அவரோட கேள்விக்கெல்லாம்
ரொம்ப பொறுமையா பதில் சொல்லிட்டே வந்தாரு. கூடவெ சைடுல என்னையும் ஒரு லுக்கு விட்டுகிட்டே. நான் கொஞ்சம் சீரியசா மூஞ்சிய வச்சிட்டெ கேட்டுகிட்டே இருந்தேன். கொஞ்ச நேரம் பொதுவா பேசிட்டு வந்தவரு,அவரு வந்து பிஸினஸ் பண்றதா சொன்னாரு. என்ன பிஸினசுன்னு கேட்டா டீச்சிங் னு சொல்றாரு. ஏனுங்க அப்படி ஒரு பிஸினஸ்சு இருக்கா? எனக்கு தெரிஞ்சு டீச்சிங்னா ஒரு நல்ல தொழில்னு தான் நினைச்சுகிட்டு இருந்தேன் அது எப்போ பிஸினசா மாறிச்சு? தெரியலை. என் ஃப்ரெண்டு என்னைப் பாத்து சிரிச்சான். நானும் தான்.
அப்பறம் மெதுவா நண்பர்ட்ட "சார், ஒரு 100 ரூவா இருக்குமா? கொஞ்சம் காசு கொறையுது? னுபோட்டான் ஒரு பிட்டு. என் நண்பர் மெதுவா சொன்னாரு "இல்ல சாரி,நாங்க இப்பதான் ஷாப்பிங்லாம் பண்ணோம். அதுவுமே எல்லாம் கார்டுல தான். அதனால என்கிட்ட இல்ல சார்" னு சொன்ன உடனே அந்த ஆளு இறங்கி வேகமா ஓட்டம் எடுத்தான் பாருங்க.ஹா ஹா ஹா எங்களுக்கு ஒன்னுமே புரியல எதுக்கு இவ்ளோ வேகமா ஓடறாரு?னு ஆஹா, பிச்சையில வேற இப்படியானு நாங்க சிரிச்சுகிட்டே வந்தோம்.
இன்னமும் அத நினைச்சு சிரிப்போம். என்னமோ சொந்தகாரங்க கிட்ட உரிமையா கேக்குற மாதிரி, ஏதோ இவுரு குடுத்த வச்ச பனத்த கேக்குற மாதிரி.
மக்கள்லாம் இப்ப எப்படி ஏமாத்தறாங்கப்பா. நாம கொஞ்சம் கண் அசந்தா போதும் நம்மள உக்காந்த இடத்துலயே வச்சு வித்துடுவாங்க போலிருக்கு.
காலம் அப்படி. என்னத்த சொல்ல. ஆனா வாழ்க்கையில இதுவும் ஒரு பாடமாத் தான் இருக்கு.