நம்ம சிங்காரச் சென்னையில எந்த தெருவில போனாலும் குறைஞ்சது மூணு நாலு பூக்காரியாவது இருப்பாங்க. அதுல்லாம சில சமயம் வீட்டுக்கு வேர வந்து சிலர் பூ குடுத்துட்டு போவாங்க.இந்த பூ கடைல இருக்கறவங்க எப்படி தான் நம்மல ஏமாத்தராங்க.... சாயங்காலம் மூணு மணியானா போதும் எல்லா மொக்கயும் கட்டி ஒரு முழம் முணூ ருபான்னு ஆரம்பிச்சு போகப் போக ஏழு மணிக்கு மூனு முழம் அஞ்சு ருபாய்க்கு எறங்கி வருவாங்க... அப்பறமா நம்ம கண்ணு முன்னாலயே நம்மல ஏமாத்துவாங்க பாருங்க..அது அதான்.. அதே தான்... தப்பி தவறி நீங்க கேட்டு பாருங்க.. சும்மா சிங்கார தமிழுல செம்மொழியில "இதொடா...சாவு கிராக்கி...வந்ச்சி பாரு நமக்குனு..." ஆரம்பிச்சி சும்மா பின்னிடுவாங்க...தமிழ்ல ... சரி அதையும் தாண்டி நம்ம ஆட்டோ...! தமிழ் அடுத்த செம்மொழி... அத்த வுடு.. அப்பால நம்ம ஆட்டோ காரனுங்க கையில மட்டும் ஊரு பேரு தெரியாத ஆளுங்க மாட்னா..மவனெ நீ காலி..சொம்மா சுத்தி சுத்தி காட்டுவானுங்க பாரு...அவ்ளோதான் உங்கிட்ட இருக்கிற மொத்தத்தையும் புடிங்கிகினு தான் வுடுவானுங்க...
அப்பால நம்ம காய்கறி காரனுங்க...ஸ்ஸ்ஸ்ஸ் அப்பா இவனுங்க ரவுசு தாங்க முடியலப்ப...அது சரி நம்ம சென்னையில தி நகருன்னு ஒரு எடம் கேட்டுரிக்கீயா? அதாம்பா நம்ம சன் ம்யுசிக்குல சும்மா காலயில தொடங்கினா ராத்திரி வரைக்கும் சும்மா போடுவானுங்க பாரு மனுசன சாவடிப்பாங்க போ.... இதுல வேற டி.வி வாங்கினா சிடி இனாமாம்,,,, ப்ரிட்சு வாங்கினா ட்.வி இனாமாம்.......எனக்கு ஒரு சண்தேகமுங்கோ... ரெண்டு பொண்ணுங்க இருக்கிற ஊட்ல ஒன்னு கட்னா இன்னொன்னு இனாமா குடுப்பாங்கலா?... இப்பாலாம் எதுக்கு தான் இனாமுன்னே இல்லப்பா.. எல்லாத்துக்கும் தான்.... அத்த வுடு,, நம்ம ஊருல கடைங்கல சொம்மா ஷோக்கா காட்டிட்டு சொம்மா நம்மல ஏமாத்துறானுங்க பாரு.....! அதுவும் ரெண்டு
ட்ரெஸ்ஸு வாங்கினா ஒன்னு ப்ரியா குடுக்குறானுங்கப்பா....இப்டி எல்லாத்துக்கும் ப்ரி குடுத்துகினே போனா ....எங்க பொயி நிக்கும்...?என்னவோப்பா நமக்கு ஒன்னும் புரிய மாட்டேங்குது....
முன்னாடி எல்லாம் புது வருஷத்துக்கு தான் தள்ளுபடி போடுவாங்க... ஆனா இப்ப எல்லாத்துக்கும் தள்ளுபடி.... ஆடி னாதள்ளுபடி... ஆடல னா தள்ளுபடி....இது சென்னைல
மட்டும் தான்னு நினைசீங்களா.... இப்ப எல்லா ஊருலயும் வந்திடுச்சி....போதா கொறய்க்கி
தள்ளுபடியில்லாம ஒரு சாமான் வாங்கினா ..... இன்னும் கொஞ்ச நாள்ல நமக்கெல்லாம் ஜெயிலு தானுங்கோ....அப்படின்னு ஒரு சட்டம் வரப் போகுதுங்கோ.......எல்லாரும் உஷாருங்கோ......
Tuesday, September 26, 2006
Sunday, September 17, 2006
மசாலா லட்டு....
இத பாரு, உனக்கு தெரியலன்னா யாருகிட்டயாவது கேளு... அப்பறம் என் உயிர வாங்காதே....என்ன பாத்தா உனக்கு பரிதாபமா இல்லயா ..? " உங்கள தொந்தரவு பண்ண மாட்டேன் சரியா..? இப்ப கூட கொஞ்சம் உதவி பன்னலாமில்ல"....முருகா நீதான் என்ன காப்பாத்தனும்...
கல்யாணத்துக்கு அப்பறம் இப்ப தான் முதல் தடவையா நம்ம தெறமய காட்டப்போறோம், இதுல வேற எத்தன தடங்கல்பா...... சே..நம்மள பத்தி தெரியல..
அப்பிடி இப்படி ஒரு வழியா லட்டு பண்ண ஆரம்பிச்சு கொஞ்சம் கொஞ்சமா பூந்தி பிடிச்சு வச்சிட்டு (எல்லா மாவையும்) ஒரு பாத்திரத்தில போட்டு மூடி வச்சிட்டு அப்பறமா சக்கர பாகு ரெடி பண்ண ஆரம்பிச்சு ஒரு வழியா அதுவும் ரெடி பண்ணி ஆஹா ........என்ன வாசன ம்ம்ம்ம் காத்துலயே லட்டு வாசனய புடிச்சுட்டு .......உடனே லட்டு சாப்பிட ஆசயா உள்ளே வந்து " என்ன லட்டு ரெடியா..? எங்க ஒன்னு குடு.. டேஸ்டு பாக்கலாம்.." பாவம் ரொம்ப ஆசயா கேக்கும் போது மாட்டேன்னு சொல்ல முடியுமா? அதுவும் நம்ம தெரமய பாத்து வாசண வேற புடிச்சுட்டு.... நமக்கு... ஒரே சந்தோஷம் தான். உடனே ஒன்னு எடுத்து குடுத்து....? கொஞ்ச நேரம் முகத்தையே பாத்து கிட்டே இருந்தேனா...? ஆஹா நம்ம ஆளு அந்த லட்டுவ ரசிச்சு சாப்படற அழகே அழகு ....."சாப்டாச்சா..? எப்டி இருக்கு? சீக்கிரம் சொல்லுங்க?......"
ஹா ஹா ஹா ஹா ஹா............" இப்படி ஒரு லட்ட என் வாழ் நாள்லயே சாப்டதில்லே.....!பேஷ் பேஷ்ஷ் ......! .இதுக்கு நான் ஒரு பேரு வக்கட்டுமா?
இந்த தீபாவளிக்கு நம்ப வீட்டு ஸ்பெஷல் இந்த "மசாலா லட்டு " தான்.சொன்ன உடனே எனக்கு ஒரே ஆச்சர்யம்...! "என்னது.. மசாலாவா? லட்டுலயா? நான் பன்னது சாதாரன லட்டுதானே? மசாலா லட்டு இல்லயே? " இப்படி யோசனை பண்ணிகிட்டே இருக்கும்போது தான் புரிஞ்சுது, ஆஹா நாம லட்டுக்கு போட்ட முந்திரியும் திராட்சையும் தான்.என்னன்னு கேக்கறீங்களா? அதாங்க இந்த முந்திரியும் திராட்சையும்
மசாலா டப்பாவில போட்டு வச்சிருந்தேனா(அதுல பட்டையும் லவங்கமும் சேர்ந்து இருந்ததா...!) அந்த வாசனைய தான் ஐயா இப்படி சொல்லிட்டாரு..! அப்பறம் என்ன பண்ணறது? வாசனையோ தூக்கறது, வீடு முழுவதும் மசாலா வாசனை வேரயா.
ஆனா விடல ஆஹ ஒரு வழியா அந்த தீபாவளிய மசாலா வோட புது விதமா (புது ஸ்வீட்டோட) கொண்டாடினோம். ஆனா ஒரு விஷயமுங்க இந்த மசாலா விஷயம் மட்டும் யாருக்கும் தெரியாதா...! அதான் இப்பவும் பாருங்க யெல்லாரும் கேப்பாங்க (!!!!!!!!) அந்த ரெசிபிய ......(!?)

Wednesday, September 13, 2006
ஆஹா, வந்துடுச்சு....
அப்படா நானும் ஒரு வழியா எழுத ஆரம்பிச்சுடேன். என் கண்னை என்னாலயெ நம்ப முடியலை.என் நன்பர்கள் சிலர் "நீ யா? எழுதபோரியா? உனக்கு எதுக்கு இந்த வம்பு எல்லம்?" என்ரு கேலி செய்தனர். அது சரி, நான் மட்டும் எழுத கூடாத? என் கிட்ட ஒரு கெட்ட பழ்க்கம் என்ன யாராவது சீண்டி பார்த்தால் உடனே அதை செய்து விட வேண்டும் . அப்பத்தான் நமக்கு தூக்கமே வரும்.சரி இதையும் ஒரு கை பார்போம்னுட்டு ஆரம்ப்பிச்சுட்டேன்.அப்பாடா! இன்னிக்கு தான் நல்லா தூங்கினேன். ஆனா இதுக்காக என் நன்பர்களை ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன். நம்ம டுபுக்குவுக்கும் இன்னொரு நன்பர் திரு.தேசிகனுக்கும் தான் ரொம்ப நன்றி சொல்லனும்.நம்ம தேசிகன் தான் என்னை இந்த அளவுக்கு கொண்டு வந்தது. நன்றின்னு ஒரு வார்த்தைல சொன்னா அது ரொம்ப சாதாரனம்.என்னோட ஒவ்வொரு பதிவும் அவர்க்ளை ஞாபக படுத்தும். அது தான் நான் அவர்களுக்கு சொல்லும் நன்றி.
நான் கல்லூரிக்கு போகும் போது language தமிழ் தான். அப்பவே எனக்கு சரியா எழுத வராதா, (!!)இதுல ரொம்ப வருஷத்துக்கு அப்பறம் எழுதரனா..!ம்ம்ம் எவ்வலவு கஷ்டமடா !(?) "அப்பவே வீட்டுல படி படினு சொன்னாங்க, அதையெல்லம் கேட்டுட்டா அப்பறம் நமக்கு என்ன மரியாதை", இப்ப புரியுது. இதுல ஒரு ஜோக் என்னன்னா நாங்கல்லாம் ரெண்டாவது வருஷம் படிக்கும் பொது தமிழுல ஒரு பேப்பர் அதாவது ஆங்கிலத்தை (G.O) தமிழுல அப்படியே காப்பி பன்னனும். அப்பதானே இந்த தமிழோட அருமையே புரியுது . நான் படிச்சது சென்னையில மவுண்ட்டு ரோடில உள்ள ஒரு பெரிய்ய்ய்ய காலேஜில. அப்ப அந்த ரோடில உள்ள பெயர் பலகையெல்லாம் படிச்சுட்டே பொவோமா, வீட்டுக்கு வந்த பின்னாடி எல்லாத்தையும் எழுதி வைச்சிட்டு மறு நாள் கல்லூரிக்கு ப் போயி எல்லாரோடயும் சேர்ந்து குறிச்சு வச்சிட்டு ... ஆஹா நாங்க அடிச்ச லூட்டி இருக்கே !! இப்ப எல்லாம் அதை நினைக்க மட்டும் தான் முடியுது.
என்ன இருந்தாலும் நம்ப கல்லூரி நாட்களும் அதுல நாம அடிச்ச லூட்டிகலும் நமக்கு வாழ்க்கையில திரும்பவே கிடைகாத ஒரு வரம். கவலையே இல்லாம், கஷ்டமே தெரியாம நமக்குன்னு ஒரு தனி உலகம்.
"இதெல்லாம் இப்ப எதுக்கு", அதானே, அதாங்க ஒரு சின்ன re-cap இந்த மாதிரி பின்னாடி எழுதும் போது நமக்கு விஷயம் வேண்டாமா? சரி எல்லாத்தயும் ஒரே நால்ல சொல்லிட முடியுமா? திரும்ப எழுத வேண்டாமா? விரைவில் வருகிரேன்.
ஏங்க இதை படிச்சுட்டு சும்மா போகாதீங்க? அது பாவங்க !. எதாவது எழுதிட்டு போங்க
வர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்டாடாடா.

Subscribe to:
Posts (Atom)